சிக்லெட்ஸ் திரை விமர்சனம்…

சிக்லெட்ஸ் திரை விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் பள்ளித் தோழிகள்.. எப்போதும் இணை பிரியாத இவர்கள் வளர வளர இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக மாறி விடுகின்றனர்..

எனவே பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து சுதந்திரப் பறவைகளாக செயல்பட விடுகின்றனர்.. ஆனால் அளவுக்கு மீறிய எந்த சுதந்திரமும் ஆபத்து தானே.. அது போல ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் டேட்டிங் சாட்டிங் என திசை மாறி திரிகின்றனர் இந்த தோழிகள்..

இதனை அறியும் பெற்றோர்கள் என்ன செய்தார்கள்? அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை மாறியதா? தோழிகள் பிரிந்தார்களா? என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Sathvik Verma, Nayan Karishma, Surekha Vani, Sriman, Jack Robinson, Amrita Halder, Manjeera, Rajagopal

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் இளம் தோழிகள்.. அழகாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் கவர்கின்றனர்.. திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதைவிட தோழிகளாக என்ஜாய் செய்திருக்கின்றனர்..

வருண் கேரக்டரில் சாத்விக் வர்மா, சிக்கு கேரக்டரில் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் கேரக்டரில் வருபவர் ஆகியோர் தோழிகளுக்கும் கை கொடுத்து கதைக்கும் உதவியிருக்கின்றனர்..

மூன்று பெண்களின் பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி ஆகியோர் மிக இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கின்றனர்

டெக்னீசியன்ஸ்…

Director : Muthu

Music : Balamurali Balu

Producer : Srinivasan Guru

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.. ஹீரோயின்களை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.. தான் பெற்ற இன்பத்தை ரசிகர்களும் பெற வேண்டும் என காட்சிகளை வைத்திருக்கிறார்..

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.. பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படியாக இருக்கிறது.. முக்கியமாக பாடல் வரிகள் புரியும் படியாக இருப்பது சிறப்பு..

இளம் வயதில் காதல் காமம் என்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான். ஆனால் அதை எல்லாம் தவிர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நல்ல வழியில் செல்ல வேண்டும் என அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஆனால் அட்வைஸ் செய்வதற்கு முன்பே களவும் கற்று மற என்பது போல் அனைத்து களவாணித்தனங்களையும் செய்யவும் வழிகாட்டி இருக்கிறார் இயக்குநர் முத்து.

விவரம் தெரியாத வயதில் விஷமத்தனங்களை காட்சிகளாக வைத்திருக்கும் இயக்குனர் அதன் பின்னர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனவும் துள்ளுவதோ இளமை பட பாணீயில் அட்வைஸ் செய்திருக்கிறார்..

சிக்லெட்ஸ்

Chiclets movie review and rating in tamil

மறக்குமா நெஞ்சம் பட விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

கன்னியாகுமரி பகுதியில் ரக்சன் மலினா தீனா ராகுல் ஸ்வேதா உள்ளிட்ட பலர் ஒன்றாக படித்த பள்ளி மாணவர்கள்..

இதில் நாயகி மலினா மீது நாயகன் ரக்ஷனுக்கு காதல்.. ஆனால் தன் காதலை சொல்லாமலேயே பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர்..

படிப்பை முடித்த இவர்கள் கல்லூரி பின்னர் வேலை திருமணம் என ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணியிடங்களில் இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் படித்து தேர்வு எழுதிய அந்த சமயத்தில் சிலர் முறைகேடு செய்து தேர்வு எழுதியதாக ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை எடுத்து ஒரு வித்தியாசமான தீர்ப்பை அந்த கோர்ட் வழங்குகிறது.

அதாவது இந்த வகுப்பு மாணவர்கள் மீண்டும் மூன்று மாத காலம் படித்து தேர்வு எழுதி அனைவரும் நியாயமான முறையில் பாஸாக வேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் கல்வித் தகுதி செல்லுபடியாக என தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி அந்த வகுப்பு மாணவர்கள் மீண்டும் அனைவரும் பள்ளிக்கு திரும்புகின்றனர்..

