இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

நாயகன் அசோக்.. நாயகி ராகினி திரிவேதி ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர். இதில் நாயகி தன் தோழிகளுடன் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் நாயகனுக்கும் காதல் ஏற்படவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எப்போதுமே ஆன்லைன் விளையாட்டில் (வீடியோ கேம்) ஆர்வம் கொண்டவர் ராகினி எனவே அடிக்கடி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சில நபர்கள் மூலம் மிரட்டல் வருகிறது.

எனவே அந்த ஆன்லைன் நபபரை தேடி ஒரு இடத்திற்கு செல்லும் போது அவர் மற்றொரு நபரால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனால் கொலை பழி தன் மீது விழுமோ? என ஓடி ஒளிகிறார் நாயகி.

இந்த சூழ்நிலையில் அசோக்கை சிலர் கட்டி வைத்து துன்புறுத்துகின்றனர். இதனால் வேறு வழி இன்றி தானே களத்தில் இறங்கி கணவனை காப்பாற்ற போராடுகிறார் ராகினி.

அதன்பிறகு என்ன ஆனது? மிரட்டிய நபர் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

படத்தின் நாயகன் அசோக் என்றாலும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் இல் வந்து படத்திற்கு திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.. நாயகியுடன் ரொமான்ஸ் பரவாயில்லை. ஆனால் நாயகனை விட நாயகி ராகினி முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது.

மற்ற நாயகியுடன் அசோக் இருக்கும்போது அவரது இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி வெரி ஸ்மார்ட்.

ராகினி திவேதி ஆக்சன் காட்சிகளில் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.. படத்தில் முழுக்க முழுக்க இவரது பங்களிப்பு தெரிகிறது.. இவரது தோழிகள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இவர்களுடன் ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்..

மனோபாலாவின் காமெடி சிரிக்க வைக்கிறது. லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

டெக்னீசியன்ஸ்…

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்.. கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் சுமார்.. ஜுபினின் பின்னணி இசை பலம்.

இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் காட்டி இருக்கிறார்.

முக்கியமாக ஹார்ட் டிஸ்கை வைத்து கருப்பு பணத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

ஆனால் சொல்ல வந்த விதத்திலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார்.

ஆக ‘இ-மெயில்’ ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில்

E MAIL movie review and rating in tamil

லவ்வர் விமர்சனம் 4/5.. எங்கும் காதல்

லவ்வர் விமர்சனம் 4/5.. எங்கும் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன், கௌரிப்ரியா, மதன், ராஜா, கலா, சுகன், சுகில், ரம்யா, ஐஷு, பருத்திவீரன் சரவணன் மற்றும் பலர்..

ஸ்டோரி…

நாயகன் மணிகண்டன் நாயகி கௌரி பிரியா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்படுகிறது.. இவர்களின் காதல் ஆறு வருடத்திற்கு பின்பு சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கிறது.

அம்மாவிடம் 15 லட்சம் பணம் வாங்கி பிசினஸ் செய்து அதை நஷ்டத்தால் கைவிடும் நாயகன் வேறு வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்.. இதனால் நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி சரக்கு போதை என திரிகிறார்.

இதனால் நாயகி தன் காதல் எதிர்காலத்தை எதிர்நோக்கி வருத்தப்படுகிறார். இவர்களுக்கு பிரச்சனை எழவே ஒரு கட்டத்தில் என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? இந்த பிரச்சனை நீடித்ததா? பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப தன்னுடைய கேரக்டரை மணியாக உணர்ந்து ஜொலித்து வருகிறார் நாயகன் மணிகண்டன்.

ஒரு யதார்த்த இளைஞனாக அருண் கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.. அடிக்கடி சரக்கு அடிப்பது சரக்கு அடித்து கோபப்படுவது காதலியிடம் சண்டை போடுவது நண்பர்களிடம் வம்பு செய்வது என தன் கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார்.

முக்கியமாக அப்பாவித்தனமாக தன் நண்பனிடம் உங்க கேர்ள் பிரண்டுக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கீங்களே என்பார். அவளுடைய சுதந்திரம் அவளுக்கு.. என்னுடைய சுதந்திரம் எனக்கு.. சுதந்திரம் கொடுக்க நான் யார்? என்று அந்த நண்பன் கேட்கும்போது தியேட்டர்களில் கைத்தட்டல் சத்தத்தை கேட்க முடிகிறது.

