‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமர் அங்கிள் பட விமர்சனம்

ஸ்டோரி…

யோகிபாபு ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.. சில நாட்களில் மனைவியை பிடிக்காத காரணத்தினால் விவகாரத்து வேண்டும் என்கிறார் யோகி பாபு.

இதனால் யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் மனைவியுடன் தங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. வேறு வழியின்றி அதற்காக ஒப்புக்கொள்கிறார் யோகி பாபு.

அதன்படி இருவரும் பூர்வீக அரண்மனையில் சென்று தங்குகின்றனர். இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும் வருகின்றனர்.. யோகி பாபு அங்கு வருவதை அறிந்த அவரது பழைய நண்பர்கள் சேசு தங்கராஜ் பாலா ஆகியோரும் வருகின்றனர்.

தங்களுக்குத் திருமணம் ஆகாததற்கு யோகிபாபு தான் காரணம்.. எனவே அவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் எனவே அவரது நிம்மதியை கெடுக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். இந்தக் கட்டத்தில் யோகி பாபு பழிவாங்க வேண்டும் என ரோபோ சங்கரும் வருகிறார்.

இந்த சூழ்நிலையில் திடீரென நடிகை ஓவியாவும் வருகிறார்.

அந்த அரண்மனையில் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் தான் யோகி பாபு மனைவியின் சதி திட்டம் தெரிய வருகிறது. அவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் எனவும் அவரின் சதி திட்டத்தில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்பதையும் இவர்கள் அறிகின்றனர்

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. அவளது பின்னணி என்ன.? யோகி பாபு உடன் சென்ற இருவர்கள் யார்? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Yogibabu – Nesam
Oviya. – Oviya
Bala. – Billa
Thangadurai- vallarasu
Shesu. – Dawood

கவுண்டமணி பாணியில் அடுத்தவர் உருவத்தை கேலி செய்வதை காமெடியாக நினைத்து பல படங்களை செய்து வருகிறார் யோகி பாபு.. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது..

வெள்ளக்காரிச்சி குள்ளச்சி குண்டச்சி என்பது போலவே பலரையும் ஒருமையில் அழைத்துப் பேசுகிறார்.. இவர் விவகாரத்தைக் கேட்கும் போது ஆலோசனை சொல்லும் பெண்மணியை கூட அகிலாண்டம் என அசால்டாக பேசுகிறார்..

நடிகை ஓவியாவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக காட்சிகள் வைத்தார்களா தெரியவில்லை..? ஒரு ஆட்டம் போட்டு பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் உமனாக வரூகிறார்..

சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் படம் முழுவதும் வருகிறார்கள்.. கத்தி கத்தி கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் சமீபத்தில் மறைந்த நடிகர் சேஷு இதில் ஓவராகவே கூச்சலிட்டு இருக்கிறார்.

நாம் ஹாலிவுட் பார்த்து ரசித்த சக்திமான்.. ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளில் தங்கராஜ் & பாலா வந்து கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் எம். எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், சோனா & மதன்பாபு ஆகியாரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

Written by : Thillai

Directed by: Swadesh MS

DOP: Subash dhandabani

Editor: Elayaraja S

Music: Santhan & Dharma Prakash

Art Director: P A Anand

Stunts: Suresh

Costume designer: Rebecca Maria

PRO : A. John

Produced By: Anka மீடியா

திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கட்டு கதை எழுதி வசனங்கள் எழுதி என எந்த பெரிய சிரமமும் மேற்கொள்ளாமல் லாஜிக் பார்க்க கூட வேண்டாம் என முடிவெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்வதேஷ்..

லாஜிக் பார்க்காதீங்க.. குழந்தைங்க கூட வாங்க… ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை நம்ம லோக்கல் காமெடியன்கள் மூலம் பார்த்து கண்டு ரசியுங்கள் என வசனங்களை எழுதி இருக்கிறார் தில்லை..

இவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் துணைப் புரிந்திருக்கின்றனர். ஒளிப்பதிவை சுபாஷ் தண்டபாணி மேற்கொள்ள இசையை சாண்டன் மற்றும் தர்ம பிரகாஷ் இருவரும் இணைந்து செய்திருக்கின்றனர்..

குழந்தைகள் ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தாலும் கொஞ்சம் கிராபிக்சில் கவனம் செலுத்தி இருக்கலாம்.. நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் கட்டிங் செய்த தோற்றம் தெரிகிறது.

