கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சினிமாவில் அதிகம் காட்டப்படாத திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது.

அத்தோடு கமர்ஷியல் அம்சங்களோடு உருவானது ‘கெத்துல.’

கதைக்களம்…

அமைச்சரின் தம்பி சலீம் பாண்டா. அந்த அதிகார கெத்தோடு பெண்களை அடைய , அலைகிறார். அழகான பெண்களை குறிவைத்து தன் ஆசைக்கு இணங்க அழைக்கிறார்.

ஒருநாள் பார் டான்சர் நாயகி ரீரினுவை அடைய ஆசைப்பட்டு அணுகுகிறார்.

அப்போது நாயகன் ஸ்ரீஜித் நாயகியை காப்பாற்றுகிறார்.

இதனால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல் முற்றுகிறது.. ஹீரோ மீது ஹீரோயினுக்கு காதல் முற்றுகிறது..

ஆனால் ரிரீனு காதலை ஏற்க முடியாது என்கிறார்.

ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்.? ஸ்ரீஜித்தை பழிவாங்க சலீம் பாண்டா என்ன செய்தார்.? இறுதியில் என்னாச்சு என்பதே கதை.

கேரக்டர்கள்…

இரு தோற்றங்களில் வருகிறார் ஸ்ரீஜித். அதற்கேற்ப நடித்தாலும் உடல் மொழியில் கூடுதல் கவனம் தேவை. ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பார் டான்சராக பளிச்சென்று வருகிறார் ரீனு.. இளைஞர்களை சூடேற்றுவார்.
காதலனுக்காக ஏங்குவதில் தன பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.

அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே அகியோர் கச்சிதம்.

வில்லனாக சலீம் பாண்டா. மிரட்டலான நடிப்பில் சபாஷ்.

முக்கியமாக திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

டெக்னீஷியன்கள்…

கே.ஷஷிதர் ஒளிப்பதிவு நேர்த்தி.. ஃபைட் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. முக்கியமாக திருநங்கை போடும் சண்டைகள் அனல் தெரிகிறது. அதை படமக்கிய விதமும் பாராட்டக்குரியது.

பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும். ஆனால் பின்னணி இசையிலும் நிறைவாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷீவா வர்ஷினி. ஆக்சன் மியூசிக் சூப்பர்ல…

நல்ல பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம் திரைக்கதை அமைப்பில் தடுமாற்றம் தெரிகிறது.

அரசியல்வாதியும் போலீஸ் அதிகாரியும் மோதும் காட்சிகள் சிறப்பு.. திருநங்கைக்கு ஆக்சன் காட்சிகளை கொடுத்து கெத்து காட்டி இருக்கிறார் இயக்குனர்.

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்.; மாறுப்பட்ட நடிப்பில் சந்தானம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்.; மாறுப்பட்ட நடிப்பில் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தெலுங்கில் ‘ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற ஒரு ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களை கண்டுபிடிக்கிறார் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம். இவர் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர் ஆவார். என்ன கண்டுபிடித்தார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே கதைக்கரு.

கதைக்களம்…

குரு சோமசுந்தரத்தின் 2வது (ரகசிய) துணைவியின் மகன் சந்தானம். சிறு வயது முதலே தனது நுண்ணறிவால் எந்தவொரு விஷயத்தையும் துப்பு துலக்கி விடுவார் சந்தானம்.

ஒரு கட்டத்தில் தன் தாயை இழக்கிறார். அப்போது சொத்து பிரச்சனைக்காக தனது பூர்விக கிராமத்திற்கு வருகிறார் சந்தானம். அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

அந்த சமயத்தில் ஊரில் நிறைய மரணங்கள் நிகழ்கிறது. இவை எல்லாமே ரயில் தண்டவாளத்தின் அருகில் நடக்கிறது. ஆனால் பிரேத பரிசோதனையில் இவை இயற்கை மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை மரணம் என்றால் தண்டவாளத்தின் அருகே இந்த சடலங்கள் கிடப்பதன் மர்மம் என்ன? என விசாரணையில் இறங்குகிறார் தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் சந்தானம்.

