தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொட்டுக்காளி விமர்சனம் 2/5.. தனக்கே சூடு வைத்த சூரி
கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள்…
ஸ்டோரி….
நாயகன் சூரியின் சகோதரி.. “அந்தப் பெண்ணை விட்டால் உனக்கு யாரும் கிடைக்க மாட்டார்களா? அவளை விட வேற யாரையாவது திருமணம் செய்து கொள் என சொல்கிறார்.. உடனே கோபம் கொண்டு தன் தங்கையை அடிக்கிறார் சூரி.
அதிலிருந்து கதை தொடங்குகிறது.. அதாவது திருமணம் செய்தால் அந்த பெண்ணை தான் கட்டுவேன் என பிடிவாதம் பிடிப்பதாக சூரியின் குணம் புரிகிறது..
ஆனால் நாயகி அன்னா பென்-க்கு வேறு ஒருவருடன் காதல் நெருக்கம் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் உறவுக்கார பெண் நாயகி அன்னா பென் அழைத்துக் கொண்டு ஒரு ஷேர் ஆட்டோ மற்றும் இரண்டு டூவீலர்களில் சூரியின் குடும்பத்தினர்கள் ஒரு சாமியாரை காண செல்கின்றனர். அதாவது நாயகிக்கு பேய் பிடித்து விட்டதாக சூனியம் / மனோவசியம் செய்து விட்டதாகவும் அதனை சாமியாரிடம் எடுக்க செல்வதாகவும் செல்கிறார்கள்.
அந்த வழியில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் மீதிக்கதை.. நாயகி அன்னா பென்க்கு நிஜமாகவே பேய் பிடித்ததா?அல்லது அவளின் காதலனிடம் இருந்து பிரிக்க குடும்பத்தினர் சதி திட்டம் போடுகிறார்களா? என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சூரி நாயகன்.. நாயகி அன்னா பென்.. காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த சூரி தற்போது கதையின் நாயகனாக விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்களின் நடித்திருந்தால் இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
டாக்குமென்ட்ரி டைப்பான இந்த கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்ததன் மூலம் தனக்குத் தானே சூடு வைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.. கழுத்தில் சுண்ணாம்பை தடவியது முதல் கரகரத்த குரலில் லைவ் ரெக்கார்டிங் செய்து வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் நம்மை சோதித்து விட்டார்கள்.
நாயகி அன்னா பென்.. ஆயில் வடிந்த முகம் தலை என எதுவும் பேசாமல் ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசி தன் நடிப்பில் கவர முயற்சிக்கிறார்..
சொல்லப்போனால் இவர்களை தவிர நடித்த சூரி உறவினர் பெண்கள் வயதானவர்கள் அந்த சிறுவன் என அனைவரும் ஆங்காங்கே சின்ன சின்ன வசனங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்துள்ளனர்.. இடையில் காளையை விரட்டிச் செல்லும் அந்த சிறுமி கூட கலக்கி இருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
முக்கியமாக படத்தில் பின்னணி இசை ஒரு துளிகூட இல்லை.. ஆனால் அதே சமயம் சவுண்டு (இன்ஜினியரிங்) பயன்படுத்தி சில சப்தங்களை எழுப்பி இருக்கிறார்…
ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இருவரும் டைரக்டர் சொல்வதை தானே கேட்க முடியும் அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்து அவர்களும் நம்மை சோதித்து விட்டார்கள்..
நடிகை நயன்தாரா ரிலீஸ் செய்த கூழாங்கல் படத்தை இயக்கியவர் பி எஸ் வினோத் ராஜ்.. இவர் சர்வதேச திரைப்படம் விழாக்களை குறி வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்றே தோன்றுகிறது.. காரணம் முழுக்க முழுக்க ஒரு ஆவண படங்களை பார்ப்பது போன்று உணர்வையே இவர் கொடுக்கிறார்..
சொல்லப்போனால் 20 நிமிடத்தில் முடிய முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை 100 நிமிடங்களுக்கு நீட்டி ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.
ஆட்டோ செல்லும் வழியில் 3 முறை நிற்கிறது.. அதனை ஸ்டார்ட் செய்யும் போது கோளாறு ஏற்படுகிறது.. அப்போது 3 முறையும் வைக்கப்பட்ட கேமரா ஆங்கிள் ஒரே ரகம் தான்.. ஆட்டோ ஸ்டார்ட் ஆகி சென்ற பின்னும் கேமரா எடுக்காமல் இருப்பது நமக்கு போர் அடிக்கிறது.
சூரி உறவினர் ஒரு நபர் சிறுநீர் கழிக்க செல்லும் போது அவர் லுங்கியை மடித்து கட்டுவதும் கையை உள்ளே விட்டு எடுத்து சிறுநீர் கழிப்பதும் இப்படியாக ஒவ்வொரு காட்சிகளையும் ஒரு நிமிடத்திற்கு நீட்டியே சொல்கிறார்.. அதிலும் யூரின் அடிக்கும்போது அது அங்குள்ள இலைகள் மீது படுவது போல காட்சிகளை கூட எடுத்திருக்கிறார்.. எதற்காக இப்படி எல்லாம் எடுத்து நம்மை சோதித்து இருக்கிறார் வினோத் ராஜ் என்பது தான் தெரியவில்லை.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை ஒரு பையில் எடுத்து வருவார்கள்.. ஆனால் திடீரென மாதவிடாய் வரும் ஒரு பெண் நாப்கினை ஜாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்.. இதுபோல கிராமத்து பெண்கள் செய்வார்களா?
தான் கட்டிக்க போகும் முறை பெண் வேறு ஒருவருடன் பழகும் போது ஆத்திரம் கொள்கிறார் சூரி.. சாமியாரிடம் அவருக்கு வைக்கப்பட்ட வசியத்தை எடுக்க செல்லும் போது அங்குள்ள சாமியார் வேறொரு பெண்ணின் வயிற்று மார்பகம் எல்லாம் தடவி கொடுக்கிறார்.. அதை கண்டதும் சூரிக்கு அதை செய்வதில் உடன்பாடு இல்லை எனவே திரும்பி செல்வதாக காட்சி முடிக்கப்படுகிறது.
இதிலிருந்து இயக்குனர் வினோத் என்ன சொல்ல வருகிறார்.. அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என நம்மை கேட்க வைக்கும் காட்சி தான்.. ஆனால் அதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா.? இப்படியாக ஒவ்வொரு காட்சியும் இரண்டு, மூன்று நிமிடங்கள் நீட்டி நீட்டி நீட்டி நம்மை சோதனையின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டார் இந்த இயக்குனர்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக நான் நிர்வாணமாக நிற்கக் கூட தயார் என்று மிஷ்கின் சொல்லியிருந்தார்.. அதுபோல இதுபோல சிறந்த இயக்குனர் வினோத்தை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார்.
ஒருவேளை உலக சினிமா விவரம் அறிந்தவர்கள் அவர்கள் என் நினைத்து சொன்னார்களா தெரியவில்லை.. உள்ளூர் மக்களுக்கு செல்ல வேண்டாம் என நினைத்தார்களோ என்னவோ.? அவர்களுக்கே வெளிச்சம்…!!!
Kottukaali movie review