6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

படத்தில் 6 கதைகள் இருந்தாலும் எல்லா படத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை பேய்தான்.

6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடுள்ளனர்.

முதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’

இதில் சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் ஒரு இளைஞன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தான் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கவுள்ள ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறான்.

எனவே ஒரு டாக்டரை பார்க்கிறார். அந்த சூப்பர் மேனை சோதிக்கும் டாக்டர் என்ன செய்தார்..? என்பதுதான் இந்த அத்தியாயம்.

DWotz9xVoAEuJ2z

 

இரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’

ஒரு இளைஞனை சின்ன வயது பெண் ஒருத்தி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் மற்றொரு பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்கிறாள்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான் என கூறுகிறாள்.

எனவே இருவரும் அவனை எப்படி பழிவாங்கினார்கள்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xVMAEDFqo

 

மூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’

தன்னுடைய ரூம் மேட்ஸ் தன் காதலியின் போட்டோவுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.

எனவே அந்த பையன் தன் நண்பர்களை என்ன செய்தான்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xU0AAmNEJ

 

நான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’

தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு வாலிபன்.

அப்போது மாமா அவசர வேளையாக வெளியே செல்ல, அந்த வாலிபன் தனியாக இருக்கிறார்.

அந்த வீட்டில் ஒரு பெண் பேய் இருப்பதாக உணர்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

ஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’

இந்த சூப் பாய் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய்.

அந்தப் பேய் யார்? ஏன் இப்படி செய்கிறது என தெரிந்துக் கொள்ள மந்திரவாதியிடம் செல்கிறான்.

அந்த மந்திரவாதி பேய் ஓட்ட என்ன செய்தார்? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9vU8AAN1Jg

 

ஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’

ஓவியம் வரையும் ஒரு இளைஞனுக்கு, வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி ஆர்டர் வருகிறது.

அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது.

அதில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண்ணை மட்டும் அவரால் வரைய முடியவில்லை.

இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

கேரக்டர்கள் மற்றும் இயக்கம்…

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளனர்.

6 அத்தியாயங்களில் அனைவரையும் கவர்ந்த அத்தியாயம் என்றால் அது 5 மற்றும் 6 அத்தியாங்கள்தான்,

‘சூப் பாய் சுப்ரமணி’ கில்மா காமெடி என்றால் ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற ஆறாவது அத்தியாயம் திகிலை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் காட்டிவிட்டு, க்ளைமாக்ஸை மட்டும் கடைசியில் தனித்தனியாக காண்பிக்கிறார்கள்.

இது தமிழில் புதிய முயற்சி என்பதால் வரவேற்று பார்க்கலாம்.

6 அத்தியாயம் அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

Comments are closed.

Related News

அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம்…
...Read More
இயக்குனர் பாரதிராஜா தெளிவான சிந்தனை, சரியான…
...Read More
'6 அத்தியாயம்' திரைப்படம் சமீபத்தில் இயக்குனர்…
...Read More