இதயத்தின் பக்கம்.. இறுதி பக்கம் விமர்சனம் 4/5

இதயத்தின் பக்கம்.. இறுதி பக்கம் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. நாவல் கதை பாணியில் ஒரு த்ரில்லர் பயணம்.

மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கதைக்களம்..

கதையின் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன். இவர் பிரபல எழுத்தாளர். இயல் என்ற பெயரில் தான் சந்தித்த அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக நாவலாக எழுதுபவர்.

ஒரு நாவல் எழுதவேண்டும் என்றால் தானே அந்த கேரக்டராக நம் நிஜவாழ்வில் மாற வேண்டும் என நினைப்பவர்.

இவர் தன் வீட்டில் தனியாக இருக்கும் போது உதவி கேட்டு ஒரு நபர் வருகிறார். இவரும் உள்ளே அனுமதிக்க திடீரென அந்த மர்ம நபர் அம்ருதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுகிறார்.

எனவே இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன்.

இது கூலிக்காக கொலை செய்யும் கூட்டம் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் ராஜேஷ். ஆனால் கொலைக்கான நோக்கம் என்ன? யார் கொலை செய்தார்கள்..? அப்படி என்ன குற்றம் செய்தார் நாவலாசிரியர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இயல் என்றால் இயற்கை என்ற பொருள் உண்டு. எனவே தன் எழுத்துக்களை இயற்கையாகவே காட்டியுள்ளார். அதாவது செயற்கையாக இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் அம்ருதா.

இவரின் குரல் படத்தின் பெரிய பலம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக அழகான உச்சரிப்புடன் உள்ளது. அப்படியொரு வாய்ஸ் ஓவரில் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

நல்ல கதையாக இருந்தால் அந்த வாய்ப்புகள் இனி இவரைத் தேடி வரும்.

இன்ஸ்பெக்டராக ராஜேஷ். நான் ஓவர் திங்கிங் ஆள் கிடையாது. என் அப்பா போலீஸ். அவர் இறந்துவிட்டதால் எனக்கு இந்த வேலை கிடைத்துவிட்டது. அதில் என்னால் முடிந்தவரை நேர்மையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறேன் என இவர் ஜெனிபரிடம் சொல்லும்போது யதார்த்தமாக இருக்கிறது.

காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் சரியான தேர்வு. காதலியை துரத்துவதும். பின்னர் விலகுவதும்.. அதன்பின்னர் கூடுவதும் என யதார்த்த நாயகனாக தெரிகிறார்.

காமமா? காதலா? என்ற தவிப்பில் இவர் காதலியை கைவிடும் காட்சிகளில் ஆண்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம். (சில ஆண்கள்.. ஹிஹிஹி)

இவரைப்போல மற்ற கேரக்டர்களில் வரும் நபர்களும் சரியான நடிப்பை கொடுத்துள்ளனர். எங்குமே மிகைப்படுத்தப்படாத நடிப்பை காணலாம்.

டெக்னிஷியன்கள்..

படத்தின் பின்னணி இசையும் வசனங்களும் பாராட்டும் வகையில் உள்ளது. ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை நன்றாக உள்ளது. கூடுதல் கவனத்தை பெறும்.

பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. காட்சிகளின் லைட்டிங் சென்ஸ் நன்றாக உள்ளது.

இதுபோன்ற திரைக்கதைகள் நம்மை சில நேரத்தில் குழப்பி விடலாம். அண்மையில் க் என்ற படம் கொஞ்சம் அதுமாதிரிதான். ஆனால் 2 முறை பார்த்தால் படம் புரியலாம்.

இந்த படத்தில் கதையை பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன்.

இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் என்பவருக்கு இது முதல் படம் என அவரே சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.. யதார்த்த கதை.. அதில் நாவல்… என அழகாக திரைக்கதை அமைத்துள்ளார்.

படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் இருப்பதால் எதையும் சொல்ல இயலாது. அதுவும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

கொலைக்கான காரணத்தில் ஒரு மைனஸ் ஒன்று உள்ளது என்றாலும் அதை சொன்னாலும் படத்தின் ட்விஸ்ட் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அதை விட்டு விடுகிறோம்.

கொலையாளி என்றாலும் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறோம்.

ஆக.. சில படங்கள் நம் இதயத்திற்கு நெருக்கமான பக்கத்தில் இருக்கும். அந்த வகையில் இறுதிபக்கம்.. நம் இதயத்தின் பக்கம் எனலாம்.

Iruthi Pakkam movie review and rating in tamil

கொக்கியில் சிக்கியதா..? வரிசி விமர்சனம்

கொக்கியில் சிக்கியதா..? வரிசி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. வரிசி என்றால் கொக்கி என பொருள்

படத்தின் இயக்குனர் கார்த்திக் தாஸே கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, மனோஜ், ஜெயஸ்ரீ, கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

ஐடி கம்பெனியில் பணிபுரியும் பெண் ஒருவரை ஒரு நபர் கடத்தி கற்பழித்து கொலை செய்துவிடுகிறான். இந்த வழக்கை விசாரிக்கிறார் சிபிஐ கிருஷ்ணா.

அனுபமா தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உள்ள 4 பிள்ளைகளை தன் பிள்ளை போல வளர்க்கிறார். நாயகன் கார்த்திக் தாஸ், சப்னா, மனோஜ், மற்றும் கார்த்தி ஆகியோரே.

இவர்கள் ஐடி துறையில் சிறந்த வல்லுனர்களாக விளங்குகிறார்கள். இதனால் இவர்களால் ஒரு சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க இயல்கிறது.

இதில் கார்த்திக் தாஸும் சப்னாவும் அனுபமாவுக்கு தெரிந்தே காதலிக்கிறர்கள். இவர்களின் பக்கத்து வீட்டு திருமணமான மதுமிதாவுக்கு கார்த்திக் மீது ஒரு கண்.

விரைவில் கார்த்திக் மற்றும் ஷப்னா திருமணம் செய்ய நினைக்கிறார்கள். அந்த கட்டத்தில் சப்னாவும் கடத்தப்படுகிறார்.

சப்னாவை கடத்தியவர் யார்.? சிபிஐ கிருஷ்ணா இந்த வழக்கை எப்படி கண்டுபிடித்து முடித்தார்.? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் இயக்குனர் இருவரும் ஒருவரே கார்த்திக் தாஸ். தன் முதல் படத்திலேயே இந்த ரிஸ்க் தேவையா? ஆக்சனில் நன்றாக நடித்தாலும் இன்னும் போதுமான முகபாவனைகள் இல்லை. ரொமான்ஸ் காட்சியும் சிறப்பாக இல்லை.

ஆனால் ஒரு இயக்குனராக ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ள கார்த்திக் தாஸை நிச்சயம் பாராட்ட வேண்டும். தன் மேல் பழிவிழாமல் இவர் செய்யும் திட்டங்கள் பலே ஐடியா.

நாயகி சப்னா தாஸ் நடிப்பிலும் அழகிலும் தன்னை இன்னும் மெருகென்ற வேண்டும். சிபிஐ அதிகாரி கிருஷ்ணா கொடுத்த கேரக்டரில் கச்சிதம். ஆனால் இன்னும் கம்பீரம் போதவில்லை.

நண்பனாக மனோஜ் மற்றும் இவரின் காதலி ஜெயஸ்ரீ ஆகியோர் ஓகே.

மதுமிதா ஏன் படத்தில் நடித்தார்? என்பது அவருக்கே வெளிச்சம். இவரின் காட்சிகளை தாராளமாக வெட்டியிருந்தால் படத்தின் நீளம் குறைந்திருக்கும்.

முதல் பாதியில் தேவையில்லாத ஏகப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார் இயக்குனர். எனவே இரண்டாம் பாதியில் கதை சொல்கிறார். அதுவும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் வேற.

