தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு
ஸ்டோரி….
பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பள்ளியில் முதல் மாணவனாக இருந்தாலும் மற்ற மாணவர்களை கிண்டல் செய்யும் சேட்டை சுபாவம் உள்ளவர் கௌரவ்..
அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த பிரவீனை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார்.. இவர்கள் அதே பள்ளி விடுதியில் தங்கி படிக்கின்றனர்..
ஒருநாள் மாணவர்கள் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது பிரவீனை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் பிரவீன்..
தன் உயிரை காப்பாற்றி மரணம் அடைந்த கௌரவின் ஆசையை நிறைவேற்ற முயல்கிறான்.. அவனின் ஆசைப்படி ஒருநாள் இமயமலை சிகரத்திற்கு தனி ஆளாக பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறார்..
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்.. விபத்தில் மூளைச்சாவு அடைந்த கௌவ்வின் இதயம் எஸ்தருக்கு பொருத்தப்படுகிறது.. எனவே எஸ்தருக்கும் ஒரு ஆசை வருகிறது..
கௌரவ் படித்த பள்ளிக்கூடத்தில் படித்து அவனின் நிறைவேறாத ஆசையை தானும் நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகிறார்.. அப்போதுதான் பிரவீன் எண்ணம் இவருக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்….
த்ருஷ்யம் படத்தில் மோகன்லாலின் 2வது மகளாகவும் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாகவும் நடித்த எஸ்தர் அணில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்..
எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர்… பள்ளியில் சின்ன சண்டை அவர்களுக்குள் உள்ள நட்பு மோதல் என அனைத்தையும் உணர்வுகளில் காட்டி நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..
பாரி முகிலன் கேரக்டரில் நடித்த கௌரவ் சூப்பர்.. இவர் மூளைச்சாவு அடைந்து ஆறு பேருக்கு வாழ்வு கொடுப்பது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரக்டர் ஆகும்..
சபரியாக நடித்திருக்கும் பிரவீன் சாந்தமான மாணவனாக வருகிறார்.. இமயமலையில் பைக் பயணம் செய்யும் மனிதநேய நபராகவும் ஜொலிக்கிறார்.. ஆனால் நிறைய காட்சிகளில் இவரது முகபாவனையில் போதுமான மெச்சூரிட்டி இல்லை..
பள்ளியில் சின்ன பெண்ணாக எஸ்தர் இமயமலையில் பயணிக்கும் மோட்டார் ரைடராக பயணிப்பது வேற லெவல்.. நம் வீட்டுப் பெண்கள் ஸ்கூட்டியை ஓட்டவே கஷ்டப்படும் போது ஒரு பெரிய புல்லட்டை இமயமலையில் ஓட்டியிருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்..
டெக்னீசியன்ஸ்…
படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு தான்.. மனோஜ் பரமஹம்சா கேரியரில் ஒளிப்பதிவில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தரும்..
நிலச்சரிவு முதல் அங்குள்ள மக்களின் வாழ்வியலை அழகாக கண்முன் படம் பிடித்திருக்கிறார்.. அதுபோல இமயமலைக்கு செல்ல வேண்டும் என ஒரு தூண்டுதலையும் தன்னுடைய ஒளிப்பதிவில் ஏற்படுத்தி இருக்கிறார்.
இடைவேளைக்கு முன்பு வரை பள்ளி கதை இரண்டாம் பாதியில் இமயமலையில் பைக் பயணம் என இரண்டு அனுபவங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. ஒரு பள்ளி என்றால் குறைந்தபட்சம் 100 மாணவர்களை காட்ட வேண்டும். ஆனால் 20 மாணவர்களை மட்டுமே காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அது ஏன்?
எட்டு வருடம் காத்திருந்தவர் இரண்டு நபர்களை மட்டுமே நடிக்க வைத்து இரண்டாம் பாதி முழுவதையும் ஓட்டி இருக்கிறார் அது ஏனோ?
15 வயது சிறுவர் சிறுமியரை நடிக்க வைத்து அவர்கள் வளரும் வரை 8 ஆண்டுகள் காத்திருந்து அவர்களை மீண்டும் அதே கேரக்டரில் நடிக்க வைத்து ஒரு வித்தியாசமான படைப்பை கொடுத்திருக்கிறார் ஹலிதா ஷமீம்.
பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் இவர்..
பள்ளிப்பருவத்தில் நட்பு வளர்ந்த பின் அதே பள்ளி நினைவுகளுடன் காதல் என ஒரு கவித்துவமான படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்..
இந்தப் பெண் இயக்குனருக்கு பக்க பலமாக இருந்து ஒரு பெண்ணாக அவரின் உணர்வுகளைப் புரிந்து இசை பணியை நேர்த்தியாக செய்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான்.. பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசையில் ரகுமான் போல அல்லாமல் இளையராஜா போல மெல்லிய இசையை கொடுத்திருப்பது சிறப்பு..
8 years wait Minmini review