கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

நடிகர்கள்: சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, கதிர், விஜய் ஸ்ரீ மற்றும் பலர்.
இயக்கம் – விஜய் ஸ்ரீ
ஒளிப்பதிவு – ராஜபாண்டி
இசை – லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

சாருஹாசன் நடிப்பில் மிகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்ட படம் தாதா 87.

அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

ஏரியா கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி வருகிறது. இருவரை காலி செய்துவிட சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் எம் எல் ஏ-வாக வரும் மனோஜ்குமார். எம்எல்ஏ-வுக்கு அட்ஜஸ்ட் செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் காட்டானாக நடித்திருக்கிறார் இப்பட டைரக்டர் விஜய் ஸ்ரீ.

இவர்கள் அனைவரும் பயப்படும் ஆள் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சாருஹாசன் தான்.

எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேட்பார். அனுமதியின்றி பெண்களை தொட்டால் உயிரோடு எரிப்பது இவரது வழக்கம்.

இவருக்கு இந்த வயதிலும் சரோஜா மீது காதல் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தன் பழைய நண்பர் சாருஹாசனை சந்திக்கிறார் ஜனகராஜ்.

ஒரு நாள் தனது மகள் ஸ்ரீபல்லவிக்கு காதல் தொல்லை கொடுக்கும் நாயகன் ஆனந்த் பாண்டியை கண்டிக்க சொல்கிறார் ஜனகராஜ்.

தாதா என்ன செய்தார்? காதலனை கண்டித்தாரா? அல்லது காதலை சேர்த்து வைத்தாரா? நாயகன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

விஜய் டிவியில் கலக்கிய ஆனந்த் பாண்டிக்கு இதுதான் முதல் படம்.

ஏரியாவில் எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவரிடம் ஐ லவ் யூ சொல்வது இவரது வழக்கம். இது போன்ற ஜாலி பையனாக ஜொள்ளு பையனாக வாழ்ந்திருக்கிறார்.

நன்றாக நடனமாடியிருக்கிறார். சில நேரங்களில் ஓவராக பேசி எரிச்சலான நடிப்பை கொடுத்து நம்மை கடுப்பேற்றி விட்டார்.

பெரும்பாலும் படங்களில் சாருஹாசனை சாந்தமாகதான் பாத்திருக்கிறோம். 87 வயதில் இப்படி எல்லாம் நடிப்பதே பெரிய விசயம்தான். தாதா கேரக்டர் அதிலும் கெத்து காட்டியிருக்கிறார். கடைசியில் கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளார். ஆண்டவருக்கே அண்ணன்டா…

இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.

முதல் பாதி முழுவதும் சாருஹாசனுக்கு என்றால். 2ஆம் பாதி முழுவதும் நாயகிக்கு தான். ஸ்ரீ பல்லவி அருமையாக நடித்துள்ளார்.

ஒரு பெண் நாயகி முதன்முறையாக திருநங்கையாக நடித்துள்ளது பாராட்டத்தக்கது.

காதல் என்றால் திருமணம் என்றால் செக்ஸ் மட்டும் தானா? அது ஒரு 5 நிமிட சம்பவம் தான். ஆனால் அதை மீறி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தன் நடிப்பிலும் கண்களிலும் வசனத்திலும் வெளிப்படுத்தியுள்ளார்.

கலகலப்பில்லாத கேரக்டரில் ஜனகராஜ். ஆனாலும் தன் மகளுக்காக இவர் எல்லாரிடமும் சண்டை போடும்போது இவர் ஜனங்க ராஜ் ஆகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…
லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி என 3 பேர் இசையமைத்துள்ளனர். ’ஆண்டவருக்கே அண்ணன்டா… ஒரு நிமிஷம் தல’ பாடல் ஆட்டம் போட வைக்கும்.

படத்தின் பின்னனி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் இருட்டாக இருந்தாலும். ஆனாலும் ரசிக்கும் படி வடசென்னையை வடிவமைத்துள்ளார்.

தனது முதல் படம் என்றாலும் தாதா கதையில் ஆரம்பித்து அதை காதலில் முடித்திருப்பது செம. டைரக்டர் விஜய் ஸ்ரீயை பாராட்டலாம்.

ஆனால் தாதா கதை மற்றும் காதல் கதை என இரண்டையும் நன்றாக பிரித்து 2 படமாக கொடுத்திருக்கலாம்.

இரண்டையும் ஒன்றாக கொடுக்க நினைத்து 2ஆம் பாதியில் தடுமாறி இருக்கிறார்.

தாதா வாக கெத்து காட்டிய சார்ருஹாசன் திடீரென சரோஜாவை தேடுவது எல்லாம் ஓவர். இருவரும் இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எல்லாம் நம்பும்படியாக இல்லை.

தாதா 87.. கெத்தில் சத்து குறைவு

DhaDha87 movie review rating

Comments are closed.