தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜமா விமர்சனம் 3.5/5.. ஜமா-ய் கூத்து
‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும்.. பெண் வேடம் அணியும் ஆடவனின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் இது
நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை அப்படியே யதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்..
ஸ்டோரி…
பாரி தந்தை கூத்துப் பார்க்க அடிக்கடி செல்கிறார்.. தெருக்கூத்து மீது ஆர்வம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இவரே கலைஞராகவும் மாறி மக்களை மகிழ்விக்கிறார்.. ஜமா என்ற குழுவை அமைத்து மக்களின் ஆஸ்தான கலைஞராகிறார்.. ஒரு கட்டத்தில் நண்பர்களின் பொறாமையால் களையிழந்து இறக்கிறார்.
ஜமா என்ற கலைக்குழுவுக்கு தற்போது வாத்தியாராக சேத்தன் இருக்கிறார்.. என்னதான் சிறந்த கலைஞராக இருந்தாலும் ஒரு பக்கம் மதுவுக்கு அடிமையாகிறார்..
எனவே தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் படாதபாடு படுகிறார்.. தங்களுக்கு சொந்தமான நிலத்தை கூட விற்று அதன் மூலம் கலைஞர்களை ஒன்று சேர்க்க நினைக்கிறார்..
ஆனால் ஊர் மக்கள் யாரும் இவரை மதிக்கவில்லை.. ஒரு கட்டத்தில் சேத்தன் மகள் அம்மு அபிராமியின் காதலைக் கூட நிராகரிக்கிறார்..
அதன் பிறகு நடந்தது என்ன? ஜமா குழுவை கைப்பற்றினாரா? காதலியை கரம் பிடித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கி கதை நாயகனாக நடித்துள்ளார்.
சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் படத்திலேயே ஒரு இயக்குனராகவும் கலைஞராகவும் உயர்ந்து நிற்கிறார் பாரி இளவழகன்.. பெண் வேடமிட்டு குந்தி தேவியாகவும் பிறகு அர்ஜுனனாக இவர் மாறும் காட்சிகள் ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்கும் காட்சிகள் ஆகும்.. பெண்களைப் போல நளினம் வெட்கம் என அனைத்தையும் கற்றுத் தன் உடல் மொழியை கூட மாற்றி இருக்கிறார் இயக்குனர்.
30 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து வந்தாலும் நடிகர் சேத்தனுக்கு இந்த படம் பெரும் பெயரைப் பெற்று தரும்.. கிராமத்துக் கலைஞர்களுக்கே உரித்தான திமிரும் இவர் கண்களில் வெளிப்படுகிறது..
காதலனுக்காக அப்பனையே தூக்கி எறியும் அம்மு அபிராமி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.. ஆனால் அதற்காக அப்பனை இப்படியா திட்டுவது? என்ற கேள்வி எழுகிறது.
பூனை என்ற கேரக்டரில் வரும் வசந்த் தன் கேரக்டரை உணர்ந்து ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார்.
இவரைப் போல கூத்துக் கலைஞனாக வரும் மாரிமுத்து உள்ளிட்டோரும் ரசிக்க வைக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
ஒரு சாதாரண கதைக்கே தன் இசையால் உயிரோட்ட முடியும் என நூற்றுக்கணக்கான படங்களில் நிரூபித்தவர் இசைஞானி இளையராஜா.. இந்தப் படத்தில் கலையும் தெருக்கூத்தும் இணைந்திருப்பதால் தன் இசை மூலம் உயிரூட்டி உணர்வூட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இசைஞானி..
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில்.. எந்த சினிமாத்தனமும் கலக்காமல் தெருக்கூத்து பாடலை வைத்து அதற்குப் பின்னணி இசை கொடுத்து தெறிக்க விட்டிருக்கிறார் இளையராஜா.. அவர் நினைத்திருந்தால் காந்தாரா பாடல் போல கொடுத்திருக்கலாம்.. ஆனால் இயக்குனரின் படைப்பாற்றலை அறிந்து இசையமைத்திருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா.. திருவண்ணாமலை மக்களை அவர்களின் வாழ்வியல் முறையை தன் கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார்
தெருக்கூத்து கலைஞர்கள் அவர்களின் ஒப்பனை அனைத்தையும் அப்படியே (சினிமா ஒப்பனை இல்லாமல்) அழகாக காட்டி இருக்கின்றனர் மேக்கப் கலைஞர்கள்.
‘ஜமா’ படத்தை ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது…
இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜமா படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான “பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி” நிறுவனம் வாங்கியுள்ளது..
ஆக எந்த சினிமாத்தனம் இல்லாமல் ஒரு டாக்குமென்டரி கதை போல அமைத்து அதற்கு தெருக்கூத்து வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.
Pari ilavazhagans Jama movie review