இசை உலகுக்கு இம்சை; கட்டக் குரல் ஹீரோ-ஹீரோயின்ஸ் பாடுவது சரி.?

இசை உலகுக்கு இம்சை; கட்டக் குரல் ஹீரோ-ஹீரோயின்ஸ் பாடுவது சரி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Top Tamil Actors and Actress turning into Singersநம் எல்லோராலும் பேச முடியும். ஆனால் பாடல் முடியுமா? முடியாது.

ஏனென்றால் குரல் வளம் நன்றாக இருந்தால் மட்டுமே பாட முடியும். கேட்பவர்களுக்கு அதுதானே ஆனந்தம் தரும்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பாடல்களை பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

நடிகைகளில் ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நடிகர்களில் கமல், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெய் ஆகியோரும் இந்த வரிசையில் உள்ளனர்.

இதில் ஒரு சிலருக்கு குரல் இனிமையாக இருக்கிறது. அதனால் அவர்கள் பாடுவதில் ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் சில நடிகர், நடிகைகள் பேசினாலே கரகர குரல் இருக்கும். அவர்கள் பாடினால் கேட்கவா வேண்டும்.
தற்போது அவர்களே பாடல் பாடுகிறோம் என்று படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

முதன்முறையாக நமக்கு பிடித்த நடிகர், நடிகை பாடுகிறாரோ என்று ஆர்வத்தில் பலரும் அந்த வீடியோக்களை பார்க்க, நாம் நன்றாக பாடி இருக்கிறோம் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல.

இதை இசை துறைக்கு வந்த இம்சை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இதுபோன்ற இம்சைகளை அவர்களே புரிந்துக் கொண்டு பாடகர், பாடகிக்கு வாய்ப்பு கொடுத்தால் ரசிகர்களுக்கும் பாடல்கள் இனிமையாக இருக்கும். இம்சையும் குறையும்.

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்வார்களா..?

Why Top Tamil Actors and Actress turning into Singers

*துப்பாக்கி முனை* டீசர்; ரஜினி-அஜித்-விஜய் பாணியில் விக்ரம் பிரபு

*துப்பாக்கி முனை* டீசர்; ரஜினி-அஜித்-விஜய் பாணியில் விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Thuppakki Munai movie first time Vikram Prabhu looks in Salt and Pepperதினேஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஹன்சிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் துப்பாக்கி முனை.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவம் தப்பில்லை’ என்ற படத்தை இதற்கு முன்பே இயக்கியவர் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி முனையில் விக்ரம் பிரபு, காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்க, எல்.வி முத்துகணேஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் முதன்முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

அண்மைக்காலமாக ரஜினி (கபாலி, காலா), அஜித் (மங்காத்தா முதல் விஸ்வாசம் வரை), விஜய் (தெறி, மெர்சல், சர்கார்) ஆகியோர் தங்கள் நரைத்த தாடியுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் விக்ரம் பிரபுவும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

In Thuppakki Munai movie first time Vikram Prabhu looks in Salt and Pepper

 

https://www.filmistreet.com/video/thuppakki-munai-teaser/

விஜய்யின் *சர்கார்* கொண்டாட்டத்தை அறிவிக்கிறது சன் பிக்சர்ஸ்

விஜய்யின் *சர்கார்* கொண்டாட்டத்தை அறிவிக்கிறது சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 19th September Sarkar team decide to start its Celebrationsசன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் `சர்கார்’.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, பழ.கருப்பையா மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

இந்நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் என முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அறிவிப்பு அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாடல்களை அனைத்தையும் பாடலாசிரியர் விவேக் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

From 19th September Sarkar team decide to start its Celebrations

*ஒளடதம்* படத்தை விளம்பரப்படுத்த ரசிகர்களை சந்திக்கும் நேதாஜி பிரபு

*ஒளடதம்* படத்தை விளம்பரப்படுத்த ரசிகர்களை சந்திக்கும் நேதாஜி பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Owdatham movie will show you the black pages of Medical worldஇன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள். நோயைக் குணப்படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது. சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளுக்கு அடிமைப்படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம்.

குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மருந்துகளில் எவ்வளவோ தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்கள் உள்ளன.ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை.இந்த உண்மையை உலகுக்கு சொல்ல வரும் படம்தான் ‘ஒளடதம் ‘.

இப்படத்தை தனது ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு. சமைரா நாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் வினாயக்ராஜ், பாலாம்பிகா, முரளி, சந்தோஷ் ஆகியோரும் நடிதுள்ளனர். திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ்,இசை இசையரசர் வி.தஷி. சண்டைப் பயிற்சி தேவா, டிசைன்ஸ் உதயா,

படம் பற்றி நேதாஜி பிரபு கூறுகையில்…

” நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை, வந்து விட்டேன். ஆனால் வழக்கமான படமாக நாமும் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்.

