அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்பட விஷால் வேண்டுகோள்

அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்பட விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal wants Rajini and Kamal to come together for Lok Sabha electionவருகிற மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எவரும் எதிர்பாராத வகையில் அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிகள் அமைத்து வருகின்றன.

தமிழக பொறுத்தவரை அதிமுக கட்சி பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் உடன் இணைந்து திமுக போட்டியிடுகிறது.

தேமுதிக கூட்டணி இதுவரை முழுமையடையவில்லை.

நடிகர் கமல் தனித்து போட்டியிடுகிறார். நடிகர் ரஜினி இதுவரை கட்சியை ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில், ரஜினி, கமல் இணைந்து நிற்க வேண்டும் என விஷால் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

“எந்த நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கும் இல்லை, எந்த ஒரு திரைப்படத்துக்காகவும் இல்லை, நடிகர் சங்கத்துக்காகவும் இல்லை ரஜினி சார், கமல் சார் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

Vishal wants Rajini and Kamal to come together for Lok Sabha election

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seenu ramasamyஎதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி “தென்மேற்கு பருவகாற்று”, “நீர்பறவை”, “தர்மதுரை”, “கண்ணே கலைமானே” என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான “ரெட் ரம்” திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

மரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்”

மரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

krishnamமரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும்.

அப்படிப்பட்ட கதைையைக் கொண்ட ஒரு வாலிபன்தான் அக்ஷய் கிருஷ்ணன். திரிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல நடனம் ,நாடகம், மேடைப் பேச்சு ,விவாதம் ,விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான்.

கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் பரிசுகளும் பாராட்டுகளும் அள்ளி வருவான். நல்ல உயரம் ,பளிச்சென்று நிறம் ,உற்சாகம் பொங்கும் உடல்வாகு ,கனவு ஒளிவிடும் கண்கள்,பார்ப்பவரை நேசம் கொள்ள வைக்கும் பரந்த மனம் என்று குறையொன்றும் இல்லாத நிறைகள் வழியும் மாணவன். எனவே அவனது நட்பு வட்டம் பரந்தது. நாளுக்கு நாள் நண்பர்கள் பெருகினர். அவனது வாழ்க்கையில் ஏக்கம், வருத்தம் ,துன்பம் ,கவலை என்பனவற்றை அறியாதிருந்தான். அவனை ஓர் உதாரண மாணவன் என்றே கூறலாம்.

குடும்பத்தின் வசதியான பின்புலம் அவனுக்கு உற்சாகத்தை ஊற்றிக் கொண்டும் கனவுகளுக்குப் பாதை அமைத்துக் கொண்டும் இருந்தது. எனவே பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏறுவது என்பது அவனுக்குப் படிக்கட்டின் அடுத்தபடியேறுவது என்பது போல் அத்தனை சுலபமாக இருந்தது.

நடனப் போட்டி ஒன்றுக்காக ஒரு நாள் முன் தயாரிப்புப் பயிற்சியில் இருந்தான். கால் பிசகி விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டது.
மருத்துவமனை போன போது சோதிக்கப்பட்டது .

அதற்கு மேல் நடந்ததை அக்ஷய் கிருஷ்ணனிடேமே கேட்போம்.

“மருத்துவமனையில் முதலில் ஹெர்னியா பிரச்சினை என்றார்கள். நான் நம்பவில்லை. ஒரு சிறு ஆபரேஷனில் சரி செய்து விடலாம் என்றார்கள் .இன்னொரு சோதனை செய்தபோது வயிற்றில் மட்டுமல்ல உடலில் முழுதும் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக சேர்ந்து நிரம்பியுள்ளது என்றார்கள் .எனக்கு இதுவும் புரியவில்லை. நம்பவும் தோன்றவில்லை .ஏனென்றால் என் உடம்பில் பெரிய வலியோ இயங்குவதில் எந்த அசெளகரியமும் கூட நான் உணரவில்லை. விட்டால் ஓடுவேன் போலிருந்தது. அதற்கு முன்பு வரை அப்படி இருந்தவன் தானே ? என் நிலைமை உள்ளூர் டாக்டர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்பா பதற்றமாக இருந்தார். ஒரு டெஸ்ட் எடுத்தார்கள் . . அப்பா முகம் இறுக்கமாக இருந்தது. அவர் இதை லேசில் விடவில்லை.வெளிநாட்டிலிருந்து மருத்துவக் குழு வந்தது. முதலில் அமெரிக்கா பின்பு லண்டன் .

அவர்கள் டெஸ்ட் எடுத்தார்கள் .ஒன்றும் புரிபடவில்லை.ஒரு டெஸ்ட்டுக்கு 8 லட்சம் செலவு. இப்படி டெஸ்ட் மேல் டெஸ்ட் எடுத்தார்கள்.
ஒவ்வொரு உறுப்பாகப் பாதிக்கப் பட்டு வருவதாகச் சொன்னார்கள். என்ன பிரச்சினை என்றால் வாயில் நுழையாத பெயரெல்லாம்Chronic Constrictive Pericarditis சொன்னார்கள். காரணம் தெரியவில்லை.இந்த இக்கட்டான நேரத்தில் திரிச்சூர் டாக்டர் ஒரு யோசனை சொன்னார். அது இதயத்துக்கும் பிற உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.ஒரு கட்டத்தில் கொச்சியில் அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆஸ்பிட்டலில் ஆபரேஷன் செய்ய முடிவானது. என் நிலையைப் பார்த்த ஒரு டாக்டர் மயங்கி விழுந்தார். எனக்கும் கண் இருண்டது.”
சற்றே நிறுத்தினார் அக்ஷய் கிருஷ்ணன்.

