ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

ஒரு அரசாங்கமே தன் நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதை பார்த்து வருகிறோம்.. ஒழுக்கமான மாணவன் ஒருவன் தவறான நண்பர்களின் சகவாசத்தால் போதைக்கு அடிமையாகி தன் லட்சியத்தை இழந்து பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையே இந்த ஆலகாலம்..

ஸ்டோரி…

சாராய குடிப்பழக்கத்தால் தன் கணவனை இழக்கிறார் ஈஸ்வரி ராய்.. இதனால் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து தாய் வளர்ப்பிலேயே வளர்கிறார் நாயகன் ஜெய் கிருஷ்ணமூர்த்தி.

எனவே தன் மகனை நேர்மையாக ஒழுக்கமாக வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என பாடுபடுகிறார் தாய் ஈஸ்வரி ராய்.. கல்லூரி மேற்படிப்புக்காக நகரத்திற்கு செல்கிறார் நாயகன் ஜெய்.

இவர் அழகில்லை என்றாலும் இவரின் திறமை படிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார் நாயகி சாந்தினி. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்..

கல்லூரி நண்பர்களின் சகவாசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கு அடிக்க கற்றுக் கொள்கிறார்.. ஒரு நாள் சரக்கு அடிக்கும் போது சாந்தினி உன்னை நிஜமாக காதலிக்கவில்லை என சவால் விடுகின்றனர் அவரது நண்பர்கள்.

இதனால் காதலிப்பது உண்மையா? என நாயகன் கேட்க இதை நிரூபிக்கும் வகையில் கல்லூரி வளாகத்திலேயே நாயகன் ஜெய் உதட்டில் முத்தமிடுகிறார் சாந்தினி.

இதனால் இருவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேறு வழியின்றி சாந்தினியை திருமணம் செய்து கொண்டு வெளியே வீடு எடுத்து தங்கி வசிக்கிறார். இது எதுவும் அம்மாவுக்கு தெரியக்கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறார்

புதுமண ஜோடிக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவி செய்கிறார் தீபா சங்கர்..

படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்கு தின கூலியாக செல்கிறார் நாயகன் ஜெய். அங்கு எடுபுடி தங்கதுரையுடன் ஏற்படும் சகவாசத்தால் மேலும் குடிக்கு அடிமையாகிறார்..

பிறகு என்ன ஆச்சு? தாய்க்கு தெரிந்ததா.? குடிகாரன் திருந்தினானா? குடியால் குடும்பம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை, கோதண்டம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

படத்தின் இயக்குனரே நாயகனாக நடித்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை இவருக்கும் சாந்தினிக்கும் உள்ள காதலில் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. இவரது நடிப்பும் கவரவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய் முழு குடிகாரனாக மாறிய பிறகு நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக ஒற்றை காலை இழந்த பின் அவர் படும் வேதனைகள் பிச்சை எடுப்பது முதல் சரக்குக்காக அலைந்து மிச்சமுள்ள பாட்டில்களை குடித்து நக்கி எடுக்கும் காட்சிகள் நடிப்புக்கு நல்ல உதாரணம்.

தந்தை இல்லாத ஒரு மகனை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார் ஈஸ்வரி ராய்.. தன் மகன் வேலைக்கு சென்று விட்டால் தன் குடும்ப பாரம் குறையும் என்ற நினைப்பில் வாழும் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இந்த காட்சிகள் சமர்ப்பணம்..

நாயகன் யார்? அவர் தனக்கு பொருத்தமானவரா.? என நாயகி சாந்தினி பார்க்காமல் தனக்கான தமிழ் கேரக்டரை உணர்ந்து ஒரு குடும்பத் தலைவியாக அழகாக செய்து இருக்கிறார்..

காதலனை நம்பி பெற்றோரை விட்டு வெளியே ஓடிச் செல்லும் பெண்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. காதலித்து ஓடிப் போகும் எல்லா பெண்களின் நிலை இதுவல்ல என்றாலும் இந்தப் படம் உதாரணம்.

குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட பெண்களின் நிலை அறிந்து அவருக்கு உதவும் பக்கத்து வீட்டு அக்காவாக தீபா ஷங்கர் நடித்திருக்கிறார்.. குழந்தை இல்லாத தனக்கு ஒரு தாயின் வலி புரியும் என அவர் பேசும் காட்சிகள் கண் கலங்க வைக்கும்.

டெக்னீசியன்ஸ்….

இசை : என் ஆர். ரகுநந்தன்

இயக்கம்: ஜெய் கிருஷ்ணமூர்த்தி

ஒளிப்பதிவு : க சத்யராஜ்

படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்

தயாரிப்பு: ஜே கிருஷ்ணமூர்த்தி

ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் ஆலக்காலம் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பாக ஜெனீஸ் வெளியிடுகிறார்.. இவர் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

சத்யராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. பாடல் காட்சிகளில் நாயகனின் நடிப்பு மெச்சும் அளவுக்கு இல்லை என்றாலும் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. எடிட்டர் காசி விஸ்வநாதன் தன் பணியை நேர்த்தி..

ரகு நந்தனின் இசையில் பாடல் வரிகள் புரியும் வகையில் இருப்பது சிறப்பு.. பின்னணி இசையும் அருமை..

இடைவேளைக்கு பிறகு தான் கதை ஓட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. குடியால் கெட்டுப்போன குடும்பம்.. இதனால் சமூகத்தில் கிடைக்கும் அவமானங்கள் என அனைத்தையும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்..

குடியால் நல்ல ஒரு மகனை இழந்த ஒரு தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை ஈஸ்வரி ராய் தன் உணர்ச்சிகரமான நடிப்பில் காட்டியிருக்கிறார்.. குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிகிறது இனியாவது நல்லதொரு விடியலை மக்களுக்கு அரசாங்கம் தரவேண்டும்..

உயிர் கொடுத்த என்னிடமே உயிரை எடுக்கும் சாராயத்தை வாங்கி கேட்கிறாயே.. என ஒரு தாய் சொல்லும் காட்சி நெத்தியடி..

ஜெய் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.. இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியவில்லை என்றாலும் முதல் படத்திலேயே ஒரு நல்ல ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார்..

Aalakaalam movie review

KALVAN கள்வன் பட விமர்சனம்

KALVAN கள்வன் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KALVAN கள்வன் பட விமர்சனம்

ஸ்டோரி..

சத்தியமங்கலம் பகுதி.. ஒரு அடர்ந்த மலை கிராமத்தில் வசித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் & தீனா. இவர்கள் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இவானாவை ஒரு கிராமத்தில் சந்திக்கும் போது அவர் மீது காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் ஒரு திருடனை காதலிப்பதா? என வெறுத்து ஒதுங்கி விடுகிறார் இவானா.

இந்த சூழ்நிலையில் ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் ஜிவி பிரகாஷ்.. இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வருகிறது.. ஆனால் ஜி வி பிரகாஷின் திட்டம் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்..

அப்படி என்னதான் திட்டம் போட்டார் ஜிவி பிரகாஷ்? இறுதியில் காதல் என்ன ஆனது? பாரதிராஜா யார்? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்….

ஜிவி பிரகாஷ், தீனா, இவானா, பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கெம்பன் கேரக்டரை கெத்தாகவே செய்து இருக்கிறார்.. தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரவில்லை என்றாலும் உடல் மொழியிலும் உச்சரிப்பிலும் நம்மை கவர்ந்து விடுகிறார் நாயகன் ஜிவி பிரகாஷ்..

பாரதிராஜாவை தத்தெடுக்க என்ன காரணம்? என்பது திரைக்கதைக்கு திருப்புமுனையை உண்டாக்குகிறது..

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் நாச்சியார் படத்தில் நடித்திருந்தார் இவானா.. இந்த ஜோடி இணைந்த 2வது படம் இது.. அழகான கண்கள் அளவான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் இவானா..

