கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு சினிமாவுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டிங்கை சூட்டிங் முடித்தவுடன் சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் பட தயாரிப்பாளர்.

அங்கு வசிக்கும் சீனியர் துணை நடிகைதான் ஊர்வசி. அவரின் மகன்தான் இப்பட நாயகன் ராஜ்குமார்.

அவரும் அவரது நண்பர்களும் இணைந்து சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டே ஒரு நடன குழுவை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் மற்றொரு இடத்தில் நாயகியும் அவரது அக்காவும் பரதநாட்டிய நடனப் பள்ளி நடத்தி வருகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் செட் போட்ட தயாரிப்பாளர் தனக்கு பணம் தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்ய சொல்கிறார். இல்லை என்றால் ஒரு கோடியை அங்குள்ள குடும்பங்கள் சேர்ந்து கொடுத்தால் அந்த இடத்தை விட்டு தருகிறேன் என்கிறார்.

எனவே பணத்தை திரட்ட உலகளவில் நடக்கும் ஒரு நடனப் போட்டியில் கலந்துக் கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார்.

அதுப்போல் நாயகி ஸ்ரிஜிதா தன் வீட்டை அடமானத்தில் இருந்து காப்பாற்ற அந்த நடன போட்டியில் கலந்துக் கொள்கிறார்.

இந்த நடன குழுக்களுக்கு பலத்த போட்டியாக உள்ளவர்தான் நாகேந்திர பிரசாத். அவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள வருகிறார்.

இறுதியில் யார் ஜெயித்தார்கள்? இடத்தை நாயகன் நாயகி மீட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ராஜ்குமார் நடிப்பை விட சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரம். எனவே ஆக்சன் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

நாயகிகள் 3 பேர் உள்ளனர். ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாகேந்திர பிரசாத். நடனத்தில் கவர முயற்சித்துள்ளார். நடிப்பில் அதே பழைய பார்முலாதான்.

துணை நடிகை படும் பாட்டை வெகு இயல்பாக காட்டியுள்ளார் ஊர்வசி. ஆனால் இவருக்கு இருக்கும் அந்த ப்ளாஷ்பேக் தேவையில்லாத ஒன்று.

ஏதோ நாயகன் நாயகியிடம் சொல்வதற்காக வைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.

நாகேந்திர பிரசாத்தும் நாயகியின் அக்காவும் ஆடும் காட்சி நன்றாக உள்ளது. மேலும் ஒரு சில நடன காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.

மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல். பாலாஜியின் இசையில் பாடல்கள் ஓகே. டி.ஆர். பாடிய சங்கிஸ்தான் மங்கிஸ்தான் பாடல் தாளம் போடும் ரகம்.

கதைக்கு கொடுத்த வலுவை திரைக்கதையில் கொடுத்திருக்கலாம் இயக்குனர் வெங்கி.

கூத்தன்… டான்ஸ் பிடிக்கும்னா பாருங்க ஜீ

மனுசங்கடா விமர்சனம்

மனுசங்கடா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் வேலை பார்க்கிறார் நாயகன் ராஜீவ் ஆனந்த்.

ஒரு நாள் இரவு அவரது அப்பா இறந்துவிட்டதாக தகவல் வரவே ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பம் என்பதால், தந்தையின் சடலத்தை பொது வழியில் செல்ல அனுமதி மறுக்கின்றனர் வேற்று சாதியினர்.

இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வழியோ முட்கள் நிறைந்த பகுதியாகும்.

எனவே அந்த பொது வழியில் எடுத்து செல்ல முனைகிறார். உயர் அதிகாரிகளை சந்தித்த பிறகும் இதற்கு வழியும் விடையும் கிடைக்கவில்லை.

எனவே தன் நண்பர்களுடன் உதவியுடன் கோர்ட்டுக்கு செல்கிறார். அந்த 3 நாட்களாக தந்தையின் சடலம் அவரது வீட்டிலேயே (ஐஸ் பெட்டியில்) இருக்கிறது.