இதற்கிடையில் என்ன நடந்தது?
வெளிநாட்டு டாக்டர்களையே திணற வைத்த உள்ளுறுப்புகள் செயல் இழப்பு , பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் இதயக் கோளாறு எல்லாம் எப்படிச் சரியானது, ?

மருத்துவத்துக்கே எட்டாத அதிசயம் ஒன்று நடந்தது. அதனால் தான் பழைய அக்ஷய் கிருஷ்ணனாகேவே மீண்டு வந்திருக்கிறார். அவரது கனவுப்படி மேல் படிப்புக்கு வெளிநாடு செல்லவிருக்கிறார்.

இடையில் நடந்த அதிசயம் என்ன.?
” என் அப்பா ஒரு குருவாயூர் கிருஷ்ணன் பக்தர். அவர் மாதம் தவறாமல் முதல் தேதியன்று குருவாயூர் செல்வார். இப்படி 40 ஆண்டுகளாகப் போய் தரிசித்து வருபவர். வெளிநாடு சென்று இருந்தாலும் கூட மாதத்தின்முதல் தேதியன்று குருவாயூர் வந்து விடுவார். இப்படி அமெரிக்கா ,ரஷ்யாவில் இருந்த போது கூட விமானம் மூலம் வந்து போயிருக்கிறார். அப்படிப் பட்ட அப்பாவின் குருவாயூரப்பன் நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? எனக்கு இவ்வளவும் ஆனதை கடைசிவரை என் அம்மாவிடம் அப்பா கூறவே இல்லை. இது தெரிந்த பிறகு அம்மா எனக்கு நிழல்போல் ஆகிவிட்டார்.” என்கிறார்.

தன் மகன் குருவாயூர் கடவுளின் அருளால் உயிர் பிழைத்த அற்புத அனுபவத்தை ஒரு படமாக எடுத்து உலகிற்குக் காட்ட வே அதை ‘கிரிஷ்ணம்’ என்கிற படமாக எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பி.என்.பலராம்.. தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மொழிகளில் தயாரித்துள்ளார்.தன் மகனையே நாயகனாக நடிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா உல்லாஸ் நாயகியாக நடித்துள்ளார்.அம்மாவாக சாந்திகிருஷ்ணாவும் அப்பாவாக சாய்குமாரும் நடித்துள்ளனர். தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

“இதில் 90 சதவிகிதம் உண்மையும் 10 சதவிகிதம் சினிமாவுக்கான புனைவும் இருக்கும். இதில் இயல்பாகேவே ஒரு முழு நீள வணிக சினிமாவுக்கான நட்பு ,காதல் ,பாசம் ,அன்பு ,பக்தி ,விசுவாசம் , நம்பிக்கை ,விறுவிறுப்பு என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. ” என்கிறார் இயக்குநர் தினேஷ் பாபு.
‘கிரிஷ்ணம்’ மார்ச் -ல் திரைக்கு வருகிறது.

சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம் !

சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

momஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒரு நடிகை ஸ்ரீதேவி. அவர் தனது சினிமா வாழ்க்கையில் ‘மாம்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார், அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார்.

போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்த படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது.

சிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதை பெற்று தந்த இந்த படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, “மாம் படம் ரிலீஸ் ஆன எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு இதயத்தை தொடும் திரைப்படத்தை மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்” என்கிறார் Zee Studios International தலைமை அதிகாரி விபா சோப்ரா (மார்க்கெட்டிங், விநியோகம்).

ரவி உத்யாவார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த மாம் திரைப்படம், இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தவிர்த்து, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது. 75வது கோல்டன் குளோப் விருதுக்கு வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் தகுதி பெறவும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் “சுப்ரமணியபுரம்” திரைப்படத்தை காண இருக்கும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் !

சசிகுமாரின் “சுப்ரமணியபுரம்” திரைப்படத்தை காண இருக்கும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anurag kashyupபாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்கினார். அது மாபெரும் வெற்றி அடைந்தது . இந்த படத்தை இவர் இயக்க காரணம் தமிழில் 2008ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படம்தான். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் படத்தை இயக்கியுள்ளார் என தெரிவித்திருந்தார்.

தற்போது சுப்ரமணியபுரம் படம் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள குளோபஸ் மாலில் நாளை மாலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட இருக்கிறது. இந்த சிறப்பு காட்சியை இயக்குனர் அனுராக் காஷ்யப் காண இருக்கிறார்.

சூட்டிங் முடிவடையும் தருவாயில் ஜாம்பி

சூட்டிங் முடிவடையும் தருவாயில் ஜாம்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

zombieஎஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.

தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி , சுதாகர் , கார்த்திக் , பிஜிலி ரமேஷ் , சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது. ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசியார் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் , ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.

வேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர்.

புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி.

More Articles
Follows