தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எமகாதகன் விமர்சனம்… பாஞ்சாயி சாபம்
ஸ்டோரி…
தமிழகத்தில் ஒரு கிராமம்.. இந்த கிராமத்தில் உள்ள தம்பதியருகளுக்கு பிறக்கும் முதல் ஆண் மகனுக்கு திருமணம் நடக்கக்கூடாது.. அப்படி நடந்தால் அவன் இறந்து விடுவான் என்பது அந்த ஊரின் ஒரு சாபக்கேடு.. அதன்படி சில சம்பவங்களும் அப்படியே நடைபெறுகிறது.
இதனால் பாஞ்சாயி சாபத்திற்கு ஆளாக கூடாது என திருமணமாகாத ஆண்கள் பலர் அந்த ஊரில் வசிக்கின்றனர்.. ஆனால் ஒரு சிலரோ இந்த ஊரில் வசிக்கக் கூடாது என ஊர் விட்டு ஊர் சென்று விடுகின்றனர்.. இதனால் அவர்கள் நிலமும் பறிபோகிறது..
பாஞ்சாயின் சாபத்தில் இருந்து தப்பிக்க அவரை கடவுளாகவும் மக்கள் வழிபடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தான் காதலித்த நாயகி ராஸ்மிதா ஹிவாரியை ஊர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்கிறார்..
திருமணமாகி சில தினங்கள் மட்டுமே ஆன நிலையில் நாயகன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார்.. இது இயற்கை மரணம் அல்ல கொலை என சந்தேகிக்கிறார் நாயகி.. இதனையடுத்து களத்தில் இறங்கி கொலைகளுக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்.. அடுத்தது என்ன நடந்தது என்பதெல்லாம் ‘எமகாதகன்’ படத்தின் கதை..
கேரக்டர்ஸ்…
நாயகனாக கார்த்திக் ஸ்ரீராம், நாயகியாக ராஸ்மிதா ஹிவாரி, பூசாரியாக தசரதன், நாயகனின் நண்பராக மனோஜ் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. நாயகி ராஷ்மிதாவும் பூசாரி தசரதனும் மற்றவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கின்றனர்..
பாஸ்கர் என்ற பாத்திரத்தில் நடித்தவர் போற போக்கில் காமெடி வசனங்களை போட்டு கதைக்கு கலகலப்பு சேர்த்து இருக்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
விக்னேஷ் ராஜா இசையில், ஹரிஹரசுப்ரமணியன் மற்றும் விஜே விஜய் ஆகியோரது வரிகளில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. நாயகனை இழந்தபின் நாயகி பாடும் பாடல் நிச்சயம் முணுமுணுக்க வைக்கும்.
பாஞ்சாயி காட்சிகள் மற்றும் வசனங்கள் தனி கவனம் பெறும்.
ஒளிப்பதிவாளர் எல்.டி-யின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகுற செய்து இருக்கிறது.. படத்தொகுப்பாளர் ராம்நாத்.. இடைவேளைக்கு முன்பு வரை படம் நீளமாக தெரிந்தாலும் இடைவேளை முடிந்து ஒரு மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருப்பது சிறப்பு..
கிராமத்து மண்வாசனையுடன் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்ததில் இயக்குநர் கிஷன் ராஜ் பாஸ் மார்க் பெற்றிருக்கிறார்.. நவீன யுகமாக ஆன்மீக மாறிவிட்டாலும் இன்றும் குலதெய்வங்களை வழிபடும் கிராமத்தினர் உள்ள அந்த பின்னணி கதையை வைத்து படத்தை அவர் நகர்த்தி இருப்பது சிறப்பு..
Emakathagan movie review