ஒரு வழியாக பொது வழியி சடலத்தை எடுத்துச் செல்ல கோர்ட் அனுமதியளிக்கிறது.

அப்படியிருந்தும் ஊர் அதிகாரிகள், போலீஸ் பட்டாளம், ஜாதி வெறியர்கள் சடலத்தை எடுக்க தடுக்கின்றனர்.
பின்னர் என்ன செய்தார் நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

யதார்த்த நாயகனாக நடித்துள்ளார் ராஜீவ் ஆனந்த்.

ஜாதி வெறியால் அவர் படும் இன்னல்கள் அனுதாப்த்தை உண்டாக்கிறது.

காட்சிகளில் வரும், ஊர் நல்லவர், ராஜீவ்வின் நண்பர்கள், அவரது காதலி, வக்கீல் என அனைவரும் கச்சிதம்.
இது ஒரு படம் என்பதை விட ஆவணப்படம் என்பதே சரி.

ஒரே கேமரா ஆங்கிள். நேரடி ஆடியோ ஒளிப்பதிவு என்பதே படத்தின் மைனஸ் ஆகவுள்ளது.

கதைக்களமும் நடிகர்களும் சரி. ஆனால் படம் முழுவதும் இதையே பேசுவதால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும்.

மற்றபடி இந்த ஆவணப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. அது கண்ணீரை வரவழைக்கும்.

மனுசங்கடா… ஜாதி வெறியர்களே நீங்கள் மனுசங்களா..?

Manusangada movie review

ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, காளி வெங்கட், ராதாரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா, மாஸ்டர் கவின், பேபி மோனிகா மற்றும் பலர்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
எடிட்டர் – காசி விஸ்வநாதன்
தயாரிப்பு – பக்ரூதின், தாமிரா, சேக் தாவூத்
பிஆர்ஓ. – ஜான்

கதைக்களம்..

சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். சென்னையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு மோனிகா மற்றும் கவின் என இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.

குழந்தைகளை நன்றாக வளர்க்கவும் படிக்க வைக்கவும் இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் ப்ளே ஸ்கூலில் விட்டு செல்கின்றனர்.

வேலை பளு காரணமாக வீட்டிற்கு சரியான நேரத்தில் குழந்தைகளை கூட்டி வரவும் முடியவில்லை.

இதனால் இருவருக்கும் பிரச்சினை எழ, வேறு வழியில்லாமல் சமுத்திரக்கனி தன் வேலையை விட்டு குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ரம்யா நன்றாக சம்பாதித்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார். இதனால் மிகப்பெரிய தொகைக்கு பேங்க் லோன் எடுக்கிறார்.

ஒரு சூழ்நிலையில் சமுத்திரக்கனிக்கும் இவருக்கும் பிரச்சினை எழ, என் காசில் வாழும்போது நீ இப்படி செய்ற, என் போல் சம்பாதிக்க முடியுமா? வெளியே போய் வாழ்ந்துப் பார் என சமுத்திரக்கனியிடம் சவால் விடுகிறார்.
எனவே சமுத்திரக்கனியும் தன் மகளை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

ரம்யா தன் மகனுடன் வாழ்கிறார். அவருக்கும் மகனை பார்த்துக் கொள்ள ஆள் தேவைப்படுகிறது.

மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காத காரணத்தால் ஒரு நாள் ரம்யாவுக்கு வேலை போகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது..? லோன் கட்டினாரா? சமுத்திரக்கனி என்ன செய்தார்? தன் ஈகோவை ரம்யா விட்டாரா? கணவரிடம் மன்னிப்பு கேட்டாரா? என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமான யதார்த்த கேரக்டரில் சமுத்திரக்கனி. எதற்கும் ஆசைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். பொறுப்பான தந்தையாக அன்பான கணவனாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக வாழ்ந்திருக்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக ரம்யா மற்றும் சுஜா வருணி.

