தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லாந்தர் – திரை விமர்சனம்..
ஸ்டோரி…
ஓர் இரவில் நடக்கும் கதை அத்துடன் ஒரு சின்ன பிளாஷ்பேக் என படம் நகர்கிறது.
விதார்த் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.. ஒரு நாள் இரவில் ஒரு முகமூடி அணிந்த மர்ம நபர் காண்போரை எல்லாம் ரோட்டில் அடித்து துன்புறுத்துவதாக தகவல் பறக்கிறது.
அந்த நபர் யார்? அவரை கண்டுபிடிக்க விடிய விடிய போலீஸ் தேடும் வேட்டையே இந்த ‘லாந்தர்’..
அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? எதனால் செய்கிறார்? போலீஸ் அவரை என்ன செய்தது? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
படத்துக்கு படம் வித்தியாசமாக கேரக்டர்களை செய்து பாராட்டைப் பெறுபவர் விதார்த்.. மைனா தொடங்கி குரங்கு பொம்மை, இறுகப்பற்று, அஞ்சாமை என பல்வேறு படங்களில் கனமான பாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்த இதில் வித்தியாசமாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார் விதார்த்.
ஆனால் அவரது கேரக்டர் படத்தை தாங்கி அளவு திரைக்கதை அமையவில்லை.. வீட்டில் ஆயிரம் டென்ஷன் காணப்பட்டாலும் சக போலீஸிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் இவரது ஏசிபி அரவிந்த் கேரக்டர் ஆச்சரியமே..
விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோரதி.. கண்களும் உதடும் அழகு.. இவருக்கும் ஓர் வித்தியாசமான வியாதி இருப்பதால் மயக்கம் போடுவதும் பின்னர் எழுவதும் என இவரது கேரக்டர் வலுவில்லை.
மஞ்சு என்ற கேரக்டர் நடித்தவர் சஹானா.. இவரது கேரக்டர் தான் படத்தின் ட்விஸ்ட்.. இவரின் வயதுக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை.. 17 வயது 19 வயது 22 வயது என வெவ்வேறு காலகட்டங்களை காட்டினாலும் இவரது முதிர்ச்சி 30 வயதை காட்டுகிறது..
இவருக்கு பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற வியாதி சொல்லப்பட்டிருந்தாலும் போதிய கேரக்டர் அழுத்தம் இல்லை.. இளம் காதலராக விபின்.. நல்ல ஸ்மார்.. நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.
கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், பசுபதி ராஜ் உள்ளிட்ட பலரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
இசை – பிரவீன்
ஒளிப்பதிவு – ஞான சௌந்தர்
எடிட்டிங் – பரத் விக்ரமன்
இயக்கம் – சாஜி சலீம்
போலீசுக்கும் மர்ப நபருக்கும் நடக்கும் சம்பவங்களை 30 நிமிட இடைவெளி கணக்கில் விவரிக்கிறது இந்த படம்.
அதாவது இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை நடக்கும் ஒரு கதையும்.. 10 மணி முதல் இரவு 2 மணி வரை நடக்கும் ஒரு கதையும் என இரண்டு கதைகளை பிரித்து இரண்டு கதைகளையும் ஒரு வகையில் இணைத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.
ஒரே இரவில் நடக்கும் இந்த க்ரைம் திரில்லர் கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.. இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு ஃப்ளாஷ் பேக் முக்கியம். ஆனால் அவை அயற்சியை தருகிறது.
இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த படம் இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக் காட்சி என நீண்டு கொண்டே செல்கிறது.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
முக்கியமாக காரை சேசிங் செய்யும் போலீஸ் ஜீப் மற்றும் விதார்த் ஆகியோரின் நடிப்பு பாராட்டும் படி வகையில் உள்ளது. அதற்கான ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.
காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மற்றவர்களை அடிமைத்தனமாக நடத்துவார்கள். ஆனால் இதில் விதார்த் அனைவரையும் மதிக்கும் குணம் கொண்ட ACP-யாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது
Vidhaarths Laandhar movie review