சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

கதைக்களம்..

மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் சுருளி (எ) தனுஷ்.

பணம் கொடுத்தால் கொலையும் செய்வார். ஒருமுறை ஒரு கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது தனுஷின் நண்பர் ஒருவர் லண்டனில் அடியாள் வேலை இருக்கிறது. இங்கிலாந்து தாதா பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ) க்கு ஆள் தேவைப்படுகிறது என்கிறார்.

அந்த நாட்டில் மற்றொரு தாதா ஜோஜு ஜார்ஜ் என்ற ஒரு இலங்கை தமிழனை எதிர்க்க ஆளில்லை.

அவனை தீர்த்து கட்டினால் லட்சணக்கணக்கில் பணம் கிடைப்பதாக நண்பர் கூற தனுஷும் லண்டன் செல்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? லண்டனில் தாதாவாக மாறினாரா..? கொலை பழியில் இருந்து தப்பினாரா தனுஷ்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலான படங்களில் வேலையில்லாமல் சுற்றும் தனுஷ் இதில் பிசியாகவே இருக்கிறார். டான் கெட்டப்புக்காக முறுக்கு மீசை எல்லாம் வைத்திருக்கிறார்.

தன் கேரக்டர் ஆரம்ப காட்சியிலே (மதுரையில்) கொலை செய்ய ஒரு ரயிலையே நிறுத்துகிறார் தனுஷ்.

ஓடும் ரயிலில் ஏறி கொலை செய்யும் ஹீரோவை பார்த்திருப்போம். டிரெய்ன் டிரைவரும் டிரெயினை நிறுத்தி கொலை செய்ய சொல்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

தனுஷ் லண்டன் புறப்படுவதற்கு முன்னரே “சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” என்கிறார். (ஒன்னும் சொல்றதுக்கில்ல)

லண்டன் சென்ற சில தினங்களிலேயே எதிரணியின் (ஜோஜு ஜார்ஜ் + கலையரசன்) தொழில் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கிறார்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமியுடன் ரொமான்ஸ் செய்ய முயற்சித்துள்ளார்.

எதிரிகளை துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சரமாரி சுடுகிறார் இந்த சுருளி. அசுரன் நடிகர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகி ஐஸ்வர்யா லட்சுமி தான் இலங்கையில் இருந்தபோதும் அகதிகளாக திரிந்த போதும் பட்ட கஷ்டங்களை சொல்லும்போது தமிழர்களின் கண்களில் கண்ணீர் நிச்சயம்.

படத்தில் கிட்டத்தட்ட 2 வில்லன்கள். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ & மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.

இருவரும் தங்கள் நடிப்பில் சிறப்பு. அதிலும் ஜோஜு ஜார்ஜ் கேரக்டர் மனதில் நிற்கும்.

இவர்களுடன் கலையசரன், சவுந்தரராஜா, ஷரத் ரவி, வடிவுக்கரசி, கஜராஜ் (இயக்குனரின் தந்தை) ஆகியோரும் உள்ளனர். இவர்களின் பங்களிப்பு நன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

“என்னை மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி” பாடல் படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு வருத்தம்.

ரகிட ரகிட.. பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. தியேட்டர் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் ஆடியிருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை பெரிதாக இல்லை. இவர் இசையமைத்த கபாலி & காலா பட லெவலுக்கு பின்னணி இசையில்லை.

ஒளிப்பதிவாளர் தன் பணிகளில் சிறப்பு. குறையில்லை.

கார்த்திக் சுப்பராஜ் இதற்கு முன்பு இயக்கிய பேட்ட பட சாயல் அதிகளவில் உள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் பேட்ட நினைவில் வருகிறது. லுங்கி + ஸ்வட்டர் உடையில் தனுஷ் வரும்போது ரஜினியே நினைவுக்கு வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் வில்லன் ஜேம்ஸ் காஸ்மோ, படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டு இருக்கிறார். FCUK … இதை சொல்லாமல் அவர் ஒரு டயலாக் கூட பேசவில்லை.

படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் டிரெய்ன் போல படத்தின் நீளம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எடிட்டர் தூங்கிட்டாரா?

தனுஷ் & ஐஸ்வர்யா சந்தித்து முத்தமிடும் காட்சியில் மரம் வானத்தை காட்டி பொறுமையாக கேமராவை கொண்டு செல்வது ஏனோ..? இதுபோல பல காட்சிகள் நீளம்.

எவராக இருந்தாலும் பிறப்பிடம் மற்றும் வாழ்விடம் மாறலாம். எனவே அவர்கள் வாழும் இடம் தான் அவர்களுடைய சொந்த மண், தாய் நாடு என்ற கருத்தை வலியுறுத்த முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

எவ்வளவு காசு கொடுத்து பார்த்தாலும் தேடினாலும் இயக்குனர் கா.சு. வை காணவில்லை..

*ஆக மொத்தம்… சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா.. ஜகமே தந்திரம் 2.25/5*

Dhanushs Jagame Thandhiram review rating

Related Articles