காவல்துறையை விட இவர் அதிவேகமாக இருப்பதால் காவல்துறைக்கும் இவருக்கு மோதல் முற்றுகிறது.

இறுதியில் என்ன ஆனது? சந்தானம் விசாரணையுல் என்ன கண்டுபிடித்தார்? சடலங்கள் அங்கே கிடப்பதன் மர்மம் என்ன? அதன் நோக்கம் என்ன? அதுவே இந்த படத்தின் புலன்விசாரணை.

கேரக்டர்கள்…

சந்தானம் என்றாலே காமெடி மணக்கும். ஆனால் குளு குளு படத்தை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திலும் சீரியஸாகவே காணப்படுகிறார்.

மொத்த படத்தையும் சந்தானம் ஒருவரே தாங்கி நிற்கிறார். சில இடங்களில் கவுண்டர் காமெடியில் சிரிக்க வைக்கிறார். தன் தாயை இழந்த பின் காரில் பயணிக்கும் போது கண்கலங்க வைக்கிறார்.

நாயகி ரியா சுமன்.. சும்மாவே இருந்திருக்கலாம். சந்தானத்துடனும் ஒட்டவில்லை.. அவரது பேச்சும் இந்த படத்திற்கு ஒட்டவில்லை.

சரி சந்தானம் காமெடி செய்யவில்லை. படத்தில் புகழ் & ரெடின் கிங்ஸ்லி உள்ளனர். இவர்களாவது காமெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தால்.. ‘சந்தானமே செய்யவில்லை நாங்கள் ஏன் செய்ய வேண்டும்? என நினைத்து விட்டார்களோ.?

முனீஸ்காந்த், ராமதாஸ், ஆதிரா, குரு சோமசுந்தரம், இந்துமதி அகியோரும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் மெனக்கெட்டு உள்ளனர்.

பெரும்பாலான காட்சிகளை இரவிலேயே அதுவும் குறைந்த லைட்டிங்கில் (வெளிச்சத்தில்) ஒளிப்பதிவு செய்துள்ளனர். துப்பறியும் படம் என்பதால் அப்படி வைத்திருக்கிறார்களா?

தயாரிப்பு – லபிரின்ந்த் பிலிம்ஸ்
இயக்கம் – மனோஜ் பீதா.

வழக்கமான சந்தானத்தை காட்டக்கூடாது ரசிகர்களுக்கு மாறுபட்ட சந்தானத்தின் நடிப்பை காட்ட இயக்குனர் மனோஜ் முயற்சித்துள்ளார். அதில் பாஸ் மார்க் பெறுகிறார்.

இடைவேளை வரை படத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. மெகா சீரியல் போல உள்ளது. இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுத்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தம் இல்லை. பிணங்களைக் கடத்திச் செல்வதன் நோக்கம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை.. ஆக.. ஏஜென்ட் கண்ணாயிரம்.. ஏமாற்றம் ஆயிரம்..

Agent kannayiram movie review and rating in tamil

காரி விமர்சனம் 3.5/5.; கட்டுக்கடங்காத காளை

காரி விமர்சனம் 3.5/5.; கட்டுக்கடங்காத காளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் ‘காரி’.

சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேமன்த் இயக்கியுள்ளார்.

ஒன்லைன்…

ஒரு விலங்கு என்றாலும் அதுவும் ஒரு உயிரினம் தான் என நினைக்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு உடன் கலந்து விருந்து படைத்துள்ளார் இயக்குனர் ஹேமந்த்.

இவரது இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படமே ‘காரி’.

கதைக்களம்….

வறட்சி பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

2 கிராமங்களுக்கிடையே ஒரு பொது பிரச்சினை. அங்குள்ள கோயிலை யார் நிர்வகிப்பது? என்ற கருத்து வேறுபாடு.

எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் அணிக்கே கோயில் நிர்வாகம் என முடிவெடுக்கின்றனர்.

அதில் 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளில் 10 மாடுகளை பிடித்தாலே போதுமானது.

இதில் மாடு பிடிக்க வேண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடுகளம் நரேன் & அவர் மகன் சசிகுமார் சென்னையில் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வர நாகிநீடு சென்னைக்கு செல்கிறார்.

