கெழப்பய விமர்சனம்.; உண்மைக்கு உடல் தடையில்லை

கெழப்பய விமர்சனம்.; உண்மைக்கு உடல் தடையில்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்கம்: யாழ் குணசேகரன்

நடிகர்: கதிரேச குமார்,

இசை: கெபி

ஒளிப்பதிவு: அஜித்குமார்

எடிட்டர்: ராஜேஷ்

கதைக்களம்..

கிராமத்தில் ஒரு பெரியவர் ஒத்தை அடி பாதை ஒன்றில் சைக்கிள் ஓட்டி செல்கிறார். அவரைப் பின் தொடர்ந்து ஒரு கார் வந்து கொண்டே இருக்கிறது. வெகுநேரமாக காரில் உள்ளவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிட மறுக்கிறார் பெரியவர்.

அவர்கள் காரை விட்டு இறங்கி வந்து பெரியவரை வழிவிடச் சொல்லியும் அவர் வீம்புக்காகவே சைக்கிளை வைத்து வழி மறுக்கிறார். எனவே காரில் உள்ள சிலர் வந்து பெரியவரை அடிக்கின்றனர். ஆனாலும் அவர் வழிவிடவே முடியாது என்ற மனநிலையில் இருக்கிறார்

சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்தினர் அங்கு ஒன்று கூடுகின்றனர். காவல்துறையும் இந்த பிரச்சனைக்காக அங்கே வருகிறது. பெரியவர் வழிவிட மறுக்க என்ன காரணம்? காரில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பதுதான் படத்தில் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்..

கதையின் நாயகனாக நடித்துள்ள கதிரேசகுமார் மிக இயல்பாக நடித்துள்ளார். பலமான அடிகளை வாங்கியம்போதும் வழி விடாமல் அவர் வீம்பு பிடிப்பதை பார்க்கும் போது அவரின் மன உறுதி கண்களில் தெரிகிறது.

இவருடன் கிருஷ்ணகுமார், விஜயராணா தீரன், KN ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்த்ராஜ் ஆகியோர் உண்டு.

வழியில் இத்தனை பிரச்சனை நடந்தும் பெரியவர் வழிவிட மறுக்கவே அடிதடி மோதல் ஏற்படுகிறது. அப்போதே நம்மால் காருக்குள் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அதை இயக்குனர் வெளிப்படுத்தினாலும் விளக்கமாக சொல்லவில்லை. அதற்கான காட்சிகளும் பெரிதாக இல்லை.

தெனாலிராமன் கதையை பெரியவர் சொல்லும் போது அதற்கான விளக்கம் புரிகிறது. பலவீனமாக இருக்கும் ஒருவன் உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் விவேக யுக்த்தியை கையாள வேண்டும் என்பதை நாசூக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன்.

இடைவேளை வரை ஒத்தையடி பாதை காட்சிகளே திரும்பத் திரும்ப காட்டப்பட்டாலும் ஏன்? என்ன நடக்கிறது? என்பதை அறிய நம்மை இருக்கையில் அமர வைத்துள்ளார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் அதற்கான விளக்கத்தை அவர் இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருந்தால் இந்த கெழப்பய இன்னும் அதிகமாகவே பேசப்பட்டு இருப்பார்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சின்ன பட்ஜெட் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறது. ஆனாலும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அதிகமாகவே ரசித்திருக்கலாம்.

ஆக.. உண்மையை சொல்ல நேர்மையாக வாழ வயது தடை இல்லை உடல் தடையில்லை என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Kezhappaya movie review

அங்காரகன் விமர்சனம் 2/5.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

அங்காரகன் விமர்சனம் 2/5.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீபதி, சத்யரஜ், நியா, அங்காடி தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத்
இசை : கு.கார்த்திக்
ஒளிப்பதிவு : மோகன் டச்சு
இயக்கம் : மோகன் டச்சு
தயாரிப்பு : ஸ்ரீபதி

கதைக்களம்…

காட்டுப் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சில விருந்தினர்கள் தங்கியுள்ளனர். அங்கு இருக்கும் ராணி பங்களாவில் ஏதோ மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.