திவ்யா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் இந்த கௌரி பிரியா. ஒவ்வொரு முறையும் தன் ஆறு வருட காதலுக்காகவும் காதலனுக்காக விட்டுக் கொடுத்து தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. காதலனுக்காக மனம் உடைந்து அழுகும் காட்சியில் நம்மையும் அழ வைத்து விடுவார்.

லவ்வர்

ஒவ்வொரு முறையும் நீ மன்னிப்பு கேட்கிறாய்.. இதே போல் தானே உன் அப்பா உன் அம்மாவிடம் கேட்டார்.. ஆனால் இருவரும் விவகாரத்து செய்கிறார்களே?!என கேட்கும் போது திவ்யா ஜொலிக்கிறார்

இவர்களுடன் மணிகண்டன் பெற்றோர்.. கௌரி பிரியாவின் தோழிகள், நண்பர்கள் என அனைவரும் பளிச்சிடுகின்றனர்..

முக்கியமாக ப்ராஜெக்ட் மேனேஜர் மதன் கேரக்டரில் வருபவர் நிச்சயம் ரசிகைகளின் மனதை கொள்ளையடிப்பார்.

டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலர்களை குறிவைத்து அனைத்து பாடல்களையும் கொடுத்திருக்கிறார்
ஷான் ரோல்டன்…

விலகாதே என்னை விட்டு விலகாதே ஒதுங்காதே பக்கம் வந்தால் ஒதுங்காதே.. என்ற பாடல் நிச்சயம் காதலர்களை கவர்ந்த ஒன்றாகும். இனி பிரிந்த காதலர்களுக்கு ஒரு பிரியாத பாடலாக இது அமையும்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.. காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்க ரசிக்க எடுத்திருக்கிறார். தோழிகள் சுற்றும் தளமாகட்டும்.. காதலர்கள் சுற்றும் இடமாகட்டும் கடற்கரையாகட்டும் என ஒவ்வொன்றையும் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்..

எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக கையாண்டுள்ளார்.. நாயகி கௌரி தன் காதலைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் வருவதும் நாயகி பேசிக் கொண்டிருப்பதும் எடிட்டிங் சூப்பர்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் விறுவிறுப்பு குறைகிறது. கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம்..

நிறைய குறும்படங்களை இயக்கியவர் பிரபுராம் வியாஸ்.. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி ஆனாலும் அந்த காதல் நேர்மை உண்மை இருக்கணும் என தத்துவத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரபு ராம்வியாஸ்.

காதலனை காதலியை காயப்படுத்தக் கூடாது என்பதற்காக சின்ன சின்ன பொய்களை சொல்லி பின்பு அதுவே அவர்களின் வாழ்க்கையை மாற்றி விடும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஆக இந்த லவ்வர் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த லவ்வர் ஆக இருப்பார்..

லவ்வர்

Lover movie review and rating in tamil

லால் சலாம் விமர்சனம் 3.75/5

லால் சலாம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

ரஜினி ஒரு முஸ்லிம்.. இவரது மனைவி நிரோஷா.. இவர்களின் மகன் விக்ராந்த்.

லிவிங்ஸ்டன் மாணிக்கம் ஒரு ஹிந்து.. இவரின் மனைவி ஜீவிதா இவர்களின் மகன் விஷ்ணு விஷால்.

இவர்களின் இரு குடும்பமும் நட்புடன் பழகுகின்றனர்.. சிறுவயதில் ஒரு பிரச்சனையால் ரஜினியை வெறுக்கிறார் விஷ்ணு விஷால்… ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறார் ரஜினிகாந்த்.

இந்த சூழ்நிலையில் கிராமத்தில் இருக்கும் விஷ்ணு விஷால் கிரிக்கெட் அணியுடன் மோத மும்பையில் இருந்து கிராமத்திற்கு வருகிறார் விக்ராந்த்..

இந்த கிரிக்கெட் போட்டியில் இருவருக்கும் பிரச்சனை எழவே விக்ராந்தின் கையை முறித்து விடுகிறார் விஷ்ணு.

இதன் பின்னர் என்ன ஆனது? ரஜினி என்ன செய்தார்.? கிரிக்கெட் போட்டி நடைபெற்றதா? கிரிக்கெட்டிற்காக மும்பையில் இருந்து கிராமத்திற்கு வர என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் ரஜினிகாந்த் இருப்பதே ஒரு சிறப்பு தான்.. அவரது கேரக்டர் தான் படத்தை ஆணிவேராக இருக்கிறது. ஆக்சன் எமோஷன் என இரண்டையும் சரிசமமாக கொடுத்திருக்கிறார். முக்கியமாக மகனுக்காக கண்கலங்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர். அதிலும் நாயகன் விஷ்ணு நாயகி அணந்திகா இருவரும்கும் நல்ல கெமிஸ்ட்ரி..

இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

டெக்னீசியன்..

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ஜலாலி என்ற பாடல் முஸ்லிம் மதத்திற்கு கொண்டாட்டமாக இருக்கும்.. அதே போல தேர் திருவிழா என்ற பாடல் நிச்சயம் இந்து மதத்தினருக்கு கொண்டாட்ட பாடலாக அமையும்..

பின்னணி இசையும் அசத்தியிருக்கிறார் ரஹ்மான்… ரஜினிகாந்தின் அறிமுகம் பாடல் ஜலாலி பாடல் ரசிக்க வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ராமலிங்கத்தை பாராட்டலாம்.. 1993 காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக கலை இயக்குனரையும் கை குலுக்கி பாராட்டி ஆக வேண்டும்.. ஆனால் எடிட்டர் தான் கொஞ்சம் திரைக்கதையை குழப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம்..

ஆறு மாதத்திற்கு பின்பு என காட்சிகளை காட்டி விட்டு பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு என வைத்து அதில் ஒரு பிளாஷ் பேக் என குழப்பி இருக்கிறார்.

ரஜினி என்ற மாபெரும் சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்து மட்டுமல்லாமல் அவருக்கான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த வன்முறை காட்சிகளாக வைத்து ரஜினியின் அட்வைஸ் காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து.

மதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த படம் சவுக்கடி கொடுக்கும்.. ரஜினியை சங்கி என்று அழைக்கும் சில நபர்களுக்கு நெத்தியடியாக மொய்தீன் பாய் என்ற கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.

முக்கியமாக முஸ்லீம் சந்தனககூடு இந்து மதத்தின் தேராக மாறும் காட்சி வேற லெவல்..

ஆக கிரிக்கெட்டில் அரசியல் கூடாது.. மதத்திலும் அரசியல் கூடாது.. எந்த மதமாக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான்.. கடவுளை மனிதன்தான் படைத்தான் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்..

லால் சலாம்

Lal Salaam movie review and rating in tamil

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

1974 காலகட்டத்தில் வடக்குப்பட்டி கிராமத்தில் நடந்த காமெடி கதைக்களம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

கடவுள் இல்லை என்று சொல்லுபவர் வடக்குப்பட்டி ராமசாமி சந்தானம்… இவர் ஒரு நாத்திகவாதி என்றாலும் ஆன்மீகத்தை நம்பும் மூடநம்பிக்கைகளை நம்பும் மனிதர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்.

ராமசாமியின் திட்டங்களை அறிந்த தாசில்தார் தமிழ் இதற்கு இடைஞ்சலாக இருக்கிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது? ஜெயித்தது யார்? ஆன்மீகமா..? நாத்திகமா.?

கேரக்டர்ஸ்…

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர்..

நாயகன் சந்தானம் தனக்கு ஏற்ற கலாய்க்கும் கதையை எடுத்து இருக்கிறார்.. ஒன் லைன் கவுண்டர் காமெடிகளை ரசிக்க வைக்கிறார்.. ராமசாமி என்ற பெயரை வைப்பதற்கும் தனி தைரியம் வேண்டும்..

சந்தானத்தின் உதவியாளராக மாறன், கோயில் பூசாரியாக சேஷு இருவரும் நடித்துள்ளனர் இருவரும் தான் படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்

தாசில்தாராக வரும் தமிழ்.. தன் கேரக்டரில் வில்லத்தனம் காட்டி இருக்கிறார்.

மேஜர் ஆக நிழல்கள் ரவி நடித்துள்ளார்..
ஒரு மேஜர் கேரக்டரை இப்படியா சொல்ல வேண்டும் இயக்குனர் அவர்களே!???

எம் எஸ் பாஸ்கர்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தரமான நடிகர் இவர்.. அதுவும் சந்தானம் படம் என்றால் இவருக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைத்துவிடும் போல..

மேகா ஆகாஷுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெரிதாக ராசி இல்லை போல.. அவரது கேரக்டர்கள் பல படங்களில் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. இந்த படத்திலும் அதே நிலைதான்.. சந்தானத்திற்கு அட்வைஸ் நாயகியாக வந்து செல்கிறார்..