ஆனால் சசிகுமார் வர மறுக்கிறார். தன் தந்தையை கிராமத்தினர் சந்திப்பதை கூட தடுக்கிறார்.

இதுவரை புறமிருக்க.. மற்றொரு புறம்..

ஜல்லிக்கட்டு காளைகளை விலைக்கு வாங்கி அவற்றின் விந்தணுக்களை சேகரித்து அயல்நாடுகளுக்கு விற்கிறார் BEEF பிரியர் ஜே.டி.சக்கரவர்த்தி.

நாயகி பார்வதி அருண் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை வில்லன் ஜே.டி.சக்ரவர்த்தியிடம் வந்து சேர்கிறது.

இந்த இரு கதைகளும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன? சசிகுமார் என்ன செய்தார்? பார்வதி என்ன செய்தார்? வில்லன் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

கிராமத்திற்கென்றே கிலோ கணக்கில் தன்னை வலுப்படுத்தி வைத்திருப்பவர் சசிகுமார். இந்த கேரக்டரிலும் தன்னை சபாஷ் போட வைத்துள்ளார்.

சசிக்கு டான்ஸ் கொஞ்சம் கூட வரவில்லை. ஒரு பாடல் காட்சியில் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஸ்டெப்பை காட்டுவது போர் அடிக்கிறது.

ஒரு கட்டத்தில் சசி கிராமத்திற்கு வர முடிவு எடுக்கிறார். ஆனால் அந்த முடிவு திணிக்கப்பட்ட காட்சியாக தெரிகிறது.

நாயகி பார்வதி அருணை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். காளை ஒரு உசுருய்யா.. அந்த உசுரு என்னை தேடிகிட்டு இருக்கும் என கதறி அழும்போது நீங்கள் பீஃப் சாப்பிடுபவராக இருந்தாலுமே கலங்கி விடுவீர்கள். (இனிமே நிறுத்தவும் வாய்ப்புண்டு).

எல்லாம் ஜீவராசிகளை நேசிக்கும் ஒரு உயர்ந்த மனிதராக ஆடுகளம் நரேன் வாழ்ந்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் கேரக்டர் கச்சிதம்.

நாகிநீடு கிராமத்து பெரிய மனிதராக நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார். ஒருவேளை ராதாவின் நடித்திருந்தால் இன்னும் சிறப்பான நடிப்பை கூட கொடுத்து இருப்பார். அவரது குரல் இவருக்கு செட்டாகவில்லை.

வில்லன் ஜடி சக்கரவர்த்தி.. ராம்குமார்.. அம்மு அபிராமி இவர்களது கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

டெக்னீஷியன்கள்…

சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளனர்.

‘சாஞ்சிக்கவா.. சாஞ்சிக்கவா’ பாடல் காதலர்களுக்கு பிடித்த பாடலாக அமையும். கொப்பன் மவனே.. கொப்பன் மவனே.. என்ற பாடல் இனி தந்தையர் தினத்தில் whatsapp ஸ்டேட்டஸ்களில் பார்க்க கூடும்.

ஜல்லிக்கட்டு தீம் மியூசிக் ஆர்ப்பரிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் குதிரை ரேஸ்.. சிறுமி பாலியல் தொல்லை போன்ற காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம்.. அதனால் எந்த பாதிப்பும் இல்லை..

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு நேர்த்தி. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மிரள வைக்கிறது. அதை படமாக்கிய விதமும் நம்மை வாடி வாசலுக்கே கொண்டு செல்கிறது.

புது இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல 18 ஜல்லிக்கட்டு காளைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். காரசாரமாக ஒரு கிராமத்து மசாலாவை படைத்துள்ளார்.

ஆக இந்த காரி… கட்டுங்கடங்காத காளை

Kaari movie review and rating in tamil

பட்டத்து அரசன் 2/5.; பஞ்சத்து அரசன்

பட்டத்து அரசன் 2/5.; பஞ்சத்து அரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

ஊர் பஞ்சாயத்தில் ஒரு பிரச்சனை வரவே அந்த ஊரையே கபடி போட்டியில் எதிர்த்து நிற்கிறது ஒரு குடும்பம்.

