மாவீரன் பிள்ளை விமர்சனம்.; வீர – லட்சுமி விஜயம்.?!

மாவீரன் பிள்ளை விமர்சனம்.; வீர – லட்சுமி விஜயம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : KNR Raja, Radharavi, Vijayalakshmi Veerappan

Directed By : KNR Raja

Music By : Song : Ravivarma – Prem

Produced By : KNR Movies – KNR Raja

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி என்பவர் மாவீரன் பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.. இந்த படத்தை ராஜா என்பவர் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார்.

கதைக்களம்…

மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை கொடுத்துள்ளார்.

கூத்துக் கலைஞர் ராதா ரவி வருமானம் இன்றி தவிக்கிறார். ஒரு பக்கம் விவசாயம் செய்து கொண்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தால் மாடுகளை இழக்கிறார்.. மேலும் தண்ணீர் இல்லாமல் தன் பயிர்கள் மடிந்து போவதால் தற்கொலை செய்து கொள்கிறார்.

மற்றொரு பக்கம் இவரது மூத்த மகன் நன்றாக படித்து வழக்கறிஞராக இருந்தாலும் அரசின் டாஸ்மாக்கால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைகிறார்.

எத்தனை முறை தேர்தலில் நின்றாலும் மக்களின் ஆதரவை பெற முடியாததால் விஜயலட்சுமைய தேர்தலில் நிற்க ஒரு அரசியல் கட்சி கேட்கிறது. இவர் மறுக்கிறார். ஆனாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிற்கிறது.. அதன் பிறகு எந்த காட்சியும் காட்டப்படவில்லை

மேலும் அரசாங்கத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த காரியமும் நடக்கும்.. ஓட்டுகளை மக்கள் விற்பதால் எந்த மாதிரியான ஆட்சி அமையும் என்பதையும் வலியுறுத்தி இதன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ராஜா.

கேரக்டர்கள்…

விஜயலட்சுமி அறிமுகமாகும் காட்சியே அசத்தலாக உள்ளது. அவர் சில மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி சொல்லி கொடுக்கிறார்.

அப்போது ஒரு நபர் கேள்வி கேட்க.. “ஆண்கள் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.. ஆனால் தற்போது ஆண்களிடம் இருந்து பெண்களை தற்காத்துக் கொள்வது பெரும்பாடு.. என அதிரடியான வசனத்துடன் அறிமுகம் ஆகிறார்.

அதன் பின் பெரிதாக எந்த காட்சியிலும் ஒட்டாமல் இறுதியாக மதுவுக்கு எதிராக போராட வருகிறார்.. போராட்டம் போராட்டம்.. போராடினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் சமுதாயம் அமையும் என்பதை வலியுறுத்தி படத்தை நிறைவு செய்கிறார் விஜயலட்சுமி.

ராதாரவி தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை நிச்சயம் கவருவார்.. அவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.. அரசியல்வாதிகளை அரசு ஊழியர்களையும் வசனத்தால் சாடியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் காதல் என சுற்றித் திரியும் ராஜா தன்னுடைய தந்தை மற்றும் அண்ணனின் மரணத்தால் மனம் மாறுகிறார்.. பின்னர் காதலை வெறுக்கும் அவர் இந்த சமுதாயம் முன்னேற பாடுபடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத் தன்னுடைய பணியை சில நேரம் நேர்த்தியாக செய்து இருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் வைத்த கேமராவை அப்படியே விட்டு விட்டார் போல.. சிலர் பேசும் வசனங்களில் அவரது முக பாவனைங்கள் தெரிவதே இல்லை.

ரவி வர்மாவின் இசையில், ஆலயமணியின் வரிகளில் பாடல்கள் கவனம் பெறுகின்றன. பிரேமின் பின்னணி இசை ஓகே தான்.

படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜா.. மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி மாவீரனில் பிள்ளை படத்தை கொடுத்திருக்கிறார்.

இதை மையப்படுத்தி இருந்தாலும் அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருக்கலாம்.. ஆனால் சமூக கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே காட்சிகளை அமைத்து இருக்கிறார். திணித்துள்ளது தெரிகிறது.

ஆக மாவீரன் பிள்ளை.. வீரம் குறைவுதான்.

Maaveeran Pillai movie review and rating in tamil

யாத்திசை விமர்சனம் 4.25/5.; சரித்திர திசை

யாத்திசை விமர்சனம் 4.25/5.; சரித்திர திசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

‘யாத்திசை’ (தென் திசையிலுள்ள நிலப்பகுதி)…பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

7ஆம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்).