நாயகனின் நண்பனாக தீனா.. இவரது துள்ளல் நடிப்பும் துருதுருப்பான பேச்சும் கவர்கிறது.. ஆனால் ஓவர் டாக் கொடுத்து எரிச்சல் அடைய வைக்கிறார்..

பாரதிராஜா யார்? அவரது ஃப்ளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு யானை பலம்.. பாரதிராஜாவும் பட்டைய கிளப்பி இருக்கிறார்.

இவர்களை தவிர வனத்துறை அதிகாரிகள், ஊர் மக்கள், காவலர்கள் சரியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர.

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை.. ரேவாவின் பின்னணி இசை அடர்ந்த காட்டுக்கள் அதற்கு ஏற்ப பயணித்திருப்பது பாராட்டுக்குரியது..

பசுமை நிறைந்த அழகான காடு அதில் ஒளிந்திருக்கும் யானை போன்ற விலங்குகளின் ஆபத்து என அனைத்தையும் அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பெரும்பாலும் யானையைச் சுற்றி படத்தின் கதை நகர்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் யானை & கிராபிக்ஸ் அனைவரையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.. ஜிவி பிரகாஷ் யானை துரத்தும் அந்த காட்சி நிச்சயம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.. குழந்தைகள் இந்த காட்சிகளை கொண்டாடுவார்கள்..

காதல் காமெடி துரோகம் எமோஷனல் என அனைத்தையும் கொடுத்து ஒரு கமர்சியல் விருந்து படுத்தியிருக்கிறார் இயக்குனர் பிவி சங்கர்.. இவரே படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் கூடுதல் கவனம் எடுத்து படமாக்கி இருக்கிறார்.

கள்வன் எப்போதும் கள்வனாக அல்லாமல் ஒரு கட்டத்தில் திருந்துவான் என்பதை கதைக்களமாக கொண்டு சென்றாலும் அதில் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தும் காட்சிகளை வைத்திருந்தால் இந்தக் கள்வனை மக்கள் இன்னும் அதிகமாக கொண்டாடியிருப்பார்கள்..

Kalvan movie review

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

ஸ்டோரி…

Dhirav & Ismath Banu.. திரவ் மற்றும் இஸ்மத் பானு இருவரும் கிராமத்து தம்பதியர்.. (பானுவின் மாமியார் ரமா.)

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.. குழந்தை இல்லை என்பதால் மலடி மலடி என்ன மாமியாரும் ஊர் மக்களும் அடிக்கடி ஏளனம் செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கருத்தரிப்பு மையத்திற்கு சென்று பரிசோதனை செய்தபோது கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்பதை அறிகிறார்.. இந்த சூழ்நிலையில் பானு கணவருக்கு கூட தெரிவிக்காமல் கணவனின் கௌரவத்தை காக்க டெஸ்ட் டிட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்.

அதன் பின்னர் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பதுதான் கதை.

கேரக்டர்ஸ்…

Dhirav,
Ismath Banu,
Rama,
MS Bhaskar
Master Karthikeyan,
Dev Habibullah,
Vijayalakshmi

நாயகன் திரவ் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எடிட்டர் பாடலாசிரியர் என முக்கியமான பொறுப்புகளை ஏற்று அதை அழகாகவே திறம்பட செய்திருக்கிறார்..

திருமணமாகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் தனக்கு பிரச்சனையா? தன் மனைவிக்கு பிரச்சனையா? என்பதை அறியவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவர் படும் வேதனைகள் அழகாகவே காட்டியிருக்கிறார். அதிலும் கிராமத்து ஆண்களுக்கே உரித்தான கெத்து காட்டிக் கொண்டு உள்ளுக்குள் அழுவதும் ஒரு கட்டத்தில் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட பின் அவர் மீசையை முறுக்கிக்கொண்டு சிரித்துக் கொண்டே அழும் அந்த காட்சி அவரின் சிறந்த நடிப்பை காட்டி இருக்கிறது

வெப்பம் குளி மழை என்ற மூன்று காலகட்டத்திற்கு ஏற்ப பெண்கள் படும் வேதனைகளை அழகாகவே தன்னுடைய உடல் மொழியில் காட்டியிருக்கிறார் இஸ்மத் பானு.

குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு தகுதி இருந்தும் கணவனுக்கு இல்லை என்று தெரிந்தும் அது வெளியே சொல்லாமல் மலடி என்ற பெயரை வாங்கி கட்டிக் கொண்டு படும் வேதனைகளை கண்களில் கூட காட்டியிருக்கிறார். இவர் அசுரன் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் பானுவுக்கு பெரிய பெயரை தரும்.

நாயகன் கூடவே வரும் உறவினர் கருப்பு கிராமத்து வெள்ளந்தி மனிதராக வருகிறார். இவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருந்தால் வெளுத்துக் கட்டி இருப்பார்..

நடக்க முடியாமல் குச்சி வைத்துக் கொண்டு நடக்கும் ஒரு கிராமத்து பெரியவரை கண் முன் நிறுத்தி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் எம் எஸ் பாஸ்கர்..

நாயகனின் அம்மாவாக அடாவடி மாமியாராக பொட்டம்மா கேரக்டரை அடித்திருக்கிறார் ரமா.. கணவர் இறந்தாலும் நெத்தியில் வைக்கும் பொட்டை அழிக்க மாட்டேன் என அவர் கிராமத்து பெண்களின் வீரத்தை காட்டி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Director: Pascal Vedamuthu
Production: Hashtag FDFS productions Dhirav
Music director: Shankar
Rangarajan
Editor: Dhirav
Cinematographer: Prithvi Rajendran
Sound designer: Anand, Dhirav, Arun
Stunts: Stunner sam
Art director: Balachander
Costume: Keerthana
Lyrics: Dhirav
D. I. – Srikkanth Raghu

நாயகன் திரவ் இந்த படத்தின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.. கிராமத்து மண் இசையை மனம் மாறாமல் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சங்கர்..

பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.. கிராமத்து வீதிகள் கிராமத்து வீடுகள் என அனைத்தையும் யதார்த்தமாக காட்ட அதற்கு ஏற்ப கலை இயக்குனரும் ஒத்துழைத்து இருக்கிறார்.

பாஸ்கல் வேதமுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.. நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் சிகிச்சை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.. ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்காக மறைத்து மறைத்து வாழ்வதை அருமையாக சித்தரித்து இருக்கிறார்.

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதால் குழந்தையை கொல்ல நினைக்கும் தந்தையின் மனநிலை? இப்படி எல்லாம் இருக்குமா? என்பதுதான் கேள்வி.

கணவன் மனைவி உடலுறவு என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல.. இருவரும் உணர்வுபூர்வமாக மனதால் இணைந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும் என்பதையும் விழிப்புணர்வு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

Veppam Kulir Mazhai movie review

‘இடி மின்னல் காதல்’ திரைவிமர்சனம்

‘இடி மின்னல் காதல்’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இடி மின்னல் காதல் விமர்சனம் 3/5

பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி & பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஸ்டோரி…

நாயகன் சிபி & நாயகி பவ்யா இருவரும் ஒரு நாள் இரவில் ஜாலியாக காரில் சுற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் மீது மோதி விடுகின்றனர்.. அவரோ இறந்து விடுகிறார்.

நீ இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.. இந்த விபத்து வழக்கானால் உன்னால் அமெரிக்க செல்ல முடியாது.. எனவே இங்கிருந்து தப்பி விடு என நாயகி கூறிவிட்டு ஏதும் நடக்காதது போல் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கிறார். நாயகிக்கு உதவியாக நாயகனின் நண்பன் ஜெகனும் உதவி செய்கிறார்..

