நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

நடிகர்கள்: அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர் ஜே பாலாஜி, ரவி மரியா மற்றும் பலர்.
இயக்கம் – கண்ணன்
ஒளிப்பதிவு – பிரசன்னா குமார்
இசை – அர்ஜீன் ரெட்டி புகழ் ரதன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

சிவா என்றொரு நபர் ஒரு தீ விபத்தில் தன் முகத்தை இழக்கிறார். அப்போது அதே மருத்துவமனையில் உயிரை விடும் நிலையில் இருக்கிறார் சக்தி (அதர்வா).

எனவே முகம் மாற்று அறுவைசிகிச்சையின் படி அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர்.

இவரை காதலிக்கிறார் ஒரு நாயகி மேகா ஆகாஷ். இவரின் நண்பன் சதீஷ்.

இந்த புதிய முகத்தை பார்த்த சிலர் இவரை எங்கு பார்த்தாலும் கொல்ல துடிக்கின்றனர்.

இதுவரை யாருமே தனக்கு எதிரி இல்லாத நிலையில் இந்த முகத்தை பார்த்த இவர்கள் ஏன்? நம்மை கொல்ல வேண்டும் என அந்த காரணத்தை அறிய நினைக்கிறார் அதர்வா.

அதன்படி சில காரணத்தை புரிந்து திருச்சி செல்கிறார்.

அந்த ப்ளாஷ்பேக்கில் அதர்வா, ஆர் ஜே பாலாஜி, இந்துஜா இவர்கள் வருகின்றனர்.

ஐடி வேலையை திடீரென இழக்கும் இவர்கள் கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய முற்படுகின்றனர்.

அங்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்து போராடுகிறார் அதர்வா. மக்கள் ஆதரவு பெறுகிறது.

இதனால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதி மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்கிறார்.

இறுதியில் நதிகளை இணைத்தாரா? அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன செய்தனர்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அதர்வாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் இரண்டு கேரக்டர் போல கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் சவாலாக ஏற்று அசத்தியிருக்கிறார் அதர்வா. இரண்டு நாயகிகள் இருந்து துளியும் இவரிடம் ரொமான்ஸ் இல்லை.

மேகா ஆகாஷ்க்கு பெரிதாக வேலையில்லை. டூயட் பாடிவிட்டு சில டயலாக்குகளை பேசி செல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் இந்துஜாவுக்கு நிறைவான கேரக்டர். ஆனால் சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

சதீஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் காமெடிகள் கைத்தட்டல்களை பெறுகிறது.

முக்கியமாக ஆர்.ஜே. பாலாஜியின் சோஷியல் மெசேஜ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அதர்வாவை விட இவர்தான் நிறைய அரசியல் பன்ச்க்களை பேசியிருக்கிறார். அனைத்தும் அசத்தல். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ரதன் இசையும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. ’முகையாழி’ பாடல் ரசிகர்கள் மனதை கவரும்.

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை காட்டும்போது அந்த பசுமை காட்சி மற்றும் வறட்சி காட்சி இரண்டும் மனதை கவர்கிறது.

தேசமே பாடல் விவசாயிகளை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

இவன் தந்திரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கண்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு கிராமத்தில் இருந்து தீர்வு சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

ஒரு ஆறில் இருந்து வெளியாகும் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் மற்றொரு கிராமத்திற்கு திருப்பினால் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதை அக்கறையுடன் சொல்லியுள்ள இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் போராடாமல் வீதிக்கு வந்து போராடினால் நீதி கிடைக்கும் என ஆணித்தரமாக சொல்லி அடித்திருக்கிறார்.

முதல் பாதியில் கதை பெரிதாக இல்லை என்பதால் அதை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஆனால் ஒரு அதர்வா மட்டுமே இருக்கும் போது இருவருக்கும் ஒரே சாயல் குரல் எப்படி? என்பதுதான் புரியவில்லை.

பூமராங்… நீதி கிடைக்க வீதியில் போராடு

Boomerang review rating

Comments are closed.

Related News

பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்து…
...Read More
ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு…
...Read More