தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிமான்டி காலனி 2 விமர்சனம் 3.75/5.. திகில் காலனி
ஸ்டோரி…
தன் கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை தேடி அலைகிறார் நாயகி ப்ரியா பவானி சங்கர்.. இதனையடுத்து ஆவிகள் உலகில் நுழைந்து தனது கணவருடன் பேசி அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என நினைக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில் கணவர் இல்லாமல் அருள்நிதியின் ஆவி பிரியாவுடன் பேச துடிக்கிறது.. இந்த சூழ்நிலையில் நிஜ உலகில் வாழும் மற்றொரு அருள்நிதி குடும்ப சொத்து பிரச்சினை சிக்கி கொள்கிறார்.
இரண்டு அருள்நிதிக்கும் என்ன தொடர்பு.? ஆவி உலகில் பேசத் துடித்த பிரியா கணவரின் மரண மர்மத்தை அறிந்தாரா?என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், செரிங் டோர்ஜி உட்பட பலர்..
எனக்கு ரொமான்ஸ் அக்ஷன விட திரில்லர் தான் ஃபேவரிட் என்பது போல த்ரில்லர் ஹிட்டுகளை கொடுத்து வருபவர் உயரமான ஹீரோ அருள்நிதி.. நாயகி பிரியா இருந்தாலும் அவருடன் எந்த ரொமான்ஸ் இல்லாமல் நாயகன் ஒப்புக்கொண்டது பாராட்டுக்குரிய விஷயம்..
கவர்ச்சி காட்டாமல் கண்களால் மிரட்டலான நடிப்பை கொடுக்க முடியும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்..
இவர்களுடன் பிக்பாஸ் அர்ச்சனா, மீனாட்சி, அருண்பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோரும் உண்டு.. அருள் நிதியை அண்ணா என்று அழைத்து அறிமுகமாகும் அர்ச்சனா அசத்தலான நடிப்பை முதல் படத்திலேயே கொடுத்து கைதட்டல் வாங்கி விட்டார்..
டெக்னீசியன்ஸ்…
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்..
பின்னணி இசை என்றால் பின்னி பெடல் எடுப்பவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.. இது திகிலான திரில்லர் படம் என்பதால் டிமான்டி காலணியை கதற விட்டிருக்கிறார்.. சில இடங்களில் இரைச்சல் கொடுத்திருந்தாலும் பேய் படங்களுக்கே உரித்தான பயத்தை இசை மூலம் உணர வைத்திருக்கிறார் ஷாம் சி எஸ்..
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் பங்களிப்பு சபாஷ் போட வைக்கிறது.. கம்ப்யூட்டர் கிராபிக் காட்சிகளுடன் கை கோர்த்து தனது படைப்பாற்றல்களை காட்டி இருக்கிறார்.. அதுபோல கலை இயக்குனரின் பணியை பார்த்து ரசிக்கலாம்..
அதிர வைக்கும் ஆவிகள் உலகம்.. பர பர வைக்கும் பறவைகள் கூட்டம்.. என காட்சிக்கு காட்சி மிரள வைத்திருக்கிறார் டைரக்டர் அஜய் ஞானமுத்து.
இரண்டாம் பாகம் வேண்டும் என திட்டமிட்டு இருந்தால் முதல் பாகத்தின் முடிவில் அதற்கான காட்சிகளை வைத்திருக்கலாம்.. ஆனால் டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டு வந்தது.. அப்போது பார்ட் 2 பாகங்களின் சீசன் இல்லை..
முதல் பாகத்தில் நாயகன் அருள்நிதி மரணம் அடைவார். அப்படியான சூழலில் இரண்டாம் பாகத்தை எப்படி எடுக்க முடியும் என்ற கேள்வி நிச்சயமாக எழக்கூடும்.. அதனை சரி செய்யும் விதமாக அதற்கான திரைக்கதையை அமைத்து இந்த படத்தை நகர்த்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
ஆவிகள் உலகம்.. அதில் பேசத் துடிக்கும் நாயகி.. அரண்டு போன கல்லூரி பெண்கள்.. அலற வைக்கும் லைப்ரரியன்.. அலட்டிக் கொள்ளாத நாயகன் என ஒவ்வொன்றையும் கையாண்டு இருக்கிறார்
இயக்குனர் அஜய் ஞானமுத்து..
மேலும் 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு கதையை கிளைமாக்ஸில் காட்டில் டிமான்டி காலனி 3ம் பாகத்திற்கும் இப்பவே அடிக்கல் நட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து..
வழக்கமான பேய் பட வரிசையில் டிமான்டி காலனியை வைக்காமல் திரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
Demonte Colony 2 review