கலகலப்பு2 விமர்சனம்

கலகலப்பு2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, யோகிபாபு, விடிவி கணேஷ், ராதாரவி, முனீஷ்காந்த், மதுசுதன் ராவ், வையாபுரி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, சதீஷ், மனோபாலா, சிங்கமுத்து, ரோபோ சங்கர், சந்தான பாரதி, தளபதி தினேஷ், நந்திதா (கவுரவ கேரக்டர்) மற்றும் பலர்
இயக்கம் : சுந்தர் சி.
இசை : ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவு: யுகே செந்தில்
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு: குஷ்பூ

கதைக்களம்…

சுந்தர் சி படம் என்றால் காமெடி மேஜிக்தான். அதிலும் இந்த படத்திற்கு கலகலப்பு என்று டைட்டில் வைத்துவிட்டு விட்டார். அவரின் மேஜிக் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளதா? என்று பார்ப்போம்.

ஜெய்க்கு அவரின் பரம்பரை சொத்து ஒன்று காசியில் உள்ளது தெரிய வருகிறது.

அதை தேடி அங்கு செல்கிறார். அந்த இடத்தில் மேன்சன் நடத்தி வருகிறார் ஜீவா.

அது தெரியாமல் அங்கு சென்று தங்குகிறார் ஜெய். அப்போது அங்கு வரும் நிக்கி கல்ராணி மீது காதல்.
தன் தங்கையை பெண் பார்க்க வரும் சதீஷின் தங்கை கேத்ரீன் மீது ஜீவாவுக்கு காதல்.

இதனிடையில் ஜீவாவை ஒரு பண விஷயத்தில் ஏமாற்றியவரும், ஜெய்யை ஏமாற்றியதும் மிர்ச்சி சிவா என்று தெரிய வருகிறது.

எனவே இருவரும் சேர்ந்து சிவாவை தேடிச் செல்ல, அதன்பின்னர் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெய், ஜீவா இரண்டு நாயகர்கள். ஜெயக்கு நிக்கி ஜோடி. ஜீவாவுக்கு கேத்ரீன் ஜோடி.

இவர்களின் காதல் எந்த விதத்திலும் அவர்களுக்கும் ஒட்டவில்லை. நமக்கும் ஒட்டவில்லை. வருகிறார்கள். டூயட் பாடுகிறார்கள்.

நாயகிகள் இருவரும் இடையை இடையே கிளுகிளுப்பு ஏற்றுகிறார்கள்.

மிர்ச்சி சிவா இடைவேளையில் வருகிறார். அவரும் யோகிபாபுவும் வந்தபின்தான் படத்தின் காமெடி களை கட்டுகிறது.

யோகிபாபு மற்றும் சிங்கமுத்து காமெடி செமயாய் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இந்த கூட்டணி தொடர்ந்தால் இன்னும் ரசிக்கலாம்.

ரோபோ சங்கரின் அக்கா அவரது கணவர் சந்தானபாரதியை பார்த்து உங்க மாமா ஒன்னுமே பண்ணல என அடிக்கடி டபுள் மீனிங் காமெடி ஒரு பக்கம்.

இவர்களுடன் விடிவி கணேஷ், ராதாரவி, முனீஷ்காந்த், மதுசுதன் ராவ், வையாபுரி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, சதீஷ், மனோபாலா, சிங்கமுத்து, தளபதி தினேஷ் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது.
இரண்டாம் பாதியில் இவர்கள் நம்மை நன்றாகவே சிரிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சுந்தர் சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்தான் இதிலும் ஒளிப்பதிவு.

காசி மேன்சன், கலர்புல் லொக்கேஷன் என ரசிக்க வைக்கிறார். இரண்டு அழகான நாயகிகளையும் அழகாகவே காட்டிவிட்டார்.

ஹிப்ஹாப் ஆதியை நம்பி போனால் கொஞ்சம் ஏமாற்றம்தான். பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்ற பாடல் கொஞ்சம் பிடிக்கலாம்.

ஆர்ட் டைரக்டர் பொன்ராஜ் குமார் கவனிக்கவைக்கிறார்.

சுந்தர் சி படம் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம். அதை நம்பி போகலாம்.