அதன் பிறகு என்ன நடந்தது மீண்டும் பள்ளியில் படித்து பாஸ் மார்க் பெற்றார்களா.? நாயகன் ரக்ஷனின் காதல் என்ன ஆனது? நாயகி மலீனாவுக்கு திருமணம் ஆகி விட்டதா? மற்ற மாணவர்களின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Rakshan As Karthik
Malina As Priyadharshini
Dheena As Salim
Rahul As Gautham
Swetha Venugopal As Saranya
Muthazhagan As Raghav
Melvin Dennies As Joseph
Munishkanth As Karthikeyan (PT Sir)
Arun Kurian As Arjun
Akila As Jennifer(Maths Miss)
Ashika Kader as lintosha
Natalie Lourds As Shilpha
Vishvath as யோகி

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகன் துல்கரின் நண்பராக நடித்த ரக்சன் இந்த படத்தில் நாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.. கொஞ்சம் அப்பாவித்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. பள்ளி மாணவனாக நடிக்கும் போது போதுமான மெச்சூரிட்டி இல்லை.. ஆனால் நிகழ்கால கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார்..

படத்தின் ஹீரோவாகவே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் தீனா.. இவரது பேச்சு ஆங்காங்கே ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் கடி கொடுக்கிறது..

நாயகி மலீனா & தோழி ஸ்வேதா இருவரும் அழகிலும் நடிப்பிலும் சரி கவர்கின்றனர்.. பள்ளிப் பருவத்தில் வந்த காதலுக்கும் அதன் பின்னர் வரும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை தன் நடிப்பிலும் காட்டி இருக்கின்றனர்..

பிடி மாஸ்டராக முனீஸ் காந்த் நடித்திருக்கிறார்.. கண்டிப்பான ஆசிரியராக இருந்த இவர் 10 வருடங்களில் பக்குவப்பட்ட ஆசிரியராகவும் நடித்திருக்கிறார்..

இவர்களுக்கு இணையாக ராகுலும் தன்னடிப்பை காட்டியிருக்கிறார் குண்டாக இருப்பதால் படும் இன்னல்களையும் அதன் பின்னர் தன் காதலை தன் கல்யாணத்தைக் கூட நண்பரிடம் சொல்ல முடியாமல் தவித்து தருணங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ் …

Writter & Director – Raako.Yoagandran
Cinematographer- Gopi Duraisamy
Music – Sachin Warrier
Editors – Balamurali, Shashank Mali
Art Director – Prem Karunthamalai
Lyrics – Thamarai
Costume Designer – Ramya Sekar

PRO – Sathish Kumar

Producers – Raghu Yelluru – Ramesh Panchagnula – Janardhan Chowdary – Raako.Yoagandran

பெண் கவிஞர் தாமரை பாடல்களுக்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு.. அதாவது பாடல் வரிகள் இலக்கிய நயத்துடனும் கவிதை நயத்துடனும் காணப்படும்.. இந்தப் படத்தின் பாடல்களில் அதை காண முடிகிறது..

சச்சின் வாரியார் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. மெலோடி பாடல்கள் காதலர்களை நிச்சயம் கவரும்..

கோபி துரைசாமி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இடைவெளியை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்..

பாலமுரளி & சஷாந்த் மாலிக் இருவரும் எடிட்டிங் செய்துள்ளனர்.. படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இந்த மறக்கமாம் நெஞ்சம் நிச்சயம் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்திருக்கும்.. தீனாவில் காமெடி நிறைய இடங்களில் எடுபட்டாலும் சில இடங்களில் பேசிப் பேசி பேசி வெறுப்பு ஏற்றுவதாக அமைந்துள்ளது..