Boomer Uncle movie review

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. மார்ச் 29ஆம் தேதி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தி கோட் லைஃப் என்ற இந்த படம் வெளியாகிறது.

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனர் பிளஸ்சி என்பவரால் இந்த படம் உருவாகியுள்ளது. பிரிதிவிராஜூக்காக 16 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இதன் இடையில் பிரித்திவிராஜ் பல படங்களில் நடித்துவிட்டார். மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என ஆகிவிட்டது. மேலும் இயக்குனராகவும் மாறிவிட்டார்.

ஆனால் பிரித்திவிராஜ்விடம் 2008 ஆம் ஆண்டு இந்த கதையை சொல்ல ஆரம்பித்து 2018 இல் இதன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் வெளிநாட்டு பாலைவனத்தில் இந்த படக்குழுவினர் மாட்டிக்கொண்டதும் அப்போதும் செய்தியாக வந்தது.

அதற்கு பின்னர் லாக்டவுன் முடிந்து இந்த படத்தை தொடங்கி முடித்து தற்போது திரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இத்தனை கஷ்டங்களை அனுபவித்து உருவாக்கி இந்த ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

பிரித்விராஜ் – அமலாபால் ஜோடியாக நடிக்க ஜிம்மி முக்கிய வேடத்தில் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஸ்டோரி…

கேரளாவில் நடைபெற்ற கதை என்றாலும் தமிழுக்காக கும்பகோணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நஜீப். (பிருத்விராஜ்) மற்றும் அமலாபால் இருவரும் தம்பதியினர்.. தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு செல்ல நினைக்கிறார் பிரித்திவிராஜ். அதற்காக வீடு நிலம் எல்லாம் விற்று தன் உறவினர் பையன் ஒருவனுடன் செல்கிறார்.

இவரின் விசா ஏற்பாடுகளை கவனித்த ஏஜென்ட் இவரை ஏமாற்றி ஒரு வழியாக அரபு நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது பிரித்விராஜும் உறவினர் பையனும் பிரிந்து விடுகின்றனர்.. இதை தெரியாமல் சென்று அரபு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் சிக்கி கொள்கிறார்.

அங்கு மொழி தெரியாமல் சரியான உணவு தண்ணீர் கிடைக்காமல் செம்மறி ஆடுகள் மற்றும் ஒட்டகங்களை மேய்த்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அடிமைத்தன வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..

ஒரு கட்டத்தில் தன்னுடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட உறவினர் பையனை சந்திக்கிறார். இவர்களுடன் ஒரு ஆப்பிரிக்க நண்பரும் இணைந்து கொள்கிறார்.

அடிமைத்தன வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட இவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகின்றனர்.

அவர்களின் திட்டம் நிறைவேறியதா? அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா? இந்தியா திரும்பி வந்தார்களா? அவர்களின் நிலை என்ன? அந்த அரேபியர்கள் இவர்களை என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Prithviraj Sukuamarn
Amala Paul
Jimmy Jean-Louis
K.R. Gokul
Talib al Balushi
RikA

பிரித்திவிராஜ் ஒரு நடிகராக நமக்குத் தெரியும்.. ஆனால் இதில் அந்த நடிகர் தொலைந்து இருக்கிறார்.. அவர் நஜீப் என்ற கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.. அந்த அளவிற்கு ஒரு அர்பணிப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

செழிப்பான கேரளாவில் இளமையாக தோன்றும் பிரிதிவிராஜ் பாலைவனம் சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக கறுத்துப் போவதும் தாடி வளர்ப்பதும் தலைமுடி வளர்வதும் என ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு முகத்தோற்ற அமைப்பில் தன்னை வருத்தி நடித்திருக்கிறார்..

தப்பித்துச் செல்ல நினைக்கும் போது தண்ணீரில் குளிப்பதும் நிர்வாணமாக நடந்து செல்லும் போதும் அடடா என்ன ஒரு அர்ப்பணிப்பான் நடிப்பு என வியக்க வைக்கிறார்.

இனி உங்களைக் காண முடியாது என தப்பித்துச் செல்ல நினைக்கும் போது அங்கு உள்ள ஆடுகள் மற்றும் ஒட்டகங்களிடம் அவர் பேசி செல்லும் போது அவரின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது… பிருத்விராஜ்க்கு கண்டிப்பாக பல விருதுகள் கிடைக்கும்..