இந்த வேளையில் புதிதாக வேலைக்கு வரும் மேனேஜர் அந்த ராணி பங்களாவில் விருந்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென இரண்டு பெண்கள் மாயமாகின்றனர்.

இதனை விசாரிக்க கட்டப்பா கெட்டபில் வருகிறார் போலீஸ் சத்யராஜ்.. இரண்டு பெண்கள் காணாமல் போனதன் மர்மம் என்ன? ரிசார்ட்டில் ராணி பங்களாவின் மர்மம் என்ன.? இந்த படத்தின் தலைப்பு அங்காகரன் யாரை குறிப்பிடுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

நாயகன் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் தன்னால் முடிந்த வரை கதைக்கு உதவ முயன்றிருக்கிறார். சில நேரம் கொஞ்சம் எரிச்சலும் ஊட்டும் கதாபாத்திரமாகவே தெரிகிறது.

கட்டப்பா கெட்டப்பில் சத்யராஜ்.. ஒரு சிறந்த நடிகருக்கு நல்ல கேரக்டர் கொடுத்து கதையை நிலை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஏனோ தானோ என்று அவரது கேரக்டர் வந்து போகிறது..

என்னப்பா சத்யராஜை காணவில்லையே என்று ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென கிளைமாக்ஸ்சில் வந்து திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.

கிளை கதைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டாலும் அதனை சொல்லும் விதத்தில் சுவாரஸ்யம் இல்லை. முக்கியமாக போலீஸ் விசாரணையில் கேரக்டர்களை விசாரிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. ஆனால் அதில் எங்கேயுமே சுவாரசியம் இல்லை என்பது தான் மிகப்பெரிய குறை.

விசாரணை போதும்ப்பா என்கிற மனநிலையே நமக்கு வருகிறது.

நாயகியாக நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் மட்டுமே.. அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை எழுத, மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து அவரே இயக்கியிருக்கிறார்.

ராணி பங்களா & அங்காரகனின் பின்னணியையும் இன்னும் கூட அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரி சத்யராஜின் பின்னணி என்ன என்பதை சொல்லும் விதத்தில் மட்டுமே இயக்குனர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

ஆக அங்காரகன்.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

Angaragan movie review and rating in tamil

ஸ்ட்ரைக்கர் விமர்சனம் 1.5/5… ஸ்லீப்பர்

ஸ்ட்ரைக்கர் விமர்சனம் 1.5/5… ஸ்லீப்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா சதீஷ் குமார்..

கார் மெக்கானிக் வேலை பார்க்கிறார் நாயகன் ஜஸ்டின் விஜய். ஒரு நாள் இவர் கார் வேலை பார்க்கும் போது பிரேக்பை மட்டும் சரி செய்யாமல் விட்டு விடுகிறார்.

அந்த சூழ்நிலையில் கஸ்டமர் காரை டெலிவரி எடுத்து செல்கிறார். அந்த காரை பின் தொடர்ந்து நாயகன் செல்லும்போது அந்த கார் விபத்தில் சிதறுகிறது. இப்படியாக கதை தொடர்கிறது..

கதைக்களம்…

நாயகன் ஜஸ்டின் ஒரு கட்டத்தில் அமானுஷ்ய விஷயங்களை அறிந்து கொள்ள நினைக்கிறார். அதன்படி இது தொடர்பான சந்தேகங்களை அமானுஷ்ய ஆசிரியர் கஸ்தூரியிடம் கேட்டு பயிற்சி பெறுகிறார்.

அப்போது வித்யா பிரதீப் உடன் ஜஸ்டினுக்கு நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கு பேயை விரட்ட வரும்படி ஒரு புதிய ஆர்டர் வருகிறது. அந்த பங்களாவிற்கு சென்ற பின் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ஜஸ்டின் விஜய்..

அங்கு என்ன நடந்தது ? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்.. & டெக்னீசியன்கள்…

கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.்இவருக்கும் வித்யா பிரதீப்புக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்களுக்குள் உள்ள பாடலும் ரசிக்க வைக்கிறது.

