தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
GAAMI காமி விமர்சனம்
Gaami என்றால் Seeker என்று பொருள்.. இந்த இயக்குனரின் தேடல் என்ன.? இந்தத் திரை கதாபாத்திரங்களின் தேடல் என்ன என்பதுதான் காமி.
வித்யாதர் காகிதா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிப்பில் உருவான அட்வென்சர் த்ரில்லர் தான் இந்த `காமி’ (Gaami).
ஸ்டோரி…
ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு மிகவும் அரிதான ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை பாதிப்பு இருக்கிறது.
அதாவது மனிதர்களைத் தொட்டாலே இவருக்கு ஆகாது.. இவரது நோயைக் குணமாக்க ‘மாலிபத்ரா’ என்ற வித்தியாசமான ஒளிரும் காளான்கள் தேவைப்படுகிறது.. அது இமயமலை பிரதேசத்தில் துரோனகிரி எனும் பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதை அறிந்து அங்கே பயணிக்கிறார்.
அந்த ஒளிரும் காளானை கண்டறிந்து கைப்பற்றினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.. இவருடன் பெண் மருத்துவர் ஒருவரும் அங்கு செல்கின்றனர்.
இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு இரண்டு கிளை கதைகள் உள்ளன..
ஒரு கிராமத்தில் தேவதாசியாக வாழ்கிறார் அபிநயா. இவருக்கு ஒரு அழகு மகள்.. அந்த கிராமத்தின் நடைமுறைப்படி (??!!) அபிநயாவின் மகளும் தேவதாசியாக தொழிலுக்கு வரவேண்டும் என்கின்றனர். ஆனால் தன் மகளைக் காப்பாற்ற போராடுகிறார் அபிநயா.. மகளை தப்பிக்க வைக்க சில முயற்சிகளை மேற்கொள்கிறார்..
அடுத்த கதையில்…
சிடி 333 எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு இளைஞன் சிறையில் அடைக்கப்படுகிறான்.. சட்ட விரோத மூளை அறுவை ஆய்வுக் கூடத்தில் எலிபோல் அடைத்து வைக்க துன்புறுத்தப்படுகிறான்.
எனவே அங்கிருந்து தப்பிக்க ‘Shawshank Redemption’ பாணியில் பல முயற்சி எடுக்கிறான்.
இந்த இரு சிறார்களுக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு? என்பதை ‘நான் லீனியர்’ வழியே சொல்லுகிறது இந்த படம்.
கேரக்டர்ஸ்…
விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா, மொஹமத் சமத், தயானந்த் ரெட்டி மற்றும் பலர்.
நடிகர் விஸ்வக் சென்.. இவரது கேரக்டர் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது.. அதற்கு ஏற்ப பனிமலையில் இவர் படும் சிரமம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
இமயமலை செல்லும் சாந்தினி செளத்ரி கேரக்டர் ரசிக்க வைத்தாலும் சில லாஜிக் மீறல்கள் உள்ளது.. பணிப்படர்ந்த அந்தப் பகுதியில் இவர் அசால்டாக கையுறை அணியாமல் செல்வதை நம்ப முடியவில்லை.. ஒரு காட்சியில் பனிமலையில் கயிறு அறுந்து இவர் விழும்போதும் முகத்தில் கீறலில்லை தலைமுடியில் ஒரு துளி கூட பனியில்லை..
அபிநயாவின் கேரக்டர் கண்கலங்க வைக்கும்.. வேண்டாத வெறுப்பாக தேவதாசி தொழில் ஈடுபட்டு தன் மகள் இதில் சிக்கிய விடக்கூடாது என்பதற்காக அவர் படும் அவஸ்தைகளையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
உமா என்ற சிறுமியின் மருத்துவ குறைபாடு.. அது என்னவென்று தெரியாமல் நம் குழம்பி இருக்கும் வேளையில் திரைக்கதை திருப்புமுனை கொடுத்து சிறுமி கேரக்டரை இளைஞனோடு இணைத்திருக்கிறார் இயக்குனர்.. இதன் மூலமாக நாயகன் கேரக்டரிலும் நமக்கான தீர்வு கிடைக்கிறது..
CT -333 என்ற கேரக்டரில் நடித்த மொஹமத் சமத் மனதில் பதிகிறார்.. ஒரு சிறை கைதியின் அடைபட்ட உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
டெச்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் – நரேஷ் குமரன்
பாடல்கள் – ஸ்வீகர் அகஸ்தி
ஒளிப்பதிவாளர் – விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா
இயக்குனர் – வித்யாதர் காகிதா
தயாரிப்பு – கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ்
முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை ஷங்கருடன் ஜான்வி இணைந்த பின்னர் தான் படத்தின் கதை என்ன என்பதை மெல்ல மெல்லமாக நம்மால் உணர முடிகிறது..
பணிப்படர்ந்த இமயமலை.. இருள் சூழ்ந்த சிறைச்சாலை… தேவதாசி வாடும் கிராமம் என மூன்று கதைகளத்தையும் தன்னுடைய கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா.
சொல்லப்போனால் இமயமலைக்கு நம்மை அழைத்துச் சென்ற அனுபவத்தை தந்திருக்கிறார் இவர்.
இசையமைப்பாளரின் நரேஷ் குமரனின் பின்னணி இசை நம்மை ஈர்க்கச் செய்கிறது.. ஒரு இதமான அனுபவத்தை தந்திருக்கிறது . ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் சிறப்பு..
ஓர் ஆய்வுக்கூடத்தில் நடக்கும் ஆராய்ச்சியில் என்ன மாதிரியான ஆராய்ச்சி இதனால் என்ன பலன் என்பதற்கான விளக்கத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்கலாம்..
மூன்று கதைகளை இணைக்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பணியை செய்து இருக்கிறார் எடிட்டர்.. ஆனால் இது நம்மையும் சோதிக்கிறது.. ஒரு திரைக்கதை வேகமாக பயணிக்கிறது.. மற்றொரு திரைக்கதையோ அழுத்தமான உணர்வுடன் பயணிக்கிறது இரண்டையும் இணைக்கும் போது அதற்கான கால அவகாசம் இல்லை என்பதால் நம்மோடு ஒன்ற மறுக்கிறது..
இந்த மூவரின் தேடல் தான் என்ன என்பது அறிய நாம் குழம்பி கொண்டு இருக்கும் வேலையில் அதற்கான விளக்கத்தை கிளைமாக்ஸில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
ஓர் அறிமுக இயக்குனர் இப்படியான வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளதை பாராட்டலாம்.. ஆனால் அதே சமயம் விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் இந்த காமியுடன் இணைந்து பயணித்திருக்கலாம்.
Gaami movie review