ஆனால் முதல்பாதியில் காமெடி ரொமான்ஸ் என்ற பெயரில் நம் பொறுமையை சுந்தர் சி அதிகம் சோதித்து விட்டார்.

கலகலப்பு 2 கொஞ்சம் ரசிக்கலாம்

சவரக்கத்தி விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மிஷ்கின், ராம், பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் : ஜிஆர். ஆதித்யா
இசை : அரோல் கரோலி
ஒளிப்பதிவு: கார்த்திக் வெங்கட்ராமன்
எடிட்டிங்: ஜீலியன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: மிஷ்கின்

கதைக்களம்…

காலை முதல் மாலை 5 மணிக்குள் நடக்கும் ஒரு கதைதான் இதன் ஒன்லைன்.

ராம் முடி வெட்டும் தொழில் செய்பவர். இவரின் பிரதான ஆயுதமே சவரக்கத்தி தான். இவரின் மனைவி பூர்ணா. இவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

பூர்ணாவின் தம்பியின் திருட்டு கல்யாணத்திற்கு தன் குடும்பத்துடன் பைக்கில் செல்கிறார் ராம்.

அப்போது ஒரு சின்ன விபத்து. அந்த காரில் மிஷ்கின் இருக்கிறார்.

அப்போது மிஷ்கின் ஒரு பெரிய தாதா என்பதை தெரியாமல் அவரை கேவலமாக திட்டு விடுகிறார் ராம்.

இதனால் மிஷ்கினின் ஆட்கள் ராமை விரட்ட அவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

அதன் பின்னர் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நகைச்சுவையோடு பரிமாறியிருக்கிறார் டைரக்டர் ஆதித்யா.
சவரக்கத்தி வென்றதா? வெட்டுக்கத்தி வென்றதா? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ராம் யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். தன்னால் சண்டை போட முடியாது என்பது தெரிந்தாலும், தன் குழந்தைகள் முன் அவமானப்பட முடியாமல் திருப்பி அடிக்கும்போது அப்பா ஒரு ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.
ஒரு வரியில் சொன்னால் பிச்சை கேரக்டரில் பிச்சி எறிந்திருக்கிறார் ராம்.

இவருக்கு இணையான கேரக்டரில் மிஷ்கின். அடிதடி தாதா என வலம் வந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வதில் தன் கேரக்டரை உயர்த்தியிருக்கிறார்.

சின்ன சின்ன முகபாவனைகளால் மிஷ்கின் மிளிர்கிறார்.

காது கேளாத கேரக்டரில் பூர்ணா. தன் சொந்த குரலில் பேசி அப்பாவி பெண்ணாக மனதில் நிறைகிறார்.

கர்ப்பிணியாக இருந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்கள் அதகளம்.

இவர்களுடன் மிஷ்கின் அடியாட்களாக வரும் ஒவ்வொருவரும் செம. அதிலும் அந்த பச்சை டிசர்ட்க்காரர் கவனம் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மிஷ்கின் எழுதி பாடியுள்ள சவரக்கத்தி தங்ககத்தி பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். அரோல் கரோலி இசை ரசிக்க வைக்கிறது.

ஒரு சில இடங்களை சுற்றி சுற்றி காட்சிகள் வைத்திருந்தாலும் அதையும் போராடிக்காமல் அழகாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.

படத்தின் இயக்குனர் ஜிஆர். ஆதித்யா என்றாலும் முழுக்க முழுக்க மிஷ்கின் படம்தான். அவரது பாணியில் சவரக்கத்தியை பட்டை தீட்டியிருக்கிறார்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு சென்றால் ரசிக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் நம்மை கலங்க வைக்கும்.

சவரக்கத்தி.. தங்ககத்தி

விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராம் சரவணா, ராஜ்சூர்யா, ரெமோனா ஸ்டெஃபனி மற்றும் பலர்
இயக்கம் : வெற்றி மகாலிங்கம்
இசை : தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் சங்கர்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு: ஜமீல் சகீப், ஜாபர் சாதிக்

கதைக்களம்…

தல தளபதி ரசிகர்களும் அவர்களின் சண்டையும் அதன்பின்னர் சமாதானமும் இது படத்தின் ஒன்லைன் கதை.
விஜய் அஜித் ரசிகர்கள் இருவர் ஃபேஸ்புக்கில் விரோதியாக உள்ளனர்.