சோழர்களுக்கு ஆதரவாக போரிட்ட எயினர்களும் தங்களது நிலத்தை இழந்து பாலை நிலத்தில் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

எயினர் கூட்டத்தின் தலைவனான கொதி பாண்டியர்களுடன் போரிட்டு தாங்கள் இழந்த வாழ்க்கையை மீட்க போராடுகிறான். பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார்.

அரண்மனையில் தனது மகன் இளவரசனாக பிறக்க வேண்டுமென சபதமெடுக்கிறான்.

சோழர்கள் மற்றும் எயினர்கள் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது.

சிறந்த வீரனான இரணதீர பாண்டியனை எதிர்க்கத் துணியும் கொதியின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கொதியாக நடித்துள்ள சேயோன், ரணதீரனாக நடித்துள்ள சக்தி மித்ரன்.

ஷக்தி மித்ரன், சேயோன் இருவரும் படத்தின் நாயகர்கள்.. இருவரின் முறுக்கேறிய உடலும் ஆக்ரோஷமான நடிப்பும் வேற லெவல்.. நாங்கள் அறிமுக நடிகர்கள் என்று அவர்களே சொன்னாலும் நம்ப மாட்டீர்கள்..

இவர்களுடன் ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோர் படத்திற்கும் கதைக்கு பக்கபலமாக பொருந்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

சக்கரவர்த்தியின் பின்னணி இசை பார்க்கும் ரசிகர்களுக்கு சரித்திரகால உணர்வை ஊட்டுகிறது.

அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு அட்டகாசம்.. நம்மை அப்படியே ஏழாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இயக்குநர் தரணி ராசேந்திரன் சரியாக திட்டமிட்டு திரைக்கதை வடிவமைத்துள்ளார்.

7ஆம் நூற்றாண்டு வாழ்க்கை.. அப்போது பேசப்பட்ட மொழி… சடங்கு முறைகள் ஆகியவற்றை கொஞ்சம் கற்பனை கலந்து குறைந்த பட்ஜெட்டில் ரசிக்கும்படி தரமானதாக உருவாக்கி தந்துள்ளார்.

ஏழாம் நூற்றாண்டு மொழி என்பதால் கீழே ஆங்கிலமும் தமிழும் சப்டைட்டிலாக வருகிறது.. சில நேரங்களில் அந்த வரிகளை கவனிப்பதால் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

இறுதியாக காட்டப்படும் போர்க்கள காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக இரு பிரிவினருக்கு இடையே போர் என்றால் இரு தரப்பும் போரிடுவார்கள்.

ஆனால் இதில் எல்லா உயிர்களும் அழிவதை காட்டிலும் இரண்டு தலைவர்கள் மட்டும் போரிடலாம் என்ற வித்தியாசமான சிந்தனையை இயக்குனர் கையில் எடுத்திருப்பது புத்திசாலித்தனம்.

ஒருவேளை 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை இருந்ததா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

அரசர்களின் அதிகார வேட்கை, வன்முறையும் அரசியல் வாழ்வியல் பெண்களுக்கான கோயில் இடம், தேவரடியார்களின் மனநிலை என பலவற்றை ஆராய்ந்திருக்கிறார்.

மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு.. ரஞ்சித் குமாரின் கலை.. ஓம் சிவப்ரகாஷின் சண்டைக் காட்சிகள் அத்தனையும் சிறப்பு. படத்தையும் 2 மணி நேரத்தில் முடித்துள்ளார் இநக்குநர்.

போர்க்களக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் கொஞ்சம் காதல் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

இறுதியாக எயினர் குடி பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற ஒன்லைனை பிரமாண்ட காட்சிகளுடன் படமாக்கி சரித்திர விருந்து படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன். உதவி இயக்குனர்கள் மட்டும் 28 பேர் என இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

இப்படத்தை கே.ஜே. கணேஷ் என்பவர் புதியவர்களின் திறமையை நம்பி தயாரித்துள்ளார்.

ஆக.. யாத்திசை.. சரித்திர திசை

Yaathisai movie review and rating in Tamil

தமிழரசன் விமர்சனம் 3/5.. த(ங்)கப்பன்

தமிழரசன் விமர்சனம் 3/5.. த(ங்)கப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

விஜய் ஆண்டனி ஒரு நேர்மையான போலீஸ். இவரின் மனைவி ரம்யா நம்பீசன். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன்.

