எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்பவுமே ஹிட் குடுத்தா எப்படி தனுஷ்.!? – விவேக்

ஆடுகளம் & அசுரன் ஆகிய 2 படங்களின் மூலம் 2 தேசிய விருதுகளை பெற்றதால் தனுஷின் படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கொரோனா காலம் என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்காது என சிலர் நினைத்த நிலையில் ‘கர்ணன்’ வசூல் வேட்டையாடி வருகிறான்.

ஏப்ரல் 9 ரிலீஸ் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 10.20 கோடிகளை வசூலித்துள்ளது. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் ஏப்ரல் 10ல் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வசூல் சற்று சரியத் தொடங்கியது.

ஆனால் தமிழக அரசு கூடுதலாக காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதியளித்தது.

இதனையடுத்து 2ம் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது.

மொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ‘கர்ணன்’ படத்தின் வசூல் ரூ.1.45 கோடி எனத் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் விவேக் படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளதாவது….

“எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ! கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் இவர்கள் இருவரும் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் உள்ள காமெடி காட்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Viveks appreciation for Dhanushs Karnan movie

Overall Rating : Not available

Latest Post