தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காழ் விமர்சனம்.. வீட்டை கட்டிப்பார்.!?
ஸ்டோரி…
ஆஸ்திரேலியாவில் தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கிறார் யுகேந்திரன் வாசுதேவன்.. இந்த தம்பதிகளுக்கு எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெருக்கனவு. இதனால் இவர்கள் லோன் எடுக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.. ஒருவனை நம்பி இவர்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைகின்றனர்..
இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கையில் அடுத்த பக்கம்…
நித்யா பாலசுப்பிரமணியனைக் காதலிக்கும் சித்தார்த் அன்பரசுவுக்கு குடியுரிமை (பிஆர்) பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.. பெறாவிட்டால் இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையில் தன் சொந்த நாட்டில் இருக்கும் வீட்டை விற்க முயற்சிகள் எடுக்கிறார்.. அது என்னவானது.?
இவர்களின் வாழ்க்கை என்னவானது? கனவு நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் யுகேந்திரனை பார்க்க முடிகிறது.. அவரது நிதான நடிப்பும் உடல் மொழியும் ரசிக்க வைக்கிறது… நாயகி மிமி கருப்பழகி அவரது இலங்கை தமிழ் ரசிக்க வைக்கிறது.
சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்ரமணியம் ஜோடி நடிப்பிலும் அழகிலும் கவனிக்க வைக்கிறது..
அஸ்வின் விஸ்வநாதனும் தன் நடிப்பில் ஈர்க்கிறார். ஆனால் படம் முழுவதும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய நாட்டில் தமிழர்களை வைத்து தமிழ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.. மேலும் இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் மொழியிலே பேசவிட்டு அழகு பார்த்திருக்கிறார்.
எலி வலையாக இருந்தாலும் சொந்த வலையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.. அதுபோல குடிசை வீட்டில் வசித்தாலும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாகும்..
ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசை வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் ஓகே ரகம் மட்டுமே..
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் அப்பொழுதுதான் கஷ்டம் புரியும் என்ன முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள்.. அதுபோல ஒரு வீடு கட்டுவதற்கு உலகில் எந்த மூளை பகுதியாக இருந்தாலும் வீடு கட்டுவது எளிதானது அல்ல.. அதிலும் கடன் பெற்று வீட்டை கட்டுவது எளிதான காரியம் அல்ல.
நிறைய காட்சிகளில் லைவ் ரெக்கார்டிங் செய்திருப்பது தெரிகிறது.. சில காட்சிகளில் மட்டும் டப்பிங்..? மொத்தம் 5 – 10 நபருக்குள் படத்தின் முழு படத்தையும் முடித்து இருக்கிறார்.. ஒரு சில காட்சிகளில் மட்டும் கூட்டம் கூட்டமாக நண்பர்கள் உறவினர்களை காட்டி இருக்கிறார்கள்..
லோன் ஏஜெண்டுகள் புரோக்கர்கள் இவர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு விழிப்புணர்வு படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.
Kaazh movie review