ஹைடெக் சாவி… கீ திரை விமர்சனம் (2.75/5)

ஹைடெக் சாவி… கீ திரை விமர்சனம் (2.75/5)

நடிகர்கள் : ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ஆர்ஜே. பாலாஜி, கோவிந்த பத்மசூர்யா
இயக்கம் : காலீஸ்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்
இசை : விஷால் சந்திரசேகர்
சண்டை : அன்பறிவு
தயாரிப்பு : மைக்கேல் ராயப்பன்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹமது

கதைக்களம்…

ஜீவா காலேஜ் ஸ்டூடண்ட். இவருக்கு ஜீனியர் நிக்கி கல்ராணி.

பெண்களின் மொபைல் போன்களை ஹாபியாக ஹேக்கிங் செய்து, அந்த பெண் பற்றிய ரகசியங்களை சொல்லி பெண்களுடன் விளையாடுபவர். இதனால் பெண்களும் இவரது காம வலையில் விழுகிறார்கள். அப்படி விழுந்த ஒருவர்தான் அனைகா சோடி.

அவர் கண்டுபிடித்திருக்கும் அந்த ஹேக்கிங் வைரஸ்க்கு பாட்ஷா என பெயர் வைத்திருக்கிறார். அவ்வப்போது நண்பர்களுக்கும் படிப்புக்கும் அதை பயன்படுத்துகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் வில்லனும் இதே சாயலில் கம்யூட்டர் மற்றும் மொபைல் போன்களை ஹேக்கிங் செய்கிறார்.

பணத்துக்காகவும் கொலைகளை செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஒருவரின் மனநிலையை அறிய அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேஸ்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதன் மூலம் அந்த நபர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

காதல் தோல்வியால் பாதிக்கபட்ட பலவீனமான மனநிலை உள்ளவர்களின் ஃபோன்களை ஹேக் செய்து அவர்களை தன் அடிமையாக்கி, யாரோ ஒருவரை கொலை செய்ய கட்டளை இடுவதே இவரது வேலை.
இவருக்கு கீழே ஒரு ஹைடெக் கும்பலே வேலை செய்கிறது.

டெக்னாலஜியில் மிரட்டும் ஹீரோ அண்ட் வில்லன் ஆகிய இந்த இருவருக்கும் நடக்கும் டெக்னாலஜி வார்தான் ‘கீ’

கேரக்டர்கள்…

வழக்கமான துருதுரு கேரக்டரில் அசத்துகிறார் ஜீவா. இவர் அறிமுகமாகும் காட்சிகள் (பெண்களை வர்ணிப்பது) கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் நிச்சயம் அது இளைஞர்களை சூடேற்றும்.

அனைகா சோடியை இவர் மடக்கும் அந்த காட்சிகள் சென்சாரில் எப்படி தப்பித்தது என தெரியல.?

ஆனால் நடிப்பில் இன்னும் மெச்சுரிட்டி இல்லையே பாஸ்.

ஜீவாவின் தந்தையாக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அம்மாவாக சுஹாசினி.

கிளாமருக்கு அனைகா, அழகுக்கு நிக்கி கல்ராணி என இருவருக்கும் நல்ல ஸ்கோப் உள்ளது. மற்றபடி நடிப்பு பத்தல.

நண்பராக ஆர்.ஜே. பாலாஜி. தன் வழக்கமான நையாண்டி நக்கல் டயலாக்குகளால் கவர்கிறார். ஆனாலும் இவர் அடிக்கும் டபுள் மீனிங் காமெடிகள் காம நெடிகளை ஏற்படுத்தும்.

ஸ்டைலிஷ் அண்ட் செம ஸ்மார்ட் வில்லனாக கோவிந்த பத்மசூர்யா. கண்களிலேயே அசால்ட்டாக மிரட்டியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜனின் கேமரா புகுந்து விளையாடியுள்ளது.

விபத்து நடக்கும் காட்சி என்றாலும் அதற்கு அவர் செட் செய்திருக்கும் லைட்டிங் வரை சிறப்பாக உள்ளது.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். மிரட்டியிருக்கிறார். காதோரம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

இதயத்துடிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் பேஸ் மேக்கர் வரை ஹேக் செய்கிறார் வில்லன். ரோட்டில் போகும் கார்களையும் அசால்ட்டாக ஹேக் செய்கிறார்கள்.

அதாவது ஓவர் டெக்னலாஜி உள்ள ஆப்பிள் போன் முதல் ஆடி கார் வரை ஹேக் செய்வது எல்லாம் ஓகேதான். ஆனால் அது எல்லாம் ஏதோ வீடியோ கேம் பார்ப்பது போல உள்ளது.

ஆனால் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் மிக அருமை. முக்கியமாக ரோட்டில் கரண்ட் ஷாக் விபத்து நடக்கும் காட்சியும் அதன் பின்னணி இசையும் செம மிரட்டல். கிராபிக்ஸ் காட்சிகளை தெறிக்க விட்டுள்ளார் டைரக்டர் காலீஸ்.

வில்லன் எதற்காக போன்களை ஹேக் செய்கிறார்? என்பதற்கு எந்த பின்னணியும் இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இவரின் வேலை பார்க்கும் அந்த இளைஞர்கள் எப்படி இவரிடம் சேர்ந்தார்கள்? என்பது எதுவும் புரியவில்லை.

இடைவேளைக்கு பிறகு வரும் காதல் காட்சிகளில் வலுவில்லை. எடிட்டர் என்னய்யா பண்ற..?

புதுமையான கதைக்களத்தால் செல்போனில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுக்கு சரியான பாடம் நடத்தியிருக்கிறார் டைரக்டர். கங்கிராட்ஸ் காலீஸ்.

ஆனால் சொன்ன விதம் கொஞ்சம் ஓவராக போய்விட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. எல்லாருக்கும் புரியாதே சார்…

கீ… ஹைடெக் சாவி

Kee review rating

Comments are closed.