கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நடுக்காவேரி என்றொரு கிராமத்தில் படிக்கும் மாணவி கமலி (கயல் ஆனந்தி).

இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது 12 தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவனை அஸ்வினை (ரோஹித் சராப்) டிவி-யில்பார்த்து காதல் கொள்கிறார்.

அந்த மாணவனை சந்திக்க வேண்டும், காதலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அஸ்வின் சேர்ந்த சென்னை ஐஐடி’யில் சேர விரும்புகிறார்.

அதற்காக, பிரதாப் போ
த்தனிடம் டியூசன் கற்று நன்றாக படித்து, நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெறுகிறார்.

ஆனால் கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால் போதும் என்று நினைப்பவர்.

ஒரு வழியாக ஐஐடியில் சேர்ந்த கமலி… காதலில் வென்றாரா? கல்வியில் வென்றாரா..? இரண்டிலும் வென்றாரா? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்...

பள்ளி மாணவியானாலும் கல்லூரி மாணவியானாலும் நன்றாக பொருந்தும் முகம் கயல் ஆனந்தி… தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு உயிரூட்டியிருக்கிறார..

கல்வி, காதல், சோகம், விரக்தி, என பன்முக பாவனைகளில் கலக்கியிருக்கிறார்.

டியூசன் மாஸ்டர் பிரதாப் போத்தன் நல்ல நடிப்பு.

நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு அவர் கொடுக்கும் டிப்ஸ் படிக்கும் எல்லாம் மாணவர்களுக்கு பயன்தரும்.

கமலின் தோழியாக வரும் ஸ்ரீஜாவின் நடிப்பு யதார்த்தம்.

இவர்களுடன் அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், அபிதா வெங்கட் ஆகியோரும் நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தீன தயாளனின் இசை கதையோடு பயணிக்கிறது.

ஜெகதீசனின் ஒளிப்பதிவு கலர்புல். நடுக்காவேரி கொள்ளை அழகை கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் ராஜசேகர் துரைசாமியை நன்றாகவே பாராட்டலாம்.

பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் கல்வியை கவனிக்காமல் காதலை கவனிக்கும் சிலருக்கு இந்த படம் ஒரு பாடம்.

கல்வியா? காதலா..? என தவிக்கும் இளம்பெண் கமலி எடுக்கும் முடிவு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு பாடத்தை கொடுக்கும்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை சில இடங்களில் கணிக்க முடிவது படத்தின் மைனஸ்.

ஆக… கல்வியா.? காதலா.?.; கமலி FROM நடுக்காவேரி

Kamali from Nadukaveri movie review in Tamil

கானா காதல்…; பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

கானா காதல்…; பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சந்தானம், அனைகா, மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு
இயக்கம் – ஜான்சன்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – லார்க் ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

சென்னையின் முக்கியமான ஏரியாக்களில் ஒன்று பாரிஸ்.

இந்த ஏரியாவைச் சேர்ந்த கானா பாடகர் தான் யு டியூப் புகழ் பாரிஸ் ஜெயராஜ் (சந்தானம்).

தன் காதலி அனைகாவை அடைய பல முயற்சிகள் செய்து அதில் வெற்றி பெறுகிறார்.

வழக்கமாக இது போன்ற படத்தில் பெண்ணின் தந்தை தான் வில்லனாக வருவார். ஆனால் இதில் சந்தானத்தின் தந்தை காதலுக்கு வில்லனாக வருகிறார்.

சந்தானத்தின் அப்பா வக்கீல் பிருத்விராஜ். இவர் தன் முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது மனைவியுடனும் குடும்பம் நடத்துகிறார். அந்த 2வது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஹீரோயின் அனைகா.

அப்படின்னா அண்ணன், தங்கை காதலா? என கேட்பவர்களுக்கு இந்த படத்தை பாருங்கள்.. செம ட்விஸ்ட் இருக்கும். அதுவே படத்தின் மீதிக்கதை்.

கேரக்டர்கள்…

தனக்கேற்ற ஸ்டைலில் கதையை தேர்ந்தெடுத்து அதில் மாஸ் காட்டியுள்ளார் சந்தானம். டைமிங் காமெடியும் சூப்பர்.

சந்தானம் அப்பாவாக தெலுங்கு நடிகர் பிருத்விராஜ். இரண்டு மனைவிகள் & மகன், மகளுக்கு இடையிலும் சிக்கித் தவிக்கும் காட்சிகளை திறம்பட செய்திருக்கிறார்.

மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு என அனைவரும் சிரிக்க வைக்கின்றனர்.

சந்தானம் கதைகளை செலக்ட் செய்யும் போது ஹீரோயின்களையும் செய்யலாம். நாயகி அனைகா சோதி் அவ்வளவு பொருத்தமில்லை்

ஹைலைட்ஸ்…

சந்தானத்தின் அப்பாவையும் தன் அப்பாவையும் கான்பிரன்ஸ் காலில் பேச வைக்க முயற்சிக்கிறார் ஹீரோயின் அனிகா.

இவர்களின் ஒரே அப்பா பிருத்விராஜ் பேசி சமாளிக்கும் காட்சி காமெடிக்கு கியாரண்டி.

அதே போல இன்னொரு காட்சி.. ஜவுளிக் கடையில் ஒரே சமயத்தில் தன்னுடைய 2 மனைவிகளும் டிரையல் ரூமில் டிரெஸ் போட்டுப் பார்க்க பிருத்விராஜ் சமாளிக்கும் காட்சியும் மரண காமெடி.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்துமே கானா பாடல்கள். சில பாடல்கள் ரீப்பீடு போல உள்ளது. சில பாடல்கள் ரிப்பீட்டாக கேட்க வைக்கிறது. பச்சா பச்சாக்கே, புளி மாங்கா… ஆகிய பாடல்கள் தாளம் போட வைக்கும்.

ஒளிப்பதிவாளர் & எடிட்டர் இருவரும் தங்கள் பணிகளில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.

அண்ணன் தங்கை காதல் என ஒரு டிராக் பிடித்து அதை எவருடைய மனம் புண்படாமல் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஜான்சன்.

அதற்கு ஏற்ப ஆரம்பத்திலிருந்தே நாயகன் & நாயகியை நெருக்கமாக காட்டாமல் காட்சிகளை வைத்துள்ளார்.

இடைவேளை வரை கொஞ்சம் தடுமாறினாலும், பின் கிளைமாக்ஸ் வரை நம்மை கவர்ந்து விடுகிறார் பாரிஸ் ஜெயராஜ் இயக்குனர் ஜான்சன்.

ஆக கானாவும் காதலும் தான் இந்த பாரிஸ் ஜெயராஜ்

Parris Jayaraj review rating

காதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்

காதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – தினேஷ், தீப்தி
இயக்கம் – கோபி
இசை – ஹிதேஷ் மஞ்சுநாத்
தயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்

கதைக்களம்…

90s கிட்ஸ் தினேஷ். இவர் டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். நயன்தாராவை போல ஒரு சூப்பர் ஃபிகரை திருமணம் செய்ய காத்திருக்கிறார்.

தினேஷின் நண்பர்கள் ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத் & செல்வேந்திரன். இவர்கள் எல்லோரும் சிங்கிள்ஸ்.

ஹீரோயின் தீப்தி சதி. பாரீனில் வேலை பார்த்து செட்டிலாக ஆசைப்படுபவர் இவர்.

நாயகியை பார்த்ததும் தினேஷ் காதலிக்கிறார்.

இதன் பின்னர் லண்டனில் வேலைக்கு செல்கிறார் தீப்தி. அப்போது தினேஷ் & நண்பர்களும் லண்டன் செல்கின்றனர்.

அங்கு நடந்த ஒரு பிரச்சினையால் தினேஷை வெறுக்கிறார் தீப்தி.

இறுதியாக சிங்கிள் கமிட் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தினேஷ் வழக்கம் போல் நடிக்க முயற்சித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

நாயகி தீப்தி தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்..

ஆனாலும் தினேஷிடம் இருந்து தப்பிக்க கடைசியாக அவர் எடுக்கும் முடிவுகள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கும்.

நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிரின் கவுண்டர் காமெடிகள் பல இடங்களில் சிரிப்பை வர வைத்தாலும் டபுள் மீனிங் காமெடிகள் முகம் சுழிக்க வைக்கிறது.

லண்டன் பட காட்சிகளை மிக அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ்.

ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான். பாடல்கள் எடுபடவில்லை. இன்று பாடல் ரசிக்கலாம்

ஆண்டனியின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

இரட்டை அர்த்த வசனங்களுடன் படம் எடுத்தால் அது சூப்பர் ஹிட் என சில இயக்குனர்கள் நினைப்பது தவறு.

காம நெடி இல்லாமல் காமெடியாக கொடுத்தால் இன்னும் நல்ல பெயர் எடுக்கலாம்.

சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சிங்கிள்ஸ் ரசிக்க நிறைய காட்சிகள் உள்ளன.

ஆக ‘நானும் சிங்கிள் தான்’… காதலிக்க ஆசை தான்

Naanum Single than review rating

எங்கெங்கும் காதல்…; ‘கேர் ஆஃப் காதல்’ விமர்சனம்

எங்கெங்கும் காதல்…; ‘கேர் ஆஃப் காதல்’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018ம் ஆண்டில் வெளியான C/O காஞ்சரபலம் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த C/O காதல்.

காதலர்கள் ரசிக்கும்படி கவிதையாக கொடுத்துள்ளனர்.

நான்கு காதல் கதைகளை ஒரு புள்ளியில் இணைத்துள்ளனர்.

பள்ளி காதல், கல்லூரி காதல், 30 வயது காதல் ஜோடி, 45 வயதுகளில் ஒரு ஜோடி காதல் கதை என படத்தை பிரிக்கலாம்.

50 வயதாகியும் திருமணம் செய்யாதவர் தீபன். இவர் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார்.

(இந்த தீபன் யார் தெரியுமா.? முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் என்ற பாடலுக்கு வருவாரே அவர் தான்…)

இவரது ஆபிஸ்க்கு அதிகாரியாக வருகிறார் மலையாளி பெண் சோனியாகிரி.

விதவையான சோனியாகிரிக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்படுகிறது.

அடுத்த காதல்…: மதுக் கடையில் வேலை செய்யும் தாடிக்கு (வெற்றி) அங்கு வரும் சலீமாவின் (மும்தாஜ்) மீது (முகத்தை கூட பார்க்காமல்) காதல் ஏற்படுகிறது.

அதாவது நாயகிக்கு சரக்கு பாட்டில் கொடுக்கும்போதெல்லாம் அவளது கண்களால் மட்டுமே ஈர்க்கப்படுகிறார் வெற்றி. நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

அதன் பின் நடக்கும் சம்பவமே இந்த காதல்..

பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிரேஸ் என்ற மாணவனுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல்.

ஒரு கட்டத்தில் இருவரையும் (ஸ்வேதாவின் அப்பா) பிரித்து டெல்லிக்கு அனுப்பி விடுகிறார்.

கார்த்திக் ரத்னமும் அயிராவும் பாம்பும் கீரியும் போல.. பின்னர் காதலராகி விடுகிறார்கள். இவர்கள் வேறு வேறு மதம் சார்ந்தவர்கள்.

இவர்களின் காதலுக்கு மதமே தடையாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தி தன் இசையை தென்றலாக கொடுத்துள்ளார்.
நான்கு காதல் கதையையும் ஒரே பாடலில் இணைத்தது ரசிக்க வைத்தது.

குணசேகரனின் ஒளிப்பதிவு காதலையும் காதல் கலைஞர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.

நான்கு முனைக் காதலையும் நச் என கொடுத்து திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஹேமாம்பர் ஜஸ்தி.

எவருடைய மனமும் நோகாமல் அழகான காதலர் தின விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக ‘கேர் ஆஃப் காதல்’… என்றென்றும் எங்கெங்கும் காதல்

Care of Kadhal review rating

கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 குறும்படங்களை இணைத்து அதை பெரிய படமாக தொகுத்து ‘குட்டி ஸ்டோரி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

எதிர்பாரா முத்தம்:

ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா?. இது தான் எதிர்பாரா முத்தம் பட அவுட் லைன்.

கெளதம் மேனன் நாயகனாக நடித்து அவரே இயக்கியும் இருக்கிறார்.

கெளதம் மேனன் மற்றும் அமலா பால் இருவரும் கல்லூரியில் நண்பர்கள்.

ஒரு பிரச்சனையால் பிரியும் இவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர்.

திருமணமாகி, வெளிநாட்டில் செட்டிலான மிர்ணாளினி (அமலா) ஆதியை (கௌதம்) சந்தித்தால் என்ன நடக்கும்? என்பதே மீதிக்கதை.

இந்த கதை ஓட்டத்தை எளிமையாக சொன்னாலும் பொறுமையை சோதிக்கின்றனர்.

அவனும் நானும்:

இயக்கம் : விஜய்

கல்லூரியில் படிக்கும் ப்ரீத்தி (மேகா ஆகாஷ்), தனது காதலன் விக்ரமிடம் (அமிதாஷ் பிரதான்) உறவு வைத்து கர்ப்பமடைகிறார்.