கதைக்களம்…

கோத்தாரி ராஜ்கிரண். இவருக்கு ஜெயப்பிரகாஷ் – ஆர் கே சுரேஷ் – துரை. சுதாகர் ஆகிய மூன்று மகன்கள் ஒரு மகள். மகளைக் கட்டியவர் சிங்கம்புலி.

இதில் ஆர்கே சுரேஷ் ராதிகா தம்பதியரின் மகன் அதர்வா.

தனக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு தன் ஊருக்காகவே கபடி விளையாட்டில் முழு கவனம் செலுத்தியவர் ராஜ்கிரண். எனவே இவருக்கு ஊரில் கிராமத்தினர் சிலை வைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கபடி விளையாடும் போது ஆர் கே சுரேஷ் மரணம் அடைய தன் கணவரின் சாவுக்கு ராஜ்கிரன் தான் காரணம் என குடும்பத்தை விட்டு பிரிந்து தன் மகனோடு செல்கிறார் ராதிகா.

சில வருடங்களில் வில்லன் கும்பலின் சூழ்ச்சியால் ஜெயப்பிரகாஷின் மகன் (கபடி வீரன்) தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த பிரச்சினையால் ஊரை விட்டு ராஜ்கிரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறது ஊர் பஞ்சாயத்து. இதனையடுத்து தங்கள் குடும்பம் சார்பாக ராஜ்கிரண் & அதர்வா இணைந்து ஒரு சவால் விடுகின்றனர்.

இந்த ஊரை எதிர்த்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கபடி விளையாட்டில் மோதுவோம்.

ஊர் ஒரு பக்கம். குடும்பம் ஒரு பக்கம்.. இறுதியில் வென்றவர்கள் யார்? என்பதே கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அதர்வா பாஸ் மார்க் பெறுகிறார். கபடியை ஆடத் தெரியாத இவர் ஒரு தேசிய கபடி வீரரை வீழ்த்துவது எல்லாம் ஹீரோயிசம்.

கபடி வீராங்கனையாக ஆஷிகா. ஆனால் இறுதியில் கபடி ஆட்டத்தில் ஒரு பாயிண்ட் கூட பெற்று தரவில்லை. தொடை அழகை காட்டி ரசிகர்கள் மனதை தொடுகிறார். இதையெல்லாம் என்ன சொல்வது.?

ராஜ்கிரண் தன்னுடைய அனுபவ நடிப்பில் நன்றாகவே பின்னி எடுத்திருக்கிறார். 40 வயது வாலிபனாகவும் 70 வயது தாத்தாவாகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவரின் மகன்களாக நடித்த ஜெயப்பிரகாஷ் ஆர்.கே.சுரேஷ் துரை சுதாகர் உள்ளிட்டோர் யதார்த்த கிராமத்து மனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.

தன் அண்ணன் மகனுக்காக துரைசுதாகர் பாசத்தோடு அணுகும் காட்சிகள் சிறப்பு.

கொஞ்ச நேரமே வந்தாலும் ஆர் கே சுரேஷ் ராதிகாவும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். நாயகி ஆஷிகாவின் அம்மாவாக வரும் சிந்து அக்காவை போல இருக்கிறார். கொஞ்ச நேரமே என்றாலும் சிந்து சிறப்பு.

அதர்வாவின் நண்பராக பால சரவணன் பாவம் அவருக்கும் காமெடியும் பெரிதாக இல்லை காட்சியும் பெரிதாக இல்லை.

டெக்னீஷியன்கள்…

ஆடு பகை என்றால் குட்டியும் பகைதான் என்கிறார் ராஜ்கிரன். அதுபோல ஜெயப்பிரகாஷின் மகன் அதர்வாவிடம் பணத்தை வாங்கும்போது தடை போடுகிறார். அப்போதெல்லாம் வராத பாசம் திடீரென ஊர் பஞ்சாயத்தில் பாசம் வருவது புரியாத புதிராகவே உள்ளது. அதற்கான அழுத்தமான எந்த காரணங்களும் படத்தில் இல்லை.

