தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இங்க நான்தான் கிங்கு பட விமர்சனம்.. 4/5.. கலக்கல் கிங்கு
ஸ்டோரி…
34 வயதாகியும் பெண் கிடைக்காத விரக்தியில் இருக்கிறார் 90ஸ் கிட்ஸ் சந்தானம்.. வரன்கள் பார்க்கும் மேட்ரிமோனி அலுவலகத்தில் சேர்ந்தால் அங்கு நிறைய வரன்கள் வரும் என எண்ணி அங்கே வரும் பெண்களுக்கு வலையும் வீசி பார்க்கிறார்..
சரி வீடு இருந்தால் பெண் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 25 லட்சம் கடன் வாங்கி சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கி விடுகிறார்.. ஆனாலும் பெண் கிடைக்காமல் அலைகிறார்.
எந்த வரனும் செட் ஆகாத நிலையில் புரோக்கர் மனோபாலாவின் ஆலோசனைப்படி ஜமீன் குடும்பத்து பெண்ணை (பிரியா லயா) பார்க்க செல்கிறார்.
பெண்ணைப் பார்த்த நிமிடத்தில் பிடித்து விட்டது என்ற சந்தானம் சொல்லும் வேளையில் அடுத்த நிமிடமே திருமணத்தை முடித்து வைக்கின்றார் நாயகியின் தந்தை ஜமீன் தம்பி ராமையா.
திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில் தான் தம்பி ராமையாவுக்கு 10 கோடிக்கு மேல் கடன் இருப்பதை அறிகிறார்..
அதன் பிறகு என்ன செய்தார் சந்தானம்..
அதிலும் 10 கோடி கடனை ஹீரோ எப்படி அடைக்கப் போகிறார் என்று விமர்சகர்கள் சொல்வதைப் போல சொல்லி அதையும் கலாய்த்து இருக்கிறார் சந்தானம்..??!!
கேரக்டர்ஸ்…
SANTHANAM – VETRIVEL
PRIYALAYA – THENMOZHI
THAMBI RAMAIYA – VIJAYAKUMAR (JAMEEN)
BALA SARAVANAN – BALA (CHINNA JAMEEN)
VIVEK PRASANNA – AMALRAJ
MUNISHKANTH – BODY BALRAM
SWAMINATHAN – SWAMI
MAARAN – ROLEX
SESU –
இந்தக் கதை நிச்சயம் வெற்றி யாகும் என்ற நம்பிக்கையில் தன் கேரக்டர் பெயருக்கு கூட வெற்றி என வைத்து விட்டார் சந்தானம் & டைரக்டர்.. மாயோனை என்ற பாடலில் ரொமான்ஸிலும் அசத்தியிருக்கிறார்.
தனக்கு சாதகமான கூட்டணி அமைத்து எல்லாருக்கும் சம பங்கை கொடுத்து ஒட்டுமொத்த கூட்டணியை வெற்றியாக்கிவிட்டார் சந்தானம்.
நாயகி பிரியா லையா சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சந்தானத்திடம் உண்மையை சொல்ல வரும் காட்சிகளிலும் உண்மையை உடைக்கும் காட்சிகளிலும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அதுபோல விவேக் பிரசன்னாவை கொன்ற பின்னர் இவர் செய்யும் அலப்பறை ரசிக்க வைக்கிறது.
ஒரு பாட்டியிடம் நீ ஜூனியர் ஆர்டிஸ்ட் நினைச்சேன்.. கேரக்டர் ஆர்டிஸ்டா என்ற கலாய்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது..
நிஜ வாழ்க்கையில் தம்பி ராமையா மற்றும் அர்ஜுன் சம்பந்தி இருவரையும் கலாய்த்து இருக்கிறார் சந்தானம்..
சத்யராஜ் & கவுண்டமணியின் மாமா மாப்பிள்ளை காமெடி கூட்டணி போல சந்தானம் &:தம்பி ராமையா கூட்டணி செம ஒர்க் காமெடி கெமிஸ்ட்ரி.
மச்சான் ஆக வரும் பால சரவணன் தன் பங்குக்கு செம ஆக்ட்டிங்.. வெளுத்து கட்டி இருக்கிறார்..
