சூப்பர் முயற்சி… சொதப்பிய ஆக்டிங்..; ஜாங்கோ விமர்சனம்

சூப்பர் முயற்சி… சொதப்பிய ஆக்டிங்..; ஜாங்கோ விமர்சனம்

ஒன்லைன்..

டைம் லூப் என்ற கான்செப்டில் இந்தியாவில் உருவான முதல் படம் தான் இந்த ஜாங்கோ.

கதைக்களம்..

டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஆனால் மாமியார் மருமகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஒருநாள் சதீஷ் காரில் செல்லும்போது, வானத்தில் இருந்து ஒரு எரிக்கல் பூமியில் விழுவதை பார்க்கிறார். அதன் கதிர் வீச்சு இவர் மீது விழுகிறது. (மற்றொருவர் மீதும் அந்த கதிர் வீச்சு விழுகிறது. அது ட்விஸ்ட்)

இதனால் டைம் லூப்பில் மாற்றிக் கொள்கிறார் சதீஷ். சதீஷின் வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடந்த நிகழ்வுகள் தினம் தினம் ஒரே மாதிரியாக நடக்கிறது இவருக்கு மட்டும்.

இந்த நிலையில் மனைவி மிருணாளினியை சிலர் கொல்ல வருவது இவருக்கு தெரிய வருகிறது. இதனை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சிக்கிறார்.

இவர் மனைவியை அந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினால் தன்னால் டைம் லூப்பில் இருந்து வெளியே வரமுடியாது. இவர் வந்தால் தன் மனைவியை காப்பாற்ற முடியாது.

அவர் மனைவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஹீரோ சதீஷ்குமாருக்கு இது முதல் படம். முதல் படத்தில் இப்படி ஒரு கேரக்டரை ஏற்பது சவால்தான்.

ஒட்டு மொத்த கதையின் மூலக் கருவை தன் தோளில் சுமந்துள்ளார். ஆனால் அதற்குண்டான நடிப்பை அவர் முழுவதுமாக கொடுக்கவில்லை.

ஏதோ போற போக்கில் டயலாக்குகள் பேசி செல்கிறார். நாயகி மிர்ணாளினி. தற்போது எனிமி, எம்ஜிஆர் மகன் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் இன்னும் நடிப்பில் மெச்சூரிட்டி இல்லை.இவர்களின் காதலையும் சரியாக சொல்லவில்லை இயக்குனர்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் நண்பர்களாக ரமேஷ் திலக், மற்றும் தங்கதுரை, டேனியல் பாப் ஆகியோர் வீணடிக்கப்பட்ட கேரக்டர்கள். நியூஸ் ரீடர் அனிதா சம்பத் கேரக்டரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

இதில் போலீசாக வரும் கருணாகரன் மட்டும் கொஞ்சம் தேறிவிட்டார்.

விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் வில்லன் ஹரீஷ் பெராடி ஆகியோர் தங்கள் நடிப்பில் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்..

டைம் லூப் என்பதால் திரும்ப திரும்ப காட்சிகள் வரத்தான் செய்யும். அதை அழகாக படமாக்கியிருக்கலாம். தீபா அக்கா வரும் காட்சிகள் நாயகனுக்கு எப்படி தெரியுமோ? அப்படிதானே அடுத்த நாட்களில் தெரிய வேண்டும். ஆனால் அது மாறி மாறி வருகிறது.

முதல் நாள் செக்யூரிட்டி பேசும் காட்சிகள் அடுத்த நாள் காட்சியில் சரியாக காட்டப்படவில்லை. இப்படி முதல் பாதியில் நிறைய சோதித்து விட்டார் இயக்குனர். ஆனால் 2ஆம் பாதியில் கதை ஓட்டத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்.

கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சான் லோகேஷி எடிட்டிங் முதல் பாதியில் சொதப்பல்.

ஜிப்ரானின் பின்னனி இசை நிஜமாகவே படு மிரட்டல். அடுத்த என்ன நடக்கப் போகிறது என ஏங்க வைத்துள்ளது-

நிறைய காட்சிகளில் வசனங்கள் நான் சின்க் ஆக இருக்கிறது. முக்கியமாக மிருளாளினி பேசும் காட்சிகள் நான் சின்க் ஆகவுள்ளது.

வேற்று கிரக ஆராய்ச்சி, சயின்ஸ் பிக்ஷன், செயற்கை இதயம், டைம் லூப், என சூப்பரான பாய்ண்ட்டுக்களை வைத்துள்ளார் இயக்குனர். ஆனால் தரமான கிராபிக்ஸ் காட்சிகள் போதவில்லை. மேக்கிங்கில் இன்னும் கவனம் வேண்டும். நடிகர்களின் தேர்வும் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம்.

ஆக… ஜாங்கே.. இந்த டைம் லூப்பில் சிக்காமல் சென்று பாருங்கள்…

Jango movie review and rating in tamil

Related Articles