தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.
2016 ஆம் ஆண்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை எடுத்து இந்த அஞ்சாமை படத்தை இயக்கியிருக்கிறார் சுப்புராமன்..
நீங்கள் நீட் தேர்வை எதிர்த்தாலும் ஆதரவு கொடுத்தாலும் நிச்சயம் இந்த படம் உங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..
ஸ்டோரி…
தந்தை விதார்த்தை இழந்த மகன் காவல் நிலையத்திற்கு சென்று அரசாங்கம் மீது புகார் கொடுக்க வேண்டும் என்கிறார். இதனால் போலீஸ் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியாகின்றனர்.
மாவட்டத்திலேயே முதல் மாணவனாக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு எழுத ஜெய்ப்பூர் மாநிலத்திற்கு சென்ற போது என் தந்தை மன உளைச்சலால் இறந்து விட்டார்.
என் தந்தை மரணத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.. அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார்.
அப்படி என்னதான் நடந்தது? நீட் தேர்வினால் இந்த மாணவன் பாதிக்கப்பட்டது எப்படி? தந்தையை இழந்தது எப்படி?
மாணவனுக்கு நீதி கிடைத்ததா.? நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவன் என்ன செய்தான்? அரசாங்கம் & ஊழியர்கள் என்ன செய்தனர்.? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
* Vidaarth – Sarkar
* Vani Bhojan – Sarasu
* Rahman – Manickam
* Krithik Mohan – Arunthavam
* Vijay Tv Ramar – Adhisayam
* Dhanya – Adhira
ஒரு நடிகன் என்பவன் ஒரே மாதிரியான வேடங்களை ஏற்காமல் படத்திற்கு படம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நிரூபித்து வருகிறார் விதார்த். தான் கதையின் நாயகன் எனக்கு எத்தனை காட்சிகள் இருப்பது முக்கியம் அல்ல அந்த காட்சிகளில் ல் தன்னால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும் என நினைத்து அவர் ஒப்புக்கொண்டதற்காகவே பாராட்டலாம்.
ஒரு கலைக்கூத்தடியாக ஒரு பாசமிக்க கணவனாக பொறுப்புள்ள தந்தையாக ஒவ்வொன்றையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.. முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் அந்த ஒரு காட்சி விதார்த் நடிப்புக்கு சான்று..
இளம் வயதிலேயே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்ட நாயகி வாணி போஜனை வரவேற்கலாம்.. கணவனை இழந்த கட்டத்தில் அவர் கதறி அழும் காட்சி நம் கண்களை குளமாக்கும்..
சாமானியனுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அவன் முதலில் செல்லும் இடம் காவல் நிலையம் அதன் பின்னர் நீதிமன்றம்.. இந்த இரண்டு இடங்களிலும் ஒரு நேர்மையான அதிகாரி இருக்க மாட்டாரா என ஏங்கியவர்கள் பலருண்டு.. அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியாக ரகுமான் வாழ்ந்திருக்கிறார்..
வக்கீல் ஆதரவு இருந்தாலும் இல்லை என்றாலும் தன்னால் தனக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையில் போராடும் மாணவனாக கிருத்திக் மோகன்.. முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார் இந்த இளவயது நடிகர்.
விஜய் டிவி ராமர் மற்றும் ரேகா, தன்யா உள்ளிட்டோரும் நீதிபதியாக நடித்த நிஜ ஐஏஎஸ் அதிகாரியும் சிறப்பு.
டெக்னீசியன்ஸ்…
Written and Directed by: SP Subburaman
Cinematography: Karthick
Music: Raghav Prasad
Trailer & Background Music Score: KalaCharan
Lyrics: Arivumathi, Karthik Netha, SP Subburaman
Editor : Ramsudharsan
Art: GC Anandhan
Presented by: Dream Warrior Pictures
Production: Thiruchithram
Created & Produced: Dr. M. Thirunavukarasu MD
Costume Designer: Siva Balan
PRO : Johnson
இந்தியாவில் நீட் தகுதி தேர்வு வந்த பின் பல மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் முக்கியமாக தமிழகத்தில் எதிர்ப்பு நிலைதான் இருந்து வருகிறது.
மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கும் ஒரு தொழிலதிபரால் அவரது வாரிசுகளையும் உறவினர்களையும் எளிதாக டாக்டர் ஆக்கிவிட முடியும்.. ஆனால் பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத ஒரு ஏழை மாணவனால் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் அவரால் மருத்துவம் ஆகிவிட முடியும்..
இந்த சூழ்நிலையில் சில நபர்கள் எதிர்த்தாலும் நீட் தேர்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை இந்த படம் வலியுடன் எதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறது..
நாம் பயணம் செய்யும் ரயிலில் கூட முதல் வகுப்பு ஏசி ரிசர்வேஷன் இத்தனை இருக்கும் போது கல்விக்கு மட்டும் ஏன் ஒரே தகுதி தேர்வு இருக்க வேண்டும் என்ற கேள்விகளை இயக்குனர் கேட்டு இருக்கிறார்.. ஐபிஎல் மேட்சுக்கு மெட்ரோ ரயில் பஸ் இலவசமாக விடும்போது நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு ஏன் ஒரு இலவச ரயிலை விடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முக்கியமாக ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கலாம்.. மாணவர்களுக்கு தகுதி தேர்வு இருக்கும்போது அரசியல்வாதிகளுக்கும் தகுதி தேர்வு வைத்திருக்கலாம் என்ற கேள்வியை கூட அவர் எழுப்பி இருக்கலாம் இயக்குனர் சுப்புராமன்.
ராகவ் பிரசாத் இசையில் பாடல்கள் தனியாக இல்லாமல் படத்துடன் பயணிப்பது சிறப்பு.. பின்னணி இசையில் நீட் எழுதும் மாணவர்களின் வலியை கூட சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர்..
கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு.. பால் குடிக்கும் கன்று.. வடநாட்டு ரயில்கள் ஜெய்ப்பூர் மக்கள்.. கோர்ட் காட்சிகள் என அனைத்தும் அழகு..
கலை இயக்குனர் ஆனந்தன் கை வண்ணத்தில் உருவான கோர்ட் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் மாணவர்கள் திரண்டு வரும்போது இது மைதானம் அல்ல கோர்ட்டை வெளியில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லும் வசனம் ரசிக்க வைக்கிறது.
அரசு வக்கீலும் ரகுமானும் கோர்ட்டில் வாதாடும் காட்சியில் நீங்கள் மெய்மறந்து கைதட்டி ரசிப்பீர்கள்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோர்ட் காட்சியை அதிரவிட்டிருக்கிறார் இயக்குனர் சுப்பு ராமன்..
கிளைமாக்ஸ் கட்சியில் மட்டும் ரசிகன் கொஞ்சம் ஏமாற்றம் அடைவான்.. சென்சாரில் ஓகே சொன்ன பிறகும் இயக்குனர் அதை மாற்ற என்ன காரணமோ தெரியவில்லை.?
படத்தின் முதல் காட்சியில் அரசாங்கத்திற்கு எதிராக புகார் அளிக்க வேண்டும் என மாணவன் சொல்லும்போது நாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.. அதற்கு அடுத்தடுத்து நகரும் காட்சிகள் அடடா நிச்சயம் அரசு அதிகாரிகளையும் கேள்வி கேட்க வேண்டும் என ஒவ்வொரு சாமானியன் மனதிலும் இந்த அஞ்சாமை ஒரு அதிர்வை நிகழ்த்தும்.
Anjaamai movie review