மாடர்ன் மங்கையாக ரம்யா பாண்டியன். குடும்பத்தை விட குழந்தைகளை விட வேலையே (பணமே) வாழ்க்கையாக வாழ்கிறார். ஜோக்கர் படத்தில் அசத்தியர் இதிலும் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா நல்ல தேர்வு. அதிலும் மோனிகா ஆடும் அந்த கடவுள் விளையாட்டு சொற்கள் படத்திற்கு ப்ளஸ். கேள்வி மேல் கேள்வி கேட்டு தந்தைக்கு உதவுவதில் ரசிக்க வைக்கிறார்.

பறக்க ஆசைப்படும் சுஜா வருணியின் வாழ்க்கை இறுதியில் பரிதாபத்தில் முடிகிறது.

ராவுத்தராக ராதாரவி. பெரிதாக வேலை என்றாலும் கொடுத்த வேலையாக சரியாக செய்திருக்கிறார்.

தன் அப்பார்ட்மெண்டில் மனைவியை சந்தேகப்படும் கணவனாக இளவரசு. யதார்த்த பேச்சில் கவர்கிறார்.
அறந்தாங்கி நிஷா கொஞ்சமே வந்தாலும் சிரிப்பூட்டுகிறார்.

அப்பார்ட்மெண்ட ஆண்டிகளிடம் சமுத்திரக்கனி பேசும்போது எல்லாம் சில கணவன்மார்கள் எரிச்சல் அடையத்தான் போகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரான் இசைய்யில் பாடல்களும் பாடல் வரிகளும் படத்திற்கு கூடுதல் பலம். நிகரா தான் நிகரா பாடல் நெஞ்சை விட்டு நீங்காது நிற்கும். பேசுகிறேன் பேசுகிறேன்… மலரின் நறுமணம் பாடல்களும் ரசிக்கும் ரகமே.

காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

இயக்கம் பற்றிய அலசல்…

ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஐடி கம்பெனி பெண்கள் மற்றும் அவரது லைப் ஸ்டைல், டிரிங்ஸ் பார்ட்டி ஆகியவற்றை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழும் சில போலி மனிதர்களையும் ஜெராக்ஸ் எடுத்து காட்டியிருக்கிறார்.

பழக்கப்பட்ட அடிமையை (கணவன்களை) மனைவிகள் மன்னித்து விடுவார்கள் என்ற டயலாக் கைத்தட்டல்களை அள்ளும்.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. சீரியல் போல நாடகத்தன்மை இருக்கிறது. அதை குறைத்திருக்கலாம். ஒரே அட்வைஸ் மையமாக இருக்கிறது போன்ற உணர்வை தருகிறது.

ஆண் தேவதை.. அசத்தலான ஹவுஸ் ஹஸ்பெண்ட்

Aan devathai review rating

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

First on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர்.

தமிழக முதல்வர் நாசர் ஒரு ஊழல் புகாரில் சிக்குகிறார். இதனால் பதவி விலக நேரிடுகிறது.

எனவே கட்சிக்கார்ர்களையும் தன்னுடன் இருக்கும் மந்திரிகளையும் நம்பாமல் 2 வாரத்திற்கு மட்டும் டம்மி CM ஆக தன் மகன் விஜய் தேவரகொண்டாவை நியமிக்க சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளிக்க கவர்னர் முன் பதவி ஏற்கிறார்.

ஆனால் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

2 வார முடிவில், நாசருக்கு சிறை தண்டனை உறுதியாகுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் கலவரம் வெடிக்க, சட்டம் ஒழுங்கு கெடுகிறது.

அதன் பின்னர் தன் பொறுப்பை உணர்ந்து, மூத்த பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனை பேரில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார் விஜய்.

இதனால் முதல்வருக்கு நல்ல பெயர் மக்கள் மத்தியில் கிடைக்கிறது.

அதன் பின்னர் ஜாமீனில் வெளிவருகிறார் நாசர். அப்போது அவரை ஒரு கும்பல் கொல்ல திட்டமிடுகிறது.

அதில் இருந்து நாசர் தப்பித்தாலும் சுய நினைவை இழக்கிறார்.

