தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேச்சி விமர்சனம் 3.5/5… பகலில் ஒரு பேயாட்டம்
ஸ்டோரி…
நாயகன் தேவ்.. நாயகி காயத்ரி..
கொல்லிமலை பகுதியில் டிரக்கிங் செல்ல ஆசைப்படுகின்றனர் இரண்டு காதல் ஜோடிகள்.. ஒரு காதல் ஜோடி தேவ் மற்றும் காயத்ரி.. இவர்களுடன் ப்ரீத்தி ஜனா மகேஷ் உள்ளிட்டோரும் இணைந்து கொள்கின்றனர்… ஆபத்தான காட்டுப் பகுதி என்பதால் இவர்களுக்கு வழி துணையாக டூரிஸ்ட் கைட் பால சரவணன் இணைகிறார்..
அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது *இது தடை செய்யப்பட்ட பகுதி* என்ற அறிவிப்பு பலகையை காண்கின்றனர். எனவே இவர்களுக்கு அங்கு என்னதான் இருக்கிறது? என்று பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். இதற்கு தடை சொல்கிறார் பாலசரவணன்.
அது ஆபத்து நிறைந்த பகுதி.. அங்கு சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என எச்சரிக்கிறார்.. ஆனாலும் அவரின் பேச்சை மீறி அங்கு உள்ளே செல்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Gayathrie (lead)
Bala Saravanan (lead)
Dev (lead)
Preethi Nedumaaran
Jana
Seeniammaal (Pechi Patti)
Mageshwaran k (Photographer role)
Natturaja
Shanthimani (Gayathiri Patti)
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும்தான் டிரெக்கிங் செல்லும் நண்பர்கள்.. இவர்களுடன் இணைந்து கொள்ளும் டூரிஸ்ட் கைட் பாலசரவணன்.
பல படங்களில் காமெடி செய்து கொண்டிருந்த பாலசரவணன் விலங்கு வெப் தொடரில் அருமையான கேரக்டரை எடுத்து இருந்தார்.. அதுபோல இந்த படத்திலும் பயணிகளை எச்சரிக்கும் டூரிஸ்ட் கைடாக தன் மாரி கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார்.
பாலா சொல்வதை கேட்காமல் தடை செய்யப்பட்ட பகுதியில் நண்பர்கள் நுழையும் போது.. நமக்கே அட அவர் சொல்றதை கேளுங்கப்பா என்ற எண்ணம் வருகிறது.. இவரது கேரக்டர் முடிவு எதிர்பாராத ஒன்று.
பாலா காட்டுக்குள் செல்லும் போது இவரது மகள் இவரிடம் கொஞ்சும் அந்த ஒரு நிமிட காட்சிகூட நம் மனதில் நிற்கும்..
காயத்ரி டிரெக்கிங் செல்லும் பெண்ணாக மாடர்ன் உடையில் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று..
கதையின் நாயகனாக தேவ் ஸ்மார்ட் ஹீரோ… ப்ரீத்தி நெடுமாறன் மற்றொரு நாயகியாக வருகிறார் இவரது வாய்ஸ் கூடுதல் பலம்.
பேச்சி பாட்டியாக வருபவரும் மிரட்டல்.. அவருக்கு கொடூரமான மேக்கப் போட்டவரை பாராட்ட வேண்டும்..
டெக்னீசியன்ஸ்…
Director – Ramachandran B
DOP – Parthiban
Editor – Ignatious Aswin
Art Director – Kumar Gangappan
Costume Designer – Preethi Nedumaran
Music Director – Rajesh Murugesan
Veyilon Entertainment – Gokul benoy
Verus Productions –
Shaik Mujeeb
Rajarajan
Sanjay Shankar
Dhanishtan Fernando
ஒரே நாளில் நடக்கும் கதை என்பதை மனதில் வைத்து எங்கும் போர் அடிக்காமல் கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் திரைக்கதை ஆளுமையை காட்டுகிறது.. முக்கியமாக இதுபோல அரண்மனை காடு பங்களா என பேய் படங்களை காட்டும் போது இரவு நேரத்தை தேர்ந்தெடுக்காமல் பகலிலேயே பயமுறுத்தி இருப்பது பாராட்டுக்குரியது
பேய் பழிவாங்கல் கதை என்று சொல்லாமல் நரபலி கதையை திகிலாக கொடுத்திருப்பது சிறப்பு.. அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு கூட பெரிய நேரத்தை எடுக்காமல் படத்தை ஷார்ப்பாக முடித்து இருப்பது சிறப்பு.
ஆறு கேரக்டர்கள் மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்
பேச்சி வீடு.. பாதாள சுரங்கம்.. பேச்சுத் தலை முடி முக அலங்காரம் என்ன மிரட்டலான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் பார்த்திபன்..
கலை இயக்குநர் குமார் ஞானப்பன் பணியை பாராட்ட வேண்டும்.. பேச்சியின் கொடூரமான முகம்.. 60 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் உடை வீடு என அனைத்தையும் அதற்கு ஏற்ப வடிவமைத்து இருக்கிறார்
ராஜேஷ் முருகேசனின் இசை படத்துக்கு பலம்.. ஒவ்வொரு நண்பர்களாக காணாமல் போகும் போது வரும் இசை பயமுறுத்தும் ராகம்.. இக்னேசியஸ் அஸ்வினின் படத்தொகுப்பும் சிறப்பு..
இயக்குனர் ராமச்சந்திரன்.. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்வது என அழகாக கொண்டு செல்கிறார்.. காதல் நட்பு என்றெல்லாம் நீட்டாமல் இருப்பது சிறப்பு..
முக்கியமாக காயத்ரியின் கேரக்டர் எதிர்பாராத ஒன்று.. நரபலி எண்ணிக்கை இனி பேச்சி இரண்டாம் பாகத்தில் தொடரும் என நம்பலாம்..
Horror movie Pechi review