நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

நகைச்சுவையும் நகராத கதையும்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

நடிகர்கள்: பிரபுதேவா (திரு), பிரபு (ராமகிருஷ்ணன்), நிக்கிகல்ராணி (சாரா), ஆதாசர்மா (Psycology Student), விவேக் பிரசன்னா (துபாய் ராஜா), ரவிமரியா (புல்லட் புஷ்பராஜ் ) அரவிந்த் ஆகாஷ், செந்தில், கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடித்துள்ளனர். கெளரவ வேடத்தில் வைபவ்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா.
எடிட்டிங் – G.சசிகுமார்
கலை – விஜய்முருகன்
நடனம் – ஜானி, ஸ்ரீதர்
ஸ்டண்ட – கனல் கண்ணன்
தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி
தயாரிப்பு – T.சிவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
பிஆர்ஓ – மௌனம் ரவி

Charlie Chaplin 2 stills 1

கதைக்களம்…

முதல் பாகத்தை போல இந்த சார்லி சாப்ளின் படத்திலும் பிரபுதேவாவின் கேரக்டர் திரு. மற்றபடி அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார் பிரபுதேவா. பிரபு ஒரு டாக்டர். பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் பிரபு தேவா.

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நிக்கியை திருமணம் செய்யவிருக்கிறார். அதன்படி திருமணமும் திருப்பதியில் நடக்க இருக்கிறது.

அந்த சமயம் நிக்கியின் பழைய வீடியோவை ஒன்றை பிரபு தேவாவுக்கு காட்டுகிறார் அவரின் நண்பர். அதில் நிக்கி ஒருவரை லிப் கிஸ் அடிப்பதாக உள்ளது.

இதனால் நிக்கியின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறார் பிரபுதேவா.

மேலும் தண்ணி அடித்துவிட்டு போதையில் நிக்கியையும் அவரது குடும்பத்தையும் தவறாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? அந்த காதலன் யார்? என்ன தொடர்பு, நிக்கியுடன் கல்யாணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Charlie Chaplin 2 stills 2

நடிகர் நடிகையரின் நடிப்பு எப்படி.?

நடிப்பு பாதி நடனம் மீதி என பிரபு தேவா பின்னியிருக்கிறார். வழக்கம் போல ஒவ்வொரு பாடலின் டான்சிலும் சிக்சர் அடிக்கிறார்.

நிக்கி கல்ராணி மற்றும் அதா ஷர்மா என இரண்டு நாயகிகள். ஒருவர் அழகில் கவர்கிறார் என்றால் மற்றொருவர் கவர்ச்சியில் ஈர்க்கிறார்.

இரண்டு ஹீரோயின்களும் பாடல் காட்சியில் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார்கள்.

பிரபுதேவாவுக்கு தப்பான ஐடியா கொடுத்துவிட்டு அவரை மாட்டி விடுவதில் விவேக் பிரசன்னா (துபாய் ராஜா) சிரிக்க வைக்கிறார்.

பிரபு மற்றும் டி. சிவா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். சம்மந்திகள் ரகளை செய்துள்ளனர்.

இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், அமித் பார்கவ், சமீர் கோச்சார் ஆகியோரின் கேரக்டர் நிறைவு.

ஆனால் வில்லன் வேடம் வலுவில்லை. ஏதோ வில்லன் வேடம் வேண்டும் என்று வைத்த போல உள்ளது.

அதிலும் ரவி மரியா கேரக்டர் ஏன் என்றே தெரியவில்லை. எடிட்டர் கட் செய்து எங்களை காப்பாற்றியிருக்கலாம்.

Charlie Chaplin 2 stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளமும் ஆட்டமும் போட வைக்கிறது.

சின்ன மச்சான்…, ஐ வாண்ட் டூ மேரி யூ மாமா… இவள இவள… ஆகிய மூன்று பாடல்கள் ரீபீட் மோடு.

ஒளிப்பதிவாளர் கை வண்ணத்தில் காட்சிகள் அருமை. ஆனால் எடிட்டர் சில காட்சிகளை கை வைத்திருக்கலாம்.

முதல்பாகம் போல காமெடியை இதில் எதிர்பார்த்து செல்ல வேண்டாம். அதில் பிரபு மற்றும் பிரபுதேவா இருவரும் வேற லெவலில் கலக்கிருப்பார்கள். இதில் அந்த வேகம் இல்லை.

பலவீனமான திரைக்கதையால் படம் சோதிக்கிறது. சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது.

முதல் பாதி சுவாரஸ்யம் இல்லை என்றாலும் 2ஆம் பாதியில் நம்மை சிரிக்க வைத்துள்ளார் டைரக்டர் சக்தி சிதம்பரம்.

சார்லி சாப்ளின் 2… நகைச்சுவையும் நகராத கதையும்

Comments are closed.

Related News

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி…
...Read More
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக…
...Read More
அம்மா கிரியேசன்ஸ் T.சிவா மிகப் பிரமாண்டமான…
...Read More