இதில் விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கும் அஜித் ரசிகர் அந்த பெண்ணிடம் தான் ஒரு விஜய் ரசிகர் என்று கூறிவிடுகிறார்.

அதன்பின்னர்தான் தன் அண்ணனின் விரோதியே அந்த அஜித் ரசிகர்தான் என தெரிய வருகிறது.

நீ எங்களையும் போல் விஜய் ரசிகராக மாறிவிடு. அப்படியென்றால் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என நாயகி சவால் விடுகிறாள்.

இதனிடையில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருந்த படங்களை ஒரு கும்பல் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது? அந்த கும்பலை கண்டுபிடித்தார்களா? அஜித் ரசிகர் விஜய் ரசிகராக மாறினாரா? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

visiri rival song

கேரக்டர்கள்…

‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணாதான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை “வால்ட்டு” (மேட்டர்) அடிக்க வேண்டுமென அவர் காதலிப்பது ரொம்ப ஓவர்தான்.

‘தளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இவர் படத்தின் 2வது நாயகன் என்றாலும் இவரை வில்லன் போல காட்டியிருக்கிறார்கள்.

ரெமோனா ஸ்டெஃபனி நாயகியாக நடித்துள்ளார். சில காட்சிகளில் தேர்ச்சி பெறுகிறார்.

அஜித் ரசிகரின் நண்பர்களாக வரும் ஒரு நபர் கவனிக்க வைக்கிறார்.

இவர்களைத் தவிர படத்தில் ஒரு சில கேரக்டர்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தன்ராஜ் மாணிக்கம் இசையில் தல தளபதி போட்டி பாட்டு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதம்.

அறிமுக நடிகர்கள், பட்ஜெட் ஆகியவையால் சிறு குறைபாடுகள் இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை ரொம்ப நீடிக்காமல் சொல்லிவிட்டார்.

டைட்டில் கார்டூ போடும்போது விஜய் அஜீத்தின் படங்களில் இருந்து ‘மாஸ் சீன்’களை பக்காவாக தொகுத்து மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் படம் முழுவதும் ஹீரோ வாய்ஸ் ஓவரில் பேரில் ஓவராக பேசிக் கொண்டே இருக்கிறார். குறைத்திருக்கலாம்.

பெரும்பாலான காட்சிகளில் டயலாக்குகளை விட பினன்னி இசை காதை கிழிக்கிறது. சில இடங்களில் பில்டப் மட்டுமே உள்ளது.

விசிறி… தல தளபதிக்காக பேசும்

படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஹீரோ விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.

இதனிடையில் நாயகி அம்ரிதாவை காதலிக்கிறார்.

இவர்கள் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை பல காலமாக இருக்கிறது.

ஆனால் மாமன் மச்சான் என அன்போடு வாழ நினைக்கின்றனர்.

ஒரு சூழ்நிலையில் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார் நாயகன்.

அங்கு சென்றபின்தான் சரக்கு, சாப்பாடு, அதிகாரம் என ஜாலியாக வாழ வேண்டுமென்றால் போலீஸ் ஆக வேண்டும் என தீர்மானிக்கிறார்.

அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார்.

அதன்பின்னர் லஞ்சம் கொடுத்து போலீஸ் ஆகிறார்.

போலீஸ் பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை கலவரமாக மாறி விடுகிறது.

அதன்பின்னர் என்ன செய்தார்? ஜாதி கலவரத்தை முற்றிலும் அழித்தாரா? ஜாதியை ஒழிக்க என்ன செய்தார் இந்த படை வீரன் என்பதே மீதிக்கதை.

DVAnL8iVwAAWO2_

கேரக்டர்கள்..

வேலை வெட்டி இல்லாத கிராம இளைஞர் மற்றும் போலீஸ் கேரக்டர் என இரண்டிற்கும் செம பிட்டாய் வாழ்ந்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

மாரி படத்தை விட இதில் பல மடங்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எக்ஸ் மிலிட்டர் மேனாக வருகிறார் பாரதிராஜா. சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் இவரது கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஜாதியை ஒழிக்க இவர் சொல்லும் வசனங்கள் நன்றாக உள்ளது.