பட்டத்து அரசன் என்ற தலைப்பு ஏன் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. காரணம் குடும்பமே பசி பட்டினி பஞ்சம் என்று இருக்கிறது. இதில் எந்த பட்டத்திற்கு யார் அரசன்? என்றே தெரியவில்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் ஊரை எதிர்த்து தாத்தா ராஜ்கிரன் முதல் பேரன் அதர்வா & குட்டி பையன் வரை அனைவரும் கபடி விளையாடுகின்றனர். அப்போதும் கூட அதர்வாஙுடன் கைகோர்க்க தவிர்க்கிறார் பெரியப்பா ஜெயப்பிரகாஷ். ஆனால் அடுத்த ரவுண்டில் கைகோர்த்து விளையாடுகிறானர். ஏன் மனம் மாறினார்.?

இந்த கபடி ஆட்டத்தில் மருமகன் சிங்கம் புலிக்கு காயம் ஏற்பட திடீரென ஆட்டத்தில் நுழைகிறார் நாயகி ஆஷிகா. இது ஒரு குடும்பம் ஆடும் ஆட்டம்.. நுழைய நீ யாரு என்று கேட்கிறார் வில்லன். உடனே அதர்வா-விடம் தாலி கட்ட சொல்கிறார் ஆஷிகா. முதலில் தயங்குகிறார் அதர்வா..

நீ இப்போ தாலி கட்டு.. மேட்ச் முடிஞ்ச உடனே தாலியை கழட்டு என்கிறார் ஆசிகா. அடடா இப்படி ஒரு கிராமத்து பெண்ணா.? என வியக்க வைக்கிறார் இயக்குனர். (ஹா..ஹா??!!..)

கிளைமாக்ஸ் காட்சியில் முக்கியமான ஒரு கபடி வீரர் நுழைகிறார்.. அவர் இந்தியளவில் ரூ. 5 கோடிக்கு ஏலம் போனவர். ஆனால் அவர் விளையாட தெரியாத அதர்வா குடும்பத்தாரிடம் தோற்றுப் போகிறார். அப்படின்னா எப்படிப்பட்ட கபடி வீரர் அவர் என பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அவர் அந்த காட்சிக்கு தேவையற்றவர். இப்படியாக பட்டத்து அரசனை பங்கம் செய்துள்ளனர்.

மற்றபடி படத்தில் ஒளிப்பதிவும் இசையும் நன்றாகவே உள்ளது. கிராமத்து காட்சிகள் அழகு சேர்க்கின்றன. இசை : ஜிப்ரான்.

கபடி பயிற்சி பெறும் போது சுற்றிலும் நெருப்பை எரிய விட்டு நடனமாடிக் கொண்டிருப்பது என்ன வகையான பயிற்சி.?

இயக்குனர் சற்குணம் திரைக்கதையில் சறுக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த அவர் திரைக்கதையும் வலுவாக அமைத்திருக்கலாம்.

ஆக.. பட்டத்து அரசன்… பஞ்சத்து அரசன்

Pattathu Arasan movie review and rating in tamil

FIRST ON NET பவுடர் விமர்சனம் ; பட்டை தீட்டிய பரட்டை (4.25/5)

FIRST ON NET பவுடர் விமர்சனம் ; பட்டை தீட்டிய பரட்டை (4.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

பவுடர் பூசிக்கொண்டு தன் முகத்தை மறைக்கும் மனிதர்களின் ஒரிஜினல் முகத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

கதைக்களம்…

1) தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்எல்ஏ-வை ஒரு கும்பல் போட்டு தள்ளுகிறது. இது ஒரு கதை.

2) கமிஷனர் வீட்டில் ஒருவர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க நிகில் முருகனை இரவில் அழைக்கிறார் கமிஷனர் ரயில் ரவி.

3) சினிமாவில் பணிபுரியும் விஜய்ஸ்ரீ தன் மகன் ஆன்லைன் வகுப்புக்காக கேட்ட செல்போனுக்காக வேறுவழி இல்லாமல் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறார்.

4) தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனிடம் நியாயம் கேட்கிறார் தந்தை வையாபுரி.

5) காதலித்தபோது தன்னை நெருக்கமாக படம் எடுத்து மிரட்டும் காதலனிடம் பணம் கொடுக்க வருகிறார் வித்யா பிரதீப். அதிகாலை இவருக்கு திருமணம்.