முனிஷ்காந்த் – கூல் சுரேஷ் கூட்டணி காமெடி ரசிக்க வைக்கிறது.. வண்டி ஹாரன் அடிக்கும் காட்சி சிரிப்புக்கு கேரண்டி..
சந்தானம் வண்டியை முனிஷ்காந்து சேசிங் செய்யும் போது பாலசரவணனிடம் போன் போட்டு ரூட்டை கேட்பது வேற லெவல் காமெடி..
மனோபாலா மறக்க முடியாதவர்.. சந்தானத்தை ஜமீன் குடும்பத்தாரிடம் மாட்டிவிட்டு அவர் செல்லும் போது கூட்டத்தில் இருந்து திரும்புக்காட்சி விக்ரம் ஸ்டைல்..
கால் கேர்ள்ஸ் ஆக வரும் இரண்டு பெண்களும் கவர்ச்சியிலும் கவர்ந்து விடுகின்றனர்…
இதில் விவேக் பிரசன்னாவுக்கு இரட்டை வேடம்.. இந்த முகர கட்டைக்கு டபுள் கேரக்டர் கொடுத்து இப்படி வச்சு செஞ்சுட்டாங்களே என்று அவரையும் கலாய்க்கிறார் சந்தானம்..
டெக்னீசியன்ஸ் …
DIRECTOR – ANAND NARAYAN
CAMERAMAN – OM NARAYAN
MUSIC DIRECTOR – D. IMMAN
EDITOR – M. THIYAGARAJAN
WRITER – EZHICHUR ARAVINDAN
ART DIRECTOR – SAKTHEE VENKATRAJ.M
CHOREOGRAPHER – BABA BHASKAR, KALYAN
FIGHT MASTER – MIRACHLE MICHAEL
LYRIC WRITER – VIGNESH SHIVAN, MUTHAMIL
PRODUCER – G.N ANBUCHEZHIAN
PRODUCED BY – SUSHMITA ANBUCHEZHIAN
முதன்முறையாக சந்தானம் படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது.. ‘மாலு மாலு…. குலுக்க குலுக்கு… மாயோணே.. ஆகிய பாடல்கள் சூப்பர்.
எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தனின் வசனத்தை பாராட்டியாகவே வேண்டும்.. படத்தை 100% கலகலப்பாக கொண்டு சென்று நம்மை ஒவ்வொரு நிமிடமும் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறார்.
விஷால் & சிம்பு ஆகிய சிங்கிள்ஸ் நடிகர்கள்.. நயன்தாராவின் (நெட்ப்ளீக்ஸ் டீல்) திருமணம் என அனைத்தையும் கலாய்த்து வசனங்கள் வைத்திருப்பது வேற லெவல்..
பஸ் ஸ்டாண்டில் நின்னா வர பஸ்ல நாம ஏறனும்.. பஸ் ஸ்டாண்டுக்கு போனா நமக்கு புடிச்ச பஸ் தேடி ஏறலாம் என்ற ஒரு வசனத்தை வைத்து சந்தானம் மேட்ரிமோனி அலுவலகத்தில் இணைய வைத்திருப்பது ரசிப்புக்குரிய வசனம்.
ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
ஆனந்த் நாராயன் படத்தை இயக்கியிருக்கிறார்.. 90ஸ் ஹிட்ஸ் களின் கல்யாணம் ஆகாத காலகட்டம் கடன் வாங்கி அடக்க முடியாத சூழ்நிலை என எதார்த்த ஒரு கதையை எடுத்து அதை ரசிகர்களுடன் கனெக்ட் செய்யும் விதத்தில் சந்தானத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது..
சந்தானத்துடன் தம்பி ராமையா, கூல் சுரேஷ், முனீஸ்காந்த் சேசு மாறன் உள்ளிட்ட கலைஞர்களை சேர்த்திருப்பது காமெடி கூட்டணியை பலமாக்கி இருக்கிறது..
ஆக இங்க நான் தான் கிங்கு.. கலக்கல் கிங்கு
Inga Naanthan Kingu movie review