பாலியல் குற்றங்கள்.. காவல்துறை விசாரணை என வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் அதை ஐடி தொழில்நுட்ப உதவியுடன் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. எனவே எடுத்த முயற்சியை பாராட்டலாம்.

மிதுன் மோகன் தன் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். லைட்டிங் சரியில்லையோ என்னவோ? படத்துடன் ஒன்ற முடியவில்லை.

நந்தாவின் இசையில் ஒரு பாடல் ஓகே. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை சில இடங்களில் நம்மை நிமிர வைக்கிறது.

பெண்களை காம பொருளாக பார்க்கும் சில கொடூரர்களின் முகத்திரைகளை இந்த படத்தில் கிழித்திருக்கிறார் இயக்குனர். அதிலும் காவல்துறைக்கே சவால் விடும் விதத்தில் படத்தை கார்த்திக் தாஸ் முடித்திருப்பது சபாஷ் ரகம்.

Varisi movie review and rating in tamil

உ(ரு)த்ர தாண்டவம்..; உத்ரா விமர்சனம்

உ(ரு)த்ர தாண்டவம்..; உத்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் தரிசிக்க அம்மன் படம் வந்துள்ளது. இனி அம்மன் திருவிழா தியேட்டர்களில் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.

இந்த படம் இந்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

கதைக்களம்..

வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை. அங்கு திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.

அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன-? என்பதே இந்த உத்ரா.

கேரக்டர்கள்..

கல்லூரி ஜோடிகள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர். ஆக்சன் காட்சிகளில் ஓகே ரகம்தான்.

இதில் நடிகை கௌசல்யா அம்மனாக நடித்துள்ளார். அமைதியான அழகான அம்மனாக வந்து செல்கிறார். சில அட்வைஸ்களும் செய்கிறார்.

கதையின் நாயகி உத்ராவாக ரக்ஷா நடித்துள்ளார். ரக்ஷாவை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ப்ளாஷ்பேக்கில் அம்மனுக்காக உருகுவது முதல் பேயான பின்னர் அம்மனுடன் மோதுவது என தன் நடிப்பை அழகாக காட்டியுள்ளார். காதல் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது.

அதுபோல் தன் காதலுக்காக ஊர் பெரியவர்களை எதிர்ப்பதாகட்டும் அதே காதலனுக்காக ஊர் மக்களிடம் கெஞ்சுவதாகட்டும் இரண்டிலும் ரசிக்க வைக்கிறார் ரக்ஷா. ஹீரோவுக்கு பெரிதாக வேலையில்லை. பாவம்.

வில்லனாக வரும் மாசி தன் நடிப்பில் மிரட்ட முயற்சித்துள்ளார். ஆனால் இவர் ப்ளாஷ்பேக்கிலும் அதே போல உள்ளார். பின்னர் வரும் காட்சியிலும் அதே இளமையுடன் உள்ளார். அதுஎப்படி..? மற்றவர்களுக்கு மட்டும் வயதாகிவிட்டதோ…??

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரிக்க நவீன் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். சாய்தேவ் இசை அமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. இரண்டாம் பாதியில்தான் படமே தொடங்குகிறது எனலாம். பாடல்களும் பின்னணி இசையும் ஓகே.

காஞ்சனா போன்ற நிறைய படங்களில் காட்டப்பட்ட காட்சி இதிலும் உள்ளது. வில்லன் கோயில் எல்லைக்குள் ஒளிந்துக் கொள்வார். அங்கே பேய் (தீய) சக்தியால் வரமுடியாது. அப்படி என்றால் கடவுளின் எல்லை கோயில் அளவுதானா..? பேய்களுக்கான எல்லைதான் மிகப்பெரியதா.? இவை எல்லாம் பேய் பட இயக்குனர்களுக்கே வெளிச்சம்..

லோ பட்ஜெட்டில் படம் என்றாலும் அதற்கேற்ப கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்துள்ள இயக்குனர் நவீன் கிருஷ்ணாவை பாராட்டலாம்.

