ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடியில் ஒருவன் ஆத்மிகா, கோடியில் ஒருவன் பாடல்கள், விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், மெட்ரோ இயக்குனர் கோடியில் ஒருவன்

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மீகா ஜோடியாக நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.

கதைக்களம்.

தன் ஏழை தாய் ஆசைப்பட்டப்படி ஒரு ஐஏஎஸ் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்ய நினைக்கிறார் விஜய் ஆண்டனி.

என ஐஏஎஸ் பயிற்சிக்காக சென்னையில் ஒரு சேரி பகுதியில் தங்கி படிக்கிறார். அங்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறார்களை நல்வழிப்படுத்த டியூசன் எடுக்கிறார்.

இதனால் அங்குள்ள போதை விற்பனையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். அவர்களை சமாளிக்க தனக்கு பதவி வேண்டும் என நினைத்து அரசியலில் நுழைகிறார்.

அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா? ஐஏஎஸ் லட்சியம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொறுமை கோபம் ஆக்சன் அம்மா சென்டிமெண்ட் இவை விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. எனவே இதில் அனைத்திலும் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக சென்று மாணவனை படிக்க சொல்லி கேட்பது நம்மை கலங்க வைக்கும். கவுன்சிலர் ஆகி இவர் எடுக்கும் நடவடிக்கை ரசிக்க செய்கிறது.

விஜய் ஆண்டனிக்கு சுட்டு போட்டாலும் ரொமான்ஸ் வராது. எனவே நாயகியுடன் லவ் என்பதை மறந்துவிட வேண்டியதுதான்.

ஆத்மிகா அழகாக வருகிறார். ஒரு சில காட்சிகள் வந்து டூயட் பாடுகிறார். நாயகன் லட்சிய பயணத்தில் கொஞ்சம் இவருக்கும் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

இவர்களுடன் சுல்லு, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர் ஆகியோர் தங்கள் கேரக்டரில்களில் நிறைவு. வில்லன்கள் அனைவரும் மிரட்டல்.

டெக்னீஷியன்கள்…

N.S.உதய குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. அதுவும் சென்னை நகர சேரி மக்களின் வீடுகளும் அந்த சாக்கடை பகுதிகளை எப்படித்தான் படம் பிடித்தாரோ?

குப்பைகளை விஜய் ஆண்டனி பொறுக்கி எடுக்கும் காட்சி நம்மை முகம் சுளிக்க வைக்கும். அதில் நடித்தவர்கள் பாராட்ட வேண்டும்.

நிவாஸ் K பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே ரகம். தாய் சென்டிமெண்ட் பாடல் பாட வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல். ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்திவ் தெறிக்க விட்டுள்ளார்.

மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதில் செயின் திருடர்களை ஸ்கெட்ச் போட்டு காட்டியிருப்பார்.

இதில் வார்டு மெம்பர் முதல் கவுன்சிலர் வரை… அவர்களின் ஊழல் தோலை உரித்திக் காட்டியிருக்கிறார். ஒரு சட்டசபையை போல மாநகராட்சி அரங்கம் இருப்பதும் அதில் இத்தனை உறுப்பினர்களா? என உள்ளாட்சி பற்றி பாடமும நடத்தியிருக்கிறார்.

ஒரு மாநகராட்சி தேர்தலை இன்ச் பை இன்ச் ஆக காட்டிய இயக்குனர் பொதுத் தேர்தலை டிவியில் மட்டும் காட்டிவிட்டார். நாயகனுக்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்தது? வீட்டை விட்டே வெளியே வராத விதவை தாய் தன் மகனை எப்படி படிக்க வைத்தார்? என்பதற்கான விடைகள் இல்லை.

இந்த லாஜிக்கை எல்லாம் மறந்து தாய் சென்டிமெண்ட் பாட்டு ஆக்சன் சமூக அக்கறை என அனைத்தைதையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ஆக இந்த “கோடியில் ஒருவன்” ஏழைகளின் தலைவன்.

டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்..; டிக்கிலோனா விமர்சனம் 3.25/5

டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்..; டிக்கிலோனா விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னோட்டம்..

‘இன்று நேற்று நாளை’ & ‘ஓ மை கடவுளே’ போன்ற 2 படங்களை மிக்ஸ் செய்து அதை காமெடி ஜாலி லோனாவாக கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

2020 முதல் 2027 வரை உள்ள காலக் கட்டத்தில் நகரும் டைம் ட்ராவல் படம் இது.

