தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
BOAT போட் விமர்சனம் 3.5/5.. படகில் வந்த பாசம்
ஸ்டோரி…
1943 ஆண்டு.. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சென்னை மீது ஜப்பான் குண்டு போட திட்டமிட்டு இருந்தது.
இந்த சூழ்நிலையில் அங்கு சென்னையில் வசித்துக் கொண்டிருந்த யோகி பாபு அவரது அம்மா லீலா இருவரும் குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பதற்காக அவர்களின் சொந்த படகில் நடுக்கடலுக்கு பயணம் செல்கின்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக முதியவரான ஐயர் நாராயணனும் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமியும் (கௌரி ஜி கிஷன்), கர்ப்பிணியான விஜயாவும் (மதுமிதா) அவரது மகன் மகேஷும் (அக்ஷத்), நூலகரான முத்தையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), எழுத்தாளரான ராஜாவும் (ஷா ரா), வியாபாரியான சேட்டும் (சாம்ஸ்) ஆகியோரும் யோகி பாபு படகில் ஏறி கொள்கின்றனர்..
இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது என யோகி பாபு எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.. எனவே யாராவது இருவர் படகிலிருந்து இறங்கியாக வேண்டும்.. அப்போதுதான் அனைவரும் உயிர் பிழைக்க முடியும்.. இல்லையென்றால் படகு மூழ்கிவிடும் என எச்சரிக்கிறார் யோகி பாபு
இந்நிலையில் வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் (அவரின் படகு விபத்துக்குள்ளானதில்) ஜெஸ்ஸி இவர்களை மிரட்டி படகில் ஏறி கொள்கிறான்…
அப்போது ஆங்கிலேயன் ஜெஸ்ஸிக்கு ஒரு தகவல் வருகிறது.. நீங்கள் பயணம் செய்யும் படகில் ஒரு தீவிரவாதியும் இருக்கிறான்.. அவனால் ஆபத்து என்ற தகவல் வருகிறது.
யோகி பாபு படகில் ஏறிய அந்த தீவிரவாதி யார்? படகில் இருந்தவர்களை அவன் என்ன செய்தான்? படகு பாரம் தாங்காமல் படகிலிருந்து இறக்கப்பட்ட இருவர் யார் என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Yogi babu as Kumaran
Gouri G Kishan as Lakshmi
M.S.baskar as Muthaiya
Chinni jeyandh as Narayanan
Madhumitha as Vijaya
Sha Ra as Raja
Jessi as Irwin Domas
Kullapuli Leela as Muthumari
Akshath as mahesh
1943 ஆம் ஆண்டுகளில் சென்னை வாழ் மக்கள் அணிந்திருந்த உடை அலங்காரத்தை அப்படியே கலை இயக்குனர் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேசமயம் யோகி பாபு மட்டும் அடிக்கடி உடைகளை மாற்றிக் கொண்டே இருப்பது ஏனோ? மாற்றியது இரண்டு உடை தான்.. தண்ணீரில் குதிப்பதற்கு முன்.. குதித்த பின் என அடிக்கடி மாற்றுவது ஏன்.?
படகோட்டியாக யோகி பாபு.. கண்கலங்கவும் சிரிக்கவும் வைக்கிறார்.. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் வசனங்களை பேசி இருப்பது சிறப்பு.
இவரின் அம்மாவாக கொளப்புள்ளி லீலாவும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..
சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், கௌரி, சாம்ஸ், சாரா, மதுமிதா, லெஸ்ஸி ஆகிய கதாபாத்திரங்கள் படத்திற்கு பலம்.. ஒரே படகில் அமர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப உடல் மொழியை கொடுத்திருப்பதும் சிறப்பு.
முக்கியமாக யோகி பாபுவை கௌரி ஓரக்கண்ணால் சைட் அடிப்பதும் பின்னர் எல்லாரையும் மயக்கம் போட வைத்துவிட்டு இவர்கள் இருவரும் கடல் அலையில் காதல் மொழி பேசுவது ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
Production Company – Maali and Maanvi Movie Makers & Chimbudeven Entertainment
Producer – Prabha Premkumar
Co-Producer – C.Kalaivani
Writer & Director – Chimbudeven
Music – Ghibran
DOP – Madhesh manickam
Production Design – T.Santhanam
Editor – Dinesh Ponraj
Art director – S.Ayyappan
Executive Producer – Vel.Karuppasamy
Make up – Pattanam Rasheed
Costumer – Sai – Shiva
Colorist – G.Balaji
Vfx –DTM Lavan Kusan
Stunts- Sakthi Saravanan
Sound Design & Mixing – S.Alagiakoothan – Suren.G
Publicity Designer – Bharanidharan Natarajan
Co Directors – Vel.Karuppasamy – Bala Pandian – Yatra Srinivassan
Associate Director – Demurra
Assistant Directors – Naveen, Pa.Krish, Nishanth, Gangadharan, Siddharth
Production Executive – S.Krishnaraj
PRO – Nikil Murukan
ஒரு படகில் 9 பேர் பயணம் அத்துடன் ஒரு எலி என அனைத்தையும் அழகாக படம் எடுத்து சுவாரசியம் குறையாமல் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.. பறவைகள் பறக்கும் காட்சி திருக்கை மீன்கள் நீந்தும் காட்சி.. திமிங்கலம் திமிரும் காட்சி என அனைத்தும் அழகு.. பல இடங்களில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை படத்துடன் ஒன்றி இருப்பது சிறப்பு.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் தன் பணியில் நேர்த்தி.. படத்தின் வசனங்கள் ஆங்காங்கே கவனம் பெறுகிறது..
முக்கியமாக 1943 ஆம் ஆண்டில் மதவெறி ஜாதி அப்போது பேசப்பட்ட அரசியல் ஆங்கிலேயர் இந்தியர்களுக்கான போராட்டம் என அனைத்தையும் சொல்லி இருப்பது ரசிக்க வைக்கிறது..
ஜிப்ரான் இசையில் ‘சோக்கா நானும் நிக்கிறேன்’ பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது அதிலும் கானா பாடலுடன் கர்நாடிக் இசையை கலந்திருப்பது சிறப்பு.. ஆனால் 1943 ஆம் ஆண்டு கானா பாடல் இருந்ததா என்பது கேள்விக்குறிதான்.??.
பெரும்பாலும் ரயிலில் முழு படம் பஸ்ஸில் முழு படம் என பார்த்திருப்போம்.. முழுக்க முழுக்க கடலில் அதுவும் ஒரு படகில் படம் பிடித்திருப்பதுக்காகவே இயக்குனர் சிம்புதேவனை பாராட்டலாம்.. அதுவும் அவரரே படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
தீவிரவாதி யார்? என்ற தேடுதலிலே இடைவேளை வரை படம் தொடர்கிறது. படகில் இருந்து யார் இறங்குவார்கள் என்ற கேள்வியில் பாடம் நீளும்போது இறுதியாக கிளைமாக்ஸ் இல் செண்டிமெண்ட் ட்விஸ்ட் கொடுத்திருப்பது..
Chimbudevans Boat movie review