கொட்டாச்சி இயக்கி நடித்த ‘கழுமரம்’ பட விமர்சனம்

கொட்டாச்சி இயக்கி நடித்த ‘கழுமரம்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

கிராமத்தில் தியேட்டரில் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வரும் கொட்டாச்சி பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.. தன் அம்மா ஆசைப்பட்டபடி சினிமாவில் ஒரு பெரிய இயக்குனராக வரவேண்டும் என அதற்காக உழைத்து வருகிறார். பல தடைகள் அவமானங்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்..

எப்படியாவது இயக்குனராகி வாழ்க்கையில் முன்னேற துடிக்கையில் இவரது கதை களவாடப்படுகிறது. இதனால் விரக்தீயில் இருக்கும் நாயகன் என்ன செய்தார்? அவரால் சாதிக்க முடிந்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

Cast – Kottachi Annamagan, Pandi Selvam, Tamil Barathi, Thirupachi Benjamin , karnan janaki, Sathyendran,

நாயகன் கொட்டாச்சியே படத்தின் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.. தனக்கு ஏற்ற கதையை எடுத்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒரு சினிமாவிலயே ஒரு உதவி இயக்குனர் படும் கஷ்டங்களை உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறார்.. ஆனால் திரையில் அது சார்ந்த திரைக்கதையை ஓடிக் கொண்டிருக்கும்போது சில நேரம் சலிப்பு தட்டுகிறது.

இவருடன் நடித்த மற்ற நடிகர்கள் கதை ஓட்டத்திற்கு உதவி புரிந்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

Writer – Kottachi Annamagan
Cinematographer – Gri Dharan, Raja Durai
Editor – Dharani Dharan, Krishna
Music – Roshan Mathews
Producer – K. Krishna Raju

ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கிறது. நடிகர் கொட்டாச்சி அண்ணமகன் இயக்கியிருக்கிறார். திரையுலகில் இயக்குனராக ஆவது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்த்திருக்கிறார்.. அதே சமயம் ஒரு இயக்குனராவது எளிதல்ல.. அதற்காக பல அவமானங்கள் கஷ்டங்களை சோதனைகளை சந்திக்க வேண்டும்.

உன்னை தூற்றும் இந்த சமூகம் நீ வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடும்.. அதற்காக நீ உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு படம் வெற்றி கொடுத்து விட்டால் மட்டும் போதாது அந்த வெற்றியை நோக்கி அதை தாண்டி ஓட வேண்டும் என கொட்டாச்சி உணர வைத்து நடித்திருக்கிறார்.

Kottachi starrer Kazhu Maram movie review

‘எட்டும் வரை எட்டு’ பட விமர்சனம்

‘எட்டும் வரை எட்டு’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

அப்பா : ஆடுகளம் நரேன்
மகள் : கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்

தாய் இல்லாமல் வளர்க்கப்பட்டவள் தந்தை கண்டிப்பில் வளர்கிறார் பூமணி..

ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைக்க வேண்டும்.. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் மகள்.. பழைய பஞ்சாங்கத்தை கட்டிக் கொண்டு… பெண்கள் சமையலறையில் தான் இருக்க வேண்டும் என தத்துவம் பேசும் தந்தை. இவர்களின் மோதல் தான் இந்த படத்தின் கதைக்கரு.

இந்த சூழ்நிலையில் நாயகி மீது கொலை பழி.. இதன் பின்னணியில் நடந்தது என்ன?

தந்தையின் எதிர்ப்பை மீறி சாதித்தாரா மகள்.? மகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டாரா தந்தை? என்பதுதான் படத்தின் மீதி கதை.

எட்டும் வரை எட்டு

கேரக்டர்ஸ்…

நந்தகுமார், பிரத்யங்கிரா ரோஸ், செளந்தர்யா வரதா, ஆடுகளம் நரேன், சீனி பாட்டி, ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ் சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தனபாலன்

கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்.. தன் இலட்சிய தடைகளை உடைத்தெறியும் சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார். எதையும் துணிந்து எதிர்க்கும் பக்குவப்பட்ட பெண்ணாகவும் அதே சமயம் கொலை வழி தன் மீது விழுந்த பின்னர் உடைந்து நொறுங்கும் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்..