உண்மைச்சசம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கை வழிகளில் உண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள் ஒளடதம் குறை, ஒளடதம் தவிர் என்றார்கள்.

அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். ‘ஒளடதம் ‘ என்கிற பெயரில் மருத்துவம் பற்றி எடுக்க ஒரு கதை தேடினேன்.

அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013 மே14 ல் வந்திருந்தது.

இது பற்றி 2016 ஆண்டிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்த்தேன்.

தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம் இன்னும் கேட்பாரில்லாமல் தொடரவே செய்கிறது.

இது பற்றிப்படம் பேசுகிறது. படம் ஒரு கமர்சியல் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்காக ஒரு நிஜமான மருந்துக்கம்பெனியில் 8 நாட்கள் படப்பிடிப்புநடத்தியுள்ளோம்.” என்கிறார்.

படம் பற்றிய விளம்பரத்தை வித்தியாசமாகச்செய்யயவுள்ளாராம். அதைப் பற்றிப்பேசும் போது…

”இப்போது எவ்வளவோ படங்கள் வருகின்றன. ஆனால் அது நல்ல படம் என்று தெரிவதற்குள் சரியான திரையீடு அமையாமல் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. நான் ஒரு திட்டத்தில் உள்ளேன்.

திரையரங்கு திரையரங்காகச் சென்று ’ஔடதம்’ என எழுதப்பட்ட பேனாக்களை ரசிகர்களைச்சந்தித்து வழங்கப்போகிறேன்.

இப்படி ஒவ்வொரு திரையரங்காகச்சென்று 5000 பேனாக்கள் வீதம் 3 லட்சம் பேனாக்களைத் தரப்போகிறேன். இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்பை ஏற்படுத்தும்.” என்கிறார் நேதாஜி பிரபு.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைகளில். *டிரைலர் மற்றும் ‘ஔடதம்’ 3லட்சம் பேனா க்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் இறுதியல் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Owdatham movie will show you the black pages of Medical world

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா !

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velammal schoolஅண்மையில் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (16. 09. 2018) அன்று நடைபெற்றது.

மேசைப் பந்தாட்டத்தில் ஆடவருக்கான குழு பிரிவில் உயர்திரு. அச்சந்த சரத் கமல், உயர்திரு. சத்தியன் ஞானசேகரன், உயர்திரு. அந்தோணி அமல்ராஜ் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் உயர்திரு. அச்சந்த சரத் கமல் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னை, ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சாதனை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டியது. அப்போது, பள்ளி மாணவர்கள் வரைந்த வீரர்களின் ஓவியங்கள், அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பதக்கம் வென்ற வீரர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மிகுதிப்படுத்தும் வகையிலும் எழுச்சியுரை வழங்கினார். மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட இம்முயற்சி மாணவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்திருந்தது.

அச்சந்த சரத் கமல் பேசும்போது

நான் வெற்றிப் பெற்றதற்கு காரணம் என் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தான். எனக்கு தேவையானதை அளித்து வெற்றிப் பெறுவதற்கு ஊக்குவித்தனர். அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறது என்றார்.

சத்தியன் ஞானசேகரன் பேசும்போது

நான் விளையாட்டு துறைக்கு வருவதற்கு பல பேர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனது பள்ளி நாட்கள் முதல் எனது விடாமுயற்சியைத் தாண்டி, எனக்கு ஊக்கம் அளித்தது என் பள்ளியும் ஆசிரியர்களும் தான். ஆகையால், விடாமுயற்சியை நாம் எப்போதும் கைவிடக்கூடாது. அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிறது. மாணவர்கள் வெற்றிப் பெரும் வகையில் இப்பள்ளி சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

அந்தோணி அமல்ராஜ் பேசும்போது

நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் பள்ளி தான் முக்கிய காரணம். வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் அதன் ஆசிரியர்களும் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான வசதிகளை அளிக்கிறது. மற்ற பள்ளிகளை விட வேலம்மாள் வித்யாலயா பல்வேறு விளையாட்டுகளையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. அதை மாணவர்கள் பயன்படுத்தி பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

*துப்பாக்கி முனை* டீசரை வெளியிட்டார் கௌதம்மேனன்; மணிரத்னம் பாராட்டு

*துப்பாக்கி முனை* டீசரை வெளியிட்டார் கௌதம்மேனன்; மணிரத்னம் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thuppakki munai60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் ‘துப்பாக்கி முனை’.

இப்படத்தின் முதல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இதனை இயக்குநர் கௌதம் மேனன் இணையதளத்தில் வெளியிட்டார்.

விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க,
புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தயாரிப்பு: கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ். இணைத் தயாரிப்பு: பரந்தாமன், ஏகே நடராஜ்.

இந்த டீசரை பார்த்த டைரக்டர் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்யுள்ளார்.

விரைவில் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது.

Gautham menon released Thuppakki Munai Teaser Maniratnam praised Teaser

https://www.filmistreet.com/video/thuppakki-munai-teaser/

More Articles
Follows