தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 50 ஆண்டுகளாக இந்திய இசை ரசிகர்களை தன் குரலால் வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
உடல்நலக்குறைவால் கடந்த செப். 25 வெள்ளிக்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் தமிழக காவல்துறை அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் நடிகர்கள் அர்ஜுன், விஜய், ரகுமான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில் SPB உடல் புதைக்கப்பட்ட தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அவருக்கு நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
Wish to build a memorial dedicated to all SPB fans – SPB Charan