நாயகனாக நந்தகுமார். நாயகிக்கும் கதை ஓட்டத்திற்கும் உதவியாக இருந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக ‘ஆடுகளம்’ நரேன். பழைய பஞ்சாங்க அடக்குமுறை தந்தையாக நரேன் ரசிக்க வைக்கிறார். தந்தை கேரக்டருக்கு வலுவான பலம் சேர்த்திருக்கிறார்.

எட்டும் வரை எட்டு

இவர்களுடன் ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் உள்ளிட்டோரும் உண்டு.. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

இசை : ராஜயோகி
ஒளிப்பதிவு : வேல் முருகன்
இயக்கம் : வேல்விஸ்வா
தயாரிப்பு : எஸ்.பாஸ்கர்
இணை தயாரிப்பு : ஹேமா மூவிஸ் இண்டர்நேஷ்னல் என்.என். மணிபாலன்

ராஜயோகி இசையில் பாடல்கள் தாளம் போடவும் வைக்கின்றன.. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் வறட்சி கிராமம் எதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட லொகேஷன்கள் இல்லாமல் வாழ்வியலோடு கலந்த லொக்கேஷனில் படம் பிடித்திருப்பது சிறப்பு.

எட்டும் வரை எட்டு

என்னதான் 2024 ஆண்டுகளை நாம் எட்டி விட்டாலும் இன்னும் சில பெண்கள் அடக்குமுறைக்கு பயந்து வீட்டில் வாழ்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டில்தான் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால் பிறந்த வீட்டிலேயே ஒரு பெண் அடிமைப்பட்டு கிடக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதை எல்லாம் மீறி அவளால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் இயக்குன சொல்லி இருப்பது பல பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

திருமணத்திற்கு முன்பு தந்தைக்கும் திருமணத்திற்கு பின்பும் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழும் பெண்கள் மத்தியில் தன்னை நம்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.. இந்த உலகத்தில் வாழ முடியும் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் வேல் விஷ்வா.

எனவே இந்த ‘எட்டும் வரை எட்டு’.. எட்டு திசைக்கும் எட்டட்டும்.. வாழ்த்துக்கள்

Ettum Varai Ettu movie review and rating in tamil

BYRI பைரி விமர்சனம் 4.25/5.. FIRE FULL

BYRI பைரி விமர்சனம் 4.25/5.. FIRE FULL

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத புறா பந்தயத்தை வைத்து ஒரு. ஃபயர் புல்லான பந்தயத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.

அதேசமயம் காதல், நட்பு, அம்மா மகன் சென்டிமென்ட், தந்தை மகன் பாசம், என அனைத்தையும் கலந்து ஒரு விருந்து படைத்திருக்கிறார் இந்த புதுமுக இயக்குனர்.

ஸ்டோரி..

நாயகன் சையத் மஜித் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில் நாயகி மேக்னா எலனும் படித்து வருகிறார்.

நாயகி மீது நாயகனுக்கு காதல்.. ஆனால் நாயகியோ கண்டு கொள்வதில்லை. ஆனால் நாயகன் மஜீத் மீது முறைப்பெண் சித்ரா (சரண்யா ரவிச்சந்திரனுக்கு) கொள்ளை காதல்..

இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. புறா பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார் நாயகன்.. அதற்காக புறாக்களை வளர்க்க திட்டமிடுகிறார். ஆனால் படித்து நன்றாக முன்னேற வேண்டும் தாத்தா, தந்தையைப் போல நீ கெட்டுவிடக்கூடாது.. உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என அட்வைஸ் சரி செய்கிறார் அம்மா விஜி சேகர்.

புறா வளர்க்க விட்டால்தான் பரீட்சை எழுதுவேன் என மிரட்டுகிறார் மகன்.. புறா பந்தயத்தில் நீ கலந்து கொண்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என மிரட்டுகிறார் அம்மா.