சந்தோஷமான குடும்பமாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கின்றனர் தனியார் மருத்துவமனையினர்.

ஆனால் அதற்கு ரூ 70 லட்சம் ஆகும் என்கின்றனர். தன்னால் அவ்வளவு பணம் இப்போது தர முடியாது ஆனால் நிச்சயம் தந்து விடுவேன் என்கிறார் விஜய் ஆண்டனி.

முதலில் 20 லட்சம் பணத்தை கட்ட சொல்கின்றனர். அப்போதுதான் மகன் பெயரை சிகிச்சை பிரிவு பட்டியலில் இணைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.

விஜய் ஆண்டனி 20 லட்சம் பணத்தை கட்டிய நிலையில் திடீரென மத்திய அமைச்சரின் பெயரை இவரது மகன் பெயருக்கு முன்னால் வரிசை பட்டியலில் இணைக்கின்றனர்.

இதனால் கடுப்பாகும் விஜய் ஆண்டனி துப்பாக்கி எடுத்துக்கொண்டு மருத்துவமனையை தன்னுடைய கண்ட்ரோலில் கொண்டு வருகிறார்.

மத்திய அமைச்சரின் பெயரை நீக்கிவிட்டு சிகிச்சை பட்டியில் தன் மகன் பெயரை இணைக்க வேண்டும் என பெரிய டாக்டர் சுரேஷ் கோபியை மிரட்டுகிறார்.

இதனால் பிரச்சனை உருவாகிறது.. அதன் பிறகு என்ன ஆனது.? விஜய் ஆண்டனி மகனுக்கு சிகிச்சை நடைபெற்றதா? மத்திய அமைச்சர் என்ன செய்தார்? மருத்துவர்கள் குழு & நோயாளிகள் & அங்கிருந்த பொது மக்கள் என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

விஜய் ஆண்டனி ( தமிழரசன் ),
ரம்யா நம்பீசன் ( லீனா ),
சுரேஷ்கோபி, ( முருகானந்தம் ), ராதாரவி ( சுகுமாரன் நம்பியார் ),
சோனு சூட் ( ராணா பிரதாப் சிங் ), ஒய்.ஜி.மகேந்திரன் ( அர்த்தனாரி ) ,
யோகிபாபு , ரோபோ சங்கர் (நம்பிராஜன் ), கஸ்தூரி ( நளினி ), சங்கீதா ( பத்மா சீனிவாசன் ), சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ் (கேப்டன் பிரபாகரன் ) இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்.

நிறைய நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அவர்களின் பெயர்களை மேலே கொடுத்துள்ளோம்.

விஜய் ஆண்டனி பற்றி யோகிபாபு ஒரு காட்சியில் சொல்வார்.. அவர் எந்த கெட்ட போட்டு வந்தாலும் ஒரே ஒரு ரியாக்ஷன் தான் கொடுப்பார்.. அதற்கு ஏற்ற போல பெரிதாக எந்த முகபாவனையையும் விஜய் காட்டவில்லை.

விஜய் ஆண்டனி மகன் ஐசியூ வில் இருக்கும்போதும் விஜய் ஆண்டனிக்கும் ரம்யாவுக்கும் பெரிய சோகமே இல்லை போல. நார்மலாகவே இருக்கிறார்கள்..

யோகி பாபு – கதிர் – கும்கி அஸ்வின் காமெடி என்ற பெயரில் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றனர்.

சுரேஷ் கோபிக்கு முதல் பாதியில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

ஒய் ஜி மகேந்திரன் சங்கீதா சாயாசிங் சென்ராயன், கஸ்தூரி, ரோபோ சங்கர், சோனுசூட், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர. தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா, சதீஷ்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது கை வண்ணத்தில் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது.

பின்னனி இசையில் மிரட்டி இருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்கள் கவரவில்லை. இளையராஜா குரலில் ஒலிக்கும் ஒரு காதல் பாட்டு கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

தந்தை மகன் பாச போராட்டத்தை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். பெற்ற பிள்ளைக்காக எதையும் செய்ய துணியும் ஒரு தந்தையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

ஆக தமிழரசன்.. த(ங்)கப்பன்

Tamilarasan movie review and rating in Tamil

யானை முகத்தான் விமர்சனம்.; கடவுள் எங்கே.?

யானை முகத்தான் விமர்சனம்.; கடவுள் எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிளா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஆரம்பக் காட்சியில்.. ஒரு புதையலை ஒரு மரத்தடியில் புதைத்து வைத்து அதன் மேல் ஒரு கல்லை நட்டு வைக்கிறார் ஒருவர்.

