தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிட் லிஸ்ட் விமர்சனம் 3.25/5.. செம ட்விஸ்ட்
இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா-வை தன் சொந்த தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் கே.எஸ். ரவிக்குமார்.. குருவுக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை..
ஒன் லைன்…
நேர்மையான போலீஸ் அதிகாரி சரத்குமார்.. குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து ஹிட் லிஸ்ட்-டில் சேர்த்து விடுவார் என்பதால் இவரைக் கண்டாலே குற்றவாளிகளுக்கு பயம்.
ஸ்டோரி…
மனிதருள் எல்லா உயிர்களும் ஒன்றே.. இதில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை.. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கையாகவே வாழ்பவர் நாயகன் விஜய் கனிஷ்கா.. இவர் மென்பொறியாளர். இவரது தாய் சித்தாரா.. இவரது தங்கை அபி நட்சத்திரா..
இவர் சுத்த சைவம்.. பெண்களை வலிய வந்து டேட்டிங் அழைத்தால் கூட செல்லாத உத்தமர் இந்த விஜய் கனிஷ்கா..
டிஎஸ்பி சரத்குமாரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கிறார்.. சில நேரங்களில் நிகழ்ச்சி முடிந்து செல்ல தயாராகும் போது நாயகனுக்கு ஒரு மிரட்டல் போன் அழைப்பு வருகிறது.. உன் அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்திருக்கிறேன்.. நான் சொன்னதை செய்தால் அவர்களை விட்டு விடும் என்கிறார்.
அதன்படி என்ன செய்ய வேண்டும் என இவர் கேட்க 2 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்கிறார்.
அவ்வளவு பெரிய தொகை தன்னிடம் இல்லை என விஜய் கூறவே ஒரு பிரபல ரவுடியை கொன்று விட்டால் உன் அம்மா தங்கையை விடுதலை செய்கிறேன் என்கிறார். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார் நாயகன்..
அதன் பிறகு என்ன செய்தார்.? எந்த உயிரையும் கொல்லக்கூடாது என வள்ளலார் வாக்கை காப்பாற்றும் இவர் வில்லனை கொன்றார்.? குடும்பத்தை காப்பாற்றினாரா? போன் வீடியோ காலில் மிரட்டும் அந்த மாஸ்க் மேன் யார்? இவர்களுக்கெல்லாம் என்ன தொடர்பு? விஜய்யின் நடவடிக்கையை கவனித்த போலீஸ் சரத்குமார் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுத்து அசரடித்து விட்டார் விஜய் கனிஷ்கா.. அதுவும் முதல் படத்தில் நாயகி வேண்டும் டூயட் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் டைரக்டர் சொன்னதை கேட்டதற்காகவே இவரை பாராட்டலாம்.. நாயகியை நம்பாமல் தன்னை நம்பி மட்டுமே களமிறங்கி இருக்கிறார்.
80% படம் முடியும் வரை அப்பாவியாகவே தோன்றும் இந்த விஜய் கனிஷ்கா கடைசி 20 நிமிடங்களில் எடுக்கும் அவதாரங்கள் செம ட்விஸ்ட்.. (கொஞ்சம் ஓவர் தான்)
இவரும் மெகா வில்லன் கே.ஜி.எஃப். கருடா ராம் மோதும் இன்டெர்வல் சண்டைக்காட்சி வேற லெவல்.. தன் அம்மாவை காப்பாற்ற வேண்டும் இவர் துடிக்கும் சீன் அம்மா சென்டிமென்ட்..
என்கவுண்டர் போட்டு ஹிட் லிஸ்டில் சேர்த்துவிடும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சரத்குமார்.. இவருக்கும் ஒரு அதிரடியான ஃபைட் வைத்து அவரது ரசிகர்களுக்கும் ஆக்ஷன் விருந்து கொடுத்திருக்கிறார்..
அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா ஆகியோர் அருமையான நடிப்பு.. அதிலும் அபி சித்ரவதை பட்டு அழும் காட்சி இளம் பெண்களை கதற வைக்கும்..
டாக்டராக வரும் ஸ்மிருதி வெங்கட், தந்தையாக வரும் சமுத்திரக்கனி, ஹாஸ்பிடல் டீனாக வரும் கௌதம் மேனன் சிறப்பு.. அதிலும் கொரோனா காலத்தில் போராடிய டாக்டராக ஸ்மிருதி வெங்கட் நம் மனதை கலங்கடிக்கிறார்.. டாக்டராக டக்கர் நடிப்பை கொடுத்திருக்கிறார்..
ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்டோரு பெரிதாக வேலை இல்லை..
டெக்னீசியன்ஸ்…
சி.சத்யாவின் பின்னணி இசை பிளஸ்.. பாடல் எங்கும் கதையை திசை திருப்பாத வண்ணம் கதையோடு பயணிப்பது சிறப்பு..
ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளரும் தங்கள் பணிகளில் சிறப்பு.. கவனமுடன் கையாண்டு உள்ளனர்..
கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த
சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் குருநாதரின் பெயரைக் காப்பாற்றி விட்டனர்..
கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களுக்காக போராடி உயிரை மீட்டெடுத்த மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை முடித்து இருக்கிறார்கள்..
அதுபோல வேறு எவருக்கும் உயிருக்கு பிரச்சினை என்றால் ஒதுங்கி நிற்கும் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் துணிந்து நிற்கும் செயலையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.. இந்த உலகத்தில் இன்று வேறு ஒருவருக்கு நடக்கும் அநீதி நாளை உனக்கும் நடக்கும் என்று எச்சரிக்கையும் செய்திருக்கின்றனர்.
ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது.. அதுவே மனிதம்.. என்ற தத்துவத்தை நம் மனதில் பதிய வைக்கின்றனர்..
கடைசி 20 நிமிடங்களில் கிளைமாக்ஸ் இல் வைத்த திருப்புமுனை கொஞ்சம் நம்புபடியாக இல்லை என்றாலும் அது படத்தின் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
சமூகத்தை நேசிக்கும் காவலர்களும் இங்கு இருக்கிறார்கள்… அவர்கள் மக்களுக்கு என்றும் துணை நிற்பார்கள் என்பதை சரத்குமார் கேரக்டரை வைத்து படத்தை முடித்து இருப்பது சிறப்பு..
ஆக இந்த ஹிட் லிஸ்ட்.. செம ட்விஸ்ட்
Hit List movie Review