இப்படியான சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது? நாயகன் என்ன செய்தார்? அவர்களின் நண்பர்கள் உதவினார்களா? அம்மாவின் கண்டிப்புக்கு பயந்தாரா? நாயகனுக்கு வில்லன் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Syed Majeed – rajalingam
Meghana Ellen – sharon
Viji Sekar – saraswathi (Amma)
John Glady – Amal
Saranya Ravichandran – Chithra
Ramesh Arumugam – ramesh pannaiyar
Vinu Lawrence – suyambu
Anand Kumar – Thirumal (rajalingam Appa)
Karthick Prasanna – villiyam
Francis Kiruba – ravichandran (Chithra Appa)
Rajan – Amal father

பெரும்பாலும் எல்லா படங்களிலும் நாயகனுக்கு தான் அறிமுக காட்சிகள் வேற லெவலில் இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்களில் வில்லென்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். தனி ஒருவன் படமே அதற்கு சாட்சி.. வில்லன் அரவிந்தசாமி பிறக்கும் போதும் அவர் உருவாகும் போதும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். அதுபோல இந்த படத்தில் வில்லன் கேரக்டர் நடித்த சுயம்புவுக்கு (வினு லாரன்ஸ்) பயங்கர பில்டப்.. அவரை சமாதானப்படுத்த உள்ளூர் முதல் தேசிய அளவில் பலர் வந்து முயற்சிப்பார்கள். ஆனால் வில்லன் எதற்கும் பிடி கொடுக்க மாட்டார். இவர் யார்? இவருக்கு என்ன பிரச்சனை என்பதுடன் படத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் இதில் வில்லுப்பாட்டு வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.

சையது மஜீத், ரமேஷ் ஆறுமுகம், ஜான் கிலாடி, சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன், விஜி சேகர் என இதுவரை நாம் பார்க்காத புது முகங்கள் தான் பைரி-யின் அடையாளங்கள்..

நண்பனுக்காக எதையும் செய்யத் துணிந்த கோபக்கார இளைஞன் சையத் மஜீத். அதே சமயம் காதலிக்காக உருகுவதும் அம்மாவுக்காக பயந்து நடுங்குவதும் ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்ப்பதும் என நடிப்பில் மிரட்டி இருக்கிறார் சையத் மஜித்.

தனது முதல் படத்திலேயே சில நாயகர்கள் முத்திரை பதித்திருப்பார்கள்.. பராசக்தி-யில் சிவாஜி பருத்திவீரனில் கார்த்தி அதுபோல பைரி-யில் சையது மஜீத்..

நாயகனின் தாயாக சரஸ்வதி கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் அம்மா விஜி சேகர். இவர் சிங்கம் 2, சண்டக்கோழி என 12+க்கும் மேற்பட்ட படங்களின் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் இவரை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும்.

நாயகனின் முறை பெண்ணாக சித்ரா என்ற கேரக்டரில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார் சரண்யா ரவிச்சந்திரன். மாமாவின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளிலும் ஒரு கட்டத்தில் மாமா மாமி இருவருக்கும் இடையில் சரண்யா சிக்கிக் கொண்டு தவிக்கும் பாச போராட்டம் ரசிக்க வைக்கிறது.

அமல் என்ற கேரக்டரில் நாயகனின் நண்பனாக மிரட்டி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஜான் கிலாடி. நண்பனுக்காக வில்லனை எதிர்த்து அதன் பின்னர் பயந்து நடுங்கும் காட்சிகளில் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒன்று சேர்க்கிறார்.. இவரின் அப்பா மாற்றுத்திறனாளியாக நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.

இவர்களுடன் மக்களே மக்களே என்று என்று அழைத்து நம் கவனம் இருக்கிறார் ரமேஷ் ஆறுமுகம்.. இளைஞர்கள் கெட்டுவிடக்கூடாது நல்வழிப்படுத்த வேண்டும் என இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் இதுபோல நம் ஊருக்கு ஒருவர் கிடைக்க மாட்டார்? என ஏங்க வைத்து விடுகிறார்.