6) இதனிடையில் சென்னையில் மனிதக்கறி வேட்டை.. இரவில் திருடும் கும்பல்… காதலர்களின் ரொமான்ஸ்.. என திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.

இந்தக் குட்டி குட்டிக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இறுதியில் வித்தியாசமான க்ளைமாக்‌ஸ் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.

கேரக்டர்கள்…

சீரியஸ் ரோலில் விஜய் ஸ்ரீ காணப்பட்டாலும் கிளைமாக்ஸ்சில் அவரது செய்கை சபாஷ் போட வைக்கும். பரட்டை என்ற கேரக்டரை பட்டை தீட்டியிருக்கிறார்.

பிஆர்ஓ நிகில் முருகன் முதல்முறையாக கதை நாயகனாக நடித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ராகவன் கேரக்டரை கொடுத்துள்ளார். இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

இதுவரை ஏற்காத ஒரு சீரியஸ் கேரக்டரில் வையாபுரி. இனி இவருக்கு தந்தை வேடங்கள் அதிகமாக வரும்.

நாயகியாக அனித்ரா. அழகான நடிகை. ஒரு பக்கம் காதல்.. ஒரு பக்கம் குடும்பம்.. என தன் தவிப்பை நடிப்பில் காட்டியிருக்கிறார்.

அதிகாலை திருமணத்தை வைத்துக் கொண்டு தன் முன்னால் காதலனிடம் சிக்ககிய பறவையாக வித்யா பிரதீப்.

இளையா வரும் காட்சிகள் இளைஞர்களுக்கு இன்பமயமே. மியாவ் மியாவ் என்ற பூனை சத்தம் பூரிப்பு. சாந்தினி ஹாட்..

வித்யா பிரதீப்பின் காதலன் ராணவ் ஆகியோரும் கவனம் வைக்கின்றனர்.

சின்ன சின்ன கேரக்டரில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பில் கச்சிதம்.

முக்கியமாக வையாபுரியுடன் வரும் விக்கி தன் பயந்த சுபாவத்தால் நம்மை கவர்கிறார்.

இவர்களுடன் ஆதவன் மற்றும் சில்மிஷம் சிவா இருவரின் காமெடி (காம நெடி) உச்சகட்டம். ஆதவன் அரசாங்கத்தை கிண்டல் அடிக்கும் காட்சிகள் சிறப்பு. அதுபோல சில்மிஷம் சிவா பேசும் இங்கிலீஷ் வார்த்தைகள் ரசிக்கும் ரகம்.

எம்எல்ஏ நமஸ்காரம், மொட்ட ராஜேந்திரன்.. சிங்கம் புலி.. செக்யூரிட்டி தர்மா.. அடியாள் சதீஷ் முத்து போலீஸ்காரர்கள் ஒற்றன் துரை, ராமராஜ் அர்ஜுன், ராயல் பிரபாகர் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு இசையமைத்துள்ளார் லியாண்டர் லீ மார்ட்டி. பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.

மேலும் சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரணை ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம். படத்தின் ஒளிப்பதிவை ராஜா பாண்டி மற்றும் பிரஹத் என்பவர் செய்திருக்கின்றனர். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

இரவு நேர காட்சி என்றாலும் ஒவ்வொரு கதைக்கும் ஏற்ப லைட்டிங் கொடுத்து செய்து இருப்பது சிறப்பு.

படத்தை நீண்ட நேரம் இழுக்காமல் சிறப்பாக கட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் குணா.

படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீ.

படத்தின் வசனங்கள் பலம்..

முக்கியமாக மின்சார ஒயர்களை அணில் கடிப்பது… போலீஸ் வரும்போது சைரன் அடித்துக் கொண்டே வருவது.. இதனால் திருடர்கள் உஷாராவது என்பதையும் கிண்டல் அடித்துள்ளார்.

இரவு நேரத்தில் கூட காவல்துறை அதிகாரிகள் அவர்களது உயர் அதிகாரிகளால் எப்படி எல்லாம் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

அதுபோல மக்கள் நினைத்தால் எம்எல்ஏ-களுக்கு மரண பயத்தை உண்டாக்கலாம் என்பதையும் தன் பாணியில் சொல்லி இருக்கிறார்.