ஆப்பிரிக்க நபராக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தான் மட்டும் தப்பித்துச் செல்ல நினைக்காமல் நடக்க முடியாத இந்தியருக்கு அவர் உதவும் காட்சி வேற லெவல்.. இந்திய சிறுவனுக்காக அவர் உருகி உதவுவதும் நம்மை கண்கலங்க வைக்கும்..

அமலாபால் கொஞ்ச நேரம் மட்டுமே வருகிறார்.. இந்த சீன்கள் போதும் நான் ஸ்கோர் செய்து விடுவேன் என சேலஞ்சாக எடுத்து அதை நிறைவேற்றி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Director – Blessy Ipe Thomas
Production -Visual Romance
Music – A.R. Rahman
Editor -Sreekar Prasad
Cinematography – Sunil KS
Audiography – Resul Pookuttty

இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்ட காலத்தில் செல்போன் முதலிய தொலைத்தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன.. ஆனால் ஒரு காலத்தில் அவையெல்லாம் இல்லாத போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்கள் என எளிமையாக இந்த கதையை நாம் ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் அதில் பட்ட கஷ்டங்களை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.

ஒளிப்பதிவாளர் சுனில் அவர்களின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அமலா பாலுக்கு பிரித்விராஜ் நீச்சல் கற்றுக் கொடுக்கும் அந்த ஒரு காட்சி கவிதை கவிதை கவிதை.. உதட்டில் முத்தமிட்டு உணர்வுபூர்வமான காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்..

மொழி தெரியாமல் பாலைவனத்தில் அவர் படும் கஷ்டங்கள் தன் நண்பனை நினைத்து உருகும் காட்சிகள் தன் குடும்பத்தை நினைத்து ஏங்கும் காட்சிகள் விடுதலை கிடைக்காதா என அழுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றையும் உணர்ந்து நஜீப் என்ற கேரக்டரை நச்சென்று செய்திருக்கிறார்..

ஆனால் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பாலான முஸ்லிம்களுக்கு நிச்சயம் உருது அரபி ஹிந்தி ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.. ஆனால் அரபு நாட்டில் அவர்கள் பேசும் ஒரு சிறு வார்த்தை கூட தெரியாமல் நஜீப் முழிப்பது ஏன்? என்பது தான் புரியவில்லை..

பாலைவனத்தில் வீசும் புயல் காற்று அங்கு ஊர்ந்து செல்லும் ஆயிரம் பாம்புகள், முட்டி மோதும் செம்மறி ஆடுகள், தண்ணீர் இன்றி செத்து கிடக்கும் ஒட்டகங்கள், தண்ணீர் அருகில் ஓடும் பல்லிகள் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுனில்.

பாலைவனத்தில் வீசும் சூறாவளி காற்றுக்கு ஏற்ப சூறாவளி இசையை கொடுத்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.. அவரது பின்னனி இசையும் பாடல்களும் கதை ஓட்டத்திற்கு உயிரைக் கொடுத்திருக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.. ஒவ்வொன்றையும் ரசித்து ஒலி குரலாக பதிவிட்டு இருக்கிறார்..

தங்களுக்கு விடியல் பிறக்காதா? விடிவு காலம் பிறக்காதா வெளிநாடு சென்று கை நிறைய சம்பாதித்து குழந்தைகளையும் மனைவி குடும்பத்தை காப்பாற்றலாம் என வெளிநாடு ஓடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த படம் சமர்ப்பணம் ஆகும்.

15 வருடங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடு இணையாக தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து படத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.

Aadu Jeevitham The Goat Life review

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

ஸ்டோரி…

ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் வித்தியாசமாக எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்.

அதன்படி நான்கு கதைகளை சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்..

ஆந்தாலாஜி பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். பெரும்பாலும் ஆந்தாலாஜி கதைகளில் கதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கும்.. ஆனால் இதில் நான்கு கதைகளை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

முதல் கதையில் ஆணுக்கு பெண் தாலி கட்டுவது.. இரண்டாம் கதையில் அண்ணன் தங்கை காதல்… மூன்றாம் கதையில் ஆண் விபச்சாரனும் பெண்ணின் காதலும்.. நான்காம் கதையில் ரியாலிட்டி ஷோக்கலில் சிக்கிய சிறுவர்கள்..

இதோ விமர்சனம்..

