தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரகு தாத்தா விமர்சனம் 3/5.. ஹிந்தி மாலும்.. வாடா
1970 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்..
பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட்டான ஒரு படத்தில் ‘ஏக் கௌமி ஏ கிசான் ரகு தாத்தா என்ற வசனத்தை வைத்து ரகு தாத்தா என்று ஹிந்தி எதிர்ப்பை கிண்டல் அடித்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுமன் குமார்..
ஸ்டோரி…
வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார்.
ஹிந்தியை எதிர்க்கும் இவரது தாத்தா எம்எஸ் பாஸ்கரை போல இவரும் அதே வழியில் பயணிப்பதால் இவருக்கான அந்தஸ்து அந்த வள்ளுவன் பேட்டை பகுதியில் உயர்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் கீர்த்திக்கு திருமணம் செய்ய எம் எஸ் பாஸ்கர் திட்டமிடுகிறார்..
வங்கியில் ப்ரோமோஷன் கிடைக்க வேண்டுமென்றால் ஹிந்தி படிக்க வேண்டும் என்ற சூழ்நிலை அந்த காலகட்டத்தில் உருவாகிறது.
ப்ரோமோஷன்-காக ஹிந்தியை கற்றுக் கொண்டாரா ஹிந்தி எதிர்ப்பாளர் கீர்த்தி.? ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் புரட்சியாளர் திருமணம் செய்து கொண்டாரா கீர்த்தி.? என்பதெல்லாம் மீதிக்கதை
கேரக்டர்ஸ்….
கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயக்குமார், இஸ்மத் பானு ஆனந்தசாமி, ஆதிரா மற்றும் பலர்..
பல படங்களில் கீர்த்தியை ரொமாண்டிக் நாயகியாகவும் ஆக்சன் ஹீரோயின் கூட பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் அடுத்த கட்டமாக தன்னால் காமெடியும் செய்ய முடியும் என நிரூபித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்..
பெண் புரட்சியாளராக இருந்தாலும் மெல்ல மெல்ல காதல் வயப்படும் கயல்விழியாகவும்.. ஹிந்தியை எதிர்க்கும் போராட்ட பெண்ணாகவும், தாய் தந்தையை எதிர்த்துப் பேசி ஆனால் தாத்தாவிற்கு கட்டுப்பட்ட பாசமிக்க பேத்தியாகவும் வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார் கீர்த்தி..
முதுகு மூடிய ஜாக்கெட் போட்டு அழகான கூந்தல் பின்னி ஒத்த ஜடை போட்டு கம்மல் வளையல் போட்டு என 1960 கால ஹீரோயின்களை நினைவுப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி..
கீர்த்திக்கு இணையாக இணைந்து காமெடியில் ரவுண்டு கட்டி இருக்கிறார் அண்ணியாக நடித்த இஸ்மத் பானு.. நாயகிக்கு உறுதுணையாக கேரக்டரில் தேவதர்ஷினியும் வெளுத்து கட்டி இருக்கிறார்..
இவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஹிந்தி காப்பியடிக்க உதவும் கலைஞர்களும் சிறப்பு..
கீர்த்தியின் அப்பா ஜெயக்குமார்.. அம்மா ஆதிரா மற்றும் தாத்தா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரும் உண்டு.. கண்டிப்பான தந்தை.. பாசமான தாத்தா எனக் குடும்பத்து உறவுகளை அழகாக காட்டி இருக்கின்றனர்
நாயகனாக தெலுங்கு நடிகர் ரவீந்திர விஜய் நடித்திருக்கிறார்.. மொட்டை கடிதாசி நபராக பொறுத்திரு செல்வா என்ற பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
இயக்கம் – சுமன் குமார்
இசை – ஷான் ரோல்டன்
‘கேஜிஎப், காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளது..
தமிழ் படங்கள் என்றாலும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும்.. டிசைன்களில் கூட ஆங்கிலமே பிரதானமாக இருக்கும்.. ஆனால் ரகு தாத்தா படத்தின் போஸ்டர்கள் அனைத்திலும் இசை வெளியீட்டு விழா நாளை முதல் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருக்கும் இதற்காகவே படக்குழுவினரை பாராட்டலாம்..
ஹிந்தி எதிர்ப்பு.. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்று கூறப்பட்டாலும் ஹிந்தியை படிக்கும் சில நயவஞ்சகர்களையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.. நகைச்சுவைக்கு ஏற்ப பின்னணி இசை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.. ஆனால் பாடல்கள் ஒன்று கூட கவரவில்லை..
ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் பாராட்டுக்குரியவர்கள்.. 1970 கால தபால் பெட்டி.. இலேண்ட் லெட்டர் கடிதம், ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், ஜன்னல் வீடு, தெருக்கள் வாகனங்கள் என அனைத்தையும் வைத்திருப்பது படத்திற்கு பலம்.
சீரியல் போலவே படம் இடைவேளை வரை நகர்கிறது.. ஆனால் இடைவேளைக்குப் பிறகுதான் படத்தின் கதை வேகம் சூடு பிடிக்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் உங்களை சிரிக்காமல் விடமாட்டோம் என டைரக்டர் சேலஞ் செய்து சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கிறார்
இனியாவது.. ஹிந்தியை எதிர்த்து ஒரு பக்கம் அவர்கள் படித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துக் கொண்டிருப்பவர்களை இந்த படம் மூலம் நிச்சயம் காணலாம்.. இனியாவது தமிழர்கள் திருந்தினால் சரிதான்.!
Keerthys Raghu Thatha review