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு பாடம் கற்பித்திருக்கிறார்.

படத்தில் நெருடலான விஷயம்..

மனிதக்கறி என்பது கொலைக்கு நிகரானது.. ஆனால் அகோரிகள் மத்தியில் பிரபலமான மனிதக்கறியை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியை HUMAN MEAT ஹியூமன் மீட் என்ற பெயரில் ஒருவர் டெலிவரி செய்வது என்பது பெரும் கேள்விக்குறி??!? அது இயக்குனருக்கே வெளிச்சம்..

ஆக பவுடர்.. பட்டை தீட்டிய பரட்டை

யூகி விமர்சனம் 3.5/5.; யூகி-க்க முடியாத ஸ்க்ரீன் பிளே

யூகி விமர்சனம் 3.5/5.; யூகி-க்க முடியாத ஸ்க்ரீன் பிளே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

ஆரம்பக் காட்சியிலே அழுகையுடன் ரோட்டில் நடந்து செல்கிறார் ஆனந்தி. அந்தப் பக்கமாக செல்லும் ஒரு கார் திடீரென ஆனந்தியை கடத்தி செல்கிறது.

ஆனந்தியை கண்டுபிடிக்க இரண்டு பிரிவு குழுவினர் செல்கின்றனர். ஒரு குழுவின் தலைவர் நட்டி நடராஜ். இவர் யார்? இவர் எதற்காக ஆனந்தியை தேடுகிறார்? என்பது படத்தின் ட்விஸ்ட்.

மற்றொரு குழுவில் தலைவர் நரேன். இவருடன் கதிர் மற்றும் ஆத்மியா உள்ளனர். துப்பறியும் நிபுணரான நரேனுக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுத்தவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி பிரதாப் போத்தன்.

ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி ஆனந்தியை தேட சொல்வதன் நோக்கம் என்ன? இந்த குழுவினர் கண்டுபிடித்தார்களா? ஆனந்தி யார்.? அவரை இத்தனை பேர் தேடுவதன் நோக்கம் என்ன? கடத்தி சென்றவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பதே கதை.

கேரக்டர்கள்…

நட்டி கேரக்டர் என்ன? என்ற கேள்விகள் அடிக்கடி எழும். ஆனால் கிளைமாக்ஸில் தான் அவரின் கேரக்டரே நமக்கு தெரிகிறது. தனக்கே உரித்தான பாணியில் அசால்டாக செய்திருக்கிறார்.

துடிப்பான போலீஸ் அதிகாரியாகவும் பாசமான கணவராகவும் தன் கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார் கதிர்.

துப்பறியும் நிபுணராக நரேன். இவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதங்கள் அருமை. பிரதாப் போத்தன் கேரக்டரும் அருமை.

மூன்று நாயகிகள்.. கயல் ஆனந்தி பவித்ரா லட்சுமி ஆத்மியா.. ஆனால் மூன்று பேருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனாலும கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டாக்டராக வரும் வினோதினி படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வாடகைத்தாய் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளார்.

நடிகராக வரும் ஜான்விஜய் சிறப்பான நடிப்பு. இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கதை கேட்டு அதன் பின் காட்சிகளை மாற்றியமைக்கும் காட்சிகள் சிறப்பு.

டெக்னீசியன்கள்…

வாடகை தாய் படும் வேதனைகள்.. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் – ஸாக் ஹாரிஸ்.

மானத்தைக் காக்கவும் கௌரவத்திற்காகவும் வாடகை தாய்களை அமர்த்திக் கொள்ளும் பணக்காரர்களையும் அவர்களின் அலட்சியத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. படத்தில் பாடல்கள் இல்லை. ரஞ்சின் ராஜ் பின்னணி இசை.

அடுத்த காட்சி இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என யூகிக்க முடியாமல் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அதை சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். திடீர் திடீரென காட்சிகளை மாற்றி செல்வது படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது.

இடைவேளைக்கு முன்பு வரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையில் பல முடிச்சுகளை அவிழ்கிறார்.

ஆக.. யூகி.; யூகிக்க முடியாத ஸ்கிரீன் ப்ளே

More Articles
Follows