இதே நேரத்தில் தன் தந்தையை இரவு முழுவதும் காணவில்லை.. எங்கிருக்கிறார் அவருக்கு என்ன ஆனது? என்ன தவிக்கிறான் 15 வயது சிறுவன் ஆதித்யா இவனுக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசிக்கும் விபச்சாரி யாஸ்மின் பொன்னப்பா இருக்கிறார்.. சிறுவனின் தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த சிறுவனின் தந்தை வாங்கிய கடனுக்காக அவனை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார் வில்லன் வின்சென்ட் நகுல்.. (ஆனால் ஒரு இளவயது பெண்ணை கடத்துவது போல அமுல் பேபி என்று சொல்லி சொல்லி கடத்துவது நோக்கம் என்ன தான் புரியவில்லை.??)

அதன் பிறகு நடந்தது என்ன.? தந்தையை கொன்றது நாயகன் தான் என்பதை சிறுவன் அறிந்து கொண்டானா.? போலீஸ் விசாரணையில் என்ன தகவல் கிடைத்தது.? நாயகன் அமெரிக்கா சென்றாரா.? நாயகி என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

சிபி, பவ்யா த்ரிகா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் சிபி.. பெண் ரசிகைகளை கவரும் வகையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசால்டாக ரொமான்ஸ் & ஆக்ஷனும் செய்திருக்கிறார்.

கடந்தாண்டு வெளியான ‘ஜோ’ படத்தில் 2ம் நாயகி நடித்த பவ்யா இந்த படத்தில் பவ்யமாக தன் கேரக்டரை செய்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக யாஷ்மின் பொன்னப்பா.. கூடுதல் கவர்ச்சியாக சூடு ஏற்றி இருக்கிறார்.. அந்தப் பூக்கடை பகுதியில் நிறைய விபச்சாரிகள் இருந்தாலும் இவரின் தோற்றம் அந்த ஏரியாவிற்கு கொஞ்சம் கூட ஒட்டவில்லை..

ஒன்லைன் காமெடியை கொஞ்சமாக செய்து இருக்கிறார் ஜெகன்.. நெட்பிலிக்ஸ்-ல் உங்கள் காதலை விற்று விட்டீர்களா? என விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியையும் கிண்டல் அடித்திருக்கிறார்.

வில்லன் வேடத்தில் வின்சென்ட் நகுல்.. இவர் கயல் படத்தில் நடித்தவர்.. இவருக்கு கொடுத்த ஓவர் பில்டப் மியூசிக் அளவு கூட இவர் நடிக்கவில்லை..

கிறிஸ்தவ பாதிரியராக ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக பாலாஜி சக்திவேல் இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம்..

தந்தையை இழந்த சிறுவனாக ஆதித்யாவை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.. L ஆனால் சில காட்சிகள் ஓவர் ஆக்டிங் தவிர்த்து இருக்கலாம்..

ஒரு காட்சியில் ராதாரவி நாயகனை சிறுவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறான்.. பார்த்த நொடியில் அவனுக்கு என்ன பிரச்சனை என கண்டுபிடித்து நாயகன் காப்பாற்றுவது நம்பும்படியாக இல்லை..

சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக மனோஜ் முல்லத்.. சேட்டு கேரக்டரில் செட்டாகி விட்டார்.. விபச்சாரிகளின் சகவாசத்தால் கிளைமாக்ஸில் இவருக்கு கொடுக்கப்பட்ட ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று..

டெக்னீசியன்ஸ் …

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் சிறப்பு.. காதல் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம் போல ஸ்கோர் செய்து இருக்கிறார் சாம்.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு அருமை.. கலை இயக்குனரின் பணியும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. ஹவுசிங் போர்டு காலனி பூக்கடை ஏரியா உள்ளிட்டவைகளை இரவிலும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி மாதவன்.. (இவர் இயக்குனர் பி வாசுவின் உறவினர்.) நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்..