நாயகன் ஜஸ்டின் விஜய் புதிய முகம் என்பதால் கொஞ்சம் மெனக்கெட்டு நடிப்பை கொடுத்திருக்கலாம்.. இவரும் வித்யா பிரதீப்பும் தோன்றும் காட்சிகள் நீண்டு கொண்டே இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது.

ஒரே பங்களாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர்கள் குழம்பி நம்மையும் குழப்பி உள்ளனர்.

இயக்கம்: எஸ் ஏ பிரபு
ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி
இசை: விஜய் சித்தார்த்

ஓஜா போர்டு வைத்து இவர்கள் ஆவியுடன் பேசும் காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை.. எனவே சுவாரசியமும் இல்லை.

எத்தனையோ பேய் படங்களை நாமும் பார்க்கிறோம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் பார்க்கிறார்கள்.. கொஞ்சமாவது ரசிகர்களுக்கு கலகலப்பு ஊட்டி புதுமையை கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

ஆக இந்த ஸ்ட்ரைக்கர்… ஸ்லீப்பர்..

Striker movie review and rating in tamil

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி விமர்சனம் 3.5/5..; விந்தணு விந்தை

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி விமர்சனம் 3.5/5..; விந்தணு விந்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

நாயகி அனுஷ்கா. இவரது தாயார் ஜெயசுதா. பெற்றோரின் விவகாரத்தால் தன் அம்மாவுடன் வசிக்கிறார் அனுஷ்கா. இதனால் இல்லற வாழ்க்கையை வெறுக்கிறார் அனுஷ்கா.

ஒரு கட்டத்தில் அம்மா ஜெயசுதா மரணம் அடைய தனிமையில் தவிக்கிறார். ஆனாலும் தனக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்கிறார். எனவே தான் தாயாகி தனக்கு ஒரு துணை உருவாக்க விரும்புகிறார். ஆனால் அதன்படி திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்.

ஆணின் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கிறார். இதன்படி விந்துவை தானம் (SPERM DONOR) செய்யும் ஆண்மகனை தேடுகிறார்.

இதற்காக சில நேர்முகத் தேர்வுகளையும் நடத்துகிறார் அனுஷ்கா. ஒரு கட்டத்தில் நாயகனை காண்கிறார். அவனுடன் நெருங்கி பழகி அவனின் விந்தணுவை பெற நெருங்கி பழகுகிறார்.

அனுஷ்காவின் நோக்கம் புரியாமல் அது காதல் என நினைத்து நாயகன் உருகுகிறார். ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. என்னுடன் உடலுறவு கொள்ளாமல் உனது விந்து மட்டுமே எனக்கு தேவை.

அதன் மூலம் நான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் என்ன ஆனது? அனுஷ்கா குழந்தை பெற்றுக் கொண்டாரா? நாயகன் ஒத்துக் கொண்டார்? ஒதுங்கினாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த திரைப்படம்.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

இறுக்கமான பெண்ணாக தன் முடிவில் பிடிவாத குணம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா. இறுதிக் கட்டத்தில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்வுகளில் காட்டியிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் காமெடியால் கலக்கி இருக்கிறார். Stand Up காமெடியனாக பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

ஆண் துணையில்லாமல் உடலுறவு கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என அவர் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் ரகம்.

காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதியை மெதுவாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் செய்திருக்கிறார். அதிலும் இரட்டை அர்த்த வசன காமெடிகள் காம நெடி அடிக்கிறது.

ரதன் இசையில் உருவான பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.. நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கும் மனதிற்கும் இதம்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் இதுபோன்ற கதைகள் வருவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் தமிழில் இதுபோல கதைகளை எடுக்க எந்த இயக்குனரும் முன்வருவதில்லை.

காரணம் ஹீரோ & ஹீரோயினும் தயங்கும் கதைக்களம் இது. இது போன்ற கதைகள் வருமேயானால் தமிழ் சினிமாவில் புதிய தளம் உருவாகும். வரவேற்போம்..