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி ஜோடி.. தாலி கட்டப்பட்ட ஆண்மகன் வாழ்வதற்காக பெண் வீட்டிற்கு சென்றால் அங்கு மருமகனுக்கும் மாமனாருக்கும் ஏற்படும் பிரச்சனையை காமெடி கலந்து வித்தியாசமாக காட்டியிருக்கிறார்.

இரண்டாம் கதையில் சாண்டியும் அம்மு அபிராமியும் காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருக்கும் வேளையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் அண்ணன் – தங்கை உறவு என்பது தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது?

மூன்றாம் கதையில்.. சுபாஷ் ஜனனி இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேலையை இழந்து விரக்தியில் இருக்கும் நாயகன் வேறு வழியின்றி ஆண் விபச்சாரமனாக மாறிவிடுகிறார்.. இதனால் காதலில் பிரச்சினை ஏற்படுகிறது.. காதல் வேறு.. காமம் வேறு என விளக்கம் கொடுக்கிறார் நாயகன். இதனால் கடுப்பான ஜனனி என்ன செய்தார்.? ஒரு நாள் ஆண் விபச்சாரனாக ஒரு லாஜிக்கு செல்லும்போது அங்கு தன் அம்மாவை காண்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது?

நான்காம் கதையில் கலையரசன் மற்றும் சோபியா இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். டிவி ரியாலிட்டி ஷோக்களில் தங்கள் பிள்ளைகளை பங்கேற்க சோபியா முற்படுகிறார். கலையரசனுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றாலும் மனைவிக்காக ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த ரியாலிட்டி ஷோக்கள் எல்லை மீறும் போது என்ன செய்தார் என்பதுதான் கதை..

கேரக்டர்ஸ்…

இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமார்பன்.. இவர்கள் இருவருமே தயாரிப்பாளர் இயக்குனராகவே நடித்திருக்கின்றனர். இவர்களின் உடல் மொழியும் நடிப்பும் பாராட்டும் படி வகையில் அமைந்திருப்பது hotspot-க்கு கூடுதல் சிறப்பு..

நான்கு ஜோடிகளை காட்டியிருந்தாலும் கலையரசன் சோபியா ஜோடிக்கு முதலிடம்.. இருவரும் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர். அதிலும் ரியாலிட்டி ஷோக்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கலையரசன் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும்.

குழந்தைகளை குழந்தையாக இருக்க விடுங்கள்.. அவர்களை நீங்களே ஒரு கற்பழிப்பவனிடம் கூட்டி கொடுத்து விடாதீர்கள் என சொல்லும் போதும் நிச்சயம் கைத்தட்டல்கள் பறக்கும்.

சுபாஷ் ஜனனி ஐயரின் கதை ஒரு வித்தியாசமான கற்பனை.. சுபாஷ் லாஜிக்கு செல்லும்போது அம்மாவை காணும் போதும் அதன் பிறகு உண்டாகும் ஒரு விஷயத்தை எந்த ஆபாசமும் இல்லாமல் காமெடியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆதித்யா கௌரி-யின் காதல்.. நிஜமாலுமே வீட்டோட மாப்பிள்ளையாக அப்படி நடந்து விட்டால் ஆண்களின் நிலை படுமோசம். அதை அழகாக கையாண்டு பெண்களும் ஆண்களும் நிகரானவர்களே.. பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாலும் அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்.

அம்மு அபிராமி சாண்டியின் காதல்.. கொஞ்சம் ரசிக்க வைத்தாலும் இப்படி எல்லாம் நடக்குமா? என்பதை நம் ரசிகர்கள் யூகத்திற்கு விட்டுவிட்டார் இயக்குனர்.

டெக்னீசியன்ஸ்…

கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளும் காட்சியமைப்பும் கவனம் பெறுகிறது.

இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றிய பாடல் ரசிக்க வைக்கிறது.

திட்டம் இரண்டு & அடியே ஆகிய படங்களை இயக்கியவர் தான் விக்னேஷ் கார்த்திக்.. அவரது இயக்கத்தில் வந்தள்ள படமிது.

இந்தப் பட டிரைலர் வெளியானபோது சர்ச்சையை ஏற்படுத்தியது.. முக்கியமாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது..

ஹாட் ஸ்பாட் டிரைலரில் நெகட்டிவ் காட்சிகளை வைத்திருந்தார் டைரக்டர்.. அவையெல்லாம் படத்தில் இல்லை..

