Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

நடிகர்கள் – ராபர்ட் டவ்னி ஜேஆர், ஸ்கார்லெட் ஜோஹன்சன்
இசை – அலன் சில்வஸ்ட்ரி
ஒளிப்பதிவு – டிரெண்ட் ஒப்பலோச்
இயக்குனர் – ஆண்டனிஜோய் ரூசோ
தயாரிப்பு – மார்வெல் ஸ்டூடியோஸ்
தமிழ் வசனம் – ஏஆர் முருகதாஸ்
தமிழ் டப்பிங் பேசியவர்கள் – விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா
மார்வெல் ஆன்த்ம் – ஏஆர். ரஹ்மான்

கதைக்களம்….

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தனது சூப்பர் ஹீரோக்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

இதுதான் இதன் பாகம் என்பதால் எண்ட் கேம் என சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக இது வெளியாகியுள்ளது.

கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களையும் தானோஸ் கைப்பற்றி இருப்பார்.

அதன் மூலம் அதாவது அந்த சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுவார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் ஒட்டு மொத்தமாக பாதிக்கிறது.

முந்தைய படத்தில் வில்லன் தானோசால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பார் அயர்ன்மேன் ராபர்ட் டோனி.

இதன் தொடர்ச்சியாகதான் இந்த படம் தொடங்குகிறது.

அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார்.

உயிர்பிழைக்கும் அயர்ன்மேன் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார்.

ஆனால் அழிந்த உலகை மீட்க வேண்டும் என கேப்டன் அமெரிக்காவும், பிளாக் விடோவும் நினைக்கிறார்கள்.

இதற்காக ஆண்ட்மேன், தோர், ஹல்க் ஆகியோரை மீண்டும் அழைக்கின்றனர். பின்னர் ஒரு வழியாக அயர்ன்மேனும் வந்து இணைகிறார்.

தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இறந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ்.

அதன் படி 5 வருடங்களுக்கு முன் செல்ல டைம் மிஷினை பயன்படுத்துகின்றனர். அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

பின்னர் தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் வேற்று கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

அப்போதுதான் தானோஸிடம் நவரத்தின கற்கள் இல்லாதது இவர்கள் தெரிய வருகிறது.

அந்த கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு திகைத்து நிற்கிறார்கள்.

பின்னர் அவர்கள் எப்படி அந்த காலக்கட்டத்திற்கு சென்றார்கள்? இறந்தவர்கள் எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படம் எப்படி..?

படம் 181 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம்.
பொதுவாக ஹாலிவுட் படங்கள் என்றால் முதலில் மெதுவாக நகரும். பின்னர் பாஸ்ட்டாக இருக்கும். இது இரண்டும் கலந்த வண்ணம் உள்ளது.

ஒரேடியாக சூப்பர் ஹீரோக்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் இடைவேளையே வந்துவிடுகிறது.

ஸ்கார்லெட் ஜான்சனுக்கு ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதம். ஆனால் அயர்ன்மேனுக்கு விஜய்சேதுபதியின் வாய்ஸ் ஒட்டவில்லை. என்னமோ விஜய்சேதுபதி படத்தை பார்ப்பது போல உள்ளது.

ஆனால் இறுதியில் ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்துக் கொடுத்துள்ளனர்

குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்கள் சூப்பர்.

தோர் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியின் போது இறந்துபோன சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் மீண்டு வந்து சண்டையிடும் போது தியேட்டரில் சத்தம் காதை பிளக்கிறது. அதிலும் ஒவ்வொருவராக வரும்போது அனல் பறக்கிறது.

ஆனால் இதற்கு முந்தைய பாகங்களை காட்டிலும் இந்த அவெஞ்சர்ஸ் விருந்து போதவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் க்ளைமாக்ஸில் ஐயன்மேன் இறப்பது சரியாக இல்லை என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதேபோல் தானோஸும் அழிக்கப்பட்டுவிடுகிறார்.

ஆக ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ 3டியில் கிராபிக்ஸ் ட்ரீட்

Comments are closed.