96 மற்றும் முதல் நீ முடிவும் நீ ஆகிய படங்களில் நாம் பார்த்த பள்ளி நண்பர்களின் ரீயூனியன் தான் இந்த படம். ஆனா இதில் கொஞ்சம் மாறுபட்டு வேறு ஒரு கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ. யோகேந்திரன்

முன்னாள் மாணவர்கள் ஒரு பொது இடத்தில் அல்லது அதே பள்ளியில் ஒன்று கூடுவதை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் மீண்டும் படிக்கச் சொல்லி தேர்வு எழுத சொல்லி புதிய திரைக்கதை அமைத்திருக்கிறார் இது நடக்காத காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.. எனவே லாஜிக் பார்க்காமல் இந்த மறக்காத நெஞ்சத்தை பார்க்கலாம்..

வாழ்க்கையில் எத்தனை காலகட்டங்களை நாம் கடந்து சென்றாலும் பள்ளி பருவத்தையும் நண்பர்களை நிச்சயமாக மறக்க முடியாது.. அப்படி ஒரு நினைவை இந்த படம் பார்ப்பதன் மூலம் உங்கள் நெஞ்சங்களில் அந்த நினைவுகள் நிழலாடும்..

Marakkuma Nenjam movie review

நியதி பட விமர்சனம்…

நியதி பட விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் (டிடெக்டிவ்) ஏஜெண்டாக பணிபுரிகிறார் நாயகன் நவீன்.. இவர் சாதரியமாக பல வழக்குகளை கண்டுபிடித்து தருவதால் இவருக்கு பாப்புலாரிட்டி அதிகம்.

இந்த சூழ்நிலையில் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு காதலன் குறித்து துப்பறிய சொல்கிறார். அவன் தன் மகளுக்கு ஏற்றவனா? எப்படிப்பட்டவன்? என்பதை குறித்து விசாரிக்க சொல்கிறார்.

ஒரு நாள் நவீன் இரவில் வெளியே சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒருவரை விபத்தில் கொன்று விடுகிறார். அவர் யார் என்றால் அஞ்சனாவின் காதலன்.

என்ன செய்வது என்று தெரியாத நவீன் அந்த சடலத்தை காரில் எடுத்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுகிறார்.

மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் நாயகன் நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க்கிறார்.

போனில் மிரட்டிய அந்த மர்ம நபர் யார்? அந்த மெமரி கார்டில் அப்படி என்ன இருக்கிறது? ஏற்கனவே துப்பறியும் அறிவு கொண்ட நவீன் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதி கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்

நாயகன் நவீன் தான் படத்தின் ஹீரோ மற்றும் டைரக்டர்.. ஆனாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அலட்டிக் கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வழக்கை விசாரிக்கும் ரகம். அதை துப்பறியும் முயற்சி என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

இவரே நாயகன் இவரே இயக்குனர் என்பதால் படத்தில் சொல்ல வந்த விஷயத்தை எடுத்த வேகத்திலேயே ஆரம்பித்து விட்டார். ஒரு க்ரைம் திர்ல்லர் பானியில் கதையை நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் குறைத்துவிட்டார். அதே வேகத்துடன் சென்று இருந்தால் இந்த நியதி இன்னும் கொஞ்சம் நீட்டாகவே இருந்திருக்கும்..

நாயகி அஞ்சனா பாபு.. எதார்த்தம் கலந்த உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ்.. மிகையில்லாத நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார்.

அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். இவரும் அஞ்சனாவும் பேசும் காட்சிகள் எமோஷனல கனெக்ட் ஆகிறது.

பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகளில் நம்மை ஒன்ற வைக்கிறார்.. அஜு வில்பரின் படத்தொகுப்பும் சிறப்பு.

கிரைம் திரில்லர் படத்திற்க்கான பின்னணி இசையை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் இரைச்சலை குறைத்து இருக்கலாம்..

சின்ன பட்ஜெட் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும் தன்னால் முடிந்தவரை இந்த நியதி-க்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நவீன்..