ஆக செம ஹாட் டாபிக் ஸ்டோரி எடுத்து ரசிக்க வைக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

Hot spot movie review

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

1956 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்டது.. அப்போது கன்னியாகுமரி தமிழகத்திற்கும் மூணாறு கேரளா பகுதிக்கும் சென்றது.. ஆனாலும் மூணாறில் வாழ்ந்த தமிழர்கள் கேரளாவை விட்டு செல்ல மனம் இல்லாமல் அங்கேயே இப்பொழுதும் தங்கி வசித்து வருகின்றனர். இதனை வைத்து இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நிகேஷ்.

மூணாறில் வாழ்ந்த தமிழர்கள் தங்களின் கல்லூரி மேற்படிப்புக்காக பாலக்காடு சென்ற போது 1980 – 83 ஆண்டுகளில் நடைபெற்ற கல்லூரி அரசியல் சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஸ்டோரி…

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் வசித்து வருகின்றனர் ஜி வி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆதித்யா பாஸ்கர்.

பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர்கள் படிக்க தேர்வாகின்றனர்.

அங்கு தன்னுடன் பிஏ ஹிஸ்டரி படிக்கும் மமிதாபைஜும் மீது காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ்.. இதனிடையில் மலையாளிகளின் ராகிங் பிரச்சனைகளுக்கு ஜிவி பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளாகுகின்றனர்.

இந்த மோதலால் ஒரு கட்டத்தில் ஆதித்யா பாஸ்கரை கொன்று விடுகிறார் வில்லன் வெங்கி..

இந்நிலையில் கல்லூரி தேர்தல் வருகிறது. வில்லன் வெங்கி தலைமையில் ஒரு அணியும் நாயகி மமீதா பைஜூ தலைமையில் ஒரு அணியும் என இரு மலையாள மாணவர்களும் போட்டி போடுகின்றனர்.

இவர்களை எதிர்த்து களம் காண்கிறார் நாயகன் ஜிவி பிரகாஷ். தமிழக மாணவர் அணி சார்பாக அந்தோணியை களம் இறக்குகிறார் ஜிவி பிரகாஷ்.

மலையாளிகள் மத்தியில் தமிழக மாணவர்கள் வென்றார்களா என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இளம் வயதில் விளையாட்டு ஆர்வத்தில் இருக்கும் ஜீவி பிரகாஷ் தன் பெற்றோர்கள் படும் வேதனையை அறிந்து கல்லூரியில் சேர்வது என அழகாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் நண்பனை இழந்த பின்னர் இனியும் பொறுக்க முடியாது என வெகுண்டு எழும்போது நட்பை போற்றும் வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகனுக்கு ஈடாக ஒரு படி மேலே வில்லத்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார் மலையாள நடிகர் வெங்கி. இவரின் கண்கள் பிரித்திவிராஜ் அடிக்கடி நினைவுபடுத்துகிறது. இனி இவரை தமிழ் படங்களில் வில்லனாகவும் நாயகனாகவும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வந்து தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கும் பிரேமலு படத்தில் ரீனா கேரக்டரில் நடித்த மமீதா பைஜூ இந்த ரெபல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

அழகான கண்கள் உதடுகள் என இவரை அதிகமாகவே ரசித்து காட்சிகளை வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பரதநாட்டியத்திலும் புரட்சி போராட்டத்திலும் என இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் மமீதா.

ஆதித்யா பாஸ்கரின் எமோஷன் காட்சிகள் நம்மை அறியாமல் கண் கலங்க வைக்கும். அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

கல்லூரி வினோத் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ஆகியோரின் கேரக்டர்கள் பெரிதும் உதவி இருக்கின்றன.

கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதிரா ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றன.

டெக்ணீசியன்ஸ்…

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் சித்து என்பவரும் இவருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். .

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. ஜிவி பிரகாஷின் பெற்றோர்கள் சுப்பிரமணிய சிவா ஆதிரா ஆகியோர் தேயிலை தோட்டத்தில் படும் வேதனைகளையும் அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பையும் அழகாகவே படம் பிடித்திருக்கிறார்.

இதன் பின்னர் பாலக்காடு பகுதியில் பயணிக்கிறது இவரின் கேமரா அங்கு கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள் காதல் நட்பு என அனைத்தையும் உணர்வு பூர்வமாக கொடுத்திருக்கிறார்.

பின்னணி இசை + பாடல்களில் ஜிவி பிரகாஷின் ஒத்துழைப்பு நன்றாகவே தெரிகிறது.. அவரும் இரண்டு பாடல்களுக்கு தன் இசை கரங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு ஏற்ப சித்துவும் அழகாகவே இசைப் பணிகளை கோர்த்து இருக்கிறார்.