Miss Shetty Mr Polishetty movie review

ரெட் சாண்டல் வுட் விமர்சனம் 3.5/5..; ரத்த போராட்டம்

ரெட் சாண்டல் வுட் விமர்சனம் 3.5/5..; ரத்த போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மாரிமுத்துவின் மகன் கபாலி விஸ்வந்த். இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் போது நண்பர் ஒருவர் மூலமாக வேலை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார்.

அங்கு வேறு வழியில்லாமல் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் இவர் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்துக்கு விபத்து ஏற்படவே விஷ்வந்தை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். ஆனால் அவரை காணவில்லை என தகவல் வருகிறது.

இதனையடுத்து நாயகன் தன் நண்பனை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னர் தான் நண்பனைப் போல பல தமிழர்கள் செம்மரம் கடத்தல் சம்பவத்தில் சிக்கிக் கொண்டனர் என்பது தெரிய வருகிறது. மேலும் அவர்களை என்கவுண்டர் செய்யவும் ஆந்திரா போலீஸ் திட்டமிடுகிறது.

இதற்குப் பின்னணியில் சமூகப் போராளி போர்வையில் ‘KGF’ வில்லன் ராம் ஈடுபட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது.? தன் நண்பனை மீட்டாரா வெற்றி? ஆந்திராவில் இருந்து தமிழர்கள் தப்பித்தார்களா? தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்தாரா வெற்றி? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ரெட் சாண்டல் திரைப்படம்.

——
Red Sandal Wood

நடிகர், நடிகைகள் :

வெற்றி (பிரபாகரன்) , தியா மயூரிக்கா ( வினிதா ), கேஜிஎப் ராம் (அரிமாறன் ), எம் எஸ் பாஸ்கர் ( முத்தையா ), கணேஷ் வெங்கட்ராமன்( ராமைய்யா ) , மாரிமுத்து ( இளவரசு ), கபாலி விஷ்வந்த் (கருணா ), ரவி வெங்கட்ராமன் ( SP), மெட்ராஸ் வினோத் ( தீனா ) ,வினோத் சாகர் ( புரோக்கர் பாஸ்கர் ), லட்சுமி நாராயணன்( நரசிம்மன் ), சைதன்யா ,விஜி, அபி , கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .

கேரக்டர்கள்…

வெற்றி மேல் வெற்றி என்று தன் பெயருக்கு ஏற்ப வெற்றிகளை குவித்து வருகிறார் நாயகன் வெற்றி.

இதற்கு முக்கிய காரணம் அவர் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக கதைகளை தேர்வு செய்து அதில் தன்னை பொருத்திக் கொண்டு நடித்து வருவது என்பதுதான் மிகையில்லாத உண்மை.

வேலை கிடைக்காத விரக்தியில் யதார்த்த குடும்ப இளைஞனை பளிச்சிடுகிறார் கபாலி விஸ்வந்த். இவரது காட்சிகள் நம்மை கொஞ்சம் கலங்க அடிக்கிறது.

மாரிமுத்து கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் முத்திரை பதிக்கிறார். (தற்போது அவர் மறைந்துவிட்டார்.)

மிரட்டல் வில்லனாக கேஜிஎப் ராம். வேற லெவல் மிரட்டல். ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இல்லை.. ஆனாலும் கலர் ஆடைகளை விட ஸ்கூல் யூனிபார்மில் அழகாகவே இருக்கிறார் தியா மயூரிக்கா.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – குரு ராமானுஜம்
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
கேமரா – சுரேஷ் பாலா
சவுண்ட் டிசைன் – ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி.
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்.
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி

வேலை தேடி வேறு மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் நம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் விவரங்களை கொடுத்து விட்டு செல்வது நடைமுறையில் இருந்தாலும் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்

நாம் வேறு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த பகுதி ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இரு மாநில அரசுகளுக்கும் அதில் பங்கு உள்ளது என்பதை இயக்குனர் சொல்லி இருப்பது பல இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ரெட் சாண்டல்வுட் படம் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சி பொம்மைகளை காட்டி இருக்கிறார். இயக்குனர் மரத்திலான பொம்மைகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு எந்த விதமான நோயும் ஏற்படுவதில்லை. மாறாக அழகாக காட்டப்படும் சைனீஸ் பொம்மைகளை பயன்படுத்துவதால் பலவிதமான நோய்கள் நம்மையும் தாக்குகின்றன என்பதை அப்பட்டமாக சொன்ன இயக்குனருக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

தொய்வு இல்லாத திரைக்கதை.. மிரட்டலான (சாம் சி.எஸ்) பின்னணி இசை.. சமூக விழிப்புணர்வை சொல்லும் திரைக்கதை என அனைத்திலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பளிச்சிடுகின்றனர்.