துணிச்சலான பெண்ணாக அம்ரிதா. அழகாக நடித்து நம் மனதில் நிற்கிறார்.

சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். சிங்கம்புலி மற்றும் மகாநதி சங்கருக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

DVAnOlSVQAAJh4S

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அருமை. உள்ளது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி உள்ளது.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு துறுதுறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஜாதி பிரச்சினை, போலீஸ் என எங்கோ செல்கிறது.

ஆனால் கிளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று. இயக்குனர் தனாவை இறுதிக்காட்சிக்காகவே பாராட்டலாம்.

படைவீரன்… ஜாதியை ஒழிக்கும் வீரன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், டேனி, ராஜ்குமார், விஜி சந்திரசேகர் மற்றும் பலர்
இயக்கம் : ஆறுமுககுமார்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: ஸ்ரீ சரவணன்
படத்தொகுப்பு – ஆர். கோவிந்தராஜ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: 7சி எண்டர்டெய்ன்மெண்ட்

கதைக்களம்…

எமசிங்கபுரம் என்ற ஒரு ஊரின் இளவரசர் விஜய் சேதுபதி. கிராமத்து மற்றும் நகர மனிதர்களையே பார்க்காத ஒரு இடத்தில் இவர்களின் ராஜாங்கம் நடக்கிறது.

ஒரு சூழ்நிலையில் தன் சபதத்தை நிறைவேற்ற நண்பர்களுடன் சிட்டிக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை இவருக்கு ஏற்படுகிறது.

எனவே அங்கு வித்தியாசமான வேடங்களை ஏற்று அந்த காரியங்களை சாதிக்க நினைக்கிறார்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாயகி நிகாரிகாவை கடத்தி தன் எல்லைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

இதனால் தன் தோழியை தேடி காட்டுக்கு வருகிறார்கள் கவுதம் மற்றும் அவரது நண்பர் டேனி.

அதன்பின்னர் என்ன நடந்தது? தோழியை விஜய்சேதுபதியிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

DVAuqqfV4AEUHZb

கேரக்டர்கள்..

எந்த கேரக்டர் கொடுத்தாலும் வெளுத்துக்கட்டும் விஜய்சேதுபதி இதில் எத்தனை கேரக்டர்கள் கொடுத்த போதிலும் அனைத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

பேச்சு முதல் பாடி லாங்குவேஜ் வரை அனைத்திலும் காமெடி அதகளம் செய்திருக்கிறார் மக்கள் செல்வன்.

விஜய் சேதுபதியின் அம்மாவாக விஜி சந்திரசேகர். இந்த உறவையும் சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கௌதம் கார்த்திக் கேரியரில் இது ஒரு முக்கியமான படம். காமெடி எனக்கு கைவந்த கலை என டேனியுடன் சேர்ந்து செமயாய் ஸ்கோர் செய்துள்ளார்.

இவர்கள் வாண்டட்டாக வந்து விஜய்சேதுபதியிடம் மாட்டி கொள்ளும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்.

விஜய்சேதுபதியின் நண்பர்களாக ரமேஷ் திலக், ராஜ்குமார்.. இவர்களும் தங்கள் பங்குக்கு காமெடி கலாட்டா செய்துள்ளனர்.

நாயகி நிகாரிகாவுக்கு நிறைவான கேரக்டர்.

இன்னொரு ஹீரோயின் காயத்ரி. அவருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் கொடுத்திருப்பது ரசிக்கலாம்.

Captures

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஜஸ்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது. லம்பா லம்பா பாடல் குழந்தைகளை கவரும்.

