*திமிரு புடிச்சவன்* தந்த திருப்புமுனை.; சந்தோஷத்தில் சம்பத்ராம்

*திமிரு புடிச்சவன்* தந்த திருப்புமுனை.; சந்தோஷத்தில் சம்பத்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Villain Sampathram very happy with his role in Thimiru Pudichavanதமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் சம்பத் ராம்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், சம்பத் ராமுக்கு தற்போது திருப்பு முனையாக அமைந்திருக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’.

விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில், சம்பத் ராம் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கிறார். சம்பத் ராமுக்கு போலீஸ் வேடம் புதிதல்ல என்றாலும், இதில் படம் முழுவதும் வரும் முக்கியமான வேடம் கிடைத்திருக்கிறது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சம்பத் ராம், இப்படத்தின் சில காட்சிகள் மூலம் மக்கள் மனதில் நிறைந்திருந்திருப்பதை போல, தொடர்ந்து இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகினர் மனதிலும் நிறைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

ரஜினியின் ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கும் சம்பத், ‘தட்றோம் தூக்குறோம்’ உள்ளிட்ட சில படங்களில் மெயின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இப்படங்களுக்குப் பிறகு நிச்சயம் சம்பத் ராமுக்கு மெயின் வில்லனாக நடிக்க பல வாய்ப்புகள் வரும் என்றாலும், அதற்கு முன்பாகவே சம்பத் ராம் வாழ்வில் வசந்தம் வீச வைத்திருக்கிறது ‘திமிரு புடிச்சவன்’.

படம் பார்த்தவர்கள் அனைவரும் சம்பத் ராமையும், அவரது வேடத்தையும் பாராட்ட தவறுவதில்லை. அந்த அளவுக்கு தனது வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சம்பத் ராம், வெற்றிமாறன் தயாரிப்பில், மணிமாறன்
இயக்கத்தில் உருவாகும் ‘சங்கத் தலைவன்’ மற்றும் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்படியே தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சம்பத் ராம், ஒரு காட்சியாக இருந்தாலும் தனக்கு பெயர் பெற்று தரும் காட்சியாக இருந்தால் அதிலும்
நடிக்க ரெடி, என்றே கூறுகிறார்.

”பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களைப் போல வில்லனாக நடிப்பில் பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை. பல வருடங்களாக அதற்காக நான் போராடி வருகிறேன்.

இன்னமும் போராட தயாராகவே இருக்கிறேன். எனது ஆசையை நான் பல முன்னணி இயக்குநர்களிடம் கூறி வாய்ப்பும் கேட்டு வருகிறேன். அப்படி
நான் பெற்ற வாய்ப்பு தான் ‘திமிரு புடிச்சவன்’.

என்னை புரிந்துக் கொண்டு விஜய் ஆண்டனி சாரும், இயக்குநர் கணேஷாவும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

படம் வெளியான பிறகு பலர் போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்ந்து ‘திமிரு புடிச்சவன்’ படத்தோடு நின்றுவிடாமல், பல படங்களுக்கு தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசை. நிச்சயம் அது நடக்கும் என்றே நம்புகிறேன்.” என்று தனது மகிழ்ச்சியை சம்பத் ராம் தெரிவித்துக் கொண்டார்.

பிட்டான உடம்பு, கம்பீரமான தோற்றம், பல வருட நடிப்பு அனுபவம் என்று மெயின் வில்லனாக நடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட சம்பத் ராம், தமிழ் சினிமா கொண்டாடும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக விரைவில் வலம் வர வாழ்த்துகள்.

Villain Sampathram very happy with his role in Thimiru Pudichavan

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி; தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம்

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி; தயாரிப்பாளர் தனஞ்செயன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dog meat in chennaiதமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால், அதில் 1 கோடி மக்கள் சென்னையில் வாழ்வதாக கூறப்படுகிறது.

சென்னையை தேடி தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒரு சிலர் பொருட்களை வாங்க வந்தாலும், பலர் இங்கு வேலைத் தேடி செட்டிலாகவே வருகிறார்கள்.

ஏழை மக்கள் முதல் கோடீஸ்வரன்கள் வாழும் நகரம் இது.

இங்கு 50 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும். 2000 ரூபாய்க்கும் 1 சாப்பாடு கிடைக்கும்.

இதில் திருமணமாகாத பேச்சுலர்கள் பாடு படு திண்டாட்டம்தான். ஹோட்டல்களை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள்.

எனவே அவர்களை ஈர்க்க புதுப்புது உணவகங்கள் அன்றாடம் திறக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில ஹோட்டல்கள் மட்டுமே நல்ல தரத்துடன் உணவை மக்களுக்கு கொடுக்கிறது.

