கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

நடிகர்கள் : விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஜெகபதிபாபு, சம்பத் ராஜ், ஜெயப்பிரகாஷ், சௌந்தர்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : சுராஜ்
இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவாளர் : ரிச்சர்ட் எம் நாதன்
எடிட்டிங்: செல்வா ஆர்.கே.
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : நந்தகோபால் மெட்ராஜ் எண்டர்பிரைசஸ்

கதைக்களம்…

முதல் காட்சியே கண்டெய்னர் லாரி நிறைய பணம்… (அடடே.. இது ரியல் அரசியல் கதையா? என்று நினைக்கலாம். இப்படிதானே நாங்களும் நினைச்சோம்.

அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி அரசிடம் ஒப்படைகிறார்.

விஷால் அப்பாவியாக எண்ட்ரீ கொடுக்கிறார். பின்னர் தமன்னாவை காதலிக்க சூரி உதவியுடன் பல விதமான ரூட் போடுகிறார்.

இதனிடையில் ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது.

அப்போதுதான் விஷால் யார்? என்ற உண்மை தெரிகிறது.

அதன்பின், என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

kaththi-sandai-movie-hd-wallpapers

கதாபாத்திரங்கள்…

திமிரு, கதகளி உள்ளிட்ட பல படங்களில் அப்பாவி என்ட்ரீ கொடுத்து விஷால் அதிரடியாக இறங்குவார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இதிலும் இரண்டிலும் நன்றாகவே தேறியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகள் என்றால் விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எனவே அதில் குறை வைக்கவில்லை.

தமன்னாவுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனால் அழகாக பளிச்சென்று வந்து கண்களை ப்ரைட் ஆக்குகிறார்.

வடிவேலு மற்றும் சூரியின் காமெடிகள் படத்திற்கு பெரிய ஆறுதல். இவர்கள் கெட்டப்பை அடிக்கடி மாற்றுவது ரசிக்கும் ரகம்.

சூரியின் லேடி கெட்டப், கராத்தே கெட்டப் உள்ளிட்டவைகள் ரசிக்கும் ரகம்.

இரண்டாம் பாதியை டாக்டர் பூத்ரி வடிவேலு தாங்கியிருக்கிறார். காரில் மறைந்து வரும் அந்த காட்சியை வடிவேலுக்காக ரசிக்கலாம்.

ஜெகபதிபாபு இன்னும் மிரட்டியிருக்கலாம்.

Kaththi-Sandai-first-look1

தொழில்நுட்ப கலைஞர்கள்..

நான் கொஞ்சம் கருப்புதான் என்ற பாடல் ஹிட்டுதான். ஆனால் ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் ஆம்பள பட பாடல்கள் கேட்ட ஞாபகம் வருகிறது.

ரிச்சர்ட் எம் நாதன், தன் ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை.

வடிவேலுவின் ரீஎன்ட்ரியை மெயின்னா வைத்து காயை நகர்த்தியிருக்கிறார் சுராஜ்.

இறுதியாக வரும் ப்ளாஷ்பேக் இன்றைய அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி.

நேர்மையற்ற அரசியல்வாதிகளால் நாட்டு மக்கள் படும் அவஸ்தைகளை நன்றாக காட்சிப்படுத்தியுள்ளார் சுராஜ்.

கத்தி சண்டை… நல்லாவே வெட்டலாம்

Comments are closed.

Related News

கத்தி சண்டை படத்தை தொடர்ந்து தனது…
...Read More
ரசிகர்களுக்காக நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை…
...Read More