மலையாளமும் தமிழும் கலந்த பாடலும் புரட்சிகரமான பாடலும் ரசிக்கவும் தாளம் போடவும் வைக்கிறது.

இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை பின்னர் தடுமாறி இருப்பது தெரிகிறது. முதல் பாதியில் நட்பு காதல் என்ற கலகலப்பாக சென்ற படம் பின்னர் கலவரமாக மாறி படம் முழுவதும் தெறீக்கிறது.. வன்முறை வன்முறை மாணவர்கள் மத்தியில் இத்தனை கலவரம் தேவையா? எனக் கேட்கத் தோன்றுகிறது.

மூணாறில் தமிழர்கள் வாழ்வதாக காட்சிகள் காட்டப்பட்டு இருந்தாலும் அவர்களின் தமிழ் உச்சரிப்பு தமிழ்நாட்டைப் போலவே உள்ளது.. கொஞ்சம் கூட மலையாளம் கலக்காமல் எப்படி?

கம்யூனிசம் தமிழர்களின் உரிமைப் போராட்டம் என முதல் படத்திலேயே கம்யூனிசம் பேசி கவர்ந்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ்.

கல்லூரி கலவரம் என நாம் பார்த்து பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள அரசியலையும் இதில் கலந்து இருக்கிறார்.. முக்கியமாக 1980 ஆண்டுகளில் திமுக அதிமுக தமிழகத்தில் முக்கிய கட்சியாக இருந்தது. அதை ஜிவி பிரகாஷின் தமிழக அணிக்கு கருப்பு சிவப்பு வண்ணத்தை கொடுத்து அந்த கொடியில் கொஞ்சம் வெள்ளையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இத்தனை வன்முறைகள் முடிந்து அடடா அடுத்து என்ன நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கையில் திடீரென கல்லூரி தேர்தல் ரத்து செய்யப்பட்டது என முடித்திருப்பது நமக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. கிளைமாக்ஸ் இன்னும் சுவாரசியத்தை கொட்டி இருக்கலாம் இயக்குனர்.

ஆக ரெபெல்… காலேஜ் பாலிடிக்ஸ்

Rebel movie review

பிரேமலு Premalu விமர்சனம்.. 4.25/5 பிரேமிக்க செய்யும்

பிரேமலு Premalu விமர்சனம்.. 4.25/5 பிரேமிக்க செய்யும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேமலு Premalu விமர்சனம்.. 4.25/5 பிரேமிக்க செய்யும்

ஸ்டோரி…

ஒரு சிம்பிளான கதையை சிரிக்க சிரிக்க ரசிக்க ரசிக்க கொடுத்திருக்கின்றனர்..

காலேஜ் முடித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் நாயகன் சச்சின்.. காதல் தோல்வியால் விரக்தியில் இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் நண்பன் அமலுடன் சேர்ந்து ஹைதராபாத்திற்கு GATE கோச்சிங் சென்டர்ருக்கு செல்கிறார்.

அங்கே ஒரு திருமண விருந்தில் மாப்பிள்ளை தோழனாக செல்கிறார்.. அந்த சமயத்தில் நாயகி ரீனா பெண் தோழியாக வருகிறாள்… கண்டதும் நாயகியை விரும்ப தொடங்குகிறார் நாயகன்.

ஆனால் நாயகிக்கோ இவர் மீது துளியும் காதல் இல்லை.. இதனை அடுத்து நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் தான் இந்த பிரேமலு..

கேரக்டர்ஸ்…

Naslen
Mamitha Baiju
Althaf Salim
Shyam Mohan M
Akhila Bhargavan
Meenakshi Raveendran
Sangeeth Prathap
Shameer Khan

ஹீரோ நஸ்லென் & ஹீரோயின் மமிதா பைஜு.. இருவருமே எங்குமே சினிமா தளம் இல்லாமல் ஒரு யதார்த்த நண்பர்களாகவும் காதலர்களாகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பிரேம் முழு படத்தை தாங்கி நிறுத்த வைத்துள்ளனர்.

மனம் உருகி தன்னை வருத்தி காதலிக்க செய்வது என்று இல்லாமல் 2k கிட்ஸ்க்கு பிடித்த போல எதார்த்தமான காதலை இன்றைய இளைஞர்கள் விரும்பும் வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ரீனா கேரக்டரில் அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் மமீதா பைஜூ.. தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் ரீனா கேரக்டரும் அவரது செய்கைகளும் நிச்சயம் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும்.

