தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னி பட விமர்சனம் 3/5.. இவள் ஒரு கன்னிவெடி
அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘கன்னி’.
ஒளிப்பதிவு – ராஜ்குமார்
இசை – செபாஸ்டியன் சதீஷ்.
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
ஸ்டோரி…
கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகிராம கதையை மையப்படுத்தி படத்தையே கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவா..
உலக பணக்காரர்களில் ஒருவர் இந்த கிராமத்திற்கு வருகிறார்.. அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படுகிறது.
இதனையடுத்து அந்த கிராமத்து மருத்துவச்சி செம்பா அவருக்கு தெய்வீக முறைப்படி சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கின்றார். இதனை அறியும் பல டாக்டர்கள் அதிர்ச்சியாகின்றனர்.
எந்த ஆங்கில மருத்துவத்திலும் சாதிக்க முடியாததை இந்த சித்த மருத்துவம் செய்திருக்கிறது என்பதால் வியக்கின்றனர்.
இதனையடுத்து அந்த மருத்துவ முறையை அறிந்து கொள்ளவும் அந்த சித்த மருத்துவ ஃபார்முலாவை அபகரிக்கவும் திட்டமிடுகின்றனர்.
இந்த மெடிக்கல் மாஃபியாவிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க செம்பி நாயகி அஸ்வினி போராடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? சித்த மருத்துவ ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது.? என்பதுதான் இந்த ‘கன்னி’ படத்தின் கதை.
கேரக்டர்ஸ்…
மகள் செம்பியாக அஸ்வினி சந்திரசேகர்,
மாதம்மா வேல்முருகன் செங்கா, அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்..
அழகு அஸ்வினி இந்த படத்தில் ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார். வில்லன் கும்பலிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற அவர் போராடும் போராட்டங்கள் கல்நெஞ்சையும் கரைக்கும்.
இவரின் அம்மா அண்ணா அண்ணி அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கும் கேரக்டருக்கும் ஏற்ப பயணித்திருப்பது சிறப்பு..
டெக்ணீசியன்ஸ்…
தெய்வீக சிந்தனை மருத்துவ ஓலைச்சுவடி என சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தை கொடுத்திருக்கிறார் மாயோன் சிவா..
இதுபோன்று குறைந்த பட்ஜெட் படங்கள் சில சமயங்கள் கவனம் பெறுவதில்லை.. ஆனால் இந்த படத்தில் இசையிலும் சரி ஒளிப்பதிவிலும் சரி படத்தை உருவாக்கி விதத்திலும் சரி படக்குழுவினர் ஜெயித்திருக்கின்றனர்.
செபாஸ்டியன் சதீஷின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்..
ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவில், மலை கிராம பகுதி மக்கள் அங்கு வசிக்கும் வீடுகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது..
எந்தவித நோயானாலும் தீர்த்துவிடும் மருத்துவ குணங்களை அந்த மக்கள் அறிந்திருக்கின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் அங்கு ஒருவர் மட்டும் பைத்தியமாக திரிந்து கொண்டிருப்பதும் அவரை படம் முழுவதும் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ? அவரை குணப்படுத்தி இருக்கலாமே இயக்குனர்.?!
பெரும்பாலும் அந்த கிராமத்து மனிதர்கள் கருப்பாகவும் இருக்கின்றனர்.. ஆனால் அஸ்வினி மட்டும் கிராம மக்களிடம் ஒட்டாத ஒரு முகமாகவே தெரிகிறது.. ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி அஸ்வினியை கருப்பாக காட்டி இருக்கலாம்.
அந்த மலைவாழ் மக்களின் கிராமத்து பாஷைகளை அப்படியே உச்சரிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு.
ஆக இந்த கன்னி.. இவள் ஒரு கன்னிவெடி
Ashwinis Kanni movie review