அப்போது 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் வர, அதில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகிறார் விஜய் தேவரகொண்டா.

அப்போது நாசருக்கு சுய நினைவு வந்தாலும் அதை தன் கட்சியிடமே மறைத்து பதவி ஏற்கிறார்.

மேலும் சில ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதே நடவடிக்கைகள் எடுக்கிறார்.

இதனால் நாசருக்கும் விஜய்க்கும் மோதல் உருவாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இதை எல்லாம் மீறி விஜய் நல்லது செய்தாரா? ஆட்சி என்ன ஆனது? நாசர் என்ன செய்தார்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இளைய முதல்வராக விஜய் தேவரகொண்டா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் முதல்வர் ஆகிறார். ஆனால் அதில் ஏமாற்றமே.. ரசிகர்களுக்கும்தான்.

மெஹ்ரீன், சஞ்சனா என 2 ஹீரோயின்ஸ் இருந்தும் படத்தில் ரொமான்ஸும் இல்லை.

சஞ்சனாவை ஆரம்பத்தில் கனிமொழி ரேஞ்சில் காண்பித்து அவரையும் டம்மியாக்கி விட்டார்கள்.

யாசிகா ஆனந்த் ஒரு காட்சியிலும் கருணாகரன் ஓரிரு காட்சியிலும் வருகிறார்கள். அவ்வளவுதான்.

பக்கா அரசியல்வாதியாக நாசர் அருமை. தனக்கான கேரக்டரில் நிறைவை தருகிறார். ப்ளாஷ்பேக் தவிர.

சத்யராஜ் கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜஸ்ட் அட்வைஸ் மட்டும் செய்கிறார். அமைதிப்படை-யில் அல்வா கொடுத்தவருக்கு இப்படி ஒரு அவலநிலையா..?

எம்எஸ். பாஸ்கரின் கேரக்டர் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை நினைவு படுத்தும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முன்னேற முடியாது என்பது போல திமுக. வை நினைவுப்படுத்துகிறார்.

இதில் சத்யராஜுக்கு லவ் ப்ளாஷ்பேக் வேற. அதில் நாசருக்கும். ஆனால் எடுபடவில்லை.

தமிழக அரசியலையும், ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சுற்றியே கதை நகர்கிறது.

கூவத்தூர், சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஜெயா மருத்துவமனையில் அனுமதி, ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.

சாம் இசையில் பாடல்களும் ரசிக்கும்படியாக இல்லை. மினிஸ்டர் பாடல் ஓகே ரகம். பின்னணி இசையும் சுமார்தான்.

கட்சி ஆபிஸ், அமைச்சர்கள், தொண்டர்கள் என எப்படி எல்லாமோ கெத்து காட்டியிருக்க வேண்டிய படத்தை லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளார் ஞானவேல்ராஜா.

முதல்வர் வருகிறார் என்றால் நூற்றுக்கணக்கான பேனர்கள் இருக்க வேண்டாமா..? பெயருக்கு பேனர்களை காட்டுகிறார்கள்.

கலவர காட்சி, ஊழல், சாமியார், ஆற்றங்கரையில் சாமியார் ஆக்ரமிப்பு என கதையை எங்கெங்கோ கொண்டு செல்கிறார்.

முக்கியமாக நோட்டா என்றால் என்ன.? ஆட்சியாளர்கள் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு ஓட்டுப் போன பயன்படுத்தும் ஆயுதம்தானே.. ஆனால் அதை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை.

நோட்டா… சாரி சி.எம். டாட்டா…

ராட்சசன் திரை விமர்சனம்

ராட்சசன் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – பி. வி. சங்கர்
எடிட்டர் – சான் லோகேஷ்.
தயாரிப்பு – ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ்
மக்கள் தொடர்பாளர் – சுரேஷ் சந்திரா, ரேகா

கதைக்களம்…

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” பட இயக்குனரும் நாயகனும் மீண்டும் இணைந்துள்ள படம். அதற்கு பிறகு நாயகன் பல படங்களில் நடித்துவிட்டாலும் டைரக்டருக்கு இதுதான் 2வது படம்.

ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்ற சினிமா கனவுகளுடன் அலைகிறார் விஷ்ணு. அதிலும் ஒரு சைக்கோ திரில்லர் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என பல வருடங்களாக முயற்சிக்கிறார்.

இப்படியே வேலை தேடிக் கொண்டிருந்தால் என்ன ஆவது.? பேசாமல் என்னைப் போல் நீயும் போலீஸ் ஆகிவிடு என்கிறார் விஷ்ணுவின் அக்கா கணவர் முனீஷ்காந்த்.

அதன்படி எஸ்.ஐ. ஆன சில நாட்களிலேயே விஷ்ணுவுக்கு ஒரு கேஸ் மாட்டுகிறது.

அதாவது 16 வயது பள்ளி சிறுமிகள் அடுத்தடுத்து கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். கொல்வது மட்டுமில்லாமல் அவர்களின் உடல்களை பொதுவெளியிலேயே கட்டி வைத்து செல்கிறார் அந்த மர்ம நபர்.

இது தனக்கான கேஸ் என்பதால் அதிக ஆர்வம் கொண்டு கொலைக்காரனை தேடுகிறார் விஷ்ணு. ஆனால் இவரின் உயரதிகாரியான சூசன் இவரின் எல்லா செயலுக்கும் தடை போடுகிறார்.

ஒரு கட்டத்தில் தன் அக்கா மகளே கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இனியும் தாமதித்தால் சரி வராது என்பதால் விஷ்ணுவே அதி தீவிரமாக களம் இறங்குகிறார்.

ஆனால் இவரை காவல் துறை 3 மாதம் சஸ்பெண்ட் செய்கிறது. அதன்பின்னரும் ஒரு பள்ளி சிறுமி கடத்தப்படுகிறார்.

சஸ்பெண்ட் ஆன விஷ்ணு என்ன செய்தார்? அந்த சிறுமி கொலையை தடுத்தாரா? பணியில் சேர்ந்தாரா? அல்லது டைரக்டர் ஆனாரா? கொலைக்காரன் யார்? அவனது நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

இதுநாள் வரை விஷ்ணு சில படங்களில் நடித்திருந்தாலும் ஜாலியாக வந்து செல்வார். ஆனால் இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப ராட்சசன் அவதாரம் எடுத்துள்ளார்.

எந்த செயலை செய்தாலும், ஒரு நிதானத்துடன் செய்வது அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

இந்த விறுவிறுப்பான படத்தில் ரொமான்ஸ் குறைவு என்பதால் அமலா பாலுக்கு அவ்வளவு வேலையில்லை. ஆனாலும் சேலையில் அழகான டீச்சராக வந்து செல்கிறார்.

காமெடியனாக கலக்கிய முனீஷ்காந்த் இதில் குணச்சித்திர ஆர்ட்டிஸ்டாக புரமோசன் பெற்றுள்ளார். தன் இறந்த மகள் உடல் பார்த்த பின்னர் இவர் கதறி அழுவதும், தன் மனைவிக்கு தெரியாமல் அதே இடத்தில் சமாளிப்பதும் செம.

சைக்கோ கில்லரை நெருங்கிய நேரத்தில் காளி வெங்கட் காட்டும் ரியாக்சன் நச்.

ராதாரவி மற்றும் நிழல்கள் ரவி சில காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மிரட்டல் உயர் போலீஸ் அதிகாரியாக மைனா புகழ் சூசன் நடித்துள்ளார். தன் கீழ் உள்ள அதிகாரிகளை சூசன் மிரட்டும்போது நமக்கே எரிச்சல் வரும்.

பள்ளி மாணவிகளை தன் காம இச்சைக்கு பயன்படுத்தும் அந்த ஆசிரியரை கண்டால் அந்த இடத்தில் நமக்கே சுட்டுத் தள்ள தோன்றும். அதை போலீஸ் விஷ்ணு செய்யும் போது தியேட்டரில் விசில் சவுண்ட் பறக்கிறது.