முன்னாள் பத்திரிகையாளரான நவீன் ஏற்கெனவே நெல்லை சந்திப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த உத்ரா… உ(ரு)த்ர தாண்டவம்

Uthra movie review and rating in tamil

உறங்கிய உண்மைகள்.; ஊமை செந்நாய் விமர்சனம்

உறங்கிய உண்மைகள்.; ஊமை செந்நாய் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்ஜுனன் ஏகலைவன் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சினிமா ஊமைசெந்நாய்.

கதைக்களம்..

மைக்கேல் தங்கதுரை படத்தின் நாயகன். இவர் ஒரு டாக்டராக இருக்கிறார். அதன்பின்னர் ஒரு பிரச்சினையில் ஜெயிலுக்கு செல்கிறார். (இந்த தகவல்கள் படத்தில் காட்சியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இதன்பின்னர் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் மைக்கேல். இவரின் முதலாளி கஜராஜ். (இவர் ஒரு ரிட்டையர்டு ஆபிசர்)

மினிஸ்ட்ரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை கைக்கேலிடம் ஒப்படைக்கிறார் கஜராஜ்.

மைக்கேல் பார்க்கும் வேலை அவரது காதலி ஷனமுக்கு பிடிக்கவில்லை.

மேலும் கொடுக்கப்பட்ட உளவு வேலையில் தன் முதலாளியே தன்னிடம் பொய் சொல்லியிருப்பதை அறிந்தபின் அதிலிருந்து விலகுகிறார் மைக்கேல்.

மேலும் ஜெயக்குமாருக்கும் போன் செய்து உங்களை சிலர் பாலோ செய்கிறார்கள் என சொல்லிவிடுகிறார்.

இதனால் இவர் பிரச்சினைகளை சந்திக்கிறார். மைக்கேலின் காதலி சனம் ஷெட்டியைக் கடத்தி விடுகிறார்கள்.

அதன்பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

பர்மா படத்தில் அசத்திய நாயகன் மைக்கேல்தான் இப்பட நாயகன். ஆள் ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஷனம் ஷெட்டியுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கிறார். ஆனால் படம் முழுக்க சோகமாகவே இருக்கிறார் மைக்கேல். இது நெருடலை ஏற்படுத்துகிறது.

சனம் ஷெட்டி… அழகும் திறமையும் நிறைந்த நடிகை. ஆனால் இந்த படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார். இந்த படத்தில் முக்கியமான பெண் கேரக்டர் இவர் மட்டுமே என்பதால் மனதில் நிறைகிறார் ஷனம். மற்றவர்கள் எல்லாம் ஆண்களே என்பதால் கொஞ்சம் போர் தான்.

பெட்ரோல் பங்க் ஓனர் கேரக்டர் கச்சிதம். இவரது மனைவி மகள் கேரக்டர்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் செல்போனில் பேசும் இவரது கீப் பேசும் டயலாக்குகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

டெக்னீஷியன்கள்…

படத்தின் வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகள் மிஷ்மின் பாணியை நினைவுப்படுத்துகிறது. கிட்டதட்ட ஜீனியர் மிஷ்கின் இயக்கியுள்ளது போல் உள்ளது.

ஒளிப்பதிவு ரசிக்கத்தக்க வகையில் உள்து. சிவாவின் இசையும் பின்னணி இசையும் ரசிக்கலாம்.

பெரிய கண்டையினருக்குள் நடக்கும் பைட் சீனை ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியுள்ளதால் பாராட்டலாம். அதுபோல் கிளைமாக்ஸில் வரும் விவசாய நில பைட் சீன் வித்தியாசமான சிந்தனை. ஒளிப்பதிவில் அதற்கான மெனக்கெடல் தெரிகிறது.

ஆனால் இன்னும் பசுமையான லொக்கேஷனில் கவனம் செலுத்தியிருந்தால் பார்க்க நிறைவாக இருந்திருக்கும்.