கதைக்களம்…

2020ல் தான் காதலித்த பெண் அனகாவை திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். ஹாக்கி வீரராக ஆக வேண்டும் என்பதே இவரது லட்சியம்.

7 ஆண்டுகள் உருண்டோடுகிறது… ஆனால் ஹாக்கி ஆசை நிறைவேறாத காரணத்தால் வேறு வழியில்லாமல் அரசு மின்சார துறையில் EB மேனாக வேலை பார்க்கிறது.

இவரின் திருமண வாழ்க்கை கசக்கிற வேலையில் நண்பர் யோகி பாபுவை சந்திக்கிறார். அவரின் உதவியாலும் டைம் டிராவல் மெசின் உதவியாலும் 2020 ஆண்டுக்கு சென்று தன் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்.

அதன்படி 2020க்கு செல்ல அங்கு ஏற்கெனவே உள்ள சந்தானம் திருமணம் நடக்க வேண்டும் என்கிறார்.

இதனால் இருவருக்கும் மோதல் முற்றுகிறது.

இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? இருவருக்குள் மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்தானத்தின் வழக்கமான டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

சில பல இடங்களில் டயலாக் பஞ்சம் ஏற்படுகிறது. பப்புவை பார்த்தால் … இது பப்புவா தண்ணீர் ஊற்றி வைக்கிற டப்புவா? என்கிறார். எய்ன்ஸ்டீனா? தார் ஊத்துன என்ஜீனா? என கேட்கிறார்.

இது போல மொக்க ஜோக்குகளை விஜய் டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.

சந்தானத்தின் உடல் எடை ஒரேடியாக குறைந்துவிட்டது போலும். எனர்ஜி இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. இதுல 3 சந்தானம் வேற… ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் உள்ள லுக் கூட இதில் இல்லை.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஷெரீன் காஞ்வாலா இருவரும் ரொம்ப அழகு. இவர்களின் நடிப்பில் குறையில்லை.

ஆல்பர்ட் எய்ன்ஷ்டீனாக வருகிறார் யோகிபாபு. சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பாக்கி விடுகிறார்.

அடி முட்டாளாக வரும் ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களின் காமெடி திரைக்கதைக்கு பெரிதாக உதவியிருக்கலாம்.

கெஸ்ட் ரோலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இவர் விளையாட்டு வீரர்களை என்க்ரேஜ் செய்யும் பணியை செய்திருக்கிறார்.

டெக்னீஷியன்ஸ்…

‘டைம் டிராவல்’ படங்கள் இப்போது அடிக்கடி வருவதால் நம்மால் இந்த கதையை யூகிக்க முடிகிறது.

ஆனால் இதை கலகலப்பாக கொடுத்து இருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்க வேண்டாம். எனவே இயக்குனர் கார்த்திக் யோகியை பாராட்டலாம்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகம். குறிப்பாக கமல் பட ரீமேக் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.

மொத்தத்தில் ‘டிக்கிலோனா’ .. டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்

Dikkiloona movie review and rating in Tamil

நையாண்டி (அரசியல்) தர்பார்..; துக்ளக் தர்பார் விமர்சனம்

நையாண்டி (அரசியல்) தர்பார்..; துக்ளக் தர்பார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தாய் தந்தையை இழந்தவர்கள் விஜய் சேதுபதி & அவரது தங்கை மஞ்சிமா மோகன்.

அரசியலில் குதித்து பெரிய ஆளாக வர வேண்டும் என துடிக்கிறார் விஜய்சேதுபதி. எனவே பார்த்திபன் கட்சியில் நுழைந்து அவரது ஆதரவைப் பெற்று அவரின் விசுவாசி ஆகிறார்.

இதற்கிடையில் ஒருநாள் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டதால் அவர் இரண்டு ஆள்கள் போல இரண்டு விதமாக நடந்து கொள்கிறார். ஒருவன் நல்லவனாக ஒருவன் கெட்டவனாக.

இதனால் அரசியலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

ஆனால் இரண்டுக்கும் வித்தியாசமில்லை. அந்நியன் பாணியில் காட்டியிருக்கலாம்.

பக்ஸ் பகவதி பெருமாள் & கருணாகரனின் நடிப்பு படத்திற்கு பலம்.

ராஷி கண்ணா & மஞ்சிமா என இரண்டு நாயகிகள் உள்ளனர். மஞ்சிமாவுக்கு டயலாக் கூட இல்லை. அய்யோ பாவம்..

தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் அசத்தி இருக்கிறார் பார்த்திபன். பலே சார்.