பல ஹோட்டல் ஓனர்களுக்கு சுவை என்றால் என்ன? என்பதே தெரியாது.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ரயிலை போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் 1000 கிலோ நாய்க்கறி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலுக்கு நாய்க்கறி சப்ளை செய்யப்படுவதாக அப்போது தெரிய வந்துள்ளது.

இதில் எந்த எந்த ஹோட்டல்களுக்கு தொடர்பு உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.

சென்னையில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி உணவகங்கள் அதிகம் உள்ளன. அப்படியிருக்கையில் நாய்க்கறி எதற்கு? என்ற சந்தேகம் தற்போது சென்னைவாசிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த காற்றின் மொழி தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செயலை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Dhananjayan BOFTA‏Verified account @Dhananjayang 1h1 hour ago
இதை எல்லாம் படிக்கும் போது மனம் பதபதைக்கிறது. அக்கிரமம். எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.” என பதிவிட்டுள்ளார்.

Dhananjayan tweet about 1000 kg of Dog meat seized in Chennai

சிம்புக்கு நன்றி.; மயில்சாமிக்கு சிரிப்பு.. ஜோதிகாவை பாராட்டிய சூர்யா

சிம்புக்கு நன்றி.; மயில்சாமிக்கு சிரிப்பு.. ஜோதிகாவை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaதனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் காற்றின் மொழி.

இப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லட்சுமி மஞ்சு ஆகியோருடன் சிம்புவும், யோகிபாபுவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அதில், சிம்பு, லட்சுமி மஞ்சு, யோகிபாபுவிற்கு நன்றி கூறியுள்ள சூர்யா, மயில்சாமி நடித்த காட்சிகளின்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl

Thank you #Simbu & @LakshmiManchu for making it even more special and Mylsamy sir I rolled down laughing.. Sure our audience and the raving reviews will give #KaatriMozli it’s deserving success #JoCareerBest

2.0 ரிலீசுக்காக மகேஷ் பாபுவின் தியேட்டரை திறந்து வைக்கும் ரஜினி

2.0 ரிலீசுக்காக மகேஷ் பாபுவின் தியேட்டரை திறந்து வைக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahesh babu theatresதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிர்களில் ஒருவர் மகேஷ்பாபு.

டோலிவுட் சினிமாவின் இளவரசர் என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.

இவர் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ஐதராபாத்தில் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை நிறுவியுள்ளார்.

ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தை முதல் படமாக திரையிட இருந்தார்.

அந்த தொடக்க விழாவிற்கு அமீர்கானை வரவழைக்கவும் ஏற்பாடு நடந்தது.

ஆனால் அமீர்கான் பிசியாக இருக்கவே அவர் வரவில்லையாம்.

இந்நிலையில் முதல் படமாக ரஜினியின் 2.0 படத்தை திரையிட மகேஷ் பாபு முடிவு செய்திருக்கிறாராம்.

அதனையொட்டி ரஜினியை அழைத்திருக்கிறார்களாம்.

திறப்பு விழாவுக்கு சென்றால் அது 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினியும் இதில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ-23ல் ரிலீசாகும் *கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்*

நவ-23ல் ரிலீசாகும் *கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum will be released on 23rd Nov 2018டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum will be released on 23rd Nov 2018

காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

காதுகளிலும் இனிக்கும் *காற்றின் மொழி*.; சுரேஷ் காமாட்சி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie teamராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி திரைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாவது…

“மொழி”யின் ஆக்ரமிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில் “காற்றின் மொழி”யை திருமதி ஜோதிகாவும்.. இயக்குநர் ராதா மோகனும் அழுத்தம் திருத்தமாய் பேசி நெஞ்சில் ஆணியடித்த மாதிரி பதிய வைத்திருக்கிறார்கள்.

பெண்களின் உரிமையை பெண்களே ரசிக்கும் வகையில் படம் பிரம்மாதப்படுத்துகிறது. இந்தி ரீமேக் என்றாலும் அதை தமிழ்படுத்தும்போது படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆனால் இது அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.

இன்னும் மெருகேறி நிற்கிறது ஜோதிகா அவர்களின் நடிப்பில்.. விதார்த் இயல்பான நடிகன். யதார்த்த நாயகன். வாழ்ந்திருக்கிறார். மிகப்பெரிய பலம் ஜோதிகா அவர்களும் விதார்த்தும்..

தேர்ந்தெடுத்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் திரு தனஞ்செயனுக்கும் எனது வாழ்த்துகள்.

காற்றின் மொழி எல்லோர் காதுகளிலும் இனிக்கட்டும்.”

என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Producer Suresh Kamatchi praises Kaatrin Mozhi movie team

More Articles
Follows