பொதுவாக க்ளைமாக்ஸில் ஹீரோதான் வருவார். ஆனால் இதில் இரண்டு கும்பல் அடித்துக் கொள்கிறது. அட என்னய்யா இது என கேட்கத் தோன்றுகிறது. அதன்பின்னரே ஹீரோ வருவது சற்று ஆறுதல்.

கிச்சனில் ரொமான்ஸ் நடக்கும் என எதிர்பார்த்தால் திடீரென ஹீரோவுக்கு முதுகு வலிக்கு மசாஜ் செய்கிறார் ஷனம். திடீரென திடீரென அடுத்த காட்சி வருவது ரசிக்கத்தக்க வகையில் இல்லை.

படத்தின் பாதி கதைகள் காட்சியாகவே இல்லை. எல்லாம் பேச்சுவாக்கில் உள்ளது. காட்சிப்படுத்த பட்ஜெட் பத்தவில்லையா? என தெரியவில்லை.

ஹீரோ ஒரு டாக்டர்… ஜெயிலுக்கு போனது.. நாயகியுடன் காதல் என பலவற்றை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிட்டனர். அதை தவிர்த்திருக்கலாம். (ரேடியோவில் கேட்பது போல உள்ளது.)

மினிஸ்டர் லெவலில் டார்ச்சர்.. கள்ளக்காதலுக்கு உளவு பார்ப்பது, ரவுடியிசம் என திடீரென கதைக்களம் மாறுவதால் காட்சிகளில் அழுத்தம் இல்லை

கிட்டத்தட்ட த்ரில்லர் வகையான கதையை கொடுக்க நினைத்து அதை சொன்ன விதத்தில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன்.

ஆக… இந்த ஊமை செந்நாய்.. உறங்கிய உண்மைகள்..

Oomai Sennaai movie review and rating in tamil

சகதி சாலையில் சாகச சர்க்கஸ்..; மட்டி விமர்சனம்.. 4/5

சகதி சாலையில் சாகச சர்க்கஸ்..; மட்டி விமர்சனம்.. 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. இந்திய சினிமாவில் முதன்முறையாக மண் சாலையில் ஒரு ஜீப் பந்தயம். இந்த படம் இந்தியாவில் மட்டும் ஆறு மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை LOW BUDGET KGF MOVIE என்று சொன்னால் அது மிகையல்ல.

பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் பிரேமா கிருஷ்ணதாஸ் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் “மட்டி”.

கதைக்களம்..

மலையோர காட்டுப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களை தனது ஜீப்பில் ஏற்றி மலையடிவாரத்திற்கு கொண்டு செல்பவராக ஹீரோ ரிதன். இவரை அடிக்கடி சவாரிக்கு வரும் நாயகி சைட் அடிக்கிறார்.

அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நின்று போலீசே ஏதாவது பிரச்சினை கொடுத்தாலும் அதை நேரிடையாக எதிர்க்கும் தைரியம் கொண்டவர் ரிதன். இவர்கள் கதை ஒரு பக்கம்.

மற்றொரு புறத்தில்.. மட்டி ரேஸ் நடக்கிறது. அதாவது மீனவர்களுக்கு படகுபோட்டி போல அந்த மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு நடத்தப்படும் ஒரு வகையான சகதி சாலையில் நடக்கும் ஜீப் பந்தயம் அது.

இந்த போட்டியில் மற்றொரு நாயகன் கார்த்திக்குடன் வில்லனுக்கும் மோதல் நடக்கிறது. அப்போது கார்த்தியின் காலை உடைத்து விடுகிறார் வில்லன்.

எனவே கார்த்திக்கு உதவ போட்டியில் களம் இறங்க வருகிறார் ரிதன். கார்த்திக் யார்? அவருக்கு ரிதன் உதவ என்ன காரணம்..? ஜீப் சவாரி ஓட்டும் அவர் பந்தயத்தில் ஜெயித்தாரா.? வில்லன் கதி என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

சினிமாவுக்கு நம்பும்படியான ஒரு ஆக்சன் ஹீரோ ரிதன் கிடைத்திருக்கிறார் எனலாம். இவரது பார்வையே மிரட்டலாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மற்றொரு நாயகன் கார்த்தி. இவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களுக்கு முதல் படம் என்றால் நம்பமாட்டீர்கள்.