Naveen starring Niyathi movie review

முடக்கறுத்தான் பட விமர்சனம்.: ரியல் ஹீரோ டாக்டர் ரீல் ஹீரோ ஆனாரா?

முடக்கறுத்தான் பட விமர்சனம்.: ரியல் ஹீரோ டாக்டர் ரீல் ஹீரோ ஆனாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர் வீரபாபு தான் இந்தப் படத்தை இயக்கிய நாயகனாக நடித்திருக்கிறார்.

இவரைப் பற்றி பல திரை பிரபலங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மேலும் சாமானிய மக்களும் பலரும் இவரால் குணமடைந்து இன்று நன்றாக வாழ்கிறார்கள்.. எனவே அவரை வாழ்த்தி இந்த பட விமர்சனத்தை தொடர்வோம்…

Cast : Siddha Dr.K.Veerababu, Mahana, Super Subbarayan, Mayilsamy, Kadhal Sukumar, Sams, Ambani Sankar, Venkal Rao

Music : Sirpi

Producer : Vayal movies

Director : Dr.K.Veerababu

ஸ்டோரி..

நாயகன் டாக்டர் வீரபாபு மூலிகை மருத்துவம் செய்து தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.. மேலும் சமூக சேவை செய்து மக்களையும் கவனித்து வருகிறார்.

நாயகி மஹானாவுடன் இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது.. எனவே திருமணத்திற்கு துணிமணிகளை எடுக்க சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

அங்கே உறவினர் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. அதற்கான தேர்தல் வேட்டையில் வீரபாபு களமிறங்கும் போது தான் அதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை அறிகிறார்.

இதனையடுத்து தானே களம் இறங்கி குழந்தைகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?

கடத்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்றினாரா டாக்டர்? திருமணம் நடைபெற்றதா? அதுவே ‘முடக்கறுத்தான்’ பட கதை.

கேரக்டர்ஸ்…

கொரோனா காலத்தில் பலருக்கும் சிகிச்சை அளித்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக ஜொலித்தவர் இந்த வீரபாபு.. ரஜினியின் உழைப்பை வியந்து பார்த்த இவர் தற்போது நாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.

முதல் படத்திலேயே நாயகன்… முதல் படத்திலேயே இயக்குனர் என்ற தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. ஆனால் மருத்துவம் கை கொடுத்த அளவிற்கு இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை.. இனி வரும் படங்களில் அதை நாம் எதிர்பார்ப்போம்..

நாயகி மஹானா.. அழகும் திறமையும் நிறைந்த நடிகை.. இன்னும் இவருக்கான காட்சிகளை கொடுத்து இருக்கலாம்.. ஆனால் வந்த சில நிமிடங்களில் நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறார் மஹானா.

வில்லனாக சூப்பர் சுப்பராயன்.. ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார். மயில்சாமி காட்சிகளில் நிச்சயம் சிரிக்கலாம்.. சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் வந்து தன் கேரக்டர் சபாஷ் போடும் அளவிற்கு செய்திருக்கிறார்.

இவர்களுடன் சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரும் ஆகியோரம் உண்டு.. தங்கள் கேரக்டரை நிறைவாக செய்துள்ளனர்

டெச்னீசியன்ஸ் …

அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்தை கண்களுக்கு குளிர்ச்சியாக காட்டி இருக்கிறது. சிற்பியின் இசையில் பழநி பாரதியின் வரிகளில் பாடல்கள் ரசிக்கப்படியாக உள்ளது.

நாயகனாக நடித்த டாக்டர் கே.வீரபாபு தான் இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகள் படித்து தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தான் டாக்டராக முடியும்.. அதுபோல ஒரு நடிகராக வேண்டும் ஒரு இயக்குனராக வேண்டும் என்றால் அதற்கான முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதை பலரும் செய்வதில்லை.. இந்த தவறை தான் இந்த டாக்டரும் செய்திருக்கிறார் முறையான பயிற்சி பெற்று இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தால் இந்த முடக்கறுத்தான் நிச்சயம் ரசிகர்களை தன்னுள் முடக்கி வைத்திருப்பான்..

