தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
நாயகி ஸ்வயம் சித்தா.. பணக்கார பெண்மணி. ஹைடெக் லைஃப் & நைட் பார்ட்டி இரவு பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே வந்து கார் புக்கிங் செய்கிறார்.
அவர் வீட்டுக்கு பயணிக்கும் வழியில் கார் டிரைவருடன் நட்பாக பேசுகிறார். இதனையடுத்து வீட்டில் கணவர் இல்லை வா என்னோடு வந்து சரக்கு அடிக்கலாம் என அழைக்கிறார். ஒரு பிகர் அழைக்கும்போது நாயகன் விக்ரம் ரமேஷும் ஓகே சொல்கிறார்.
நைட்டு.. போதை.. தனிமை அதிகமாகவே இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். காலையில் நாயகன் எழுந்து பார்க்கும் போது நாயகி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.
வீட்டில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கும் போது தான் அந்த வீட்டிற்கு சாவி இல்லை.. பாஸ்வேர்டு லாக் மட்டும் தான் இருக்கிறது என்பதை அறிகிறார். அப்போது அங்கே வேறு ஒரு திருடனும் இருக்கிறான். அவர்தான் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.
இருவரும் ஒரு வழியாக பேசி வெளியே செல்ல நினைக்கும் போது அரசியல்வாதி மஸ்தான் உள்ளே வருகிறார். பின்னர் தான் மூவரும் வீட்டில் சிக்கிக் கொண்டதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
நாயகி எப்படி இறந்தார்? வீட்டில் இருந்து தப்பித்தார்களா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்..
படத்தின் நாயகன் இயக்குனர் என இரண்டு பொறுப்புகளையும் எடுத்து படத்திற்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் விக்ரம் ரமேஷ்.
நாயகி ஸ்வயம் சித்தா.. கொஞ்ச நேரம் தான் என்றாலும் அவரும் போதை ஏற்றி நம்மையும் போதைக்கு உள்ளாக்குகிறார்.
விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன் & சிவக்குமார் ஆகிய மூவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விக்ரம் ரமேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சின்ன கேரக்டர் என்றாலும் கவனிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார். துருதுரு இளைஞராக தன்னை வெளிக்காட்டி இருக்கிறார்.
அரசியல்வாதி சிவக்குமார் நானும் சளைத்தவன் அல்ல என போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
டெக்னீசியன்ஸ்…
பொதுவாகவே ஒரு படம் ஹிட்டு கொடுத்தால் அடுத்த படத்தை எடுக்கும்போது ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று போஸ்டரில் பெயரிடுவார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று இந்த படத்தின் பெயரை போடுகிறார்கள். இதிலிருந்து அவர்களின் நம்பிக்கை தெரிகிறது.
அது மட்டும் இல்லாமல் டைட்டில் கார்டிலும் வித்தியாசம் காட்டப்படுகிறது. இடையிடையே வந்து செல்லும் டைட்டில் கார்டுகளும் ரசிக்க வைக்கிறது.
தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய கலாச்சரண் இசையமைத்துள்ளார். ஒரே அறையில் படமாக்கினாலும் பல கேமரா ஆங்கிள்கள் கொடுத்து காட்சியை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுபோல இறைச்சல் இசையை கொடுக்காமல் இதமாக கொடுத்து நம்மை உற்சாகமூட்டுகிறார் இசையமைப்பாளர்.
பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் இந்த படத்தை பார்த்து ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் என்பவர் வெளியிடுகிறார்.
ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.
ஆக… எனக்கு என்டே கிடையாது.. இந்தப் படத்திற்கு எண்டு இருந்தாலும் பார்ட் 2 எப்போது வரும்? என இறுதியாக கேட்க வைக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.
Enaku Endey Kidaiyaathu movie review and rating in tamil