சுயம்பு கேரக்டரில் வில்லனாக வினு லாரன்ஸ் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும்.. இவரது உடலும் உடல் மொழியும் நம்மை மிரட்டும்.

இவர்களுடன் சுயம்புவின் மச்சான் லிங்காவின் நண்பர்களும் என ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதை விட்டு நீங்காது.

டெக்னீசியன்ஸ்…

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான் கிளாடி என்பவர் இயக்கியுள்ளார்.
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் என்பவர் தயாரித்து இருக்கிறார். இயக்குனரைப் போல இவருக்கும் இதுதான் முதல் படம்..

நாயகனின் நண்பராக ஜான் கிளாடி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.. நண்பனுக்காக உசுர கொடுக்கணும் நண்பனுக்கு பிரச்சனை வந்தா உசுர எடுக்கணும் என்பதாக திரைக்கதையை அமைத்து அமல் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

புறா காட்சிகளில் கிட்டத்தட்ட படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன..

இயக்குனரின் புறா பந்தய திரைக்கதைக்கு தங்கள் பங்களிப்பை அதிக அளவில் ஐவர் கொடுத்திருக்கின்றனர்.. இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், சண்டை பயிற்சியாளர் மற்றும் படத்தொகுப்பாளர்.

Producer – V.Durai Raj
Director – John Glady
DOP – A.V. Vasantha Kumar
Music director – Arun Raj
Editor – R.S.Sathish Kumar
Fight master – Vicky
Art directer – Anish

Choreography – Srikrish
SFX – Sathish
Sound design – Raja Nallaiah
Costume design – Dinesh ft
Makeup – Kumaresan
VFX – Sekar Murugan
Lyrics – Karthik Netha, Mohan Rajan, Pon manoban

வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நம்மை ஆச்சரியப்படுத்தும்.. முக்கியமாக இரவு நேரத்தில் புறாக்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போது நாயகன் டூவீலரில் சென்று கொண்டிருப்பார். அதை இரண்டையும் அழகாக கோர்த்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக நிறைய கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி இருக்கின்றனர். புறாக்களை வேட்டையாடும் பைரி அடித்து செல்லும் காட்சிகள் சிறப்பு..

கலை இயக்குனரும் பைட் மாஸ்டரும் தங்கள் பங்களிப்பை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கின்றனர்.. புறா வளர்க்கும் கட்டிட அமைப்பு அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்க இடம் என ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்து இருக்கின்றார் கலை இயக்குனர் அனீஸ்.

ஃபைட் மாஸ்டர் விக்கியும் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் அனல் தெறிக்க வீச்சாக கொடுத்திருக்கிறார்.

தடம் படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அருண் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல் ரகம்… முக்கியமாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் இவரது இசை நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.

ஜல்லிக்கட்டு – சேவல் சண்டை என பல படங்களில் நாம் பார்த்திருப்போம்.. ஆனால் இதில் புறா பந்தயத்தை வைத்து ஒரு புதுமையான திரைக்கதையை அமைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் ஜான் கிலாடி.. இரண்டாம் பாகத்திற்கான அவர் வைத்த ட்விஸ்ட் வேற லெவல்..

பாகுபலி கட்டப்பாவை கொன்றது ஏன்? விவாதம் வந்ததைப் போல இந்தப் படத்தில் லிங்கம் வர மாட்டார் வரவே மாட்டார் என்ற கிளைமாக்ஸ் வசனங்கள் நிச்சயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்..

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை தொகுத்து அங்குள்ள மனிதர்களின் நடிக்க வைத்து ஒரு யதார்த்தமான சினிமாவை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதே சமயம் கேரக்டர்களில் நடித்த ஒவ்வொருவரையும் அழகாக பிரேமில் நிறுத்தி மக்கள் மனதிலும் நிற்க வைத்திருக்கிறார். படம் முடிந்து வரும்போது நிச்சயம் லிங்கா, அமல், சுயம்பு, சித்ரா, விஜி அம்மா & ரமேஷ் உள்ளிட்ட பல கேரக்டர்கள் உங்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும்.