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு அங்கே ஒரு கோயில் உருவாகிறது. அதன் அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் யோகி பாபு அமர்ந்து கொண்டு ஒரு சிறுவனுக்கு கதை சொல்கிறார்.. இப்படியாக ஆரம்பமாகிறது

ஆட்டோ டிரைவர் ரமேஷ் திலக்.. ஆட்டோ என்றாலே அவர் கண்டிப்பாக ரஜினி ரசிகன் தான்.. ஊருக்குள் பல பேரிடம் கடனை வாங்கி திருப்பித் தராமல் இழுத்தடிப்பவர் ரமேஷ் திலக்.. நிறைய பொய்களை சொல்லி ஏமாற்றுபவர்.

ஆனாலும் இவருக்கு விநாயகர் பக்தி அதிகம். கடன் தொல்லையால் அவதிப்படும் ரமேஷ் திலக்கிற்கு சில தினங்களில் திடீரென விநாயகர் தென்படுவதில்லை. ஆனால் ஊர்வசி & கருணாகரன் கண்களுக்கு தெரிகிறார்.

ஒரு கட்டத்தில் யோகிபாபு விநாயகராக வருகிறார்.. நீ நல்லவனாக மாறினால் மட்டும்தான் இனி நான் உன் கண்களுக்கு தென்படுவேன் என்கிறார்.

கடவுள் அவனின் குறைகளை தீர்த்தாரா.? இறுதியில் என்ன ஆனது? கடவுள் இருக்கிறாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

கதையின் நாயகன் ரமேஷ் திலக் என்றாலும் முதல் பாதியில் அவரது கேரக்டர் எந்தவிதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அதை சரி செய்துள்ளார்.

கடவுளாக வந்து பல கேள்விகளுக்கு விடை சொல்லி இருக்கிறார் யோகி பாபு.. ஜாதியை கடவுள் உருவாக்கவில்லை. உலகத்தில் எத்தனை ஜாதி இருக்கிறதோ அத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என்கிறார்.

மக்களிடம் கடவுள் எதையும் எதிர்பார்க்கவில்லை.. அதே சமயம் எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.. அதை கடவுளால் கூட மாற்ற முடியாது என்கிறார் யோகி பாபு.

ஊர்வசி கேரக்டர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.. ஏனென்றால் படத்தில் காட்டப்படும் ஒரே ஒரு பெண் அவர் மட்டும்தான். ஆனால் இது போன்ற ஒரு நல்ல ஹவுஸ் ஓனர் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்.

நாயகனுக்கு கடன் கொடுத்த ஹரிஷ் பெர்ரடி மிகவும் சாந்தமாக தன் பணத்தை திருப்பி கேட்பது எல்லாம் நம்பும் படியாக.

நட்சத்திர அந்தஸ்து உள்ள கேரக்டர் தேவை என்பதால் கருணாகரனை படத்தில் வைத்துள்ளார்கள் போல அவருடைய கேரக்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆனால் வட இந்திய தாத்தாவாக வருபவரின் கேரக்டர் நம்மை கவர்கிறது.

குளப்புள்ளி லீலா கேரக்டர் கடுப்பு.. வீண்..

டெக்னீஷியன்கள்…

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்

கஷ்டத்துல உதவாத கடவுள் என்ன கடவுள்?” போதையில் வண்டி ஓட்டுவது.. குற்றம் செய்வது உள்ளிட்டோரை கடவுள் தண்டிப்பார் என்பது போலவும் வசனங்கள் உள்ளது.. ஆனால் போதையில் வண்டி ஓட்டி பலரை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா என்பதற்கு கடவுள் பதில் சொல்வாரா.??

நம்மிள் எல்லோருக்குள்ளயும் ஒரு விஷம் இருக்கு…அதுதான் சுயநலம்..” போன்ற வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.

இறைவன் வெளியே எங்கேயும் இல்லை.. அவர் உனக்குள் இருக்கிறார்.. நீ நேர்மையாக நடந்து கொண்டால் அவர் உனக்கு தென்படுவார்.. என்கிறார் இயக்குனர்

கடவுள் வரும் காட்சிகளுக்கு பரத் சங்கர் பில்டப் இசையை கொடுத்துள்ளார்.

படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை நிச்சயமாக கவரும்.. ஒளிப்பதிவு இசை எடிட்டர் தயாரிப்பாளர் என ஒவ்வொரு பெயரும் வரும்போது அதற்கு ஏற்ப டைட்டில் கார்டு காட்டப்படுவது சிறப்பு.. பொதுவாக இதுபோன்ற கிரியேட்டிவ் மலையாள இயக்குனர்களுக்கு கைவந்த கலை.

