டாப் டக்கர் பாடலுக்காக யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

டாப் டக்கர் பாடலுக்காக யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan Rashmika (2)யுவன் சங்கர் ராஜா…. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.

இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர்.

மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.

இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார்.

மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது.

இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.

தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.

Yuvan and Rashmika joins for Top Tucker

‘ஏமாலி’ ஹீரோ தயாரிப்பாளரானார்..; ஆனந்தி நாயகியாகும் ‘நதி’

‘ஏமாலி’ ஹீரோ தயாரிப்பாளரானார்..; ஆனந்தி நாயகியாகும் ‘நதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadhiகதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ்.

‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக ‘கனா’ படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர்.

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Mas Cinemas Production Samjones – Anandhi Starrer Nadhi

அப்பா – மகள் அன்பின் அழகியலை சொல்ல வருகிறாள் ‘அன்பிற்கினியாள்’

அப்பா – மகள் அன்பின் அழகியலை சொல்ல வருகிறாள் ‘அன்பிற்கினியாள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anbirkiniyaalஅப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான்.

அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும் என்று நம்பலாம்.

ஏனென்றால் அப்பா – மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா – மகள் நடித்தால் எப்படியிருக்கும்…? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு ‘அன்பிற்கினியாள்’ என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் செட்கள் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

‘அன்பிற்கினியாள்’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கோகுல்.

ஏனென்றால், சில முக்கிய காட்சிகளில் தனது உடலசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார்.

மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு.

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் அவசியம் என்பார்கள்.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே வெற்றிக்குச் சான்றாக அச்சாரம் இட்டுள்ளது. எந்தவொரு களமாக இருந்தாலும் தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய மகேஷ் முத்துசுவாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் கோகுல் – மகேஷ் முத்துசுவாமி இருவருமே இணைந்து பணிபுரிந்து வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.

அதில் இரவு நேரக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமாக்கியதால், இந்தப் படத்துக்கும் அவருடனே பணிபுரிந்திருக்கிறார் கோகுல்.

இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஜாவித் ரியாஸ். இவர் ‘மாநகரம்’ படத்தின் பின்னணி இசை மூலம் பேசப்பட்டவர். கோகுலின் படங்களுக்கு எப்போதுமே அனைத்து பாடல்களையும் எழுதுபவர் லலித் ஆனந்த்.

அவர் தான் ஜாவித் ரியாஸ் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என கோகுலிடம் சிபாரிசு செய்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் பணிபுரிந்த கோகுலைப் பின்னணி இசையில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

தனது முந்தைய படங்களின் பின்னணி இசையை விட, இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்தளவுக்கு மிரட்டியிருக்கிறார்.

த்ரில்லர் படங்களுக்கே உரிய இசையாக இருந்தாலும், அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குநர் கோகுல்.

கலை இயக்குநராக ஜெய்சங்கர் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய ஹப் மற்றும் ப்ரீஸர் அரங்குகள் கண்டிப்பாகப் பேசப்படும். ரொம்ப சவாலான அரங்கைத் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு கச்சிதமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பிசி பணிபுரிந்திருக்கிறார். அவருடைய இயற்பெயர் பிரபு. ப்ரீஸர் அரங்கில் உள்ள சண்டைக் காட்சிகள் ரொம்பவே எதார்த்தமாக அமைத்துக் கொடுத்தார்.

இந்தப் படம் அப்பா – மகள் உறவை மையப்படுத்திய த்ரில்லராக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பார்வையாளர்களுக்குத் திரையில் ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குத் திரைக்கு வரவுள்ளது.

அன்பிற்கினியாள் படக்குழுவினர் விவரம்:

திரைக்கதை, இயக்கம் – கோகுல்
தயாரிப்பு – அருண் பாண்டியன்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசுவாமி
இசையமைப்பாளர் – ஜாவித் ரியாஸ்
எடிட்டர் – பிரதீப் ஈ.ராகவ்
கலை இயக்குநர் – ஜெய்சங்கர்
வசனம் – கோகுல், ஜான் மகேந்திரன்
சண்டை இயக்குநர் – பிசி
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Father daughter thriller film titled Anbirkiniyaal

JUST IN உங்களுக்கு பொழுதுபோக்கு.. எனக்கு பொழப்பு.. ‘வலிமை’ அப்டேட் கேட்டு ரசிகர்கள் டார்ச்சர்..; கடுப்பான அஜித் திடீர் அறிக்கை

JUST IN உங்களுக்கு பொழுதுபோக்கு.. எனக்கு பொழப்பு.. ‘வலிமை’ அப்டேட் கேட்டு ரசிகர்கள் டார்ச்சர்..; கடுப்பான அஜித் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith (1)போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்கிறார்.

ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.

இப்பட டைட்டில் ‘வலிமை’தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் முறையாக வெளியாகவில்லை.

எனவே முருக கடவுள் தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டனர் ரசிகர்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்ன நினைத்தாரோ அஜித் திடீரென ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

, “கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நடித்திருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ‘வலிமை’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என படத்தயாரிப்பாளர் ட்வீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thala Ajith requests fans to maintain dignity and discipline

பிப்ரவரி 14 காதலர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை..; அனைவரும் காதல் செய்வீர்.. அமைச்சர் அட்வைஸ்

பிப்ரவரி 14 காதலர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை..; அனைவரும் காதல் செய்வீர்.. அமைச்சர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jeyakumarஉள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்!

ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது…

இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார்.

ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது…

” அவர் அளித்த பதில் தான் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

“பிப்ரவரி 14 என்பதை பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க… அதுவல்ல அதற்கான அர்த்தம்.

