தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எலக்சன் விமர்சனம் 3.5/5.. குட் செலக்சன்
ஸ்டோரி…
தமிழகத்தில் உள்ள பிரபல கட்சிக்கு உண்மையான தொண்டனாக 40 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகிறார் ஜார்ஜ் மரியான்.. இவரது மகன் விஜயகுமார்.. ஆனால் இவருக்கு துளியும் அரசியல் ஆர்வம் கிடையாது.
இப்படியான சூழ்நிலையில் கட்சிக்கு உண்மையான உழைத்த தனது தந்தையை அவமானப்படுத்தி விடுகிறது கட்சி தலைமை.. இதனைப் பார்க்கும் மகன் விஜயகுமார் தன் தந்தையின் செல்வாக்கை தலைமைக்கு உணர வைக்க தேர்தல் அரசியல் களத்தில் இறங்குகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றாரா.? ஜெயித்தது கட்சித் தலைவனா? கட்சித் தொண்டனா? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்ஸ்…
விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், அருள் & பலர்..
உறியடி விஜயகுமார் முழுக்க முழுக்க அரசியல் களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.. இது போன்ற அரசியல் படங்களில் ஹீரோ ஜெயித்து விடுவார்.. ஆனால் இதில் தோல்வி கண்டு எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அரசியலால் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன் என்று அவர் பேசும்போது விஜயகுமார் உணர்ச்சி மிகுந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆனால் இது போன்ற வலுவான கேரக்டருக்கு அவர் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து இருக்க வேண்டும்
‘அயோத்தி’ பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இதில் அரசியலும் இல்லறமும் கலந்த குடும்ப பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்
பெண்களுக்கு தாலி போல் அரசியல் கட்சி தொண்டனுக்கு கரைவெட்டி தான் அடையாளம் என்னும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் தன் கேரக்டரை அருமையாக சித்தரித்து இருக்கிறார்.
இஸ்லாமியராக பாய் கேரக்டரில் வரும் அருள் நம்மை கவர்கிறார்.. அச்சு அசல் இஸ்லாமியரை போல நடித்திருக்கிறார்.. இவரின் கூடவே வரும் உயரமான லீ கார்த்தியும் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பாவல் நவகீதன் மற்றும் திலீப் இருவரும் கதையின் நாயகர்களாக வருகின்றனர் அரசியல் களத்திலும் ஆளுமையிலும் ஜெய்கின்றனர்.
திருநங்கையாக நடித்தவர், சேவியர், அம்பேத், மூர்த்தி உள்ளிட்ட நடிகர்கள் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்..
டெக்ணீசியன்ஸ்…
இயக்கம்: தமிழ்
இசை: கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: ரீல் குட் பிலிம்ஸ்
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜூ
படத்தொகுப்பு: சி எஸ் பிரேம்குமார்
பொதுத் தேர்தலுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தமிழ்.
தனது வாக்கை பணத்திற்காக விற்க்கும் மக்கள் எப்படி விஸ்வாசமாக இருக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
96 பட புகழ் கோவிந்த் வசந்தா காதல் களத்திற்கும் அரசியல் கழகத்திற்கும் ஏற்ற இசையை கொடுத்து இருக்கிறார்..
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமான அரசியல் களத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். அதற்கான நடிகர்கள் அவர் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டுக்குரியது
ஆக இந்த எலக்சன்.. குட் செலக்சன்
Election movie review
——