பேபி மோனிகா, கடத்தப்படும் மற்ற சிறுமிகள் அந்த பள்ளி மாணவிகள் அனைவரும் கச்சிதம்.

அந்த சைக்கோ கில்லரும் அவரின் முகமும் கொடூரத்தின் உச்சம். ஒவ்வொருவராக அவன் கொலை செய்வதும் போலீசிடம் இருந்து தப்பிப்பதும் செம ட்விஸ்ட். க்ளைமாக்ஸ் பைட்டும் அவன் செய்யும் மேஜிக்கும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

ஒரு காட்சியில் கருணாகரன் வருவார்? ஏன் என்பதுதான் தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் நானும் ஒரு ஹீரோதான் என இசையமைப்பாளர் ஜிப்ரான் உறுதியாக சொல்லிக் கொள்ளலாம்.

பியானோ மியூசிக் முதல் இவர் போட்டுள்ள ஒவ்வொரு ட்யூனும் அந்த திக் திக் மியூசிக்கும் நம்மை பயமுறுத்தும். பாடல்களை விட பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார்.

பி.வி. சங்கரின் ஒளிப்பதிவில் பள்ளி காட்சிகளும் சேஸிங் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் ரகம். முதல் பாதி வரை சைக்கோ யார்? என்பதே தெரியாமல் கதை நகர்கிறது.

எனவே 2ஆம் பாதியில் தான் அனைத்தும் சொல்லப்படுகிறது. கொஞ்சம் நீளமாக இருந்தாலும் அதிகபட்ச ட்விஸ்ட்கள் இருப்பதால் அதையும் ரசிக்க முடிகிறது.

ஆனால் இன்று படம் வெளியாகும் நாளில் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களுக்கு எந்த காட்சியும் போரடிக்க வாய்ப்பில்லை. சபாஷ் எடிட்டர் சான் லோகேஷ்.

முண்டாசுப்பட்டி டைரக்டரா இவர். முதல் படத்தில் கிட்டதட்ட சைவ உணவை கொடுத்த ராம்குமார் 2ஆம் படத்தில் அன் லிமிடட் அசைவ உணவை சுவையாக கொடுத்துள்ளார்.

கொலையாளி இவரா? அவரா? என ரசிகர்களை சீட் நுனியிலே உட்கார வைத்துவிட்டார். ரசிகர்களும் அசையாமல் இந்த ராட்சசனை ரசிக்கலாம்.

ராட்சசன்… ரசனை அரசன்

Ratchasan aka Ratsasan review rating

இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்.
இசை –கோவிந்த் வஸந்த்
ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு & சண்முக சுந்தரம்,
எடிட்டர் – கோவிந்தராஜ்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
மக்கள் தொடர்பாளர் – மௌனம் ரவி
வெளியீடு – 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் லலித்குமார்


கதைக்களம்…

விஜய்சேதுபதி கேரக்டர் பெயர் ராமசந்திரன் என்ற ராம். த்ரிஷாவின் கேரக்டர் ஜானகி தேவி என்ற ஜானு.

இவர்கள் இருவரும் கேரக்டர்களே வாழ்ந்து விட்டார்கள் என்பதால் கேரக்டர் பெயரிலேயே விமர்சனத்தை தொடங்குவோம்.

டிராவல் போட்டோகிராபர் ராம். ஊர் ஊராக சென்று தனக்கு பிடித்த காட்சிகளை படம் பிடிக்கிறார். இவருடன் சில மாணவிகளும் வருகிறார்கள்.

ஒரு நாள் தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று படம் பிடிக்கிறார்.

அப்போது, தான் 96ஆம் ஆண்டில் படித்த பள்ளிக்கும் செல்கிறார். (அதாவது கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளி அது). அங்கு அதே வாட்ச் மேன் ஜனகராஜையும் சந்திக்கிறார்.