விஜய்சேதுபதியை நம்பி குடும்பத்துடன் படத்திற்கு போகலாம் என்பதை மையக்கருவாக வைத்து அதை திறம்பட செய்திருக்கிறார் டைரக்டர் ஆறுமுககுமார்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.. ஜாலியாக ரசிக்கலாம்

மதுரவீரன் விமர்சனம்

மதுரவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி, மைம் கோபி, வேல ராமமூர்த்தி, பாலசரவணன் மற்றும் பலர்
இயக்கம் : பிஜி. முத்தையா
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா
படத்தொகுப்பு – பிரவீன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: பி.ஜி மீடியா ஒர்க்ஸ்

கதைக்களம்…

படத்தின் தலைப்பே சொல்லும் மதுரையில் நடக்கும் கதைக்களம் இப்படம்.

மதுரையில் இருந்து ஒரு தன் சின்ன வயதிலேயே மலேசியாவிற்கு செல்கிறார் சண்முகபாண்டியன்.

பெரியவன் ஆனதும் தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது அம்மாவுடன் அங்கு வருகிறார்.

ஆனால், தன் தந்தை சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளவே அங்கு வருகிறார்.
அத்துடன் தன் தந்தை உயிரை விட்டதும் நின்ற ஜல்லிக்கட்டையும் தன் தலைமையில் நடத்த முயற்சிக்கிறார்.

இதனிடையில் ஜாதியின் பெயரால் ஊரில் இரு தலைகள் மோதிக் கொள்கின்றனர். ஒருவர் வேலாராமமூர்த்தி. மற்றொருவர் மைம் கோபி.

இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினால் பல ஜாதி பிரச்சினைகள் உருவாகும் என தடுக்கின்றனர்.

இந்த பிரச்சினைகளை சண்முக பாண்டியன் எப்படி எதிர் கொண்டார்-? தந்தையை கொன்றவரை கண்டு பிடித்தாரா? ஆகியவையே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

சண்முகபாண்டியன் படத்தின் ஹீரோ இல்லை. கதையின் நாயகன். எனவே கதைக்கு எது தேவையோ? அதை செய்து இருக்கிறார்.

அவரின் உயரத்திற்கு ஏற்ற வகையில் அடிதடி என துவம்சம் செய்கிறார்.

ஆனால் டான்ஸ், ரொமான்ஸ், காமெடி ஆகியவற்றிலும் இன்னும் கவனம் தேவை.

சமுத்திரக்கனியும் சரி. அவரது வசனங்களும் சரி செம கம்பீரம். ஜல்லிக்கட்டுக்காகவும் விவசாயத்திற்காகவும் ஊரின் ஒற்றுமைக்காகவும் இவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.

கதைநாயகியாக மீனாட்சி. கதை தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார்.

பாலசரவணனனின் டைமிங் காமெடி நன்றாகவே கைகொடுக்கிறது.

இவர்களுடன் மாரிமுத்து, பி.எல். தேனப்பன், வேல ராமமூர்த்தி, மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

மொட்ட ராஜேந்திரன் இருந்தும் காமெடியில்லை. அவர் கபாலியை கலாய்ப்பதை மட்டுமே செய்துள்ளார்.

சண்முக பாண்டியனின் நண்பர்களாக வரும் அருண்ராஜா மற்றவர்களும் சிறப்பு.

சண்முக பாண்டியனின் தாய் மாமனாக வரும் யோகேஷ் கிருஷ்ணா நம் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு முதல் படம் என்றாலும் நடிப்பில் தேர்ச்சி தெரிகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கிராமத்து மண்வாசனை ரகம்.

பின்னணி இசை ஜல்லிக்கட்டு காளைக்கு கொம்பு சீவியது போன்ற ஒரு ஈர்ப்பு.

படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பி.ஜி முத்தையா தான்.
எனவே தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டங்களை காட்டி இரண்டாம் பாதியை ஓட்டி விட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தின் போது விஜயகாந்த், விஜய் கொடுத்த வீடியோக்கள் ஒரு பாடலில் வருகிறது.

முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் பின்பாதியில் குறைகிறது.

சமுத்திரக்கனியை கொன்றது யார்? என்ற ட்விஸ்ட் நன்றாக உள்ளது. ஆனால் அந்த வில்லன் முடிவு ரசிக்கும்படியாக இல்லை. அதிரடியாக கொடுத்திருக்கலாம்.

மதுரவீரன்.. ஜல்லிக்கட்டு காளை

More Articles
Follows