ஊர் பெரிய மனுஷங்களாக எதிரும் புதிருமாக ஜான் விஜய் & ரவி மரியா நடித்துள்ளனர்.. ஆனாலும் சில கடி ஜோக் போட்டு டென்ஷன் கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

தீபக் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. 1975களில் இருந்த அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார். அதை இன்றைய தலைமுறைக்காக கிராமத்து மண்வாசனையுடன் விருந்து படைத்திருக்கிறார்..

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய மனம் மாறாத இசையை கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் அதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது..

இயக்குநர் கார்த்திக் யோகி.. சந்தானத்தை வைத்து ஏற்கனவே டிக்கிலோனா என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த கார்த்தி யோகி.

சமீபத்தில் வந்து நம்மையெல்லாம் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் போல 1970 – 80களில் பரபரப்பாக பேசப்பட்ட மெட்ராஸ் ஐ என்பதை கருப்பொருளாக எடுத்து அதில் கடவுள் மூடநம்பிக்கையை கலந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்தி யோகி.

45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை தான் இது… அப்படி இருக்கையில் அன்று மக்கள் மெட்ராஸ் ஐ-க்கு இப்படி பயந்து ஓடினார்களா? அதுவும் கண்ணில் ஏற்படும் சாதாரண பிரச்சனை தானே என்பது கேள்விக்குறி?!

பியூப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இதை தயாரித்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி படம் உலகம் முழுவதும் 600 ஸ்கிரீன்களில் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தெரிவித்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி

Vadakkupatti Ramasamy movie review and rating in tamil

டெவில் திரை விமர்சனம்

டெவில் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாகவே மக்கள் பயன்படுத்தும் ஒரு ஒரு சொல்.. கணவன் மனைவி பிரச்சினை இருந்தால் நடுவே யாரும் வரக்கூடாது என்பதுதான்.. ஒருவேளை மூன்றாம் மனிதன் வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.

ஸ்டோரி…

கணவர் விதார்த்.. மனைவி பூர்ணா..

இவர்களின் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் திடீரென பிரச்சனை வருகிறது.. கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என வருத்தத்தில் இருக்கிறார் மனைவி பூர்ணா.. அப்போது பூர்ணாவின் வாழ்க்கையில் நட்பாக நுழைகிறார் திரிகுண்.. இருவருக்கும் நாளடைவில் நெருக்கம் ஏற்படுகிறது..

இந்த நிலையில் திடீரென மனம் திருந்திய விதார்த் மீண்டும் பூர்ணாவின் வாழ்க்கையில் மெல்ல நுழைகிறார்..

ஒரு பக்கம் கணவன்.. ஒரு பக்கம் நண்பன் என்ன செய்தார் பூர்ணா? மீண்டும் தம்பதியரின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா? பூர்ணா என்ன செய்தார்?நண்பன் என்ன செய்தான்? கணவர் என்ன செய்தான்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

விதார்த்.. பூர்ணா.. திரிகுண் இவர்கள் மூவரும் தான் படத்தின் ஆணிவேர் இவர்கள் சுற்றிய கதைகளத்தை திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.

ஆனாலும் சுபாஸ்ரீ மற்ற நட்சத்திரங்கள் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.. முக்கியமாக இந்த படத்தின் இசையமைப்பாளர் மிஷ்கினும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..

டெவில் பட சந்திப்பில் தான் மிஷ்கினின் பள்ளி மாணவி என்று பேசி இருந்தார் பூர்ணா.. அன்று அவர் சொன்னது மிகையாக காணப்பட்டாலும் அதை நிரூபித்திருக்கிறார் பூர்ணா..

கணவன் செய்த துரோகம்.. புதிய நண்பன் நுழைந்த வாழ்க்கை.. தவிப்பு ஏக்கம் சஞ்சலம் சபலம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக தெறிக்கவிட்டுள்ளார் பூர்ணா..

கதையின் நாயகன் பூர்ணாவின் கணவன் என்ற சராசரி கேரக்டர் என்றாலும் அதை தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார்.. தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளை அவர் எடுப்பது பாராட்டுக்குரியது..

மூன்றாவதாக திரிகுண்.. விதார்த் மற்றும் பூர்ணாவுக்கு போட்டியாக நடிப்பு இல்லை என்றாலும் அதற்கு ஈடான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

டெவில்

டெக்னீசியன்ஸ்..

