தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat
கஞ்சா போதை மது புகை வன்முறை நிறைந்த சினிமாவில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக முடியாதா என ஏங்கும் பெற்றோர்களுக்காக வரவிருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
இந்த வாரம் மே 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஸ்டோரி…
சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்க.. இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது ஒரு புதருக்குள் சிக்கிய ஆட்டுக்குட்டியை கண்டு அதைக் காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர்.
அந்த ஆட்டுக்குட்டிக்கு யாரும் உரிமை கொண்டாடாத நிலையில் இவர்களே அந்த ஆட்டை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்குப் பெற்றோரும் சம்மதிக்க அவர்களின் பாதுகாப்புடன் புஜ்ஜி என்ற செல்ல பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அந்த ஆட்டை இவர்களது குடிகாரத் தந்தை குடிக்க பணம் இல்லாமல் அனுப்பட்டி என்ற கிராமத்தில் விற்று விடுகிறார்.
இதற்காக ஆட்டுக்குட்டியை தேடி பள்ளிக்கு செல்லாமல் அனுப்பட்டி கிராமத்திற்கு செல்கின்றனர்.
அங்கு அவர்களால் ஆட்டை கண்டுபிடிக்க முடிந்ததா.? என்ன நடந்தது? தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் பிள்ளைகளை காண முடியாமல் முதலாளி கமல் குமாரும் தேடி அலைகிறார்,.. இறுதியில் என்ன ஆனது.? ஆட்டை கண்டுபிடித்தார்களா குழந்தைகள்? குழந்தைகளை கண்டுபிடித்தாரா நாயகன் கமல்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்..
நாயகன் கமல் குமாரின் அறிமுக காட்சியே அசத்தல்தான்.. தோட்டத்து முதலாளியாக இருந்தாலும் அடவாடித்தனம் எதுவும் காட்டாமல் அன்பான மனிதராக வருகிறார். அதுவும் கோவை மொழி பேசி குழந்தைகளிடம் கொஞ்சம் இவரது அன்பு பிளஸ்.. நம்ம முதலாளி தங்க முதலாளி என்ற அளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.
பள்ளி குழந்தைகளாக நடித்துள்ள சரவணன் மற்றும் துர்கா இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.. அதிலும் துர்காவாக நடித்துள்ள பிரணிதி 100 மார்க் பெற்று விடுகிறார்.. ஆட்டுக்குட்டி தொலைந்த பிறகு அந்த கூடைக்குள் அமர்ந்து கொண்டு அவரது ஏங்கும் முகமும் கண்களும் அழகு.
போலீசாக நடித்துள்ள வைத்தீஸ்வரியும் தன் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.. அதிலும் உயிரதிகாரி தவறு செய்தாலும் அவர் தட்டிக் கேட்கும் குணம் பாராட்டுக்குரிய நடிப்பு.
ஆட்டுக்குட்டியை தேட துர்காவுடன் இணையும் இளம்பெண்ணும் நடிப்பில் கவருகிறார்.. அதுபோல பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பையன் & கறிக்கடை பாய் உள்ளிட்ட வரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..
ஆட்டை திருப்பி தர வேண்டுமென்றால் 5000 ரூபாய் வேண்டும் என கறிக்கடை பாய் நிபந்தனை விதிக்கும் போது உடனே 3000 ரூபாய் திரட்டுவது ஓவர் தான்…
டெக்னீசியன்ஸ்…
ராம் கந்தசாமி என்பவர் எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையமைக்க கு.கார்த்திக் பாடல்களை எழுத படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அருமை.. குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.. நாயகன் கமல் மற்றும் வைத்தீஸ்வரிக்கு ஒரு காதல் பாடல் வைத்து இளசுகளையும் கவர்ந்திருக்கலாம்.
பாடல்களை கு கார்த்திக் பாடல்கள் எழுதி இருக்கிறார்.. புஜ்ஜி புஜ்ஜி என்ற பாடல் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும்..
அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவை மாவட்ட அழகை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர்.
அதிலும் முக்கியமாக கோவை மொழி பேசும் கோவப்படாத மக்கள் அழகு..
ஒரு வாயில்லா ஜீவன் என ஒரு ஆட்டை நினைத்தால் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.. ஒருவேளை அது மட்டன் கறியாக நினைப்பவர்களுக்கு செட் ஆகாது..
Kamals Bujji at Anuppatti movie review