ப்ளாஷ்பேக் காலேஜ் காட்சியில் ரிவர்ஸ் கீரில் ஜீப்பை மலைபடிக்கட்டில் ஓட்டிச் செல்லும் காட்சி பிரமாதம். இப்படியாக கார்த்திக்கும் வில்லனுக்கும் மோதல் ஆரம்பமாகிறது.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் இருவருக்கும் பெரிதாக வேலையில்லை. ஆனால் கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.

வில்லன்கள் வரும் காட்சிகளில் நமக்கே ஒரு மிரட்டலான தவிப்பு வருகிறது. அதற்கு காரணம் பின்னணி இசைதான்.

படத்தில் ஹீரோ வில்லன், மற்றும் லோகா வரை அனைவரும் முகம் முழுக்க தாடியோடு வருவதால் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. படம் நகர நகர நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அண்ணன் தம்பி கேரக்டர்களில் நடித்தவர்கள் நிஜத்தில் தம்பி அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னீஷியன்கள்…

கார்களை விட வேகமாக நிலத்தில் எந்த பகுதியானாலும் வேகமாக கடந்து செல்லும் வாகனம் ஜீப். (கூடுதல் தகவல் – JEEP என்றால் JOURNEY ON EVERY EARTH PLACE)

மலைப்பகுதிகளில் தாறுமாறாக செல்லும் ஜீப்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் படம்பிடித்திருக்கிறது என்றால் அது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.

ஜீப்களை இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஓட்டியதையெல்லாம் பார்த்தால் நமக்கு மெய் சிலிர்க்கும். படம் முடியும் போது போடப்படும் மேக்கிங் வீடியோ நிச்சயம் நம்மை தியேட்டர்களிலேயே நிற்க வைத்திடும்.

ஒவ்வொரு காட்சியையும் லோ பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரகபல்.

தண்ணீரில் மற்றும் சகதியில் ஜீப் பயணிக்கும்போது நம் முகத்தில் சகதி படுவது போல உணர முடிகிறது. அப்படியொரு ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்

கே ஜி ரதீஷ். ஹாலிவுட் தரத்திற்கு நம்மால் பணிபுரிய முடியும் என தன் கேமராவில் நிரூபித்துள்ளார்.

கேஜிஎப் பட இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதில் நாம் கேட்டு பார்த்து மிரண்ட இசையை இதில் கொடுத்திருக்கிறார் எனலாம்.

படத்தின் வசனங்களும் மிரட்டல் எனலாம். புலிமுருகன், மரைக்காயர் படங்களின் தமிழ் வசனகர்த்தா ஆர் பி பாலா தான் இந்த படத்தின் வசனங்களையும் எழுதியிருக்கிறார்.

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் சொல்லும் காமெடி டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிகளை தியேட்டர் சீட்டின் நுனியில் தான் அமர்ந்து பார்ப்பீர்கள் எனலாம். கதைக்கான லோக்கேசன் மற்றும் நடிகர்களை தேடவே 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாம். அதை காட்சியில் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

லோ பட்ஜெட்டில் இப்படியொரு பிரம்மாண்டத்தை கொடுக்க முடியுமா? என வியக்க வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுக்க இருந்திருந்தால் இந்த மட்டி பெரும் மகிழ்ச்சிதான்.

ஆக இந்த மட்டி.. லோ பட்ஜெட்டில் ஒரு கேஜிஎஃப் மேக்கிங் எனலாம்.

Muddy movie review rating

TIME KILLS YOU…; 3:33 விமர்சனம்

TIME KILLS YOU…; 3:33 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. ஹீரோ பிறந்த நேரம் 3:33. 30 வருடங்களுக்கு பிறகு அந்த நேரமே அவருக்கு எமனாக மாறுகிறது.

அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் சான்டி ஹீரோவாக நடித்துள்ள படம் “3:33”. ஸ்ருதி நாயகியாகவும், ரமா, ரேஷ்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். Bamboo Trees ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ளார்.

கதைக்களம்..

தந்தையை இழந்தவர் நாயகன் சாண்டி. தன் அம்மா மற்றும் அக்கா, அக்கா குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். எவ்வளவு வேலை தேடினாலும் சரியான வேலை கிடைக்காமல் அலைகிறார்.

இதற்கெல்லாம் காரணம், நீ பொறந்த நேரம் அப்படி என்பதே இவரின் காதுகளில் ஒலிக்கிறது.

இவர்கள் நால்வரும் ஒரு வீட்டிற்கு குடித்தனம் செல்கின்றனர். அங்கு சென்ற பின்தான் அந்த 3:33 மணி இவரை பாடாய்படுத்துகிறது.

அப்படி என்ன ஆனது? அந்த அமானுஷ்ய சக்தி என்ன செய்யும்? தன் குடும்பத்தை அதனிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்
கதை..

கேரக்டர்கள்..

பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருமே தங்கள் படங்களில் ஆட்டம் போட்டு கலக்கியிருப்பார்கள். அதுவும் தேவைக்கு மீறியே பாடல்கள் இருக்கும். ஆனால் சாண்டி தன் முதல் படமாக இருந்தாலும் ஒரு ஆட்டம் பாட்டம் கூட இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதே பெரிய விஷயம்.

தன் கேரக்டரை புரிந்து அவர் நடித்துள்ளது சிறப்பு. ஆனால் அமானுஷ்ய சக்தி வந்தபின்னர் அவர் ஒரு மாதிரியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் படம் முழுக்கவே ஒரு மாதிரியாகவே இருக்கிறார். அது ஏனோ.?

ஒரே கருப்பு கலர் சட்டை, தலையே சீவாத முகம்… முகம் முழுக்க தாடி என வருகிறார். அதை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.

வழக்கம்போல இந்த படத்திலும் நாயகி ஸ்ருதிக்கு பெரிதாக வேலையில்லை. சில நேரம் பேய் போலவும் மிரட்ட முயற்சித்துள்ளார்.

அம்மா ரமா, அக்கா ரேஷ்மா இருவரும் கதைக்கு சரியான தேர்வு. கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பு.

ஆனால் படத்தில் கெளதம் மேனன் எதற்கு வருகிறார்? பெரிய இயக்குனருக்கான மதிப்பு இதில்லை.

டெக்னிஷியன்கள்…

சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஒரு காட்சியில் டோர் லாக் தானாகவே திறக்க முற்படும். அதற்கேற்ப கேமரா ஆங்கிளை ஆட்டி வைத்திருப்பது நிஜமாலுமே சூப்பர் சார்.

ஹர்ஷவர்தனின் பின்னனி இசை ரசிகர்களை நிச்சயம் மிரட்டும்.

இதுவும் வழக்கமான பேய் பட பாணியில் தான் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் டைம் கான்செப்ட் வித்தியாசமாக உள்ளது. ஆனால் முதல் பாதிவரை அதே டைம்.. அதே வீடு.. அதே காட்சிகள் திரும்ப திரும்ப வருவதால் போதும்டா சா(மி)ண்டி என சொல்ல வைக்கிறது.

படத்தின் கடைசி 15 நிமிடங்கள் மனதில் நிற்கிறது. முதல்பாதி காட்சிகளை கட் செய்து கொஞ்சம் காதல்.. காமெடி என திருப்பியிருந்தால் போரடிப்பது தெரியாமல் இருந்திருக்கும்.

நாயகன் மேல் நம்பிக்கை வைக்காமல் கதையின் மேல் நம்பிக்கை வைத்து கதையை நகர்த்திய நம்பிக்கை சந்துருக்கு வாழ்த்துக்கள்..

ஆக.. இந்த 3:33 கொல்லும் நேரம்

333 Moonu Muppathi Moonu review rating

More Articles
Follows