யாரேனும் ஒருவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து தப்பிக்க செல்ல நினைக்கும் பலரின் மத்தியில் நாயகனின் நேர்மை பிடித்திருக்கிறது.. ஆனால் அதேக் கட்டத்தில் தன் காதலனுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என நினைக்கும் சுயநலவாதி நாயகி கேரக்டரையும் காட்டி இருப்பது காதலர்களின் கருத்து முரண்பாட்டையும் காட்டுகிறது..

நாயகன் என்ன வேலை பார்க்கிறார் அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்பது புரியாமல் இருக்கும் கட்டத்தில் திடீரென இந்த சிறுவனை காப்பாற்ற வருவது ஏதோ திணிக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது..

வில்லனை இடியாகவும் நடந்த விபத்தை மின்னலாகவும் காதலை காதலாகவும் காட்டி இடி மின்னல் காதல் என தலைப்புக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மாதவன்..

Idi Minnal Kadhal movie review

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

ஸ்டோரி…

நான்கு இளைஞர்கள் மூன்று இளம் பெண்கள்.. இவர்கள் ஏழு பேரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.. இவர்களில் ஒரு ஆணைத் தவிர மற்றவர்கள் காதலர்கள்.. அங்கே ஒரு காட்டு பங்களாவில் தங்கி உல்லாசமாக இருந்து குடித்துவிட்டு கூத்தடிக்கின்றனர்.

இதில் நாயகன் ஷாரிக்ஹாசன் ஒரு பிளேபாய்.. இந்த மூன்று தோழிகளிடமும் அவரது கைவரிசையை காட்டி இருக்கிறார்.

ஒன்றன்பின் ஒன்றாக கைவரிசை காட்டிய பின் நாயகியை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.. வேணும் என்றால் லிவிங் டுதர் முறையில் வாழலாம் என்கிறார் ஷாரிக். இதனை மறுக்கிறார் நாயகி.

இந்த கேப்பில் சிங்கிளாக இருக்கும் மற்றொரு நண்பன் நாயகிக்கு ரூட்டு விடுகிறார்.. இதனால் நண்பர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.. அடித்துக் கொள்(ல்)கின்றனர்..

இந்த சூழ்நிலையில் ஷாரிக் இரவில் காணாமல் போய்விடுகிறார்.. எனவே யார் என்ன செய்தனர்.? அவர் எங்கே சென்றார் என்ற பிரச்சனை வருகிறது.

இதனையடுத்து ஒரு நண்பன் போலீசுக்கு போன் செய்து விடுகிறார்.. போலீஸ் அந்த ஆறு பேரையும் விசாரிக்கின்றனர். அப்போது பல திருப்பங்கள் வருகிறது.

நண்பனுக்கு என்ன ஆச்சு.? அவர் நிஜமாக தொலைந்து விட்டாரா?அல்லது இறந்துவிட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Shariq Hassan
Haritha
Monica Ramesh
Kavya Amira
Divakar Kumar
Nithin Aaditya
Anand
Aravind
Selva
Bala

நாயகன் ஷாரிக்ஹாசன்.. இவர் நட்சத்திரத் தம்பதிகள் உமா ரியாஸ் கானின் மகன் ஆவார்.. பிளேபாய் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். உடல் மொழியிலும் கவருகிறார்.. நடனத்திலும் அசத்தியிருக்கிறார்..

ஹரிதா மோனிகா காவ்யா என மூன்று நாயகிகள்.. மூவரும் இளமை துள்ளலுடன் நம்மை ஈர்க்கின்றனர்..

ஷாரிக் முன்னாள் காதலியாக வரும் ஸ்ரேயா (மோனிகா) என்பவர் ஸ்கூல் யூனிஃபார்மில் நம்மை அதிகமாகவே கவருகிறார்.. அவரது வெட்கமும் அவரது கண்களும் அழகு.

நண்பர்களாக நடித்துள்ளவர்கள் தங்கள் பாத்திரத்தை அழகாகவே செய்திருக்கின்றனர். பள்ளிக் காட்சிகளிலும் அதன் பின்னர் கல்லூரி வாழ்க்கை முடித்த பின்னர் அவரது தோற்றங்களிலும் நல்ல மாற்றத்தை காண்பித்து இருக்கின்றனர்..