பெரும்பாலும் படத்தின் கதையை மையப்படுத்தி தலைப்பு இருக்கும் ஆனால் இதில் புறாக்களுக்கு எதிரியான பைரி-யை தலைப்பாக்கி ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைத்து விட்டார் ஜான் கிளாடி.

இந்தப் படத்தைப் பார்த்து வாங்கியே தீருவேன் என அடம்பிடித்த விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவர் ஒவ்வொரு படத்திற்கும் பக்கபலமாக இருந்து சக்திவேலன் பங்கேற்று பேசும் பேச்சும் கவனிக்கத்தக்கது.

இவரது முயற்சியால் இன்று பல சின்ன படங்களுக்கு முகவரி கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

எப்போது பைரி பட இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை இந்த பைரி ஒன்று நிச்சயம் ஏற்படுத்தும்.. பைரி படத்தின் மூன்றாம் பாகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..

DI – Get in dream studios
Co Director – Ganga Ram,
Associate Director – S. Panneer Selvam,
First Assistants – Mahesh Casber, Jaiso’n.
Executive producer – Pon Manoban, Dinesh Kumar
stills – A.J.J jovieh
Designs – Design point
Lyric video – Fix it in post Promotion
Production Manager – S.Mariyappan
PRO – Nikil Murukan

BYRI movie review and rating in tamil

எப்போதும் ராஜா பட விமர்சனம்

எப்போதும் ராஜா பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிக்கையாளர் – பிஆர்ஓ விஜய் ‘எப்போது ராஜா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார்..

ஸ்டோரி…

அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார் வின்ஸ்டார் விஜய்.. இவர் தன் அம்மா மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

அண்ணன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.. தம்பி ஒரு வாலிபால் பிளேயர்..

அண்ணன் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என காத்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவருக்கு வேறு ஒரு இடத்திற்கு மாற்றலாகி மதுரைக்கு செல்கிறார்.

தம்பி விளையாட்டுத்துறையில் சாதித்து இந்திய அளவில் புகழ் பெற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரை சிலர் எதிர்கின்றனர். வில்லி கும்தாஜ் இதற்காக சில திட்டங்கள் போடுகிறார்.

இறுதியில் என்ன ஆனது? விளையாட்டில் சாதித்தாரா தம்பி? நேர்மையான போலீஸ் அதிகாரி அண்ணனுக்கு என்ன நடந்தது? இவர்கள் தடைகளை எப்படி உடைத்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

ஒரே உருவம் கொண்ட அண்ணன் தம்பியாக வின்ஸ்டார் விஜய் நடித்திருக்கிறார்..

ஒரே நபர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தால் பல படங்களில் அவரிடத்தில் இவர் இருப்பார் இவரிடத்தில் அவர் இருப்பார் என்றுதான் காட்சிகள் இருக்கும்.. ஆனால் இதில் கொஞ்சம் கூட அப்படி இல்லாமல் செய்திருப்பது சூப்பர்.

ஆக்ஷனில் அசத்தி இருக்கும் விஜய் நான்கு ஐந்து நாயகிகள் இருந்தும் ரொமான்ஸ் செய்யவில்லை. கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்து இருக்கலாமே விஜய்.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா, டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய்க்கு டேப்லினா, பிரியா என்று 2 ஜோடிகள்… கவர்ச்சியிலும் கலக்கி இருக்கின்றனர். மேலும் படத்தில் வரும் மற்ற பெண்களும் வாலிபால் ராஜாவைப் பார்த்து வசப்படுவதாகவே காட்சிகள் உள்ளன… (மச்சம்யா உனக்கு..??)

நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், செல்வகுமார், ஜோ மல்லூரி ஆகியோரும் படத்தில் உண்டு

இவர்களுடன் 7+ மேற்பட்ட பத்திரிக்கையாளர் நண்பர்களும் எப்போதும் ராஜா படத்துடன் இணைந்து இருக்கின்றனர்.அவர்கள் கதை ஓட்டத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்து இருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

என்னதான் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.