Mudakkaruthaan movie review and rating in tamil

நியதி பட விமர்சனம்

நியதி பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நியதி பட விமர்சனம்…

ஸ்டோரி…

கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் (டிடெக்டிவ்) ஏஜெண்டாக பணிபுரிகிறார் நாயகன் நவீன்.. இவர் சாதரியமாக பல வழக்குகளை கண்டுபிடித்து தருவதால் இவருக்கு பாப்புலாரிட்டி அதிகம்.

இந்த சூழ்நிலையில் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு காதலன் குறித்து துப்பறிய சொல்கிறார். அவன் தன் மகளுக்கு ஏற்றவனா? எப்படிப்பட்டவன்? என்பதை குறித்து விசாரிக்க சொல்கிறார்.

ஒரு நாள் நவீன் இரவில் வெளியே சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒருவரை விபத்தில் கொன்று விடுகிறார். அவர் யார் என்றால் அஞ்சனாவின் காதலன்.

என்ன செய்வது என்று தெரியாத நவீன் அந்த சடலத்தை காரில் எடுத்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுகிறார்.

மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் நாயகன் நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க்கிறார்.

போனில் மிரட்டிய அந்த மர்ம நபர் யார்? அந்த மெமரி கார்டில் அப்படி என்ன இருக்கிறது? ஏற்கனவே துப்பறியும் அறிவு கொண்ட நவீன் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதி கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்

நாயகன் நவீன் தான் படத்தின் ஹீரோ மற்றும் டைரக்டர்.. ஆனாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத அலட்டிக் கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வழக்கை விசாரிக்கும் ரகம். அதை துப்பறியும் முயற்சி என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

இவரே நாயகன் இவரே இயக்குனர் என்பதால் படத்தில் சொல்ல வந்த விஷயத்தை எடுத்த வேகத்திலேயே ஆரம்பித்து விட்டார். ஒரு க்ரைம் திர்ல்லர் பானியில் கதையை நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் குறைத்துவிட்டார். அதே வேகத்துடன் சென்று இருந்தால் இந்த நியதி இன்னும் கொஞ்சம் நீட்டாகவே இருந்திருக்கும்..

நாயகி அஞ்சனா பாபு.. எதார்த்தம் கலந்த உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ்.. மிகையில்லாத நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார்.

அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். இவரும் அஞ்சனாவும் பேசும் காட்சிகள் எமோஷனல கனெக்ட் ஆகிறது.

பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகளில் நம்மை ஒன்ற வைக்கிறார்.. அஜு வில்பரின் படத்தொகுப்பும் சிறப்பு.

கிரைம் திரில்லர் படத்திற்க்கான பின்னணி இசையை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் இரைச்சலை குறைத்து இருக்கலாம்..

சின்ன பட்ஜெட் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும் தன்னால் முடிந்தவரை இந்த நியதி-க்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நவீன்..

Naveen starrer Niyathi movie review

ஜெய் விஜயம் விமர்சனம்

ஜெய் விஜயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் விஜயம் என்றால் வெற்றி என்று பொருள்படும்.. இந்த விளக்கத்துடன் இந்த விமர்சனத்தை தொடர்வோம்..

நடிகர் ஜெய் ஆகாஷ் இந்த ‘ஜெய் விஜயம்’ படத்தை தயாரித்து அவரை நாயகனாக நடித்திருக்கிறார்.

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜெய்சதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில், ஜெய் ஆகாஷ், அக்ஷயா கந்தமுதன், ஏசிபி ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், அட்சயா ரே ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜெய் விஜயம்..

ஸ்டோரி…

ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார் ஜெய் ஆகாஷ். பின்னர் Hallucination நோயால் பாதிக்கப்பட்டு நினைவாற்றலை இழக்கிறார்..