ஒளிப்பதிவு சிறப்பு.. ஆனால் ஐந்து கேரக்டர்களை மட்டுமே மீண்டும் மீண்டும் காண்பிப்பது ரொம்ப போர் அடிக்கிறது.

யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், வட இந்திய தாத்தா, சிறுவன், டீக்கடைகாரர் எனப் படத்தில் மொத்தம் 7-8 கேரக்டர்களை வைத்து யானை முகத்தானை இயக்கி இருக்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் கலகலப்பு ஊட்டி.. ஒரு ஹீரோயினை கொடுத்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

இதே படத்தின் மலையாள பதிப்பில் விநாயகருக்கு பதிலாக கிருஷ்ணர் கடவுளை காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.. ஆக மாநிலத்திற்கு மாநிலம் கடவுள் வேறுபடுகிறார் என்பதுதான் உண்மை..

ஆக யானை முகத்தான்.. உனக்குள் கடவுள்

Yaanai Mugathaan movie review and rating in Tamil

தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா, அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தெய்வ மச்சான்’.

கதைக்களம்..

சிறு வயது முதலே விமல் மற்றும் பால சரவணன் இருவரும் பங்காளி முறை. விமலின் தந்தை பாண்டியராஜன். விமல் தூங்கும் போது சில தினங்களில் எதிர்பாராத விதமாக ஒரு கனவு வரும்.

அந்த கனவில் வேல ராமமூர்த்தி வருவார். அவர் குறி சொல்லுவார். இவர் இறந்து விடுவார்.. அவர் இறந்து விடுவார்.. என்பார்.. அவர்களும் ஓரிரு நாட்களில் இறப்பர். விமலின் அம்மா இறந்துவிடுவார் என்பார். அம்மாவும் இறந்துவிடுவார்.

அது ஒரு புறமிருக்க.. தன் தங்கை அனிதாவிற்கு மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பார் விமல்.. ஒவ்வொரு வரனும் ஒவ்வொரு காரணத்தால் தட்டிக் கொண்டே செல்லும்.. ஒரு கட்டத்தில் நல்ல வரன் கிடைக்க பேசி முடிப்பார் விமல்.

அன்று இரவு தூங்கும் போது உன் தங்கைக்கு கல்யாணம் நடைபெற்ற 2வது நாளில்.. உன் தங்கை புருஷன் மச்சான் இறந்து விடுவார் என்பார்.

இதனையடுத்து குழப்பமான விமல் வேறு வழியில்லாமல் தன் மச்சான் எந்த வித பிரச்சனைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்வார். மச்சானை காப்பாற்ற போராடுவார்.

இறுதியில் என்ன ஆனது.? தன் தங்கை வாழ்க்கை என்ன ஆனது.? மச்சான் இறந்து விட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதல் பாதி முழுவதும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் பாசமுள்ள அண்ணனாக வருகிறார் விமல். பின்னர் மச்சானுக்காக உருகி உருகி பத்திரமாக கவனிப்பது என தெய்வமச்சான் ஆக அசத்தியிருக்கிறார்.

ஆனால் இடைவேளை வரை பெரிதாக படத்தில் சுவாரஸ்யம் இல்லை.. பாடல் காட்சிகளும் பெரிதாக கவரவில்லை.

பாலசரவணின் காமெடி சில இடங்களில் மட்டும் கை கொடுக்கிறது. பாண்டியராஜனும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

தங்கையாக அனிதா சம்பத். படம் முழுவதுமே சோகமாகவே காணப்படுகிறார். கல்யாணத்திற்கு முன்பும் கல்யாணத்திற்கு பின்பும் ஒரே மாதிரியாகவே வருகிறார் எந்த ரியாக்ஷனிலும் பெரிதாக வேறுபாடு இல்லை.

ஆடுகளம் நரேன்.. அவரின் மனைவி, மாமியார்.. ஜமீன் தம்பி என அந்த குடும்பமே கலகலப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.

சில நேரம் தீபா சங்கர் ஓவர் ஆக்டிங்.. அவர் குறைத்துக் கொள்வது நல்லது..

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கி அளித்துள்ளார்.

முதல் பாதியில் எடிட்டர் நிறைய காட்சிகளை வெட்டி எடுக்கலாம். படம் மிகவும் போர் அடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துள்ளார்.