விரும்புகிறேன்.. விரும்புகிறேன் என்ற பாடல் காதலர்களின் கவனம் ஈர்க்கும்.

படத்தை 5 – 6 வருடங்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள் போல.. நாயகனின் முகத்திலும் உடம்பிலும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் எப்போதும் ராஜா படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் முருகன்.

ஒருமுறை வில்லி கும்தாஜ் நாயகனின் படுக்கைய பகிர்ந்து சல்லாபம் செய்ய வருவார்.. அப்போது நாயகன் தட்டி விடுவார் என்று எதிர்பார்த்தால் மண்ணைத் திங்கிற உடம்பை பொண்ணு தின்னா என்ன? என்ற வசனம் பேசி சிரிக்க வைக்கிறார் நாயகன்.

இதுபோல சில இடைச் சொற்கள் வசனங்களையும் சொருகி ரசிக்க வைக்கிறார்.. முக்கியமாக இடைவேளை காட்சியில் நாயகியின் இடையிலிருந்து வேலை வருகிறது..

பெரும்பாலும் கிரிக்கெட் ஃபுட் பால் படங்களை பார்த்திருப்போம்.. இதில் முற்றிலும் மாறுபட்டு வாலிபால் படத்தை கதைக்களமாக அமைத்திருக்கிறார் முருகன். அதற்கு ஏற்ப நாயகனும் விளையாட முயற்சித்துள்ளார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக அவர் மட்டுமே சுவற்றில் அடித்து வாலிபால் பந்து வைத்து பயிற்சி செய்வது கொஞ்சம் நெருடல் தான்.

ஒரு சாமானியன் நினைத்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் எனை காட்சிப்படுத்தி இருக்கிறார் இதை எப்போதும் ராஜா.

உழைத்தால் முன்னேறலாம்.. பயிற்சி செய்தால் உயரலாம்.. அப்படி இருந்தால் எப்போதுமே நீ ராஜா தான் என்று படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் முருகன்.

Epodhum raja movie review and rating in tamil

சைரன் விமர்சனம் 4.25/5.. எங்கும் ஒலிக்கும்

சைரன் விமர்சனம் 4.25/5.. எங்கும் ஒலிக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைரன் ஒலி என்றாலே இரண்டு விதம்.. ஒன்று போலீஸ் மற்றொன்று ஆம்புலன்ஸ் இந்த இரண்டும் ஒரு கட்டத்தில் மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை அழகாக திரைக்கதை அமைத்து ஒரு விருந்து படைத்திருக்கிறார் அறிமுகம் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.

ஸ்டோரி…

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அறிமுகமாகிறார் நாயகன் ஜெயம் ரவி.. 14 வருட சிறை வாழ்க்கையில் உன் மகளை பார்க்க உனக்கு விருப்பம் இல்லையா? என போலீஸ் அதிகாரியே ஒரு முறை கேட்க பின்னர் சிந்தித்து 15 நாள் பரோலில் தன் குடும்பத்தை காண வருகிறார் ஜெயம் ரவி.

இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு..

இந்தப் பதினைந்து நாட்களில் அடுத்தடுத்து கொலைகள் மர்மமான முறையில் நடைபெறவே அதனை விசாரிக்கும் கீர்த்தி சுரேஷின் பார்வை ஜெயம் ரவியின் பக்கம் திரும்புகிறது.. விசாரணை முறையாக இல்லை என கீர்த்தியை கண்டிக்கிறார். உயர் அதிகாரி சமுத்திரக்கனி.

கைதி ஜெயம் ரவி என்னுடன்தான் இருந்தார். எனவே அவர் கொலை செய்ய வாய்ப்பில்லை என்கிறார் போலீஸ் யோகி பாபு. எனவே ஆதாரமில்லாமல் விசாரணையை முடிக்க முடியாமல் திணறுகிறார் கீர்த்தி.

இதனிடையில் தன் தந்தை கைதி என்பதால் அவரை காண மறுத்து வெறுக்கிறார் மகள்.