Director : Aathityaa

Music : Director Mysskin

Producer : R. Radhakrishnan & S. ஹரி

படத்தொகுப்பாளர் இளையராஜா..
ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார்.. பொதுவாகவே மிஸ்கின் படங்கள் என்றால் இருட்டில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல..

இசையமைப்பாளராக மிஷ்கினுக்கு இது முதல் படம் என்றாலும் அதற்கான இசை பயிற்சியை முறையாக கற்று இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் பாராட்டுப்படியாக இருக்கிறது..

இந்தப் படத்தின் இயக்குனர் ஆதித்யா மிஷ்கினின் தம்பி ஆவார்.. ஆனாலும் அவர் உதவி இயக்குனராகவே இருந்துதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

99% எவரும் நல்லவர் இல்லை.. நல்லவராக வாழ்வதும் கெட்டவராக மாறுவதும்அவரது சூழ்நிலையை பொறுத்து தான்.

தான் எதிர்பார்க்கும் அன்பு அரவணைப்பு பாசம் எதுவும் தன் துணைவனிடமிருந்து கிடைக்காத நிலையில் ஒரு மனைவி என்ன செய்வாள் என்பதை தான் பூர்ணாவின் கேரக்டர் செய்திருக்கிறது. அது எந்த தவறான கண்ணோட்டமும் இல்லாமல் அழகாகவே சொல்லி இருக்கிறார் ஆதித்யா.

அதேபோல தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது தெய்வீக குணம் எனவும் ஒரு கருத்தை சொல்லி இந்த டெவிலுக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்.

ஆக இந்த படத்திற்கு ஏன் டெவில்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. எது நிஜமான பேய் என்பதை கிளைமாக்ஸ் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.

டெவில்

Devil movie review and rating in tamil

சிக்லெட்ஸ் திரை விமர்சனம்…

சிக்லெட்ஸ் திரை விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் பள்ளித் தோழிகள்.. எப்போதும் இணை பிரியாத இவர்கள் வளர வளர இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக மாறி விடுகின்றனர்..

எனவே பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து சுதந்திரப் பறவைகளாக செயல்பட விடுகின்றனர்.. ஆனால் அளவுக்கு மீறிய எந்த சுதந்திரமும் ஆபத்து தானே.. அது போல ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் டேட்டிங் சாட்டிங் என திசை மாறி திரிகின்றனர் இந்த தோழிகள்..

இதனை அறியும் பெற்றோர்கள் என்ன செய்தார்கள்? அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை மாறியதா? தோழிகள் பிரிந்தார்களா? என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Sathvik Verma, Nayan Karishma, Surekha Vani, Sriman, Jack Robinson, Amrita Halder, Manjeera, Rajagopal

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் இளம் தோழிகள்.. அழகாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் கவர்கின்றனர்.. திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதைவிட தோழிகளாக என்ஜாய் செய்திருக்கின்றனர்..

வருண் கேரக்டரில் சாத்விக் வர்மா, சிக்கு கேரக்டரில் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் கேரக்டரில் வருபவர் ஆகியோர் தோழிகளுக்கும் கை கொடுத்து கதைக்கும் உதவியிருக்கின்றனர்..

மூன்று பெண்களின் பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி ஆகியோர் மிக இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கின்றனர்

டெக்னீசியன்ஸ்…

Director : Muthu

Music : Balamurali Balu

Producer : Srinivasan Guru

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.. ஹீரோயின்களை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.. தான் பெற்ற இன்பத்தை ரசிகர்களும் பெற வேண்டும் என காட்சிகளை வைத்திருக்கிறார்..

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.. பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படியாக இருக்கிறது.. முக்கியமாக பாடல் வரிகள் புரியும் படியாக இருப்பது சிறப்பு..

இளம் வயதில் காதல் காமம் என்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான். ஆனால் அதை எல்லாம் தவிர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நல்ல வழியில் செல்ல வேண்டும் என அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஆனால் அட்வைஸ் செய்வதற்கு முன்பே களவும் கற்று மற என்பது போல் அனைத்து களவாணித்தனங்களையும் செய்யவும் வழிகாட்டி இருக்கிறார் இயக்குநர் முத்து.

விவரம் தெரியாத வயதில் விஷமத்தனங்களை காட்சிகளாக வைத்திருக்கும் இயக்குனர் அதன் பின்னர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனவும் துள்ளுவதோ இளமை பட பாணீயில் அட்வைஸ் செய்திருக்கிறார்..

சிக்லெட்ஸ்

Chiclets movie review and rating in tamil

More Articles
Follows