ராமுக்கு பழைய நினைவுகள் வரவே, நண்பர்களுடன் அலைபேசியில் பேசுகிறார். எனவே ஒரு நாள் எல்லாரும் சந்திக்க நினைக்கின்றனர்.

அதன்படி சென்னையில் ஒருநாள் சந்திக்க ஏற்பாடு நடக்கிறது. எல்லாரும் அங்கே வருகிறார்கள்.

ராமுக்கு நெருக்கமான ஜானுவும் சிங்கப்பூரில் இருந்து வருகிறார். அந்த ஒரு நாளில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் காவியமே இந்த 96. அந்த காதலை இப்போது எப்படி கொண்டாடினார்கள்? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

போலீஸ், டாக்டர், தாதா, பொறுப்பற்ற மனிதர், குடிகாரர் என பல படங்களில் விஜய்சேதுபதியை பல கோணங்களில் பார்த்திருப்போம். இதில் 40 வயதில் ஒரு லவ்வர் பாயாக பார்க்க முடிகிறது.

20 வயதில் மட்டும்தான் காதல் இருக்குமா என்ன? 40 வயதில் காதல் எப்படி இருக்கும் என பாடமே நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி.

டேய் நீ ஆம்பள நாட்டுக்கட்ட என்றும் டேய் இன்னும் நீ கன்னி பையனா? என த்ரிஷா இவரிடம் கேட்கும்போது விஜய்சேதுபதி வெட்கப்படும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தளபதி படத்தில் இடம்பெற்ற யமுனை காற்றினிலே பாட்டை பாட சொல்லி த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி கேட்கும் ஒவ்வொரு காட்சியும் இறுதியாக த்ரிஷா பாடும் அந்த காட்சியும் கொள்ளை அழகு.

காதலி ஜானுக்காக ஏங்குவது, அவள் உபயோகித்த ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பாக எடுத்து வைத்திருப்பது என மனிதர் வேற லெவல்.

விஜய்சேதுபதியின் இதயதுடிப்பு சத்தம் லப் டப் லப் டப் என அடிக்கும்போது நம் ஹார்ட் பீட்டூம் நிச்சயம் எகிறும்.

22 வருடத்திற்கு தன் ஜானுவை சந்திக்கும்போது விஜய்சேதுபதி கொடுக்கும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனையும் ப்ரேம் போட்டு வச்சிக்க தோனும். சபாஷ் சார்.

த்ரிஷாவை காட்டி விஜய்சேதியிடம் அவர் மாணவி வர்ஷா.. சார் அது உங்க ஒய்ப்..? என்று கேட்கும்போது விஜய்பேதுபதி காட்டும் முகபாவனை மெர்சல் பீலீங்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக கலக்கியிருப்பார் த்ரிஷா. இனி ஜானு கேரக்டரே நிலைத்து நிற்கும் என்ற லெவலில் அசத்தியிருக்கிறார்.

+2 பையன் ஹேர் ஸ்டைலில் தன்னுடைய பழைய ராமை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாகட்டும், 22 வருடத்திற்கு பிறகு ராமை தேடும் கண்களாகட்டும் த்ரிஷாவை மிஞ்ச ஆளில்லை.

ஒட்டுமொத்த காதலையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு த்ரிஷா வாரி வாரி வழங்கிய நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ராம் ரொம்ப நல்லவரு. எனக்கு தெரியும். ஆனா எப்படி பாத்துக்கிறது? என த்ரிஷா கலங்கும் காட்சியில் நிச்சயம் காதலர்கள் கலங்கித்தான் போவார்கள்.

காதலை சொல்ல ராம் கல்லூரிக்கு வந்த கதையை தெரிந்த நாளாகட்டும், தன் திருமணத்திற்கு வந்த செய்தியை தெரிந்த நிமிடங்களாகட்டும் என்னா ஒரு நடிப்பு த்ரிஷா. ஹேட்ஸ் ஆஃப்.

விஜய்சேதுபதியின் மனைவியாக நினைத்து த்ரிஷா காதலை சொல்லும் அந்த நிமிடங்கள் போதும் அவரின் நடிப்புக்கு.