நண்பனை தொலைத்தவர்கள் எந்த பதற்றமும் இல்லாமல் இருப்பது ஏன்? என போலீஸ் சந்தேகிக்கும் போது நமக்கும் அந்த சந்தேகம் வருகிறது.?!

டெக்னீசியன்ஸ்…

Written & Directed by: Sai Roshan KR

Music: Kevin.N

Original Background Score: Kevin.N

DOP: Vishal.M

Editor: Govindh N

Singers: GV Prakash Kumar, Arivu, Aadithya RK, Ravi G, Paul B Sailus, Kevin.N, Reshma Shyam, Prithvee

Lyrics: Prabhakaran Amudhan, Paul B Sailus, Prithvee, Kevin.N, K.R. Naveen Kumar, Sai Roshan KR, Anand

PRO: Sathishwaran

Producer: K.R. Naveen Kumar

இதுபோன்ற ஊட்டி பிரதேசங்களை காட்டும் போது எத்தனையோ அழகான இடங்களை காட்டி கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டி இருக்கலாம்.. ஆனால் மாறாக போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஒரே அறையில் திரும்பத் திரும்ப ஒரே இடத்தை காட்டிக் கொண்டிருப்பதும்.. ஒரே காட்சிகளை விசாரணை என்ற பெயரில் திரும்ப வரும் போது நம்மால் பொறுமையாக இருக்க முடியவில்லை..

இந்தப் படத்தில் நடித்துள்ள போலீஸ் கூட திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க போதும்பா உன் புராணம் என்று என்கிறார் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் விஷால் கேமரா ஆங்கிள்களை பலவிதங்களில் காட்டி இருக்கலாம். ஒரே ஆங்கில் வைத்துவிட்டு எங்கே சென்றார்.. என்னவோ.?

கெவின் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.. ஜிவி பிரகாஷ் அறிவு ஆராத்யா ஆகியோர் பாடிய பாடல்கள் கவனம் பெறுகின்றன.

சாய் ரோஷன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. போலீஸ் விசாரிக்கும் போது நேற்று இந்த நேரம் என்ன நடைபெற்றது என்பதுதான் படத்தின் மையக்கரு எனவே அதையே படத்தின் தலைப்பாக வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார் முக்கியமாக சம்பவங்கள் நடைபெற்ற நேரம் தேதியை குறிப்பிடும்போது கவனம் பெறுகின்றது.

சுற்றுலா தளங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லையா என்ற கேள்வி நிச்சயம் ரசிகர்களுக்கு எழும்.. அதை கூட ஒரு வசன காட்சியாக வைத்து போன.. வாரம் இங்கே ஷூட்டிங் நடைபெற்றது.. சீன் லீக் ஆக கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்களை நீக்கி விட்டோம்” என ஒரு செக்யூரிட்டி செல்வது போல காட்சி உள்ளது..

அதைக் கூட கவனித்த இயக்குனர் மற்ற காட்சிகளையும் கொஞ்சம் திறப்படம் கவனித்து இருந்தால் இன்னும் கூடுதல் பலம் பெற்று இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’..

நண்பர்கள் ஆட்டம் பாட்டம்.. போலீஸ் விசாரணை என விறுவிறுப்பாக கதையைக் கொண்டு சென்றிருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும்.

Netru Indha Neram movie review

‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமர் அங்கிள் பட விமர்சனம்

ஸ்டோரி…

யோகிபாபு ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.. சில நாட்களில் மனைவியை பிடிக்காத காரணத்தினால் விவகாரத்து வேண்டும் என்கிறார் யோகி பாபு.

இதனால் யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் மனைவியுடன் தங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. வேறு வழியின்றி அதற்காக ஒப்புக்கொள்கிறார் யோகி பாபு.