ஒரு கட்டத்தில், காதலன் விபத்தில் இறந்து விட, அதன்பிறகு மேகா ஆகாஷ் எடுத்த முடிவுகளே படத்தின் மீதிக் கதை..

க்ளைமாக்ஸ் காட்சிகளும் யாரும் யூகிக்க முடியா வண்ணம் எடுத்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம் கொடுத்த இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள்.

லோகம்:

இயக்கம்: வெங்கட் பிரபு ..

கம்ப்யூட்டரில் ஆன்லைன் கேம் விளையாடும் இளைஞன் வருண்.

ஆன்லைனில் விளையாட்டில் மறுபக்கம் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.

அந்த பெண்ணை வருண் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் விளையாட்டில் அவள் அவுட்டாகி விட, பெண்ணின் தொடர்பு இல்லாமல் போகிறது. இழக்கிறார் வருண்.

யார் அந்த பெண்.? மீண்டும் தொடர்பு உருவானதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

இந்த ஆந்தாலஜியில் லோகம் எபிசோட்தான் தான் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.்

வித்தியாசமான கதைக்காக இதை பார்க்கலாம்.

ஆடல் பாடல்

இயக்கம்: நலன் குமாரசாமி

விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் இருவரும் தம்பதிகள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை.

விஜய் சேதுபதிக்கு தனது செல்போனில் ஒரு பெண் தொடர்பு கிடைக்கிது. இறுதியில் தான் அந்த பெண் தன் மனைவி அதிதி பாலன் என தெரிந்து கொள்கிறார்.

விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்க அதிதி பாலனும் ஒரு தவறு செய்து விட்டதாக கூற இருவருக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது.

பின், இருவரும் இணைந்தார்களா.? என்பதே மீதிக் கதை.

விஜய் சேதுபதி தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கும் அதிதி பாலனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சரியாக சில இடங்களில் வொர்க் ஆகவில்லை.

ஆனால் இருவருக்கும் நல்ல கேரக்டர். எனவே நடிப்பிலும் குறையில்லை.

ஆக கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

Kutty story Review Rating

பெண்கள் பாதுகாப்பு…; ஆட்கள் தேவை விமர்சனம்

பெண்கள் பாதுகாப்பு…; ஆட்கள் தேவை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ME TOO மீ டூ… இதை 80% பெண்கள் சொல்லி வருகின்றனர். அந்தளவு பெண்கள் பாதுகாப்பின்மையால் தவிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கதைக்களம்…

ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்தி அவளுக்கு போதை ஏற்றி அவளை சீரழிக்கின்றனர்.

இந்த கும்பல் தலைவன் ஈசனுக்கு பக்க பலமாக இருக்கிறார் அரசியல்வாதி மைம் கோபி.

ஹீரோ சக்தி சிவன் & ஹீரோயின் சந்திரலேகா இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருக்கும் நிலையில் சந்திரலேகாவை அதே கும்பல் கடத்தி விடுகிறது.

ஹீரோ சக்தி சிவன் தன் தேடுதல் வேண்டிய துவங்குகிறார். தன் காதலியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இயக்குனர் & நாயகன் இருவரும் ஒருவரே. எனவே கேட்கவே வேண்டாம்.. தனக்காக நிறைய காட்சிகளை வைத்துள்ளார். சில காட்களில் பாராட்டும்படியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

நாயகி சந்திரலேகா மிகையில்லாத நடிப்பு. காதலிலும் சரி கடத்தலிலும் சரி அந்த காட்சிகள் இவருக்கு கை கொடுத்துள்ளன.

வில்லன் ஈசன் மற்றும் அரசியல்வாதி தம் கோபி இருவரும் கச்சிதம். வில்லத்தனத்தில் குறையில்லை்.

மற்றொரு வில்லன் ஆமோஸ் ஜாக் என்பவரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.. இனி இவருக்கான வாய்ப்புகள் பெருகும்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்த்திக் ராஜாவின் இசையை நம்பினாலும் நமக்கு ஏமாற்றமே. ஒரு முறை கேட்கும் ரக பாடல்கள்..

சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

கையில் எடுத்த கதையை இன்னமும் சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் தடுமாறிவிட்டார். காமெடி கலந்து சொல்லியிருந்தால் கூட எடுப்பட்டிருக்கும்.

மற்றபடி… பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது குற்றம். அதற்கு கடுமையான தண்டனை வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் டைரக்டர் சக்தி சிவன். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

ஆக… ஆட்கள் தேவை – பெண்கள் பாதுகாப்பு

Aatkal Thevai movie review and rating

More Articles
Follows