இப்படியான சூழ்நிலையில் அடுத்து என்ன நடந்தது? உண்மையான கொலையாளி யார்? ஜெயம் ரவி & கீர்த்தி என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

சைரன்

கேரக்டர்ஸ்…

இதுவரை ஏற்காத சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வந்து மிரட்டலாக அதே சமயம் அனுப்பப்பட்ட நடிகராக தன் பாடி லாங்குவேஜ்ஜை மாற்றி இருக்கிறார் ஜெயம்ரவி.

சுறுசுறுப்பான ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பக்குவப்பட்ட பரோல் கைதியாகவும் என மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்சன் & எமோஷன் என இரண்டையும் உணர்ந்து நடித்திருக்கிறார்

நாயகி கீர்த்தி சுரேஷ்.. ஒரு பக்கம் அரசியல்வாதி ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி என இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறும் நந்தினி கேரக்டரை அழகாக செய்து இருக்கிறார்..

என்னதான் நீ நிரபராதி என்றாலும் உன் மகளுக்கு நீ கைதி தான் என்று கீர்த்தி சொல்லும் போதும் அதன் பின்னர் அவர் செய்யும் அடுத்த செயலும் ரசிக்க வைக்கிறது.

ஜெயம் ரவியின் தங்கையாக சாந்தினி அம்மாவாக துளசி இருவரும் மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கின்றனர.

போலீஸ் அதிகாரிகளாக யோகிபாபு மற்றும் அருவி மதன்.. ஒருவர் காமெடி என்றால் ஒருவர் கம்பீரம்..

ஒரு காட்சியில் சுடிதார் போல பைஜாமா அணிந்து கொண்டு.. “சார் இந்த ட்ரெஸ்ஸ கழட்டுட்டுமா? விபசார கேஸ்னு எல்லாருக்கும் கிண்டல் பண்றாங்க என யோகி பாபு சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.. இதுபோல படம் முழுக்க கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.

உயரதிகாரி சமுத்திரக்கனியின் கேரக்டர் சபாஷ் பெற வைக்கிறது.. கிளைமாக்ஸ் இல் அவரது ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

அழகம் பெருமாள், அஜய் மற்றும் ஜெயம் ரவியின் மகள் என ஒவ்வொரும் தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகின்றனர்.

ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன்.. மாற்றுத்திறனாளி கேரக்டரை கச்சிதமாக செய்து கைத்தட்டல் பெறுகிறார். கண் கலங்கவும் வைக்கிறார்.

மற்ற போலீஸ்காரர்கள் மற்ற கைதிகள் என ஒவ்வொருவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

சைரன்

டெக்னீசியன்ஸ்…

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் இருவரும் திறமை வாய்ந்தவர்கள்.. இவர்கள் இருவரும் ஒரே படத்தில் பணி புரிந்தால் எப்படி இருக்கும்?

பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ்…
பின்னணி இசை – சாம் சி எஸ்

இருவரும் இசையில் மிரட்டி இருக்கின்றனர் பாடல்கள் இதமாய் இருந்தது.. பின்னணி இசை மிரட்டல்.. ஆம்புலன்ஸ் ஃபைட் சீனில் பட்டய கிளப்பி விட்டார் ஷாம்..

செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை… ஒவ்வொரு காட்சியையும் தவறாது பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அழகாக படமாக்கி இருக்கிறார். ஆம்புலன்ஸ் பைட் சீன் மற்றும் கோயில் திருவிழா என இரண்டையும் அழகாக இரவு நேரத்தில் படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.. ட்ரோன் கேமரா ஷாட்டுகள் அற்புதம்..

காஞ்சிபுரத்தின் அழகு.. பழமை வாய்ந்த கட்டிடங்கள்.. பகுதிகள் என ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார் கலை இயக்குனர்.

அதிக சத்தம் கூட ஆபத்து தான்.. நம் காதுகளை செவிடாக்கிவிடும்.. அதற்கு ஏற்ப பின்னணி இசை கொடுத்து அதிக சத்தம் எழுப்பி கொல்லும் முறை வித்தியாசமான சிந்தனை.