இளவயது விஜய்சேதுதியாக ஆதித்யன் என்பவர் நடித்திருக்கிறார். இவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன். இளவயது த்ரிஷாவாக கௌரி என்பவர் நடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா காதலைப் போல இவர்களின் காதலும் காவியம். நட்பா? காதலா என்ற தெரியாத இளவயதில் இவர்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு முகபாவனைகளும் நடிப்பில் உச்சம்.

ஜானு பள்ளிக்கு வராத நாட்களில் ராம் படும் பாடு நமக்கே படு அவஸ்தையாக இருக்கும். டேய் காதலை சொல்லுடா என நம்மையும் படாத பாடு படுத்தி லப் டப்பை எகிற செய்துவிடுகிறார்.

அதுபோல் இளவயது தேவதர்ஷினியாக நடித்திருக்கும் அந்த பெண்ணும் அருமையான தேர்வு. அசல் தேவதர்ஷினி போன்றே இருக்கிறார்.

ராமின் நண்பர்களாக வரும் அவர்களும் கச்சிதம். வாட்ச் மேன் ஜனகராஜ் சில காட்சிகளிலே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோவிந்த் வஸந்தாவின் இசையில் பாடல்கள் இதயத்தை வருடி செல்கிறது.

ஏற்கெனவே ”காதலே காதலே.. தனிப்பெருந் துணையே . “ பாடல் பலரின் ரிங் டோனாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில் தினம் ஒலிக்கிறது. (ஹி…ஹி.. என்னுடைய ஸ்டேட்டசும் அதான்)

வசந்த காலங்கள் கசந்து போனதே என்ற பாடல் வரிகள் பலரின் மனதை நிச்சயம் தொந்தரவு செய்யும்.

பாடல்களை தனியாக இல்லாமல் கதையோடு பயணம் செய்ய செய்தமைக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காதல் ஓட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.

நாம் பல படங்களில் பார்த்த சென்னையை இதில் பார்க்காத சென்னையாக கொடுத்திருக்கிறார்கள்.

கேமராவை வைத்துக் கொண்டு விஜய்சேதுபதி சுற்றும் அந்த ஆரம்ப பாடல் காட்சிகள் அனைத்தும் அருமை. இனி எத்தனை பேர் இப்படி எல்லாம் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட போகிறார்களோ? தெரியவில்லை.

தேவையான கலை மற்றும் தேவையான காட்சிகள் என கலை இயக்குனரும் எடிட்டரும் பாராட்டை பெறுகிறார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமாருக்கு இயக்கத்தில் இதுதான் முதல் படம்.

நிச்சயம் அவரும் காதல் வயப்பட்டு இருப்பாரோ? என நினைக்கத் தோன்றுகிறது. ரசிகர்கள் ரசிக்க ரசிக்க அவர் ரசித்துக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு பல மாணவர்கள் தாங்களும் ரீயுனியன் பார்ட்டி வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பள்ளி நாட்களில் ஜானு பாடும் ஒவ்வொரு பாட்டையும் தேர்ந்தெடுத்த டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரேம் குமார் பெயரை ஃபிரேம் போட்டு வைக்க இந்த படம் ஒன்று போதும். வாழ்த்துக்கள் ப்ரோ. இன்னும் தொடர வேண்டுகிறோம்.

விஜய்சேதுபதி, த்ரிஷா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க 96 படத்தை பரிந்துரை செய்யலாம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காதல் ஜோடிகளில் விஜய்சேதுபதி த்ரிஷா பெயர் நிச்சயம் இந்த 96 படம் மூலம் இடம்பெறும்.

எத்தனையோ படங்களுக்கு பார்ட் 1 பார்ட் 2 வருகிறது. இந்த 96 படத்துக்கும் அடுத்த பார்ட் எடுக்க வேண்டும் என பிரேம் குமாருக்கு ரசிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

96… இதயத் துடிப்பை எகிற செய்யும் காவியம்

More Articles
Follows