கிளைமாக்ஸ் வருகிறார் லொள்ளு மன்னன் சத்யராஜ். ஒரே காட்சியில் ரசிகர்களின் கைத்தட்டலை தட்டிச் செல்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பாடல் காட்சிகளும் கவரவில்லை.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் ஒரு அரசியல் நையாண்டி தர்பார் நடத்தி இருக்கிறார். அதில் விஜய்சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான நோயை காட்டியிருக்கிறார்.

ஆனால் அதில் பெரிதாக வலுவில்லை. மஞ்சிமாவை ஏன் சிஸ்டராக வைத்தார் என தெரியல.

மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’… நையாண்டி தர்பார்

Tughlaq Durbar movie review and rating in Tamil

விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

பெருவயல் என்றொரு கிராமம். அந்த கிராமத்திற்கு வருகிறார் பக்கிரி என்ற விஜய்சேதுபதி. அவரின் நண்பர்களும் ஊர் மக்களும் கொண்டாடுகின்றனர்.

அந்த கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, விவசாயிகளை விவசாய சங்கத் தலைவர் என்ற பெயரில் அடிமையாக்கி வைத்திருக்கிறார் வில்லன் ஜெகபதி பாபு.

எனவே அவரை எதிர்க்கவும் விவசாயத்தின் பலன்களை மக்களுக்கு சொல்லவும் முற்படுகிறார் விஜய் சேதுபதி. அதன்படி ஜெகபதி பாவுவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆகிறார்.

இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களை இணைத்து எல்லோருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்துகிறார்.

மேலும் தன் விளைச்சலுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறார் விஜய் சேதுபதி. இதனால் பல பிரச்சினைகளை உருவாக்குகிறார் வில்லன். கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? மக்கள் என்ன செய்தார்கள்? விவசாயம் வளம் பெற்றதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

மக்களின் செல்வன் இந்த படத்தில் விவசாயிகளின் நண்பனாக வாழ்ந்திருக்கிறார். படத்தின் விவசாயம் பற்றிய பாடங்கள் அதிகமாகவே இருந்தாலும் விவசாயத்தில் இவ்வளவு இருக்கிறதா? என வியக்க வைக்கிறது.

ஒரு விவசாய சங்கத்திற்கு அரசிடம் இருந்து எவ்வளவு பணம் வருகிறது. அதில் எவ்வளவு கையாடல் நடக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

விஜய்சேதுபதி உடலை குறைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

இவருடன் கலையரசன், ராம்திலக் என பல நண்பர்கள் உள்ளனர். நாம் மறந்து போன தந்தி முறையை சொல்லியிருப்பது சிறப்பு.

ஸ்ருதிஹாசன் மற்றும் தன்ஷிகா என 2 நாயகிகள் இருந்தாலும் இவருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. தன்ஷிகா நிலைமை மோசம்.

விலை நிலங்கள், விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கொஞ்சம் கமர்சியல் மசாலா சேர்த்து இருக்கலாம். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது.

விஜய்சேதுபதி ஊரை விட்டு செல்வதும் பின்னர் வருவதும் சரியான காரணம் சொல்லப்படவில்லை.

இமான் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எடிட்டர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருந்தால் ரசிகர்களுக்கு லாபம் தான்.

ஆக மறைந்த இயக்குனர் ஜனநாதன் இதில் விவசாய நண்பனாக தன்னை காட்டியிருக்கிறார்.

SP Jhananathan’s laabam movie review and rating

ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

ஆணாதிக்கத்தை அழித்த அரசியல் அம்மா.. தலைவி விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைவி படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த படமானது 1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த இன்ப துன்ப சம்பவங்களை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

அதாவது நடிகையான தன் பயணத்தை தொடங்கியது முதல் தமிழக முதல்வராக அரியணையில் அமரும் வரை படமாக்கியிருக்கிறார்.

கேரக்டர்கள்…

ஜெயலலிதா என்பது ஒரு இரும்பு பெண்மணியின் கனமாக பாத்திரம் அதை ஏற்று நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு டிரெஸ் எடுத்த தைத்தது போல செம பிட்டாகி இருக்கிறார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.

திமிர்த்தனம், வெகுளி, பாசம், காதல், அழுகை, ஏக்கம், கம்பீரம், ஆணவம் என அசால்ட்டாக செய்துள்ளார் கங்கனா.

எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கிறார் அரவிந்த் சாமி. சில நேரங்களில் இவர் எம்ஜிஆரா? என கேட்க வைத்தாலும் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொருந்திப் போகிறார்.