ரூபனின் எடிட்டிங் நம்மை எங்கும் போர் அடிக்காமல் செய்கிறது.. முக்கியமாக செல்போனை தொடவிடாமல் எடிட்டிங் செய்திருப்பது சிறப்பு..

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் என்று சொன்னாலும் எங்கும் பிசிறு தட்டாமல் லாஜிக் குறைகள் இல்லாமல் அழகாக விருந்து படைத்திருக்கிறார்.

கோமாளி படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி யோகி பாபுவின் கூட்டணி கலைக்கட்டி இருக்கிறது.. யோகி பாபு வரும் சீன்கள் எல்லாம் வேற லெவல் சிரிப்பு ரகம்..

படத்தின் வசனங்களையும் அந்தோணி எழுதி இருப்பது சிறப்பு.. ஒரு கதையை உணர்ந்து அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்து வசனங்கள் கொடுத்திருக்கிறார்.

ஒருவன் ஜாதியில்லை என்று சொன்னால் அவன் எந்த ஜாதி? என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.. கிளைமாக்ஸ் டைட்டில் கார்டில்.. ‘சிறையில் இருக்கும் நிரபராதிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்’ என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் என்ற இருபபெரும் நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு கனவு பாடலோ என எதையும் வைக்காமல் இருவரையும் வேறு வேறு தளத்தில் வைத்து கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

இயக்குனருக்கு முழு சுதந்திரப் படைப்பை கொடுத்த தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரையும் நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

ஆக சைரன்.. நிச்சயம் எங்கும் ஒலிக்கும்

சைரன்

Siren movie review and rating in tamil

இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

நாயகன் அசோக்.. நாயகி ராகினி திரிவேதி ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர். இதில் நாயகி தன் தோழிகளுடன் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் நாயகனுக்கும் காதல் ஏற்படவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எப்போதுமே ஆன்லைன் விளையாட்டில் (வீடியோ கேம்) ஆர்வம் கொண்டவர் ராகினி எனவே அடிக்கடி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சில நபர்கள் மூலம் மிரட்டல் வருகிறது.

எனவே அந்த ஆன்லைன் நபபரை தேடி ஒரு இடத்திற்கு செல்லும் போது அவர் மற்றொரு நபரால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனால் கொலை பழி தன் மீது விழுமோ? என ஓடி ஒளிகிறார் நாயகி.

இந்த சூழ்நிலையில் அசோக்கை சிலர் கட்டி வைத்து துன்புறுத்துகின்றனர். இதனால் வேறு வழி இன்றி தானே களத்தில் இறங்கி கணவனை காப்பாற்ற போராடுகிறார் ராகினி.

அதன்பிறகு என்ன ஆனது? மிரட்டிய நபர் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

படத்தின் நாயகன் அசோக் என்றாலும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் இல் வந்து படத்திற்கு திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.. நாயகியுடன் ரொமான்ஸ் பரவாயில்லை. ஆனால் நாயகனை விட நாயகி ராகினி முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது.

மற்ற நாயகியுடன் அசோக் இருக்கும்போது அவரது இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி வெரி ஸ்மார்ட்.

ராகினி திவேதி ஆக்சன் காட்சிகளில் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.. படத்தில் முழுக்க முழுக்க இவரது பங்களிப்பு தெரிகிறது.. இவரது தோழிகள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இவர்களுடன் ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்..

மனோபாலாவின் காமெடி சிரிக்க வைக்கிறது. லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

டெக்னீசியன்ஸ்…

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்.. கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் சுமார்.. ஜுபினின் பின்னணி இசை பலம்.

இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் காட்டி இருக்கிறார்.

முக்கியமாக ஹார்ட் டிஸ்கை வைத்து கருப்பு பணத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

ஆனால் சொல்ல வந்த விதத்திலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார்.

ஆக ‘இ-மெயில்’ ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில்

E MAIL movie review and rating in tamil

More Articles
Follows