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார்.. ஜாலியாக ஒரு குடும்பக் கதையை சொல்ல வேண்டும் என நினைத்து அதனை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் அவர் தேர்வு செய்த கேரக்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விட்டது.. முக்கியமாக படத்தின் நாயகி நேகா சுத்தமாக பொருந்தவில்லை.. அனிதாவும் சரியான தேர்வு இல்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் அந்த மச்சான் யார்.? என்ற கேரக்டர் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

ஆக தெய்வமச்சான்.. மகிழ்ச்சி மச்சான்

Deiva Machan movie review and rating in tamil

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ஒரிஜினல் படமான ஒக்கடு என்ற படத்தை இயக்கியவர் இந்த குணசேகர்.

மேலும் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி என்ற சரித்திர கால படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சாகுந்தலம்.

கதைக்களம்..

விஸ்வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறக்கும் குழந்தை சகுந்தலை (சமந்தா).

ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் முனிவர்கள் நிறைந்த பகுதியில் இந்த குழந்தையை விட்டுச் செல்கின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் அங்கு உள்ள மடத்து மாணவர்கள் தங்களது குருவிடம் சொல்கின்றனர்

அதன்பின்னர் கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். தன்னுடன் இருப்பவர்கள் மட்டும்தான் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்கள் என சமந்தா நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நிய தேசத்திலிருந்து வரும் ராஜா இவரை கண்டதும் காதல் கொள்கிறார் துஷ்யந்தனான தேவ் மோகன்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.

அப்போது சமந்தா கர்ப்பமாகி விடுகிறார். நான் என் நாட்டிற்கு சென்ற பின்னர் உன்னை ராஜ மரியாதையோடு அழைத்துச் செல்கிறேன் என வாக்குறுதி கொடுத்து செல்கிறார்.

இதன் இடையில் சமந்தா ஒரு மாபெரும் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்.

என்னை கண்டு கொள்ளாத உன்னை அந்த ராஜாவும் கண்டு கொள்ள மாட்டார் என சாபம் விடுக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை. மகாராணியாக மாறினாரா சமந்தா? ராஜா இவரை கண்டு கொண்டாரா என்பது தான் கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகியாக சமந்தா. மடத்தில் இருக்கும் போது ஆனந்தமாக இருப்பார் என்றால் அப்போதுமே சோக முகத்துடன் காணப்படுகிறார்.. காதலன் கைவிட்டு சென்றபோதும் மிகவும் சோகமாக காணப்படுகிறார்..

ஆக மொத்தம் படத்தில் சமந்தா சிரிக்கும் காட்சிகள் குறைவு. அவரின் வேகமும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

துஷ்யந்தனாக தேவ் மோகன்.. நல்ல உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என அரசருக்கே உரித்தான கம்பீரத்தோடு வலம் வருகிறார்.. அவரின் கண்களைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் காதல் கொள்வாள் என்பதைப் போல காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

சமந்தா தோழியாக வரும் அதிதி பாலன் ஓகே. துர்வாசராக வரும் மோகன்பாபு நிறைவு.

மேனகையாக மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடி மனதில் நிறைகிறார்.

படகோட்டியாக பிரகாஷ்ராஜ். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்.??

டெக்னீஷியன்கள்…

மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் இசையை அமைத்துள்ளார். மல்லிகா..மல்லிகா.. பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.

ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு நம்மை பல காட்சிகளில் வியக்க வைக்கிறது.

ஒரு புராண கால கதையை படமாக்குவது மிக எளிதான காரியம் அல்ல. அதற்கு கலை இயக்குனரின் கைவண்ணம் தான் பக்க பலம் கொடுக்கும். இதிலும் அப்படி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக மிருகங்கள் காட்டப்படும் போது.. நிறைய காட்சிகளை கிரீன் மேட் வைத்து எடுத்துள்ளதும் தெரிகிறது. இவைகளை இன்னும் கலை நுணுக்கத்தோடு கவனித்திருக்கலாம்.

பிரம்மாண்ட அரண்மனையை காட்டும்போது பிரமிக்க வைக்கிறது. பாகுபலி படத்தில் கூட இப்படி ஒரு அரண்மனையை நாம் பார்க்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது.

இது போன்ற படங்களை 3டியில் படமாக்கி இருந்தால் குழந்தைகளும் நிறைய காட்சிகளை முக்கியமாக விலங்கு காட்சிகளை ரசித்திருப்பார்களே இயக்குனர் குணசேகர்.

Shaakuntalam movie review and rating in tamil

More Articles
Follows