தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
7/G விமர்சனம்.. பேய் பயம் வருதா.?
ஸ்டோரி…
வழக்கமான தமிழ் சினிமாவின் பேய் டெம்ப்லேட் கதை தான் 7ஜீ.. ஒரு குடும்பம் இருக்கும்.. அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இடம் பெறும்.. அவர்களை பயமுறுத்தும்.. பின்னர் அவர் அந்த பேய்களுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.. பின்னர் கொன்றவர்களை பழி தீர்க்கும்.. இது மாறாது என்பதற்கு இந்த படமும் ஓர் உதாரணம்.
ரோஷன் பஷீர் – ஸ்மிருதி வெங்கட்.. இந்த இளம் தம்பதியர்.. தங்கள் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 7G என்ற தங்கள் கனவு வீட்டில் குடியேறி வாழ்கிறார்கள்..
இந்த சமயத்தில் 7ஜி அப்பார்ட்மெண்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த பேய்.. இது என் வீடு.. நீ வீட்டை விட்டு ஓடு என ஸ்மிருதியை மிரட்டுகிறது.
அந்த பேய் நோக்கம் என்ன? இவர்களை விரட்ட என்ன காரணம்? என்பதே கதை.
கேரக்டர்ஸ்…
7ஜி சொல்லைக் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் முதல் முகம் சோனியா அகர்வால். அவர் நடித்ததாலோ என்னவோ இந்த படத்திற்கு 7ஜி என்ற தலைப்பிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து உள்ளனர்.. ஆனால் அதில் 20% நிறைவேறி இருந்தால் கூட ஆச்சரியமே.. பேய் கேரக்டருக்கு பொருந்தாத முகமாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக ஸ்மிருதி வெங்கட்.. நடிப்பிலும் கொள்ளை அழகிலும் நம்மை கவருகிறார்.. இடைவேளைக்குப் பிறகு சேலையில் வந்து கொஞ்சம் கிளுகிளுப்பு ஊட்டி மிரட்டவும் செய்து இருக்கிறார்.
படத்தின் வில்லன் & இசையமைப்பாளர் என இரண்டு சுமைகளை சுமந்திருக்கிறார் சித்தார்த் விபின்.. நடிப்பில் அதிகமாகவே ஸ்கோர் செய்துவிட்டார்.. அதனால் இசையை பெரிதாக கவனிக்கவில்லை..
சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் உண்டு.. போலீஸ் KSK செல்வா நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
கண்ணா ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்
ட்ரீம் ஹவுஸ் சார்பில் ஹரூன் இப்படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார்..
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும் படத்தில் எங்கும் எந்த திருப்புமுனையும் இல்லாமல் பயணிப்பதால் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.. இயக்குனர் ஹாரூன் படத்தை தயாரித்து இருப்பதால் எவரிடமும் ஆலோசனை கேட்கவில்லை போல..
வழக்கமான பேய் கதையை எந்த பயமும் இல்லாமல் கொடுத்துட்டாரு இயக்குனர் ஹாரூன்..
Smruthi Sonia starrer 7G movie review
———-