காதல் அப்படிங்கறது பொதுவானது உயிர்ப்பானது. மனுசங்க அடுத்த மனுஷங்க மேல காட்டுற அன்பும்,பரிவும், பாசமும், கருணையும் எல்லாமே காதலின் வடிவம் தான்.

அதனால காதலர் தினம் அப்படிங்கறத நாம தனிப்படுத்தி வேறுபடுத்திக் காட்ட முடியாது. எல்லா மனுஷங்களும் எல்லார்கிட்டயும் அன்பு காட்டி அனுசரிச்சு போனா இந்த உலகம் இன்னும் ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கும்.

மனுஷங்க இத புரிஞ்சுக்கணும், அதுவும் குழந்தைகள் மேல நாம காட்டுற பாசம் அலாதியானது. உலகமே தெரியாத அந்த குழந்தைகள் நம்மள பார்த்து சிரிக்கிறது, மடியில் தவழ்ந்து விளையாடுறது தனி சுகம்… அதுமாதிரியான அன்புதான் காதலின் உண்மையான வடிவம்.

அதனாலதான் என் பேரனை தோளில் சுமந்தபடி எடுத்த போட்டோ இது, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று முடித்துக் கொண்டார்.

காதல் காதல் காதல் இந்த மூன்று எழுத்தால் தான் இந்த உலகம் இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது.

பூமிப்பந்தை அன்பும், காதலும் கொண்டு பொடி நடையாக நடந்து வருவோம். நம்மைச் சுற்றியுள்ள கவலைகள் யாவையும் கடந்து செல்வோம். ஆதலால் காதல் செய்வீர்..!

Minister Jeyakumar talks about Valentines day

தமிழக ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்ற திமுக போடும் ‘மாஸ்டர்’ பிளான்

தமிழக ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்ற திமுக போடும் ‘மாஸ்டர்’ பிளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியே ரிசர்வ் தொகுதிகள்தான்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகள்.

ஆட்சிக்கு 118 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி சுலபத்தில் ஆட்சி அமைக்கும்.

ஆக ஆட்சிக்கு தனித் தொகுதிகளான 44 இடங்களும் மிக முக்கியமானவை.

அதில் இதுவரை திமுகவை விட அதிமுகவே அதிகம் தொகுதிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் கைப்பற்றி வருகிறது.

ரிசர்வ் தொகுதிகளில் திமுக அதிக கவனம் செலுத்தாமல் போனதற்கு காரணம் புரியாமல் போன உ.பி.க்களுக்கு இப்போது உற்சாக செய்தி கிடைத்து இருக்கிறதாம்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பொறுப்பேற்ற நாள் முதல் தனித் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது திமுக.

அதிமுக பாணியை மிஞ்சும் விதமாக ரிசர்வ் தொகுதிகளில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் அனைவரும் முழுமையான பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க முடிவு செய்து இருக்கிறதாம்.

இந்த முடிவுக்கு திமுக வந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் உதாரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 ரிசர்வ் தொகுதிகள் கடந்த தேர்தலிக் கை நழுவியதற்கு தவறான வேட்பாளர் தேர்வுதான்.

கே.வி.குப்பம் தொகுதியில் அம்முலு என்பவரும், அரக்கோணம் தொகுதியில் பவானி வடிவேலு என்பவரையும் தலைமை அறிவிக்க தொகுதிகளில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதற்கு காரணம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் கணவர்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஏற்கனவே இந்த பகுதிகளில் இந்த இரு சமூகத்தினர் இடையே எப்போதும் உரசல் முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் தான் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அதன் காரணமாக அரக்கோணம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அப்படியிருந்தும் அந்த தொகுதிகளில் தோல்விதான் கிடைத்தது.

அதை மிக தாமதமாக புரிந்து கொண்ட தலைமை இந்த முறை அப்படி எந்த மிஸ்டேக்கும் நடக்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறது.

மொத்தமுள்ள 44 தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமான மாஸ்டர் பிளான் போட்டு அதன்படி வேட்பாளர் தேர்வும் மிக ரகசியமாக நடத்திக் கொண்டு இருக்கிறது திமுக தலைமை.

அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை “6 கோணம் உள்ள தொகுதி அரக்கோணம்” என உட்கட்சி கோஷ்டிகளை மனதில் வைத்து திமுக தலைவர் கருணாநிதி நையாண்டி செய்வாராம்…

அப்படி அரக்கோணம் கொண்ட அரக்கோணத்தில் கண்டிப்பாக திமுக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உ.பி.க்கள் இப்போதில் இருந்தே மிக உற்சாகமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களை குஷி படுத்தும் விதமாக எந்த கோஷ்டியிலும் சிக்காத புதிய வேட்பாளரை களம் இறக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறதாம்.

அந்த வகையில் மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் எழில் இனியனுக்கு யோகம் அடிக்கிறதாம்.

காரணம், சிட்டிங் எம்.எல்.ஏ.ரவியை எதிர்த்து பண பலத்திலும், படை பலத்திலும் வக்கீல் எழில் இனியன் மிக பலமாக இருப்பதால் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்களிலும் இவர் பெயரே பலமாக ஒலிக்கிறதாம்.

அரக்கோணம் திமுக கோட்டையானால் ஆட்சியும் நம்முடையதுதான் என அரக்கோணம் செண்டிமெண்ட் தெரிந்த உ.பி.க்கள் உற்சாகத்தில் திளைக்கிறார்களாம்.

DMK master plan in upcoming election

Stalin Raja

More Articles
Follows