தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காடுவெட்டி திரை விமர்சனம்
ஸ்டோரி…
நகரத்தில் நடக்கும் காதலுக்கும் கிராமத்தில் நடக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்..
நகரத்தில் வாழும் காதல் ஜோடிக்கு பெரும்பாலும் பிரச்சனைகள் இல்லை.. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் படிப்பறிவு இவை இரண்டும் தான் பெற்றோர்களால் கருதப்படும்.
ஆனால் அதே காதல் ஜோடி ஒருவேளை கிராமத்தில் வசித்து வந்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் சமூகத்தில் ஏற்படும் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இத்துடன் நடுநாட்டான் ஆர் கே சுரேஷ் செய்யும் சமூக சேவைகள்.. கிராமத்து மக்களுக்கு அவர் உறுதுணையாக நிற்கும் ஊர் தலைவன்.. ஒரு கட்சித் தலைவனின் படைத் தளபதி என்ற கமர்சியல் கலந்து இந்த காடுவெட்டியை தந்திருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.
கேரக்டர்ஸ்…
ஆர். கே. சுரேஷ் – குரு
சங்கீர்த்தனா – தாட்சாயினி
விஷ்மியா – ஆர். கே. சுரேஷ் மனைவி
சுப்ரமணியசிவா – ராஜமாணிக்கம்
அகிலன்.
ஆடுகளம் முருகதாஸ்
ஆதிரா
சுப்ரமணியன்
பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிய ஆர் கே சுரேஷ் இதில் கதையின் நாயகனாக மிரட்டி இருக்கிறார்.. முறுக்கு மீசை கம்பீரத் தோற்றம் குரு கேரக்டருக்கு கெத்து காட்டி இருக்கிறார் ஆர் கே சுரேஷ்..
ஒரு சில காட்சிகளில் கதை ஓட்டத்திற்கு வசனங்கள் உதவினாலும் கதைக்கு மீறிய வசனங்கள் கட்சி சார்பாகவே திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..
ஆர் கே சுரேஷின் மனைவியாக நாயகியாக விஷ்மியா.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார்.
காதலியாக சங்கீர்த்தனா.. கிராமத்திலும் நகரத்திலும் இவரது கேரக்டர் பலிச்சிடுகிறது..எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..
சுப்ரமணிய சிவா.. மற்ற நடிகர்களை காட்டிலும் இவரது தோற்றத்திலே மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிட்டி டாடி கிராமத்து அப்பா என இரு தோற்றங்களிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகை இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அகிலன்,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா &
சுப்ரமணியன் ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றது..
டெக்னீசியன்ஸ்…
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்.
ஒளிப்பதிவு – M. புகழேந்தி
பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.
கலை இயக்கம் – வீரசமர்
எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
நடனம் – தினேஷ்.
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – மஞ்சள் ஸ்கிரீன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம்.
சிட்டி காதலை விட கிராமத்து காதல் ரசிக்கவும் வைக்கிறது.. சிட்டி காதலில் சினிமாத்தனமும் கிராமத்து காதலில் யதார்த்தமும் நிறைந்திருக்கிறது..
சாதிக் இசையமைப்பாளராக அறிமுகம்.. பாடல்களும் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது…சாமி பாடல் ஒரு சாதி பிரிவினரின் தேசிய பாடலாக மாறும்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மிரட்டல்.. சில இடங்களில் ஓவர் பில்டப் ஆகவும் அமைந்துவிட்டது.
சிட்டி சப்ஜெக்ட் கிராமத்து மண்வாசனை என இரண்டுக்கும் ஏற்ப அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி..
தயாரிப்பு : மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
காடுவெட்டி படத்தின் டைட்டில் கார்டு வரும்போது பல எச்சரிக்கை வசனங்கள் இடம்பெறுகிறது.. கதை கதாபாத்திரங்கள் கற்பனை.. யாரையும் குறிப்பிடுவனல்ல என சொல்லப்பட்டாலும் முக்கியமாக பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஆகிய கட்சித் தலைவர்கள் நினைவுபடுத்துவதாக உள்ளது
முக்கியமாக காடுவெட்டி கதாபாத்திரம் குருவை நினைவுபடுத்தும் கேரக்டராகவே அமைந்திருக்கிறது..
முக்கியமாக படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் கட் செய்யப்பட்ட மியூட் செய்யப்பட்டுள்ளது.. வசனங்கள் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என சென்சாரில் கட் செய்யப்பட்டுள்ளது.
நாடகக் காதலை வளர்க்கும் ஒரு கட்சி பிரிவினரையும் சாடியிருக்கிறார் காடுவெட்டி..
ஆக காடுவெட்டி.. சாதி கட்சி பிரச்சாரம்..
Kaaduvetti movie review