ஆனால் ஒரு காட்சியில் சுத்தமாக ஒட்டவில்லை. எம்ஜிஆரை எம்ஆர். ராதா சுட்ட பிறகு எம்ஜிஆர் குரலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இங்கே அரவிந்த்சாமி குரலில் எந்த மாற்றமுல் இல்லை. அது முக்கியமான நிகழ்வு ஆச்சே.. அதை இயக்குனர் ஏனோ கவனிக்கவில்லை.

கருணாநிதி கேரக்டரில் நாசர். அசல் கருணாநிதியின் குரல் போலவே உள்ளது. நாசருக்கும் கங்கனாவும் சந்திக்கும் காட்சிகளில் தான் படமே தொடங்குகிறது. அதில் கங்கனா விடும் சவால்கள் பெண்களை உயர்த்தும்.

இதில் முக்கியமாக பாரட்டப்பட வேண்டியவர் ஆர்.என்.வீரப்பன் (அதாவது ஆர்.எம். வீரப்பன்). அந்த கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பேசும் பேச்சிலும் பார்க்கும் பார்வையிலும் 1000 அர்த்தங்கள் கொடுத்திருக்கிறார்.

நான் எம்ஜிஆரின் கேடயம் என சொல்லும்போதே செம கெத்தாக இருக்கிறார். அந்த கேடயம் வார்த்தை ஜெயா ஒருமுறை பயன்படுத்துவது செம சீன்.

எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி சசியாக பூர்ணா. ஜெயாவின் அம்மாவாக பாக்யஸ்ரீ, பெரிதாக வேலையில்லை. ஆனால் காட்சிகள் கச்சிதம். ஜானகியாக மதுபாலா. மாதவனாக தம்பி ராமையா. இவரின் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

விஜேந்திர பிரசாத்தின் வசனங்கள் சூப்பர். மனதை விட்டு அகலவில்லை.

ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டனும். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. படத்தின் கலை இயக்குனர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரிக்கு அதிக வேலை

ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதான கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்துவிடுகிறார்.

அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால் அதில் இயக்குனர் நிறைய ரகசியத்தை மறைத்துவிட்டதாக சீனியர்கள் சொல்லி கேட்டோம். அதை சரி செய்திருக்கலாம். (நாளைய தலைமுறை இதையே உண்மை என நம்பிவிடும்)

அதுபோல் ஜெயலலிதாவின் சினிமா காட்சிகளை குறைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் அரசியல் பயணத்தை காட்டியிருக்கலாம்.

அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஒரு பெண் எப்படி தைரியமாக நடந்துக் கொண்டாள் என்பதை ஆணித்தரமாக சொன்ன விஜய்க்கு நன்றிகள். சிங்கப்பெண் ஜெயாவின் வாழ்க்கை ஒரு சரித்திரம்தான்.

Jayalalithas biopic Thalaivi movie review rating

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம்.

ஒரு புதிய சூப்பர் ஹீரோவை மீண்டும் தன் தங்கள் பி்ரம்மாண்ட திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல்.

சக்தி வாய்ந்த 10 (ரிங்ஸ்) வளையங்களை வைத்துக் கொண்டு சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சாதனை படைத்த தந்தையை எதிர்க்கிறான் அவரது மகன்.

யார் வெற்றி அடைந்தார்.? என்பதே ஒன்லைன்.

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் என்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக இந்தக் கதை தொடங்குகிறது.

டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் ஆட்சி செய்ய நினைக்கிறான்.

அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய மர்ம கிராமத்தைக் கைப்பற்றி அதை ஆள நினைக்கிறார்.

ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண் மீது காதல் கொண்டு தன் லட்சியத்தை மறந்து அவளை திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களுக்கு ஷாங்க் சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் பிறக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் (டோனி லியுங்) அந்த 10 ரிங்ஸ் கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்கும் போது அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் ச்சி, மகள் மெங்கர் சாங் திடீரென திரும்புகின்றனர்.

இதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் அமிரனியான சாகசங்களே ‘ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஷாங்க் சி யாக வரும் சிமு லியு ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ளார்.

இவரின் தோழியாக நடிகை ஆவ்க்வாஃபினா. காமெடி காட்சிகளில் வேற லெவல்.

டோனி லியுங் மனைவியான ஃபலா சென் ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளிவிடுகிறார்.

மந்திர சக்திகள், காஸ்ட்யூம் என பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் விலங்குகள் பேசுவது குழந்தைகளை வெகுவாக கவரும்.

சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் காட்சிகள் உள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஷாங் சீ அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Shang Chi And The Legend Of The Ten Rings movie Review

More Articles
Follows