ரஜினியின் அறிமுக பாடலுக்கு மீண்டும் எஸ்பி. பாலசுப்ரமணியம் வாய்ஸ்

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh musicரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள்.

அதில் முக்கியமாக அவரது அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.

வந்தேண்டா பால்காரன் (அண்ணாமலை), நான் ஆட்டோக்காரன் (பாட்ஷா), ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து), என் பேரு படையப்பா (படையப்பா), தேவுடா தேவுடா (சந்திரமுகி), புதிய மனிதா (எந்திரன்) உள்ளிட்ட பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாடல்களை பெரும்பாலும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடியிருப்பார்.

ஆனால் அண்மைக்காலமாக அறிமுகப்பாடல் இல்லாமல் போய்விட்டது.

ரஜினி படத்தை வித்தியாசமாக செய்கிறோம் என்கிற பெயரில் அவரை இயக்கிய ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் அறிமுகப்பாடல் இல்லாமலும் முக்கியமாக எந்த பாடலுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் இல்லாமலும் செய்துவிட்டார்கள்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் கொடுக்கவுள்ளார்.

இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh music

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…
...Read More
ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில்…
...Read More
ஷங்கர்-ரஜினி-சன் பிக்சர்ஸ் ஆகியோரது கூட்டணியில் உருவான…
...Read More

Latest Post