சச்சினாக நடித்திருக்கும் நஸ்லன் நச் சென்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தண்ணி போட்டு கலாட்டா செய்வது.. எந்த வேலைக்கு செல்வது என தெரியாமல் குழம்புவது.. காதலிக்கிறாளா இல்லையா தெரியாமல் ஓடுவது நண்பனிடம் புலம்பி தவிப்பது என டீன் ஏஜ் பையனை நினைவுபடுத்துகிறார்..

ஐடி பெஸ்ட்டி ஆதி.. கார்த்திகா.. நாயகனின் நண்பன் அமல் டேவிஸ் என அனைவரும் நாம் எங்கோ சந்தித்த நமது நண்பர்களை நிச்சயம் நினைவுபடுத்துவார்கள்.. அனைவரும் ரசிக்க தக்க நடிப்பை கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு

டெக்னீசியன்ஸ்…

Director: Girish A D
Producers: Fahadh Faasil, Dileesh Pothan, Syam Pushkaran
Written by: Girish A D, Kiran Josey
Music: Vishnu Vijay
Cinematography: Ajmal Sabu
Editor: Akash Joseph Varghese
Production Design: Vinod Raveendran
Lyricist: Suhail Koya
Sound Design: Sankaran A S, K C Sidharthan
Sound Mix: Vishnu Sujathan
VFX: Egg White VFX
Stills: Jan Joseph George
Publicity Designs: Yellow Tooths
Executive Producers: Benny Kattappana, Jos Vijay
Production Controller: Richard
Production House: Bhavana Studios
Distribution: Red Giant Movies
PRO – Sathish (AIM)

கிரிஷ் ஏடி இயக்கியிருக்கிறார்.. மலையாள படமாக இருந்தாலும் ஹைதராபாத்திற்கு சென்ற பின்னர் லூ ஏற்க வேண்டும் தானே.. எனவே லூ சேர்த்து லூட்டி அடித்து இருக்கிறார்கள்..

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வசனங்கள் சிரிக்கவும் வைக்கிறது ரசிக்கவும் வைக்கிறது.. நாயகன் காதலை சொன்ன பிறகு நாயகி மறுக்கிறாள்.

நீங்கள் வழக்கமாக சொல்லும்.. என்னை விட நல்ல பெண் ஒருத்தி உனக்கு கிடைப்பாள் என்று நாயகியிடம் சொல்ல வேண்டியது தானே என்கிறார் நாயகன்..

அதற்கு நாயகியோ.. “அந்த டயலாக் என்னிடம் இல்லை ஏனென்றால் நான் தான் ரொம்ப நல்ல பெண்” என்கிறார்..

Music: Vishnu Vijay
Cinematography: Ajmal Sabu
Editor: Akash Joseph Varghese

படத்தின் ஒளிப்பதிவு.. பின்னணி இசை கோர்ப்பு எடிட்டிங் என அனைத்தும் எங்கும் குறை சொல்ல முடியாதபடி அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.. சாதாரணமாக காட்டப்படும் கேமரா ஆங்கிள்கள் கூட ரசிக்க வைக்கிறது..

ஐடியில் பணிபுரியும் இளைஞர்கள்.. வேலை தேடும் இளைஞர்கள்.. காதலியின் அம்மாவை கவர திட்டம் போடும் இளைஞர்கள்.. மருமகனை / மருமகளை தேடும் பெற்றோர்கள்.. காதலுக்காக ஏங்கும் இளைஞர்கள்.. நண்பனை கலாய்க்கும் நண்பர்கள்.. திருமணத்திற்கு தயாராகும் பெண்கள்.. என அனைத்து தரப்பு இளைஞர்களையும் கவரும் வகையில் இந்த படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏடி..

ஆக.. பிரேமலு… பிரேமிக்க செய்யும்

Premalu movie review

காடுவெட்டி திரை விமர்சனம்

காடுவெட்டி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காடுவெட்டி திரை விமர்சனம்

ஸ்டோரி…

நகரத்தில் நடக்கும் காதலுக்கும் கிராமத்தில் நடக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்..

நகரத்தில் வாழும் காதல் ஜோடிக்கு பெரும்பாலும் பிரச்சனைகள் இல்லை.. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் படிப்பறிவு இவை இரண்டும் தான் பெற்றோர்களால் கருதப்படும்.