இதனையடுத்து அவரை அவரது மனைவி, நாயகனின் தங்கை & அப்பா ஆகியோர் பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார்கள்.. அவரது சிகிச்சைக்கு தேவையான மாத்திரைகளை நேரத்திற்கு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அவருக்கு சந்தேகம் வரவே ஒரு நாள் மாத்திரைகளை விழுங்காமல் இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சிகரமான சில சம்பவங்கள் நடக்கிறது.. அப்போது அவரை சுற்றி இருக்கும் உறவுகள் யாருமே அவரது உண்மையான உறவுகள் இல்லை என்பதை அறிகிறார்..

அப்படி என்றால் அந்த உறவினர் மூவர் யார் அவர்களின் நோக்கம் என்ன.? அவர்கள் நடிக்க வந்ததன் காரணம் என்ன? உண்மையில் ஜெய் ஆகாஷ் யார்? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்..

கதையின் நாயகனாக ஜெய் ஆகாஷ்.. கிட்டத்தட்ட இரண்டு தோற்றங்களில் காணப்படுகிறார். ஆல் ஸ்மார்ட் ஆகவே இருக்கிறார் ஆக்ஷனில் அடி தூள் கிளப்பு இருக்கிறார்.. ஆனால் நடிப்பில் ஜஸ்ட் பாஸ் மார்க் மட்டுமே பெறுகிறார்..

பெரும்பாலும் படத்தின் காட்சிகள் புகை மண்டலத்துடன் படம் ஆக்கப்பட்டுள்ளது.. அதற்கு ஒரு ஆன்மா காரணம் என டைட்டில் கார்டில் சொல்லப்பட்டாலும் அது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..

ஆஹா கல்யாணம் டிவி சீரியல் புகழ் அக்ஷயா கண்டமுத்தன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சன் டி.வி. விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கிய மைக்கேல் அகஸ்டின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

நாயகி அழகு என்றாலும் நாடகத் தன்மையே அவரது நடிப்பில் எட்டிப் பார்க்கிறத.. ஒருவேளை சீரியல் என இதை நினைத்து விட்டாரோ.?

இயக்கம் : ஜெய்சதீஷன் நாகேஸ்வரன்
தயாரிப்பு : ஜெய் ஆகாஷ்
இசை : சதிஷ் குமார், சீனிவாச குமார்
ஒளிப்பதிவு : பால்பாண்டி
எடிட்டிர் : அழகன்மணிகண்டன்
மக்கள் தொடர்பு : வேலு

படத்தின் இசை கொடுமை என்றே சொல்லலாம்.. டமால் டுமீல் என இரைச்சலை கொடுத்து இருக்கிறது.

சினிமா துறையில் பல ஆண்டுகளாக நீடித்து இருக்கும் ஜெய் ஆகாஷ் இன்னும் சுவாரசியமாக படத்தை கொடுத்திருக்கலாம்.. ஆனால் கதை சொன்ன விதத்திலும் இயக்கிய விதத்திலும் பட்ஜெட்டிலும் தடுமாறி இருப்பது தெரிகிறது.

‘ஜெய் விஜயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெய் ஆகாஷ் பேசும்போது சொன்னவை தான் கீழ்காணும் வரிகள்…

ஒரு ஆங்கில படத்திலிருந்து ‘ஜெய் விஜயம்’ கதையை எடுத்தேன். அதற்காக நிறைய விலை கொடுத்துவிட்டேன். அது என்ன கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன்.

படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். கதைக்கு அடுத்தபடியாக அதிகம் செலவழித்தது இதில் வரும் ஒரு ஆத்மா காட்சிக்குதான். இந்த ஆத்மாவை ஒரு புகை வடிவில் காட்டியிருக் கிறோம். அந்த புகை குழந்தையை காப்பாற்ற ஹீரோவுக்கு புகை வழிகாட்டும்..” என்றார்.

Jai Akash starrer Jai Vijayam movie review

More Articles
Follows