ஆக குறைந்த நேரத்தில் ஒரு நிறைவான படத்தை கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்..

ஆக ரெட் சாண்டல் வுட்… ரத்த போராட்டம்

Red Sandal Wood review and rating in tamil

துடிக்கும் கரங்கள் 3.5/5.; யூடியுப் யுத்தம்

துடிக்கும் கரங்கள் 3.5/5.; யூடியுப் யுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கொத்து பரோட்டா என்ற யூடியுப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் விமல். இவரது நண்பர் சதீஷ்.

மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தன் வீடியோவில் பதிவிட்டு நியாயம் கேட்கும் மனிதராக இவர். இது ஒரு புறம் இருக்க காணாமல் போன தன் மகன் சமீரை தேடி சென்னைக்கு வருகிறார் சங்கிலி முருகன். இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஒரு நாள் ஐஜி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதில் சமீருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் சௌந்தரராஜா சந்தேகிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சங்கிலி முருகன் வீடியோவை தன் யூடியுப்கில் பதிவிடுகிறார் விமல். இதனால் போலீஸ் கவனம் விமல் பக்கம் திரும்புகிறது.

ஐஜி மகள் கடத்தலுக்கு சங்கிலி முருகன் மகனுக்கும் என்ன தொடர்பு? விமல் கண்டுபிடித்தார் ? போலீஸ் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Star Cast: Vimal, Misha Narang, Sathish, Suresh Menon, Sangili Murugan & Soundara Raja

Director: Veludoss
producer: K. Annadurai
Cinematography: Rammy
Music: Ragav Prasath
Editor: Chandrakumar G
Stunt: Siruthai Ganesh
Choreographer: Dinesh
Lyrics: Viveka
Art: S. Kannan

கேரக்டர்கள்…

கிராமத்து இளைஞனாகவே நாம் பார்த்து பழகிப் போன விமலுக்கு இதில் வித்தியாசமான வேடம். அவரும் ஆக்ஷனில் இறங்கி அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்.

ட்ராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் இருக்கிறார். இவரது கண்களும் இவரது மீசையும் இவருக்கு கூடுதல் பலம்.

மட்டன் ரவியாக பில்லி முரளி நடித்துள்ளார். மிரட்டல் வில்லனாகவும் கவனிக்க வைக்கிறார். தனது முந்தைய படங்களில் தாடியுடன் வலம் வந்த சௌந்தரராஜா இதில் கிளீன் ஷேவ் செய்த நேர்மையான அதிகாரியாக அசர வைத்துள்ளார்.

சதீஷ் இந்த படத்தில் தேவையில்லாத கேரக்டர். அவரது காமெடிகளும் எடுபடவில்லை. நாயகி மிஷாவுக்கும் பெரிதாக வேலை இல்லை.

ரூபினா ரூபிஷா என்ற இரட்டை பெண்கள். சங்கிலி முருகனின் மகள்களாக நடித்துள்ளனர். இருவரும் கொஞ்ச நேரம் என்றாலும் தங்கள் நடிப்பில் பளிச்சிடுகின்றனர்.

டெக்னீசியன்கள்…

ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி வகையில் உள்ளது. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவில் குறையில்லை. துடிக்கும் கரங்கள் டைட்டிலுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.

மீடியாக்களை போல தனி நபர் நடத்தும் யூடியுப்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யலாம் என துடிப்பான கதைகளும் அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.

ஆக.. துடிக்கும் கரங்கள்… யூடியுப் யுத்தம்

thudikkum karangal review and rating in tamil

More Articles
Follows