அதன்படி இருவரும் பூர்வீக அரண்மனையில் சென்று தங்குகின்றனர். இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும் வருகின்றனர்.. யோகி பாபு அங்கு வருவதை அறிந்த அவரது பழைய நண்பர்கள் சேசு தங்கராஜ் பாலா ஆகியோரும் வருகின்றனர்.

தங்களுக்குத் திருமணம் ஆகாததற்கு யோகிபாபு தான் காரணம்.. எனவே அவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் எனவே அவரது நிம்மதியை கெடுக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். இந்தக் கட்டத்தில் யோகி பாபு பழிவாங்க வேண்டும் என ரோபோ சங்கரும் வருகிறார்.

இந்த சூழ்நிலையில் திடீரென நடிகை ஓவியாவும் வருகிறார்.

அந்த அரண்மனையில் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் தான் யோகி பாபு மனைவியின் சதி திட்டம் தெரிய வருகிறது. அவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் எனவும் அவரின் சதி திட்டத்தில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்பதையும் இவர்கள் அறிகின்றனர்

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. அவளது பின்னணி என்ன.? யோகி பாபு உடன் சென்ற இருவர்கள் யார்? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Yogibabu – Nesam
Oviya. – Oviya
Bala. – Billa
Thangadurai- vallarasu
Shesu. – Dawood

கவுண்டமணி பாணியில் அடுத்தவர் உருவத்தை கேலி செய்வதை காமெடியாக நினைத்து பல படங்களை செய்து வருகிறார் யோகி பாபு.. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது..

வெள்ளக்காரிச்சி குள்ளச்சி குண்டச்சி என்பது போலவே பலரையும் ஒருமையில் அழைத்துப் பேசுகிறார்.. இவர் விவகாரத்தைக் கேட்கும் போது ஆலோசனை சொல்லும் பெண்மணியை கூட அகிலாண்டம் என அசால்டாக பேசுகிறார்..

நடிகை ஓவியாவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக காட்சிகள் வைத்தார்களா தெரியவில்லை..? ஒரு ஆட்டம் போட்டு பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் உமனாக வரூகிறார்..

சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் படம் முழுவதும் வருகிறார்கள்.. கத்தி கத்தி கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் சமீபத்தில் மறைந்த நடிகர் சேஷு இதில் ஓவராகவே கூச்சலிட்டு இருக்கிறார்.

நாம் ஹாலிவுட் பார்த்து ரசித்த சக்திமான்.. ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளில் தங்கராஜ் & பாலா வந்து கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் எம். எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், சோனா & மதன்பாபு ஆகியாரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

Written by : Thillai

Directed by: Swadesh MS

DOP: Subash dhandabani

Editor: Elayaraja S

Music: Santhan & Dharma Prakash

Art Director: P A Anand

Stunts: Suresh

Costume designer: Rebecca Maria

PRO : A. John

Produced By: Anka மீடியா

திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கட்டு கதை எழுதி வசனங்கள் எழுதி என எந்த பெரிய சிரமமும் மேற்கொள்ளாமல் லாஜிக் பார்க்க கூட வேண்டாம் என முடிவெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்வதேஷ்..

லாஜிக் பார்க்காதீங்க.. குழந்தைங்க கூட வாங்க… ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை நம்ம லோக்கல் காமெடியன்கள் மூலம் பார்த்து கண்டு ரசியுங்கள் என வசனங்களை எழுதி இருக்கிறார் தில்லை..

இவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் துணைப் புரிந்திருக்கின்றனர். ஒளிப்பதிவை சுபாஷ் தண்டபாணி மேற்கொள்ள இசையை சாண்டன் மற்றும் தர்ம பிரகாஷ் இருவரும் இணைந்து செய்திருக்கின்றனர்..

குழந்தைகள் ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தாலும் கொஞ்சம் கிராபிக்சில் கவனம் செலுத்தி இருக்கலாம்.. நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் கட்டிங் செய்த தோற்றம் தெரிகிறது.

Boomer Uncle movie review

More Articles
Follows