ஆனால் அதே காதல் ஜோடி ஒருவேளை கிராமத்தில் வசித்து வந்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் சமூகத்தில் ஏற்படும் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இத்துடன் நடுநாட்டான் ஆர் கே சுரேஷ் செய்யும் சமூக சேவைகள்.. கிராமத்து மக்களுக்கு அவர் உறுதுணையாக நிற்கும் ஊர் தலைவன்.. ஒரு கட்சித் தலைவனின் படைத் தளபதி என்ற கமர்சியல் கலந்து இந்த காடுவெட்டியை தந்திருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.

கேரக்டர்ஸ்…

ஆர். கே. சுரேஷ் – குரு
சங்கீர்த்தனா – தாட்சாயினி
விஷ்மியா – ஆர். கே. சுரேஷ் மனைவி
சுப்ரமணியசிவா – ராஜமாணிக்கம்
அகிலன்.
ஆடுகளம் முருகதாஸ்
ஆதிரா
சுப்ரமணியன்

பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிய ஆர் கே சுரேஷ் இதில் கதையின் நாயகனாக மிரட்டி இருக்கிறார்.. முறுக்கு மீசை கம்பீரத் தோற்றம் குரு கேரக்டருக்கு கெத்து காட்டி இருக்கிறார் ஆர் கே சுரேஷ்..

ஒரு சில காட்சிகளில் கதை ஓட்டத்திற்கு வசனங்கள் உதவினாலும் கதைக்கு மீறிய வசனங்கள் கட்சி சார்பாகவே திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

ஆர் கே சுரேஷின் மனைவியாக நாயகியாக விஷ்மியா.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார்.

காதலியாக சங்கீர்த்தனா.. கிராமத்திலும் நகரத்திலும் இவரது கேரக்டர் பலிச்சிடுகிறது..எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..

சுப்ரமணிய சிவா.. மற்ற நடிகர்களை காட்டிலும் இவரது தோற்றத்திலே மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிட்டி டாடி கிராமத்து அப்பா என இரு தோற்றங்களிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகை இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அகிலன்,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா &
சுப்ரமணியன் ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றது..

டெக்னீசியன்ஸ்…

இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்.
ஒளிப்பதிவு – M. புகழேந்தி
பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.
கலை இயக்கம் – வீரசமர்
எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
நடனம் – தினேஷ்.
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – மஞ்சள் ஸ்கிரீன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம்.

சிட்டி காதலை விட கிராமத்து காதல் ரசிக்கவும் வைக்கிறது.. சிட்டி காதலில் சினிமாத்தனமும் கிராமத்து காதலில் யதார்த்தமும் நிறைந்திருக்கிறது..

சாதிக் இசையமைப்பாளராக அறிமுகம்.. பாடல்களும் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது…சாமி பாடல் ஒரு சாதி பிரிவினரின் தேசிய பாடலாக மாறும்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மிரட்டல்.. சில இடங்களில் ஓவர் பில்டப் ஆகவும் அமைந்துவிட்டது.

சிட்டி சப்ஜெக்ட் கிராமத்து மண்வாசனை என இரண்டுக்கும் ஏற்ப அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி..

தயாரிப்பு : மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காடுவெட்டி படத்தின் டைட்டில் கார்டு வரும்போது பல எச்சரிக்கை வசனங்கள் இடம்பெறுகிறது.. கதை கதாபாத்திரங்கள் கற்பனை.. யாரையும் குறிப்பிடுவனல்ல என சொல்லப்பட்டாலும் முக்கியமாக பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஆகிய கட்சித் தலைவர்கள் நினைவுபடுத்துவதாக உள்ளது

முக்கியமாக காடுவெட்டி கதாபாத்திரம் குருவை நினைவுபடுத்தும் கேரக்டராகவே அமைந்திருக்கிறது..

முக்கியமாக படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் கட் செய்யப்பட்ட மியூட் செய்யப்பட்டுள்ளது.. வசனங்கள் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என சென்சாரில் கட் செய்யப்பட்டுள்ளது.

நாடகக் காதலை வளர்க்கும் ஒரு கட்சி பிரிவினரையும் சாடியிருக்கிறார் காடுவெட்டி..

ஆக காடுவெட்டி.. சாதி கட்சி பிரச்சாரம்..

Kaaduvetti movie review

More Articles
Follows