தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப் பின்னணி’..
‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
ஸ்டோரி…
‘ராட்சசன்’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த சரவணன் இந்தப் படத்தின் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார்.
இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பால்காரராக வேலை செய்து வசித்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பால் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார். அதன் பின்னர் வாட்டர் கேன் போடும் பிசினஸ் செய்து வருகிறார்.
ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு ஒரு வீட்டிற்கு சென்று அங்கு உள்ள செல்வி என்ற இல்லத்தரசியை கழுத்தை நெரித்து கொலை செய்கிறார். தாலியால் அவரை கழுத்து நெறித்து கொலை செய்து விட்டு தாலியை மட்டும் எடுத்துச் செல்கிறார்..
கொலைக்கான எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் திண்டாடி வருகிறது.. சில நாட்களில் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனையும் கொலை செய்கிறார்
இரு கொலை நடந்து முடிந்த சில தினங்களில் அதே பாணியில் வேறொரு வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரையும் கொலை செய்கிறார்..
அடுத்தடுத்து சரவணன் கொலை செய்ய என்ன காரணம்? அவரது நோக்கம் என்ன? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்ஸ்…
இதில் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார்..
சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் சரவணனுக்கு முழு முகவரி கொடுத்த படம் ராட்சசன். அந்தப் படத்தில் கொடூர வில்லனாக ஜொலித்த இவர் இந்த படத்திலும் கொலைகாரன் என்றாலும் ஒரு அப்பாவியான தோற்றத்தில் வருகிறார்.
போலீஸ் தன்னைப் பிடித்து விடும் என்று தெரிந்து அவர் கொலைகள் செய்வது வித்தியாசமான நடவடிக்கை.. அதன் பின்னணியில் என்ன என்பதுதான் இந்த குற்றப் பின்னணி..
அலட்டிக் கொள்ளாத நடிப்பு அப்பாவியான முகம் என தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் சரவணன்.
மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், கராத்தே ராஜா மற்றும் பலர்..
இவருடன் நடித்துள்ள பல கலைஞர்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்..
மற்றவர்களின் கேரக்டரை சொன்னால் கதையின் திருப்புமுனை தெரிந்து விடும்.. போலீஸ் அதிகாரிகள் நடித்த ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
எந்த விதத்திலும் அவர்கள் கமர்சியல் போலீசாக காட்டிக் கொள்ளாமல் ஒரு கிராமத்தில் நாம் பார்க்கும் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கின்றனர்.
பல படங்களை வில்லனாக மிரட்டிய கராத்தே ராஜா இந்த படத்தில் முழுக்க முழுக்க பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நாட்டில் நடக்கும் கள்ளக்காதல்.. கள்ளக்காதலால் தங்கள் பிள்ளைகளை கொல்லும் பெற்றோர்கள் என்ற கதைக்களத்தை எடுத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ்,
இசை – ஜித்,
பாடல்கள் – என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக்,
படத் தொகுப்பு – நாகராஜ்.டி,
சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் நூர்,
பத்திரிகை தொடர்பு – வெங்கட்,
வசனம் – ரா.ராமமூர்த்தி,
தயாரிப்பு – ஆயிஷா – அகமல்,
கதை திரைக்கதை இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.
டிவி & நாளிதழ்களில் நாம் தினம் தினம் பார்க்கும் விபரீதமான விஷயங்களை திரைக்கதையாக அமைத்து இருக்கிறார்.. குறைந்த பட்ஜெட் படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. இசையமைப்பாளரும் தன் பணியில் நேர்த்தி.. நாயகன் என்பதால் அவருக்கு காதல் பாடல் என்றெல்லாம் கதையை நீட்டாமல் விஷயத்தை சார்பாக சொல்லியிருக்கிறார்..
குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறான்.. அவனது குற்றப் பின்னணி என்ன என்பதுதான் இந்த படத்தின் நோக்கம்.
நான் திருந்தி வாழ மாட்டேன் திரும்பி வருவேன் குற்றங்கள் நடக்கும் வரை எனது திட்டங்கள் தொடரும் என கள்ளக்காதலனுக்கும் கள்ளக்காதலிக்கும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர் இஸ்மாயில்.
KUTTRA PINNANI movie review